Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

fte பங்களிப்பு

சீனிவாசன்
ரவி சங்கர்
freetamilebooks.com திட்டத்தில் நான் ஈடுபடமிக பெறிய தூண்டுகோலை இருக்கின்ற சீனிவாசன் மற்றும் ஒரு நல்ல வழிகாட்டியாக ரவி சங்கரும் இந்த நேரத்தில் என்றென்றும் நன்றி கூற வேண்டும்.
  • பாண்டிசேரி விரமாமுனிவர் பட்ட மேற்படிப்பு கல்லூரியின்  தமிழ் துறையில் மின்நூல் freetamilebooks.com பயிற்ச்சி பட்டரை நடத்தி உளேளன் (பிப் 22)


  • இவர்கள் இல்லை என்றால் இது சாத்தியம் இல்லை இதுவரை இந்த திட்டத்தில் 10+ நூல்களை திட்டத்தில் சேர்த்துள்ளேன்
  • print on demand திட்டத்தை அறிமுகபடுத்தி உள்ளேன் 20+ நூல்களை மின் நூல் ஆக்கம் செய்துளேன்.
2016 திபாவளி மலரில்  freetamilebooks.com பற்றி கட்டுரை வெளி ஆகி உள்ளது 


அதன் முழு உரை வடிவம் 


புத்தக பதிப்பில் புதிய அலைகள்-
தமிழில் மின்நூல்கள்
ஒரு மொழியின் வளர்ச்சிக்கும் வளமைக்கும் பெரிதும் உதவும் விஷயங்களில் ஒன்று அதன் படைப்பிலக்கியங்கள் தொடர்ந்து பதிப்பிக்கப்படுவது. அச்சுக்கலை இந்தியாவில் அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை தமிழில் பல லட்சக்கணக்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டு புத்தக கண்காட்சியிலும் உயரும் விற்பனையின் எண்ணிக்கை புத்தகங்களை நேசித்து வாசிப்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதை சொல்லுகிறது. தொடர்ந்து வளரும் உயரிய தொழில்நுட்பம் கைகொடுக்கக் கடந்த சில ஆண்டுகளில் பதிப்பகத்துறை பல புதிய எல்லைகளைத் தொட்டிருக்கிறது. இன்று பதிப்பக துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கணணியில் எழுதி மின் அஞ்சலில் அனுப்பப்பட்ட படைப்புக்கள் பதிப்பாசிரியரின் கணணியில்பெறபட்டு அது திருத்தப்பட்டு புத்தக பக்கங்களாக்க லே அவுட் கலைஞருக்கு மின் அஞ்சலில் அவரால் அனுப்பப்படுகிறது. அந்தக் கலைஞரின் கணணியிலிருந்தே நேராக அச்சகத்தில் அச்சிடப்பட்டு பக்கங்களை ஒருங்கிணைத்துக் கட்டமைக்கும் இயந்திரம் மூலமாகப் புத்தகமாக வெளிவருகிறது. இந்தப்பணிகள் பிரமிக்கத்தக்க வேகத்தில் நடைபெறுவது மட்டுமில்லை. வெவ்வேறு இடங்களில் நடைபெறுகிறது. மதுரையிலிருக்கும் படைப்பாளி அனுப்புவது சென்னையிலிருக்கும் பதிப்பாசிரியரால் திருத்தப்பட்டு தஞ்சையிலிருக்கு,ம் அச்சு கலைஞரால் வடிவமைக்கப்பட்டு மும்பையில் அச்சிடப்பட்டு சென்னைக்கு விற்பனைக்கு வருகிறது. இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிகள் பதிப்புத்துறையை பல புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இப்போது விற்பனைக்குத் தேவையான புத்தகங்கள் மட்டுமே பதிப்பிக்கப்படுகின்றன. ”ப்ரிண்ட் ஆன் டிமாண்ட்” என்ற இந்த முறையில் மிகக் குறைவான அளவில் கூட, ஏன் ஒரே ஒரு புத்தகம் கூட அச்சிட்டுக் கொள்ள முடியும். இதனால் பதிப்பகங்களில் புத்தகங்கள் விற்பனையாகமல் தேங்குவதில்லை. வாசகர்களுக்குக் கொடுக்கும் விலைக்கு எப்போதும் பளிச்சென்ற புதியவெள்ளை தாளில் நேர்த்தியான அச்சில் புத்தகங்கள் கிடைக்கின்றன. இப்போது இந்த தமிழ்பதிப்பு துறை அடுத்தகட்டமான “மின்நூல்கள்” நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.
மின் நூல்கள்

எலக்டிரானிக் புக் அல்லது இ புக் என உலகம் முழுவதும் அறியப்பட்டிருக்கும் இந்த மின் நூல்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள், ஆசிரியர்கள் என எல்லாப் பகுதியினரிடமும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அச்சு வடிவில் இருக்கும் புத்தகங்கள் டிஜிட்டில் வடிவமாக்கப்பட்டு கணணிகளில் படிக்க முடியும் என்று துவங்கிய இந்த மின் புத்தகம் இன்று பல புதிய உயரங்களைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
70களிலேயே அன்றைய காலகட்டத்திலிருந்த கணணிகளில் இந்த முயற்சிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இ புத்தகங்களின் முழு விச்சும் உணரப்பட்டது. 2005க்குபின்னர்தான். அந்த ஆண்டு சோனி, அமேசான் நிறுவனங்கள் மின் புத்தகங்களை படிப்பதற்கென்றே ஈ ரீடர் என்ற கருவிகளை அறிமுகப்படுத்தி அதில் படிப்பதற்கான புத்தகங்களின் பட்டியலையும்வெளியிட்டது. இதில் உலகின் மிகப் பெரிய இணைய புத்தக்கடையாக அறியப்பட்டிருந்த அமேசான் அறிமுகப்படுத்திய கின்டில் என்ற மின்நூல்படிக்கும் கருவி இ ரீடர் 2007 ல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்திய ஆறு மணிநேரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிட்டது. வாசகர்கள் ஒரே சமயத்தில் பல புத்தகங்களை எடுத்துச் செல்லும் வசதியுள்ள கையடக்கமான இந்தக் கருவியை விரும்ப ஆரம்பித்தார்கள். அச்சில் வரும் புத்தகம் அனைத்தும் இதில் அதைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும் என்பதாலும் எங்கு எளிதாக எடுத்துச் செல்லாம் என்பதாலும் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிற்று. 2010ஆம் ஆண்டு அமேசான் ”நாங்கள் விற்கும் 100 அச்சிட்ட புத்தகத்திற்கும் 140 இ புக் குகளை விற்றுக்கொண்டிருக்கிறோம்” என அறிவித்ததும் இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 28% அதிகரித்தது. புத்தக பதிப்பில் எழுந்த இந்தப் புரட்சி உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிக்கொண்டிருந்த நேரத்தில் சுனாமியாக வந்து தாக்கியது ஆண்டராய்ட் என்ற அதிதொழில்நுட்பம். இணைய இணைப்பு உள்பட கணணியின் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய ஒரு நோட்டு புத்தக வடிவில் ஐ பேட் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் அந்த கைகண்ணியிலேயே இ புத்தகங்களையும் படிக்கும் வாய்ப்பை சில இலவச புத்தகங்களின் இணைப்புடன் அளித்தது. கைக்கணணியிலேயே புத்தகங்களைப் படிக்கமுடியும் போது இதற்கு எதற்கு ஒரு தனிக்கருவி என்ற எழுந்த எண்ணம் கின்டில் போன்ற இ ரீடர்களின் விற்பனையை வெகுவாக தாக்கியது. ஆனால் புத்திசாலி நிறுவனமான அமேசான் கின்டில் நிறுவனத்தை தனிப்பதிப்பகமாக்கி அதன் புத்தகங்களைஆப்பிளின் ஐபாட் உள்பட எல்லா ஆண்டிரய்ட் கருவிகளிலும் தரவிறக்கிப் படிக்க முடியும் என அறிவித்து தங்கள் இ புக் விற்பனையை தக்கவைத்துக்கொண்டார்கள் இது காலத்தின் கட்டயாகமாகிவிட்டதால் கூகுகிள் பிளே போன்ற நிறுவனங்களும் உடனே மின் புத்தக விற்பனை களத்தில் இறங்கி இப்போது எல்லோரும் கலக்கி கொண்டிருக்கிறார்கள். இந்தப் புரட்சியினால் இன்று உலகெங்கும் மின் புத்தகங்களை ஐ பேடிலோ, டேப்லெட்டிலோ, போனிலோ ஒவ்வொரு வினாடியும் குறைந்த பட்டசம் 10ஆயிரம் வாசகர்கள் படித்து கொண்டிருக்கிறார்கள்
தமிழில் மின் நூல்கள்
இன்று உலகளவில் இணையத்தில் அதிக அளவில் பயன்படுத்தம் மொழிகளில் ஒன்று தமிழ். தமிழ் புத்தகங்களை மின்புத்தகங்களாக்கி சேமிக்க வேண்டும் என்ற முயற்சி 1995லேயே துவங்கிவிட்டது. வெளிநாடுகளில் வசிக்கும் முனைவர் கே கல்யாணசுந்திரம், முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்ற இருவரின் முயற்சியால் துவங்கப்பட்ட”மதுரை திட்டம்” இன்றளவும் எண்ணற்ற தமிழ் புத்தகங்களை மின்நூல் வடிவாக்கி தங்கள் தளத்தில் சேமித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்களுக்கும், நூல் ஆர்வலர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பயன்படும் இந்த தளம் எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. . உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் தொல்காப்பியத்திலிருந்து பொன்னியின் செல்வன் வரை 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை மின்நூலாக இலவசமாகப் பெறமுடியும்
இதைப்போலவே 2001 ஆம் ஆண்டு ஜெர்மனியில் வசிக்கும் முனைவர் சுபாஷணி, மலேசியாவிலிருக்கும் பேராசிரியர் கண்ணன். முத்த பத்திரிகையாளர் மாலன் போன்றவர்களின் முயற்சியான தமிழ் மரபு அறக்கட்டளையின் தளத்தில் 400க்கும் மேற்பட்ட பல பழமையான தமிழ் நூல்களை மின்நூலாக சேமித்திருக்கிறார்கள். அவற்றை இலவசமாகப் பெறலாம். சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை அறிந்துகொள்ள உதவும் இந்தத் தளம், ஒரு தகவல் சுரங்கம்
ஆனால் இந்தத் தளங்களில் இருப்பவை எல்லாம் பாரம்பரியம் மிக்க பழந்தமிழ்நூல்கள். அவற்றை மின்பதிப்பாக மாற்றி ஒரு நூல்நிலையம் போல் செயல் படுகிறார்களே தவிர சமகால புத்தகங்களை மின் புத்தகமாக பதிப்பிக்கவில்லை. அந்த முயற்சி 2003ல்தான் துவங்கியிருக்கிறது. முதல்வன் என்ற பெயரில் ஒரு மின்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் ஆசிரியர் முனைவர்சிதம்பரம். இந்த ”முதல்வன்” தான் தமிழின் முதல் மின்நூலாக கருதப்படுகிறது.
சமீப காலம் வரை தமிழ் மின்புத்தகங்கள் பெரிய அளவில் வெளிவராதற்கு காரணம் அதற்கான சரியான இயங்குதளம் ஒன்று இல்லாதுதான். உலகின் மிகப்பெரிய மின் நூல்களின் பதிப்பகமாக இருக்கும் கின்டில் ஆங்கிலம் தவிர 50 மொழிகளில் புத்தகங்களை வெளியிட்டாலும் இந்திய மொழிகளில் வெளியிடுவதில்லை இந்திய மொழி புத்தகங்களை வெளியிடத் தளங்களும் புத்தகங்களுக்கான விலையை இந்திய பணத்தில் செலுத்தும் வசதியும் இருந்தால் தான் இந்திய மொழி இ புத்தகங்களின் வெளியீடு வெற்றியாக முடியும் என்ற நிலை சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. இந்த நிலையை மாற்றி பல தொழில்நுட்ப சிக்கல்களுக்கிடையேயும் தமிழ் இ புத்தகங்களுக்காகவே ஒரு தளத்தை நிறுவ முனைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் முனைவர் பத்ரி சேஷாத்திரி. ஐஐடியிலும் வெளிநாட்டிலும் பொறியியல் படித்த பொறியியலாளரான இவர் ஆர்வத்தினால் புத்தக பதிப்பளாரகி புதிய சாதனைகளைச்செய்திருப்பவர். இவரது முயற்சிகள் இறுதிகட்டத்தில் இருந்தபோது தான் தினசரிகள் வெளியாகும் செய்திகளை தொகுத்து இணையத்தில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்த நீயுஸ் ஹண்ட் என்ற தளம் இந்திய மொழியில் இ புத்தகங்களை அவர்கள் தளத்தின் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியது. வாசகர்கள் வரவேற்பினால் அந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது.. இப்போது இதில் கிழக்கு உள்பட சில தமிழ் பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. பதிப்பகங்களைத்தவிர, ராஜேஷ் குமார், ரமணி சந்திரன் போன்ற எழுத்தாளர்கள் நேரடியாக வெளியிடும் புத்தகங்களும் கிடைக்கின்றன. நீயூஸ்ஹண்ட்டின் வெற்றியைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் இப்போது தங்கள் இணைய கடையான ”கூகிள் பிளே ஸ்டோரில்” இந்தியமொழிபுத்தகங்களை இந்திய பணத்திலேயே வாங்கும் வசதியை அறிவித்திருக்கிறது.
இ புத்தக உலகில் சமீபத்தில் நிகழ்ந்திருக்கும் இத்தகைய காட்சி மாற்றங்கள் தமிழில் வெளியாகும் இ புத்தகங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் என்கிறார் பத்ரி சேஷத்திரி. விரைவில் இவரது கிழக்கு பதிப்பகத்தின் பல புத்தகங்கள் கூகுள் பிளே, நியூஸ்ஹண்ட் போன்ற எல்லாத் தளங்களிலும் ஒரே விலையில் கிடைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். இவரைப் பல தமிழ்ப் புத்தக பதிப்பாளர்கள் பின்பற்றுவார்கள் என்பது உறுதி. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்கள் இ புத்தகமாக வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இ புத்தகங்களின் விலை அச்சடிக்கப் பட்ட புத்தகங்களின் விலையில் பாதிக்கும் குறைவாக இருக்கிறது ஒரு முறை தரவிறக்கம் செய்து கொண்டால் நம் நேர வசதிக்கேற்ப படிக்கலாம்.
அச்சு கூலி பேப்பர் விலை போன்றவை இல்லாதாலும். மின்நூலாக்கும் செலவு ஒரு முறைதான் செய்யப்படுவதாலும் மின் நூல்களை இப்படிக் குறைந்த விலைக்குக் கொடுக்க முடிகிறது என்கிறார் பத்ரி. அச்சில் வந்தபின் மின் புத்தகமாக வரும் இன்றைய நிலையைத் தாண்டி மின் புத்தகமாக வெளியிடுவதற்காகவே ஆசிரியர்கள் எழுதப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறார் இவர். மின்புத்தக பதிப்பில் மிக முக்கியமானது மின்னூலாக்கம். கணணிகளின் செயலாக்கத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது போல இதிலும் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு புத்தகத்தில் பக்கங்களைத் திருப்பி படிப்பதைப் போல பக்கங்களைப் புரட்டும் வசதி தெளிவான வண்ணப்படங்களுடன் அழகான லேஅவுட் போன்றவற்றைச் செய்யப் பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இலவச மின் புத்தகங்கள்
மின் புத்தகங்களை வணிக சந்தை படுத்த இம்மாதிரி முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இலவச மின்நூலாகவே கிடைக்கிறது. பங்களுருவிலிருந்து இயங்கும் ப்ரதிலிபி என்ற நிறுவனம் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் 8000த்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இலவசமாக வழங்குகிறார்கள். தமிழில் மட்டும் 1500 புத்தகங்கள். கிடைக்கின்றன. பிட்ஸ் பிலானி, அண்ணாபல்கலகழகம், டெல்லி பல்கலகழகம் போன்ற சிறந்த கல்விக்கூடங்களில் பயின்றபின்னர் அமேசான், சிட்டிபாங்க், போன்ற பெரிய நிறுவனங்களில் பணியாற்றிய 5 பேர் கொண்ட ஒரு இளைஞர் குழு முழுநேரப்பணியாக இதைச் செய்து கொண்டிருக்கிறது.
ஏன் இலவசமாகக் கொடுக்கிறார்கள்?
பதிப்பிக்கப்பட்ட நூலை மின்நூலக்குவது டெக்கினிக்கல் பிரச்னைகள் நிறைந்த பணி. அதற்காகச் செலவிடும் நேரம், உழைப்பவர்களுக்கான ஊதியம் போன்றவை அதிகம் இருந்தும் எப்படி, ஏன் இதை இலவசமாகக் கொடுக்கிறார்கள்?.
”எழுதப்படிக்க தெரிந்த இந்தியர்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியாது.. ஆங்கிலம் தெரியாத ஆனால் ஆண்டிராய் கருவிகளைத் தங்கள் மொழிகளில் பயன்படுத்த தெரிந்தவர்கள் 7 கோடிக்கும்மேல். இது வரும் ஆண்டுகளில் பல மடங்காக உயரப் போகிறது. ஒரு இந்திய மொழியில் மட்டும் 9000 அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது வாசகர்களை அடையவில்லை மார்க்கெட்டிங்கும் செய்யப்படவில்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ஒருங்கிணைத்து பாருங்கள் இந்த சந்தையின் வீச்சு புரியும் என்கிறார். சங்கரநாராயணன். இவர் ப்ரதிலிபியின் நிறுவன குழவின் தலைவர். இணையம் பயன்படுத்துபவர்கள் அனைவரும் புத்தகங்களை இணையத்தில் படிக்க வேண்டும் அந்த பழக்கத்தை ஏற்படுத்த, புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த நாங்கள் எடுத்திருக்கும் முயற்சி இது என்று சொல்லும் இவரின் குழு இந்தச் சாதனையை துவக்கிய முதாலாம் ஆண்டிலியே சாதித்திருக்கிறார்கள். நமது மொழியின் படைப்புகளை மின்னூலாக்கிப் படிக்கும் வசதியை யாராவது தருவார்கள் எனக்காத்திருந்து எவரும் முன்வராததால் நாங்களே இந்த முயற்சியில் இறங்கிட்டோம் எனச் சொல்லும் சங்கர நாராயணண். எங்களுக்கு புகழ்பெற்ற ஆசிரியர்கள் அவர்களின் படைப்புகளை வெளியிடக்கொடுத்து எங்கள் முயற்சிகளைப் பாராட்டி உதவ முன்வந்தது ஒரு மகிழ்ச்சியான விஷயம். என்கிறார். இனி சொந்தபணத்தை செலவழித்து தங்கள் முதல் படைப்பை அச்சில் வெளியிட வேண்டாம் எங்கள் ப்ரதிலிபி புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வரவேற்கிறது" ( www.pratilipi.com) என்கிறது இவர்கள் குழு. இப்போது துவக்க கட்ட திலிருக்கும் இந்த நிருவனம். பெரிய அளவில் பயனாளிகள் படைப்பாளிகள் கட்டமைப்பை உருவாக்கிய பின்னர்தான் வணிக ரீதியான மின்பதிப்புகளை வெளியிடப்போகிறார்கள்
இவர்களின் முயற்சிகளை அறிந்தவர்களில் 70%க்கும் மேற்பட்டவர்கள் அதை பேஸ்புக் மூலமாகத்தான் அறிந்திருக்கிறார்கள். முகநூலில் இவர்கள் பக்கத்தை 5000க்கு மேற்பட்டவர்கள் பின்பற்றுகிறார்கள். உலகின் மிகப்பெரிய இந்திய மொழிகளின் இ பதிப்பகமாக வேண்டும் என்ற கனவில் இயங்கும் இந்தக் குழுவினர் சொல்வது ”ஒருவேளை நாங்கள் இந்த முயற்சியில் வெற்றியடையாமல் போகலாம் ஆனால் நாங்கள் வெற்றிகரமாக ஏற்றிய இந்த தீபத்தை வேறு எவரேனும் எடுத்துச் செல்வார்கள் என்றே நம்புகிறோம்”
ப்ரதிலிபி யைப் போலவே சென்னையிலும் ஒரு குழு இத்தகைய பணிகளைச் செய்கிறது. ”ப்ரீ தமிழ் இ புக்ஸ்” (http://FreeTamilEbooks.com) என்ற குழு. இதன் உறுப்பினர்கள் தமிழகத்தின் பல நகரங்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்க பட்ட 15 பேர் கொண்ட குழு. இது. இதில் மூவர் பெண்கள். எல்லோருமே கணணி தொழில்நுட்பம் அறிந்தவர்கள். புத்தக முகப்பு தயாரிப்பு,மின்னூலாக்கம். ஆசிரியர் தொடர்புகள் எனப் பணிகளை பிரித்துக்கொண்டு இயங்குகிறார்கள். இவர்கள் அனைவரும் தன்னார்வலர்கள். இவர்கள் இலவசமாக மின்பதிப்புகளைக்கொடுப்பதின் நோக்கம் -அதிகமானோர் தமிழ் புத்தகங்களை இணையவழியில் படிக்கச்செய்யவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே என்கிறார். இந்தக் குழுவின் உறுப்பினரான திரு அன்வர். இதுவரை 200 புத்தகங்களை மின்னூலாக்கியிருக்கும் இவர்கள் புதிய மின்னூல்கள் மட்டுமில்லை தொடர்ந்து வலைப்பூக்களை எழுதிவருபவர்களின் படைப்புகளையும் தொகுத்து ஒரு மின்னூலாக்கப்படுவதையும் வரவேற்கிறார்கள்
நாம் வேகமாக மாற்றங்கள் நிகழும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.அரசியலில், கலாச்சாரத்தில், பண்பாட்டில், இலக்கியத்தில், வேளாண்மையில், மருத்துவத்தில்… என சகல தளங்களிலும் மாற்றங்கள் நிகழந்துகொண்டிருக்கிறது. புத்தகபதிப்பு துறையும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை புலிபாய்ச்சலில் வரும் மின்நூல்கள் புரியவைக்கின்றன. கிண்டில் போன்ற e-readerகளையோ, அல்லது டேப்லெட்களையோ, கைபேசியையோ பயன்படுத்தினால், எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று படிக்கலாம். டேப்;லெட்களில் ஒரே நேரத்தில் பல திரைகளைத் திறந்து கொண்டு மின் புத்தகங்களை இறக்கிக் கொண்டு Cross reference செய்து கொள்ளலாம். எழுத்துக்களைப் பெரிதாக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி இல்லாமல் படிக்கலாம். டேப்லெட்டிலோ, கிண்டிலிலோ தரவிறக்கம் செய்து கொண்டால் அதுவும் பொக்கிஷமாக ஆகிவிடும். இணையத்தில் தமிழ் மொழி பெரிய அளவில் உலவ முனைந்து வெற்றிகண்டவர்களைப்போல மின் புத்தக அலையை தமிழ் பதிப்புலகிற்கு கொண்டு வரும் முன்னோடிகளான இளைஞர் பட்டாளத்தை, ஊக்குவித்து அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துவோம்
(-கல்கி தீபாவளி மலரில் எழுதியிருக்கும் கட்டுரை ))

இணைப்பு  https://www.facebook.com/ramanan.vsv.3/posts/913154392103817?pnref=story


எழுத்தாளர் பா.ராகவன் fte திட்டம் பற்றி அவரது இணையதளத்தில்

இருவர் மற்றும் ஒருவர்

என்னிரு ஐபேட்களையும் என் மனைவியும் மகளும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டுவிட்டபடியால் எனக்கென ஒரு படிப்பான் [eReader] வாங்க நினைத்தேன். கிண்டில் வாங்கலாமா என்று நேற்று நண்பர் [FreeTamileBooks.com] ஶ்ரீநிவாசனிடம் கேட்டதன் காரணம் அதன் ஆறு இஞ்ச் பிடிஎஃப், மோபி வடிவம் போன்ற inbuilt சிக்கல்களால்தான்.மேலும் படிக்க

Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP