Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

ஏர்டேல் கலாய்ப்புகள்

செவ்வாய்

ஏர்டேல் பாதிக்கபட்ட ஒரு குடிமகன் கஸ்டமர் கேர் ஆபிசரை கலாய்க்கிறார்
 
 
 
 

உல கால் பந்து போட்டி நாம் அங்கு சென்று நேரில் பார்க்காவிட்டாலும் இந்த சுட்டியில் அங்கு சென்ற ஒரு எபக்ட் கிடைக்கிறது சுட்டி

Read More » Read more...

தத்து பிள்ளை

சனி

அருணுக்கு திருமணம்  ஆகி  3வருடம் ஆகிறது ஆனால் திருமணம் செய்ய 5  வருடம் பெண் தேடிய பின்பு தான் இவனுக்கு வரன் அமைந்தது அதற்க்கு காரணம்  அருணின் லட்ச்சியங்கள் தான்
  • திருமணம் செய்தால் மாற்றுதிறனாளிதான் வேண்டும்
  • முதல் குழந்தை தன் குழந்தைதான் ஆணோ/பெண்ணோ
  • அடுத்த குழந்தை பிறந்த குழந்தையின் எதிர்பாலை தத்து எடுக்க வேண்டும்

TVC_art
இதில் முதல் லட்ச்சியம் நிறைவேற  3வருடங்கள் இரண்டாவது 2வருடம் அகிறது மூன்றாவது இன்னும் தெறியவில்லை.
அதற்க்காக   தன் மனைவியுடன் போராட தொடங்கி ஓரு 6மாதம் ஆகிறது அனிதா  இதில் என்ன கஷ்டம் அடுத்த பிள்ளை எப்படியும் பெற போகிறோம் அது நான் சொன்ன மாதிரி இருந்த என்ன?
நான் இதுக்கு முன்னாடி சொன்னதுதான் அது என்னொட குழந்தை மாதிரி இருக்காது அந்த குழந்தை மாதிரி பாசத்தை காட்டாது முடியாது.
அனிதா இப்போ நாம தத்து எடுக்க போவது ஒரு பெண் குழந்தையை ஒரு “பெண்ணே பெண்ணுக்கு உதவகூடாத? பெண்ணே  பெண்ணுக்கு  எதிரியா!”

நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த பதில்ல எந்த மாற்றமும் இல்லை நீங்க இந்த ஆணியை புடுங்காம வேற ஆணியை போய் புடுங்க முயற்ச்சி பண்ணுங்க சரியா! என்று என்று அந்த ஏசி  அறையை உஷ்ணமாக்கினாள்

அந்த பாலை சக்கரை போட்டு குழந்தைக்கு கொடுங்க என்று வாய் வழி உத்தரவு காற்றை கிழித்து பின்பு அருணின் காதை கிழித்த்து அதை கொடுத்தாச்சு அழுகையை நிறுத்தவில்லை
சக்கரை போட்டு திரும்ப கொடுங்க  சக்கரை போட்டவுடன்  இன்றைய முதல் அழுகை நிறுத்தபட்டது அனிதா வழக்கம் போல் வென்றாள்
ஒவ்வொரு அறையாக தேடியவனுக்கு வாசல் கதவின் அருகே அனிதா ஒரு குட்டி பூனைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள்
பிறந்து 4நாள் ஆகி இருக்கும் தன்னொட தாயை பிறிஞ்சுடிச்சு போல பால் கொடுத்தா நல்லா குடிக்குதுங்க
அய்யோ குக்கர் விசில் அடிக்குது  சொல்ல கூடாதா என்று பூனையை விட்டு விலகினாள்
மறு நாள் பேப்பர் எடுக்க போன அருணுக்கு பூனை காலை காட்ச்சி கொடுத்தது.
மனைவியை தொந்தரவு செய்யாமல் பால் கொடுத்தான் பூனை மொர்ந்து பார்த்து விட்டு குடிக்காமல் நின்று கொண்டது
பின்னால் திறும்பியனுக்கு  குழந்தையுடன் நின்ற அனிதா எங்கே போனிங்க? என்றாள் குழந்தை அழுகுது என்றாள்
images
இங்கே பாரு பூனை பால் கொடுத்தா குடிக்கல தள்ளுங்க நான் கொடுகின்றேன் என்றாள்.
அனிதா பூனையின் தலையை தடவி அரவனைத்த உடன் பூனை பாலை நக்க தொடங்கியது.
அனிதா காப்பி கொடேன் உன் கிட்டே ஒன்னு பேச வேண்டும் முதலில் சொல்லுங்க இல்லை சொன்னா நீ காப்பி கொடுக்க மாட்டாய் சரி இந்தாங்க காப்பி
குடித்தவன் தான் சொல்ல வந்ததை அரம்பித்தான் அனிதா காலையில் தாயை பிறிந்த பூனை நான் கொடுத்த பாலை கூடிக்கவில்லை ஆனா நீ கொடுத்த உடன் குடித்து விட்டது.
தாயில்லத பூனையே ஒருநாள் நீ கொடுத்த பாலை குடிக்க உன்கிட்ட ஓடி வருது நாம தத்து எடுக்கும் குழந்தையும் உன்கிட்டே பாசமா இருக்காதா!
மொளனமாகி அனிதா ஜன்னல் கதவை திறந்து காலை சூரியனை வரவேற்றாள்       
Read More » Read more...

ஏழுதலை நகரம்

திங்கள்

வாசிக்கும் அனுபவம்

நாம் பொழுது போக்க விளையாட்டு அல்லது வேறு ஏதோ ஒரு கேளிக்கையில் நம்மை முழ்கி நம் மனதை லேசாக்குவோம்.
இதில் விளையாட்டில் இருவர்  அல்லது அதற்றக்கு மேல் நபர்கள் சேர்ந்து செய்வதாக இருக்கும்.
ஆனால்  புத்தகம் படிப்பது ஒருவரே அந்த செயலலில் ஈடுபட்டு அதன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
***********************************************************

ஏழுதலை நகரம்-எஸ்.ராமகிருஷணன் 




Book_13
இந்த புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது அது வரை எஸ் ராவை அவரது இணையதளத்தில் மட்டுமே படிக்கும் நான் முதல் முறையாக இந்த புத்தகத்தை நான் படித்தேன் வியந்தேன்
எஸ் ரா நமது கையை பிடித்து ஒரு மாயலோகத்துக்கு அழைத்து செல்வது போல் இருக்கிறது படிக்கும் போது நீங்கள் அந்த மாயலோகத்தில் இருப்பீர்க்ள படிப்பதை நிறுத்தினால் மட்டுமே நீங்கள் நிகழ் உலகத்தில் வருவீர்கள் என்பது உறுதி.

இதில் வரும் காதாபத்திரம் நம் மனதில் நின்று இருக்கும் காலம் காலமாக (இது போன்ற எஸ் ராவின் இன்னொரு நூலை படிக்காத வரை)

  • இதில் வரும் எலியின் பெயர் “ஞலி அதன் தம்பிகளின் பெயர் நெலி,திலி,கலி,தலி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்கள் நமக்கு சுவரசியமாக உள்ளது.
  • காண்ணாடிகார தெரு இன்னொரு அதியசம் அதில் தொடங்கி அதை பற்றிய suspence கடைசிவரை கொண்டு போவது நன்று இது போன்று பல அற்புதங்களை தாங்கி இருக்கிறது இந்த 231 பக்க நூல்
  • இதில் வரும் நிழ் இல்லாத பறவையின் பெயர் மானீ இதை பற்றி சொல்ல இன்னும் இருக்கு
  • வயது ஆகாமல் வளரும் உயிர் எது? விடை தாயின் வயிற்றில் வளரும் குழந்தை  என்ற களவி போல் இந்த புத்தகத்தில் அள்ள கிடைக்கிறது
நமது குழந்தைகளுக்கு நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டிய மற்றும் தகுதியான நூல் பிறந்த நாள் காணும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதை பரிசாக கொடுக்க வேண்டும்.
இதன் வெற்றியே இந்த நூல் பெறியவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அப்படி பிடித்தால் மட்டுமே இதை போன்ற குழந்தைகளுக்கு நூல் சென்று அடையும்.
நமது குழந்தைகள் இன்னமும் வெளி நாட்டு கார்டுன்களில் முழ்கி இருக்கிறார்கள் இவர்களுக்காக இந்த புத்தகம் இன்னொரு “நார்னியாவாக” இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு திரைப்டமாக எடுக்க 100% தகுதியானது மேலும் ஆங்கில படங்கள் போல உலக அளவில் எல்லோரும் தமிழில் பார்க்க  தகுதியான படமாக இருக்கும்
எஸ் ராவின் இணையதளம் http://www.sramakrishnan.com/
எஸ் ராவின் புத்தகங்கள் http://www.sramakrishnan.com/Books_1.asp

விகடன் பதிப்பம் இதனை வெளிட்டுள்ளது விலை 100ரூ இதன் எழுத்துறுக்கள் குழ்ந்தைக்ள் படிக்க பெறியதாக உள்ளது.

இந்த நூலைபற்றி எஸ்ரா

banner_1
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப்  பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது  இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன். 
Read More » Read more...

என் பிரியமுள்ள அக்கரையாளர்களுக்கு

செவ்வாய்

image11

2003,04,05,06,07,08,09,சமகாலத்தில் 2010- வருடங்களில் மின் அஞ்சல் மூலமா எனக்கு நல்ல நல்ல அறிவுறைகளை அள்ளி அள்ளி கொடுத்த  என் நண்பர்கள்,உறவினர்கள் நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியை தெறிவித்து கொல்கிறேன்


Read More » Read more...

தொலைந்த வீடு

கிருஷ்ணன் மூன்று வேளை வயிற்றில் எறியும் அக்னியை அடக்கி தினமும் காலையில் அவன் வீட்டு கக்கூஸை தினமும் அசுத்தம் செய்ய ஒரு கடையில் அடிமை சேவகம் செய்கிறான். சயங்காலம் ஒரு டீ வடையுடன் தன் அடுத்த வேளை அக்னியை சிறிது அடக்கி பஸ்சுக்காக காத்து இருந்தான்.

mental-health-problem

தன் முதுக்கு பின்னால் கூர்மையான ஏதோ ஒன்று குத்துவது போல் உணர்ந்தான் திரும்பினால் நிமிர்ந்த தொந்தியுடன் கவிழ்ந்த தலைக்கு கிழ் உள்ள வாய் கோணலாகி கிருஷ்ணனிடம் எதோ சொல்ல வந்தது.

 

கடைசியாக அந்த வாயில் இருந்து சார் சார் மயிலாப்பூர் பக்கத்தில் உள்ள ஏரியா சொல்லுங்க என்று திக்கி திக்கி வார்த்தைகள் வந்தது.

ராயப்பேட்டை,மந்தைவெளி,மந்தைவெளிபாக்கம் என்று அடுக்கினான் அதற்க்குள் திரும்ப திக்கி தலையை வேகமாக ஆட்டி இல்லை என்றான்!

எதுக்கு இதை கேட்க்கிற ஒஒஒண்ணும் இல்லிங்க என்னோட வீடு மறந்து போச்சு என்னது வீடு மறந்து போச்சா!

சரி உன்னோட வீட்டில் இருக்கிரவங்க மொபைல் நம்பர் கொடு நான் கால் பண்ணி அவங்ககிட்டே கேட்கிறேன்.

இஇஇல்லை சார் உங்களுக்கு எதுக்கு அந்த தொந்தரவு நான பார்த்துகின்றேன் என்று அந்த கூட்டத்தில் கறைந்த போனான்.

கிருஷணனுக்கு பஸ் வந்தது ஏறி போனான் 10 நிமிடம் கடந்து ஒரு பஸ் ஸடாப்பிங்கில் நின்றது ஜன்னல் பக்கமாக பார்த்தவனுக்கு  அதே பையன் தன் கையில் உள்ள பேப்பரை கத்திபோல் மடக்கி

ஒருவரின் முதுகை கூத்தி கொண்டு இருந்தான் அந்த நபரும் அவனின் கேள்விகளுக்கு விடை கொடுத்து கொண்டு இருந்தார். கிருஷ்ணன் திரும்ப அவனை பார்த்தால் விசாரிக்க நினைத்தான்

அதற்க்குள் வயிற்றில் அக்னி எறிய தொடங்கியது.

Read More » Read more...

ஜெய்ஹோ நடனம்

ஞாயிறு

அமேரிக்க மாணவர்களிளின் ஜெய் ஹோ  பாடலுக்கு நடனம்

Read More » Read more...

மன்னிப்புக் கேள்!

செவ்வாய்

மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம்.  பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.
இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு.  மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது.  இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப்  பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான்.  அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி.  இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.
கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன்.  அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.  நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன்.  என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.  
என்னுடைய பலவீனம் அது.  உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும்.  அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.
நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை.  நீங்கள் உற்று கவனித்தால் தெரியும்.  கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும்.  அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும்.  அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார்.  ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான்.  அதை இயக்குபவர் ஆண்டனி.
அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது.  “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள்.  அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?”  கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன்.  விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி.  எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரே குழப்பமாக இருந்தது.  நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?  நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்?  அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்?  மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா?  எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?
ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன்.  ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி.  கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள்.  இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள்.  பவா ஒரு கம்யூனிஸ்ட்.  அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.
ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா?  ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள்.  பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று.  தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள்.  என்னுடைய நிலைமையும் அதுதான்.  நித்தி தன்னை சாமி என்றார்.  எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும்.  மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான்.  நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன்.  ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.  ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்?  அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும்.  அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன்.  அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்?  ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா?  அதனால்தான் நித்தியை நம்பினேன்.
இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?
உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன்.  ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.  அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும்.  கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம்.  ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம்.   கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா?  போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?
தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன்.  வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம்.  பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம்.  அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது.  நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர்.  மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது.  ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா?  சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும்.  அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள்.  எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.
மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல.  வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது.  ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம்.  பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம்.  அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம்.  இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.
ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது.  டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.
(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது.  கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது.  அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்).
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP