Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப கஷ்டம்

சனி


அண்ணன் பரிசலின் மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! ஒருஅப்பாபாவி கணவனா பதில் கொடுக்க முயற்ச்சி செய்துள்ளேன்

கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப குஷ்டம் சாரி கஷ்டம்wya_logo
1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?
கிடைக்கிறது ஓரு நாள் விடுமுறை அதில் நீங்கள் பார்க்கும் வேலைகளை நாங்க பார்த்தா நீங்க என்ன வேலைதான் பார்ப்பிங்க
காவாய் அடைச்சா மோட்டர் ரிப்பேர் ஆனா ஆள் கூப்பிடரது விட்டில் fuse போடரது இந்தமாதிரி வேலைகளை எப்பவாவது நீங்க செய்து இருகிறிர்களா?
அலுவலகத்தில் அவசர வேலை இருந்தாலும் நாங்தான் இந்த வேலைகளை செய்யனுன்னு M.D முன்னாடி இருக்கும் போது miss call கொடுத்தால   M.D கேவலமாக எத்தனை தடவை பார்த்து இருப்பார் தெறியுமா?
2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க?
கடையில ரொம்ப கூட்டமாக இருக்கும் போது ஒன்னு ரெண்டு பிகர்களை கரக்கட் பண்னும்போது மறக்கிறது சகஐம் தான இதேல்லாம் ஒரு தப்பா?
நீங்க மட்டும் அம்மா வீட்டு போனால் எங்களையே மறக்கிறது நெடுந் தொடர் பார்க்கும் போது
உங்களையே மறக்கிறது அதைவிட இது ரொம்ப சாதாரணம்
3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?
ஒண்னும் இல்லை அம்மா சமிபகாலமா selective ammnicia (இந்தமாதிரி மாதிரி நம்ம மேல தப்பு இருந்தா இந்தமாதிரி சொல்லி சமாளிகனும் இதுதான் latest trend)
4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?
அப்படி பகிறும்போது எல்லாத்தையும் கேட்டு விட்டு கடைசில புரியலன்னு ஒரு வார்த்தையில் பதில் கொடுப்பிங்க அதுக்கு இது ரொம்ப தேவலை
5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?
சீரியல் பார்த்தா அதுல இருக்கற நல்ல விஷயங்களைச் சொல்லி பாராட்டுனா சரி சிரியல்ல
காசு வாங்கிகிட்டு காதாநாயகி அழுதா? நீங்க காசு கொடுத்துட்டு அழுவறுறது ஞாயமா?
சீரியல் பார்க்கும் போது எதாவது முக்கியமா பேசுனா  இருந்தாலும் இந்த சிரியல் முடிஞ்ச உடன் பேசவுன்னு சொல்வது
அந்த சீரியல் முடிஞ்ஞ்சா இன்னொரு சிரியல் தொடங்கும அப்பவும் சொல்ல் முடியாது
நீங்க சீரியல் போது சாப்பாடு வச்சா தண்ணி மட்டும் வைக்காம எத்தனை தடவை விக்கல் வந்து இருக்கு
கிக்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு பிரச்னைன்னா ஏன் இருக்க மாட்டேங்குது?
நீங்களே ஒரு பெரும் பிரச்சனை அத நாங்க யாருகிட்டே சொல்வது
7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?
ஒண்ணும் இல்லைமா பரதம் கத்துகாம நீ காட்டுர நவரசங்களை ரசிக்கிறேன் வேற ஒண்ணும் இல்லைமா
8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க?
எங்க சோகத்தை பகிற்ந்துகிறோம் அந்த ஐந்து நிமிட சந்தோஷம் பொருக்கலையே
ஆனா நீங்க பேசும் போது உங்க ஃப்ரெட்ண்ட்ஸ் போட்டருக்கிற நகை எப்டி இருக்கறதுன்னு அரை மணிநேரம் பிளேடு போடுற சாக்குல அதையே உத்து உத்து பாக்கிறது மறந்துறுவிங்களே
9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?
பிடிக்கலைன்னு சொன்னா நான் சமைச்சா புடிக்காது உங்க அம்மா சமைச்சா புடிக்கும்ன்னுற கொடுமை ராமாயனம் தேவையா 
யாரு சொன்னது ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன்னு உங்கிட்டே இருந்து தப்பிக்கதான் அதவும் இல்லாம நாங்க என்ன விஞ்ஞானி வளர்கிற வெள்ளை எலியா?
இந்தமாதிரி சமையலை பரிசோதனை செய்ய உங்க அம்மா விட்டில் இருந்து யாராவது வந்தது உண்டா?
10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?
ஆபிசுக்கு போனா வீட்டை மறக்கணும் வீட்டுக்கு வந்தா ஆபீசை மறக்கணுனு நீதானமா  சொன்ன!
அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது ச்சின்னப்பையனுக்கோ, தாமிராவுக்கோ தெரியுமா?
ஐடியா கொடுத்தே அவிங்கதானே

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன?
திட்ரத எழுத ஒரு பதிவு போதுமா?

1 comments:

பெயரில்லா சொன்னது…

சார்,நீங்க ரொம்ப கொடுமபடுறீங்க போல,அதுக்கு நாங்க எதுவும் பண்ண முடியாது. நீங்க அப்பாவி கணவன் கிடையாது,... அடப்பாவி கணவன்!
வளரட்டும் உங்கள் சேவை.வாழ்த்துகள்...

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP