Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

புனிதன் ஆன மனிதன்

திங்கள்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ
!

 

பாரதியின் இந்த வாக்கை உண்மை ஆக்குவது போல் முத்து குமாரின் தியாகம் தமிழ்,தமிழன் இவர்கள் இருக்கும் வரை வரலாற்றில் இருக்கும்.அதன் பின்பும் உன்தியாகம் ஹரப்பா,மொஞ்சதாரோ நாகரிகங்கள போல தமிழ் நாகரிகம்  தோண்டி எடுக்கும் போது கூட உன் தியாகம் பேசபடும் உன் மரணம்

தூங்கி வழியும் தமிழக,இந்திய அரசாங்கத்தை தட்டி எழுப்புமா?

இவர்களுக்கு ஓட்டு வங்கி மட்டுமே முக்கியம் அப்போது மட்டுமே இளைஞர்கள்,மக்களின் ஆதரவு வேண்டி  கையேந்தும் பிச்சைகாரர்கள்

 • இவர்களோ இவர்களின் கட்சியை சேர்ந்தவர்களோ தற்கொலை செய்ய வாயை கூட திறக்கவில்லை உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்வழி என்று என்று நான்கு நாட்களில் வாபஸ் வாங்கபட்டது இவர்கள் நடத்தும் பாசாங்கு நாடகம் தொடர்ந்ந வண்ணம் இருந்து கொண்டு இருக்கிறது.
 • மத்திய அரசில் இருக்கும் அமைச்சர் பெருமக்கள் பதவியை ராஜினமா செய்ய கடிதங்களை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்காமல் கட்ச்சி தலைமையிடம் கடிதம் கொடுக்கும் உச்சகட்ட கோமாளித்தனம் நடந்தது.
 • அதைவிட கொடுமை முதல்வரின் மகள் தன் அப்பாவாயிடம் கடிதம் கொடுத்தது
 • இதே தமிழகத்தில் மத்திய அரசுக்கு அதரவு தந்த திமுக தலைவர் சிறையில் தள்ளபட்டது போது அடுத் நாளே மத்திய மந்திரி வருகிறார் ஆளும் மாநில அரசை நிர்பந்தம் செய்யபட்டு விடுதலை செய்யபடுகிறார்
 • தலைவரை கைது செய்யும் காட்ச்சிகள் படமாக்கபட்டு தொலை காட்ச்சி நிகழ்ச்சிகள் நிறுத்தபட்டு கைது செய்பட்ட காட்ச்சிகள் கூடுதல் செயறக்கை ஒலிகள் சேர்க்கபட்டு ஒட்டு மொத்த தமிழ்ர்களின் மனமும் மூளை சலவை செய்யபட்டன
 • உன் உயிர் தியாகம் அப்படிபட்ட பிராச்சார ஆயுத்மாக எடுக்கபட வேண்டாமா? 
 • நீ அதைத்தான் விரும்பினாய் உன் கடைசி கடைசி கடிதத்திலும் அதையே வலியுருத்தினாய்
 • உலக தமிழர்களின் தலைவர் இப்போது ஒரு நாட்டின் முதல்வர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பயம் வேறு
 • இதே சட்டமன்ற தேர்தல் வரவிருந்தால் உன் மரணத்தால் ஆட்ச்சியை கலைத்து மறு தேர்தல் வைத்து ஒட்டுக் கேட்க்க கூட துணிந்து விடுவார்கள்
 • மொழிபோர் தியாகிகளின் தியாகமதான் இந்த கட்ச்சி,ஆட்ச்சி ரயிலுக்கு அடியில் தலை கொடுத்தவர்தான் இந்த தலைவர்
 • அரசியலில் இருந்து வியாபாரியாக ஆகியவர்களுக்கு இந்த உயிர் தியாகத்துக்கு விலை இரண்டு இலட்ச்ம் என்று விலை வைத்தது
 • ஆக ஒரு தமிழனின் விலை இரண்டு இலட்ச்ம் என்று விலை வைத்தது
 • இவர்களுக்கு தன் சொந்தம் சொத்து முக்கியம் இதை எல்லாம் பாதுகாக்க தங்களின் பதவி அதை விட முக்கியம்

தமிழனுக்கு சினிமா,அரசியல் என இரண்டு  கடிவாளம் கட்டபட்டுள்ளது உன் மரணம் கடிவாளத்தை உதைக்க வேண்டும்.

என் பேரனுக்கு திருமணம் நடத்துவதற்கு பெண் பார்த்து வந்தேன். அதற்குள் எங்களை விட்டு போய் விட்டானே என்று கதறி அழுதார்

முத்துகுமார் உன் பாட்டியின் அழுகுரல் உனக்கு கேட்க்குமா?

யாருக்கும் உழைப்பவன் மனிதன் ஊருக்கு உழைப்பவன் மனிதன்  ஊருக்கு உழைப்பவன் புனிதன் நேற்று முதல் நீ மனிதன் இன்று முதல் புனிதன்

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP