5 வயது சிறுமியை மிருகத்தனமாக அடித்த 2 போலீசார் சஸ்பெண்ட்
புதன்
லக்னோ: உபி மாநிலம் எடாவா நகரில் திருட்டு வழக்கில் 5 வயது சிறுமியை கைது செய்து மிருகத்தனமாக அடித்து துன்புறுத்திய போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை கோமல் என்ற சிறுமி கடை ஒன்றில் 280 ரூபாய் திருடியதாக போலீசார் கைது செய்தனர். சிறு குழந்தை என்று கூட பாராமல் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
தலை முடியைப் பிடித்து தூக்கியும், தலை முடியைத் திருகியும், கொடூரமாக நடந்து கொண்ட போலீஸாரின் செயல் அதை நேரில் பார்த்த பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதை அங்கு இருந்த மற்ற 6 போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து டிஜிபிக்குத் தகவல் போனது. இதையடுத்து சிறுமி என்றும் பாராமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சந்திரபன் சிங், எஸ்.ஐ ஷாம்லால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், நான் எனது மகளை 15 ரூபாய் கொடுத்து கடைக்கு அனுப்பினேன். அங்கு வேறு யாரோ பணத்தை திருடியதற்கு எனது மகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்றார்.
மிருகங்கள் தங்களது ஒத்த மிறுக்த்தை தன்க்கு தீங்கு இழைத்தால் ஒழிய துன்புறுத்துவது இல்லை
மிறுகம் ஆபத்து வந்தால் எதிரியை தாக்கும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே ஒன்று கூடும்.இதை செய்து இருக்கும் இந்த மாக்களுக்கு உணர்வுகளுடன் விளையாடிய இவர்களுக்கு
இந்த சிறு குழந்தை அடிமட்ட மனிதர்களிடம் மட்டுமே இவர்களின் அதிகாரம் பாயும் சாதாரண வார்டு கவுன்சுல்களிடம் கூட இவர்களின் அதிகாரம் நாயின் வால் போல் சுருண்டு விடும்
இவர்களின் காக்கி உடை மட்டுமே இவர்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது இதே செயலை காக்கி உடை இல்லாமல் செய்ய தைரிய்ம் இருக்காது
இவர்களை நாய் என்று கூட திட்டகூடாது அது கூட தன் எஜமான்னுக்கு நன்றியோடி இருக்கிறது இவர்கள் நமது வரிபணத்தில் நம்மையே துன்புறுத்தும் நயவஞ்சகர்கள யார் இவர்களுக்கு தண்டனை அளிப்பது என்ன தண்டனை அதிகபட்ச்சமாக வேலை பறிபோகும். அதை விட இவர்களை உயிருடன் எறித்தால் இனியாரும் இது போன்ற காரியத்தில் யாரும் ஈடுபடமாட்டார்கள்
0 comments:
கருத்துரையிடுக