Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப கஷ்டம்

சனி


அண்ணன் பரிசலின் மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! ஒருஅப்பாபாவி கணவனா பதில் கொடுக்க முயற்ச்சி செய்துள்ளேன்

கேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப குஷ்டம் சாரி கஷ்டம்



wya_logo
1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?
கிடைக்கிறது ஓரு நாள் விடுமுறை அதில் நீங்கள் பார்க்கும் வேலைகளை நாங்க பார்த்தா நீங்க என்ன வேலைதான் பார்ப்பிங்க
காவாய் அடைச்சா மோட்டர் ரிப்பேர் ஆனா ஆள் கூப்பிடரது விட்டில் fuse போடரது இந்தமாதிரி வேலைகளை எப்பவாவது நீங்க செய்து இருகிறிர்களா?
அலுவலகத்தில் அவசர வேலை இருந்தாலும் நாங்தான் இந்த வேலைகளை செய்யனுன்னு M.D முன்னாடி இருக்கும் போது miss call கொடுத்தால   M.D கேவலமாக எத்தனை தடவை பார்த்து இருப்பார் தெறியுமா?
2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க?
கடையில ரொம்ப கூட்டமாக இருக்கும் போது ஒன்னு ரெண்டு பிகர்களை கரக்கட் பண்னும்போது மறக்கிறது சகஐம் தான இதேல்லாம் ஒரு தப்பா?
நீங்க மட்டும் அம்மா வீட்டு போனால் எங்களையே மறக்கிறது நெடுந் தொடர் பார்க்கும் போது
உங்களையே மறக்கிறது அதைவிட இது ரொம்ப சாதாரணம்
3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?
ஒண்னும் இல்லை அம்மா சமிபகாலமா selective ammnicia (இந்தமாதிரி மாதிரி நம்ம மேல தப்பு இருந்தா இந்தமாதிரி சொல்லி சமாளிகனும் இதுதான் latest trend)
4) புத்தகம் படிக்கறப்பவோ, டி.வி. பார்க்கும்போதோ ‘பளிச்’னு ஏதாவது பகிர்ந்துக்கறா மாதிரி வந்ததுன்னா வீட்டுக்குள்ளயே இருக்கற எங்களை விட்டு எங்கோ இருக்கற யாரையெல்லாமோ கூப்ட்டு சொல்றீங்களே.. அது ஏன்?
அப்படி பகிறும்போது எல்லாத்தையும் கேட்டு விட்டு கடைசில புரியலன்னு ஒரு வார்த்தையில் பதில் கொடுப்பிங்க அதுக்கு இது ரொம்ப தேவலை
5) நீங்க சீரியல் பார்த்தா அதுல இருக்கற டெக்னிகல் விஷயங்களைச் சொல்லி, ஏதாவது டயலாக்கைச் சொல்லி ‘சூப்பர்.. சூப்பர்’ங்கலாம். நாங்க பார்த்தா அதுவே சீரியல் பார்த்து கெட்டுப்போறதாகுது. அதெப்படீங்க?
சீரியல் பார்த்தா அதுல இருக்கற நல்ல விஷயங்களைச் சொல்லி பாராட்டுனா சரி சிரியல்ல
காசு வாங்கிகிட்டு காதாநாயகி அழுதா? நீங்க காசு கொடுத்துட்டு அழுவறுறது ஞாயமா?
சீரியல் பார்க்கும் போது எதாவது முக்கியமா பேசுனா  இருந்தாலும் இந்த சிரியல் முடிஞ்ச உடன் பேசவுன்னு சொல்வது
அந்த சீரியல் முடிஞ்ஞ்சா இன்னொரு சிரியல் தொடங்கும அப்பவும் சொல்ல் முடியாது
நீங்க சீரியல் போது சாப்பாடு வச்சா தண்ணி மட்டும் வைக்காம எத்தனை தடவை விக்கல் வந்து இருக்கு
கிக்ரிக்கெட் மேட்ச்ல கடைசி ஓவர்ல அஞ்சு ரன் தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – எங்களுக்கு ஒரு பிரச்னைன்னா ஏன் இருக்க மாட்டேங்குது?
நீங்களே ஒரு பெரும் பிரச்சனை அத நாங்க யாருகிட்டே சொல்வது
7) ஏதாவது குடும்ப விஷயத்தைப் பத்தி சீரியஸா உங்ககிட்ட பேசும்போது அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?
ஒண்ணும் இல்லைமா பரதம் கத்துகாம நீ காட்டுர நவரசங்களை ரசிக்கிறேன் வேற ஒண்ணும் இல்லைமா
8) ஏதாவது ஃபங்ஷனுக்குப் போய் எங்க ஃப்ரெட்ண்ட்ஸ், ரிலேடீவ்கூட பேசிகிட்டிருக்கறப்போ வந்து ‘போலாம் போலாம்’னு அவசரப்படுத்தற நீங்க.. அதே உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிகிட்டிருந்து நாங்க கூப்ட்டா மட்டும் ’ஏண்டி அவசரப்படுத்தற.. எத்தனை நாள் கழிச்சு மீட் பண்றோம்’ங்கறீங்களே.. அது ஏன்ங்க?
எங்க சோகத்தை பகிற்ந்துகிறோம் அந்த ஐந்து நிமிட சந்தோஷம் பொருக்கலையே
ஆனா நீங்க பேசும் போது உங்க ஃப்ரெட்ண்ட்ஸ் போட்டருக்கிற நகை எப்டி இருக்கறதுன்னு அரை மணிநேரம் பிளேடு போடுற சாக்குல அதையே உத்து உத்து பாக்கிறது மறந்துறுவிங்களே
9) நாங்க ரசிச்சு சமைச்சு வைக்கறப்போ எல்லாம், அதெப்படி உங்க ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன் நடந்து, இன்ஸ்பெக்டர்கூட ஹோட்டல்ல லஞ்சுக்குப் போறீங்க? அதே மாதிரி என்னைக்காவது ஏனோ தானோன்னு நாங்க கொஞ்சமா வைக்கற ஐட்டம் ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?
பிடிக்கலைன்னு சொன்னா நான் சமைச்சா புடிக்காது உங்க அம்மா சமைச்சா புடிக்கும்ன்னுற கொடுமை ராமாயனம் தேவையா 
யாரு சொன்னது ஆஃபீஸ்ல இன்ஸ்பெக்‌ஷன்னு உங்கிட்டே இருந்து தப்பிக்கதான் அதவும் இல்லாம நாங்க என்ன விஞ்ஞானி வளர்கிற வெள்ளை எலியா?
இந்தமாதிரி சமையலை பரிசோதனை செய்ய உங்க அம்மா விட்டில் இருந்து யாராவது வந்தது உண்டா?
10) ஆஃபீஸூக்கு கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. சாயந்தரம் ஆஃபீஸ்லயும் இதே மாதிரி ‘வீட்டுக்குப் போகணும்.. லேட்டாகுது’ன்னு குதிப்பீங்களா?
ஆபிசுக்கு போனா வீட்டை மறக்கணும் வீட்டுக்கு வந்தா ஆபீசை மறக்கணுனு நீதானமா  சொன்ன!
அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது ச்சின்னப்பையனுக்கோ, தாமிராவுக்கோ தெரியுமா?
ஐடியா கொடுத்தே அவிங்கதானே

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு சொல்லு.. சொல்லு-ன்னு உயிரெடுக்கறீங்களே.. அப்பப்போ திட்டறப்பவே எழுதிவைக்கறதுக்கென்ன?
திட்ரத எழுத ஒரு பதிவு போதுமா?

Read More » Read more...

டாக்டருடன் கடலை போட

வியாழன்

chat4pro நாம் தினமும் வாழ்க்கையில் அரசாங்க சேவைகளை வேண்டி அரசாங்க அலுவலகங்களில் கால் கடுக்க நின்ற  அனுபவம் நம்மில் எல்லோருக்குமே உண்டு

எந்த சேவையிலும் ஒரு குறை உள்ளது நியாய விலை கடைகளில் அளவு குறைவு,பேருந்துகளில் சில்லரை குறைவு என்று எண்ணில் அடங்கா குறைகள்

இதில் பேருந்துகளில் சில்லரை குறைவு கண்டக்டர்கள் நமக்கு சில்லரை குறைவாக தருவார்கள் நாம் சில்லரை குறைவாக கொடுத்தால் நம்மை பர்க்கும் பார்வையை வார்த்தைகளால் விளக்கமுடியாது

  அவர்கள் 2.50 பயணசீட்டுக்கு 3.00 ருபாய் கொடுத்தாலும் மீதி 50 பைசா கொடுக்க மாட்டார் கொடுக்காதற்க்கு எந்த சில்லரை இல்லை என்ற சிறு சமாதனம் கூட சொல்ல மாட்டார் என்ன கொடுமை சரவணன் என்று mind voice கேட்கும்

தமிழக அரசு பல இணைய சேவைகளை வழங்குகிறது அதில் மிகவும் பாராட்ட வேண்டிய ஓரு சேவை அது மருத்துவர்களுடன் இணையத்தில் நமது கேள்விகளுடன் உரையாடுதல் என்னும் ஒரு மிக சிறப்பான ஒரு சேவை.

வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் ஒவ்வோரு மருத்துவ பிரிவிலும் மருத்துவர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். தினமும் மாலை (4 முதல் 6மணி வரை)

மேலும் இந்த தளத்தில் நுழைய நமது பெயர் user id மற்றும்  பொது மக்களுக்கு password கொடுக்க வேண்டியது இல்லாமல் நுழையலாம்.

screenshot.7

இதுவரை chatting என்பது தோழர்,தோழிகளுடன கடலை போட வெளிநாட்டில் வாழும் நமது உறவினர்களுடன் உரையாட மட்டுமே நாம் இதுவரை உபயோகம் செய்தோம் ஆனால் இந்த ஒரு சேவை ஒரு  மக்கள் நேரடியாக பயன் அடையும் ஒரு மக்கள் சேவை

இதுபோன்ற சேவைகள் புதிதாக தொடங்க ஒரு முன்னோடி திட்டம் இது கண்டிபாக ஒரு அரசியல்வாதியின் idea-க இருக்காது ஓரு I..A.S அதிகாரியின் மூளையாக இருக்கலாம்  எந்த சேவையும் மக்களை சேர்ந்தால்தான் அது உண்மையான வெற்றி ஆகும்

இந்த தளமானது என்ன காரணம் என்று தெறியவில்லை google பாதுகாப்பான தளம் இல்லை என்று g எச்சரிக்கை வந்தது இப்போதுதான் இது வேலை செய்கிறது மற்றும் நான் உபயோகம செய்து பார்த்ததில் மிக சிறப்பாக வேலை செய்கிறது படத்தை பார்க்கவும்.

மறுத்தவர்களின் உரையாடல் சுட்டி http://www.tnhealth.org/chat.htm

screenshot.5

Read More » Read more...

பத்து கேள்விகள்? குத்து மதிப்பான பதில்கள்

சனி

boxing_squirrel

அண்ணன் கேபில் சங்கரின் பத்து கேள்விகள் என் இரவு தூக்க்கத்தை கெடுத்தால வந்த வினைதான் இந்த குத்து மதிப்பான பதில்கள் இதை படிச்சுட்டு இந்த குத்துக்கு மதிப்பு என்ன இந்த குத்துக்கு மதிப்பு என்னன்னு யாரும் கைய்ய தூக்கிடாதிங்க
****************************************************************************************************************************************************
1 . புதுசா எழுத வரும் பதிவர்கள் எல்லோரும் ஏன் ஆரம்பிக்கும் போதே தங்களுக்கு மற்றவர்களை போல எழுத தெரியாது. ஏதோ எனக்கு தெரிஞ்ச மொக்கைய எழுதறேன்னே ஆரம்பிக்கிறாங்க..?.
  • எங்கள எல்லாம் படிச்சா பிடிக்காது படிக்க படிக்கதான் பிடிக்கும்
2 . அப்படியே எழுத ஆரம்பிச்சி ஒரு பத்து பதிவு வரதுக்குள்ளே, தமிழ்மணம், தமிலிஷில் ஓட்டு வரலைன்னு கவலைபட ஆரம்பிச்சி, ஓட்டு போடுங்க.. ஓட்டு போடுங்கன்னு விதவிதமா கூவறாங்களே அது ஏன்..? படிச்ச எங்களுக்கு நல்லாயிருந்தா ஓட்டு போட தெரியாதா..?
  • தமிழ்மணம், தமிலிஷில் எல்லாம் அந்த காலம் இப்ப குமுதம்,விகடன் புது டிரேண்ட் தெறியாதா
3 . கொஞ்சம் முகம் தெரிய ஆரம்பிச்ச உடனேயே உங்களுக்குள்ளேயே குருப் சேர்த்துகிட்டு, ஒருத்தரை ஒருத்தர் _______ விட்டுக்கிறீங்களே அது ஏன்..?
  • குருப் சேர்ப்பது பின்னுட்டகளை அள்ளி ஒன்னா சேர்ந்து கும்மி அடிக்கதான் கொள்கை கோட்பாடு எல்லாம் என்ன விலைன்னு கேட்ப்போம் பதிவு எழுதி முடிச்ச உடன் அவர் அவருக்கு வேலை இருக்கு
4 . அப்புறம் கருத்து சொல்றேன் பேர்விழின்னு A4 பேப்பர்ல முப்பது பக்கம் வர மாதிரியெல்லாம் பதிவை போட்டு, விஷயத்தை மட்டும் எழுதாம, வளவளன்னு எழுதி எங்க உயிரை வாங்குவது ஏன்.?
  • வளவளன்னு எழுதி எவ்வளவு கஷ்டம் தெறியுமா ஆனா அதையும் நீங்க எழுதி எங்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்திங்கனா நீங்க றொம்ப நல்லவங்க
5 . எழுத்துப்பிழை இல்லாம எப்பத்தான் பல பேர் எழுத போறாங்களோ..? பல சமயம் தமிழ் அகராதியெல்லாம் தேட வேண்டியிருக்கு. எதுக்கும் நாலு முறை செக் செஞ்சிட்டு போடலாமில்ல..?
  • ஆங்கிலத்துல தட்டச்சு செஞ்சு பழக்கமான எங்களுக்கு nhm புண்ணியத்துல தமிழ்ல அடிக்கிறோம் இதுல இருந்து என்ன தெறியுது நீங்க எல்லாம் பெறிசுங்க நங்க எல்லாம் சிறு பயலுங்க ஆனா அதுக்கும் ஒரு தீர்வு இருக்குங்க அதுதாங்க nhm lister பிழைகளை நாங்களே திறுத்த
6 . பதிவர் சந்திப்புன்னு மாசா மாசம் எல்லாரும் சேர்ந்து கும்மியடிச்சிட்டு, உங்களுக்குள்ள கட்சி கட்டிகிட்டு, ஆளாளுக்கு அவங்களுக்கு பிடிச்சவங்களை பத்தி மட்டுமே எழுதுறது என்ன நியாயம்..?
  • பதிவரகள் செய்கின்ற தவறுகளை தனியா சுட்ட பதிவர் சந்திப்பு
  • சக பதிவர்களை பாராட்டஎல்லோரிடமும் தெறிவிக்க பதிவுகள் இதுல வேற ஒன்றும் அரசியல் இல்லிங்க
7 . அதிலும் சில பேர்(கே.சங்கர் போன்றோர்) போட்டோ போடறேன்னு படு கேவலமான கேமராவில இங்கிலிஷ் பேய் படம் பார்கிற எபக்டுல லைட்டே இல்லாம பதிவர்கள் படங்களை போட்டு பயமுறுத்துவது ஏன்..?
  • mobile-n போட்டோ எடுக்க இனிமேல் தடா அழகா இருக்கின்ற எங்களை இப்படி காட்டினா என்ன நியாயம் நாங்க அழகா இருக்கிறது உங்களுக்ல்லாம் பொறமை
8 . பதிவு பூராவும் அந்த விஜ்ஜெட், இந்த விஜ்ஜெட்னு கண்டதையும் போட்டு, பேஜ் ஓப்பன் ஆவறதுக்குள்ள எங்க தாவு தீர வைக்கிறது ஏன்? மொக்கை பதிவெல்லாம் கூட தமிழ்மண சூடான பதிவில் வருவது எப்படி?
  • widjet இல்லாமல் template எப்படி முடிஞ்சவரை widjet footer பகுதியில் இணைச்சா உங்களை படிக்கிறவங்களுக்கு நல்லது
  • படங்களை jpg –யாக இணைக்கமல் gif-ஆக இணைக்கனும் முடிஞ்வரை படங்களின் அளவுமாற்ற அவசியம் இல்லைன்னா படங்களின் url உபயோகிக்கனும்
  • template மாற்றிய பின்பு இங்க போயி blog loading time check பண்னுங்க
  • பதிவுகள் சினிமா,அரசியல்ன்னு வகைபடுத்தும்போது மொக்கைன்னு ஓரு வகை உண்டாக்கனும்
9. சினிமா விமர்சனம் எழுதுறேன்னு ஏதோ படத்தை டைரக்ட் பண்ண டைரக்டர் ரேஞ்சிக்கு விமர்சனம் பண்றதும், அவரே யோசிக்காத விஷயங்கள் எல்லாம் படத்துல இருக்கிறதா இவங்களே ஃபீல் பண்ணி வரிந்து கட்டி எழுதறது ஏன்?
  • பாசு நாங்களும் எப்படி இயக்குனரு ஆவுறது
10 . ஆரம்ப காலத்தில் ஒரு பின்னூட்டத்துக்கு பதினைந்து பதில் போடும் பதிவர்கள், கொஞ்சம் பிசியான பதிவர் ஆனதும் ஏன் பதில் பின்னூட்டம் இடுவதில்லை..?
  • நாங்க எல்லாம் ரொம்ம்ப பிசி
Read More » Read more...

விகடனில் நம் வலைபூ

ஞாயிறு

bell-logo


என்னுடைய வலைபூ விகடனில்  blogs கார்னர் பகுதியில் இடம் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை இந்த கட்டுரை காதலர் தினத்தை முன்னிட்டு நமக்கு வரும் முன்அஞ்சல்களில் வரும் வைரஸ்லிருந்து எப்படி பாதுகாப்பது என்பதை பற்றிய கட்டுரை.
இந்த கட்டுரை இன்னும் நல்ல படைப்புகளை எழுத வேண்டும் என்ற ஆவல்,ஆசையை உருவாக்குகிறது.
இதுபோல எல்லோரின் கட்டுரையும் இடம் பெற வாழ்த்துகள் இன்று காலைதான் இந்த கட்டுரை விகடனில் இடம் பெற்ற செய்தியை திரு. வண்ணத்து பூச்சியார் அவர்களின் பின்னுட்டத்தில் தெறிந்து கொண்டேன் இந்த நேரத்தில் அவருக்கு என் நன்றி.
Snap1
விகடனின் இணைப்பு:  http://youthful.vikatan.com/youth/bcorner.asp
கட்டுரையின் சுட்டி:http://nattuboltu.blogspot.com/2009/02/blog-post_12.html
Read More » Read more...

இலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மனு!

சனி

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையை இலங்கை மனித அவலம் தொடர்பாக‌ உடனடியாக எம்மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வைப்பதற்கான‌ மனு இங்கே கீழே தரப்பட்டுள்ளது. இந்த மனுவானது கீழ் வரும் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப் படுகின்றது.

To: The Security Council of the United Nations

H.E. Mr. Liu Zhenmin, Permanent Representative of the People's Republic of China to the United Nations

H.E. Mr. Jean-Pierre Lacroix, Deputy Permanent Representative of France to the United Nations

H.E. Mr. VitalyChurkin, Permanent Representative of the Russian Federation to the United Nations

H.E. Ms. Karen Pierce, Deputy Permanent Representative of the United Kingdom to the United Nations

H.E Ms. Susan E. Rice, Permanent Representative of the United States to the United Nations

H.E. Mr. Mayr-Harting, Permanent Representative of Austria to the United Nations

H.E. Mr. Michel Kafando, Permanent Representative of Burkina Faso to the United Nations

H.E. Ms. Villalobos, Permanent Representative of Costa Rica to the United Nations

H.E. Mr. Skračić, Permanent Representative of the Republic of Croatia to the United Nations

H.E. Mr. Takasu, Permanent Representative of Japan to the United Nations

H.E. Mr. Giadalla A. Ettalhi, Permanent Representative of the Socialist People's Libyan Arab Jamahiriya to the United Nations

H.E. Mr. Claude Heller, Permanent Representative of Mexico to the United Nations

H.E. Mr. İlkin, Permanent Representative of Turkey to the United Nations

H.E. Mr. Rugunda, Permanent Representative of the Republic of Uganda to the United Nations

H.E. Mr. Le Luong Minh, Permanent Representative of the Socialist Republic of Viet Nam to the United Nations

We, the concerned of the humanitarian situation in Sri Lanka, write to you to plead that the Security Council of the United Nations give immediate attention to the humanitarian situation in Sri Lanka.

As you are aware, the government stepped up an aggressive military campaign in the North and East of Sri Lanka. Thereafter, the humanitarian situation continues to deteriorate and various sources reported over 1000 innocent civilian casualties and over 3000 paralyzing injuries since early 2009. Even the government announced ‘safe zones’ and civil infrastructures such as Schools, hospitals, commerce centres, temples and churches continue to be targets for bombing and shelling. The Defence Secretary of the Country, Mr. Gothabaya Rajapakse in a BBC interview, overtly made an appalling statement that hospitals are legitimate targets for military shelling and air attacks.

The Sri Lankan government has expelled international and local non-governmental organizations (NGOs) from providing relief to more than half-a-million Internally Displaced Persons (IDP). Further, all bare essential items including food, medicine, and tents are blocked from going to the people in the displaced areas.

All local and foreign media are barred from travelling to the conflict zone. The few media that are attempting to bring the plight of Tamils in Northern Sri Lanka are killed, abducted, intimidated or threatened. Amnesty International has reported that at least ten media personals had been killed since 2006. Latest known victim of such killings was Mr. Lasantha Wickramatunga, a well respected independent neutral leading journalist, critical of the government’s involvement in corruptions, human rights violations, and violence in the country.

The human rights violations are being tolerated by the international community for far too long under the name of aiding a state to fight a ‘war on terrorism’. If this is allowed to continue, it would be too late when the world realizes another grave mistake was made.

This dire humanitarian situation in Sri Lanka requires urgent intervention of the United Nations. Please help shed light on humanitarian situation in Sri Lanka and request the United Nations to:

- Intervene immediately to stop the war and urge for resumption of peaceful negotiations.
- Urge Sri Lankan government to allow the NGO’s to serve the people in the affected areas.
- Urge Sri Lankan government to allow the access to the independent media.
- Urge Sri Lankan government to allow independent human rights monitoring.

Peace activists, NGOs, and the helpless Tamil Diasporas whose kith and kin are annihilated everyday in what we know is a systematic genocide campaign, are clinging on to one and only one thing; hope. Hope, that the UN will intervene and save a race from defacement, starvation and extinction.

Sincerely,

The Undersigned


மனுவை அனுப்புவதற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

தயவு செய்து உங்கள் நட்புகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி http://www.petitiononline.com/sgsl159/petition.html
Read More » Read more...

என்றைக்கு செத்தா நாளைக்கு பால்?

வெள்ளி

title clockface


சாவும் நாள் தெறிஞ்சா வாழுற நாளு நரகமாகி விடும் இது ரஜினி பட டயலாக் ஆனா இந்த நாளும் நமக்கு தெறிஞ்சிக்க முடியும்.பிறப்பு இறப்பு இது ரெண்டு மட்டும் தான் உண்மையாக இருக்கிறது
நடிக்ர செந்தாமரை அவர் சாகும் நாளை முன் கூட்டியே  சென்னார் என்று செய்தி அது போல நமது சாவும் நாளை அறிந்து கொள்ள ஒரு வழி உள்ளது.
நமது நமாளே  அறிந்து கொள்ள முடியும் அதற்க்கு இந்த தளத்துக்கு சென்றால் நமது மரணத்தின் நாள் எப்போது  இன்னும் நம்முடைய மரணத்துக்கு எத்தனை நொடிக்ள உள்ளது என்று மரண கடிகாரத்தை காட்டுகிறது
இந்த தகவல் மூலமாக நாம் வாழும் நாட்களை அறிவதன் மூலம் நம்மால் என்ன செய்ய முடியும்
போட்டி,பொறாமை விட்டு எப்படி மகிழ்சியாக இருக்க முடியும் என்று posstive-எடுக்கவும் யார் சாவையும் கணக்கிட்டு மகிழ வேண்டாம்
இதில் நமது ஆண்,பெண்,வயது,உயரம்,புகைபிடிப்பவரா,bmi ஆகியவை கணக்கிட்டு ஓரு ஆண் பெண் சராசரி வாழும் நாளை கணகில் கொண்டு நமது மரண நாள் குறிக்கபடுகிறது.
இதில் நமது மரண நாளை தள்ளி போட வேண்டும் என்ற  பட்டனை சொடுக்கினால் அது கொழுப்பை கட்டுபடுத்தும்  இணைய தள்ங்களுக்கு அழைத்து போகிறது  இதிலும் ஒரு விளம்பரம்  மறைந்து  இருக்கிறது
 




George-Bush-Funny.gif screenshot.1
        ஜார்ஜ் புஷ்ன்னின்          மரண கடிகாரம்


இதன் சுட்டி  http://www.deathclock.com/
Read More » Read more...

காதலர் தின சிறப்பு வைரஸ்

வியாழன்

storm-worm-love
காதலர் தின கொண்டாட்டங்களில் வாழ்த்துகளை தெறிவிக்க பல வழிக்ள் இருந்தாலும் மின் அஞ்சல் வெகுவாக பயன்படுத்தபடுகிறது சில நேரங்களில்  காதலர்தின   மின் அஞ்சல்கள் vires,trojan horce,malicules போன்ற நமது கணினியை பாழாக்கும் இவற்றில் இருந்து பாதுகாக்க சில வழிமுறைகளை பார்ப்போம்.
இதுபோன்ற  மின் அஞ்சல்களை நமது மின் அஞ்சல்களில இருக்கும் spam filter-கள் நூழைய விடாது
இருந்தும் சில நூழைந்ந்து விடும்.
நீங்கள் உபயோகிக்கும் எந்த மின் அஞ்சல் கணக்கு ஆனாலும் spam filter on செய்யவும்
உங்களது மின் அஞ்சல் கணக்கில் உள் நூழைந்ததும்   காணப்படும் அஞகளின் subject-களில் http://127.0.0.1 திறக்கமால் அழித்துவிடவும் இது தவிற கீழ்காணும் subject-ல்  வாசகங்கள் இருந்தாலும் திறக்கமால் அழித்து விடவும்.
  * A Dream is a Wish
* A Is For Attitude
* A Kiss So Gentle
* A Rose
* A Rose for My Love
* A Toast My Love
* Come Dance with Me
* Come Relax with Me
* Dream of You
* Eternal Love
* Eternity of Your Love
* Falling In Love with You
* For You....My Love
* Heavenly Love
* Hugging My Pillow
* I Love You Because
* I Love You Soo Much
* I Love You with All I Am
* I Would Dream
* If Loving You
* In Your Arms
* Inside My Heart
* Love Remains
* Memories of You A Token of My Love
* Miracle of Love
* Our Love is Free
* Our Love Nest
* Our Love Will Last
* Pages from My Heart
* Path We Share
* Sending You All My Love
* Sending You My Love
* Sent with Love
* Special Romance
* Surrounded by Love
* The Dance of Love
* The Mood for Love
* The Time for Love
* When Love Comes Knocking
* When You Fall in Love
* Why I Love You
* Words in my Heart
* Wrapped in Your Arms
* You... In My Dreams
* Your Friend and Lover
* Your Love Has Opened
* You're my Dream


Read More » Read more...

சுய சேவைகளை பூர்த்தி செய்யும் அலைபேசிகள்

புதன்

sony-ericsson-camera-phone

 

நம்மிடம் இப்போது எல்லாம் சாதரண அலைபேசிகளை விட காமிராக்கள் பொருத்தபட்ட அலைபேசிகள்  மிக அதிகமாக காணப்படுகிறது இதற்கான காரணங்கள் எனக்கு தெறிந்தது இவை கவுரவத்தின் சின்னமாக மாறிவிட்டது இப்படி ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலைபேசி காமிராக்களை படம் எடுப்பது தவிர வேறு எதற்க் கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்

blue-screen-error1

1.Computer Screen Capture-நமது கணினி boot ஆகும் போது error நிகழ்வுகளை கணினியின் உதவி இல்லாமல் Screen Capture செய்ய அலைபேசி காமிராக்கள் கொண்டு எடுக்களாம்.

2.Remember Dates-நாம் கடைசியாக மறுத்துவரிடம் சென்ற தேதி ஞாபகம் வைக்க அந்த தேதியை படம் எடுத்தால் அடுத்து நாம் நாம் appointment வாங்க வசதியாக இருக்கும்.

remember-computer-cables

3.Cable Connections-நாம் நமது home theatre-யை இடம்மாற்றல் அல்லது வேறு காரணத்தால் இடம மாற்றும் போது அதில் இணைக்கபட்ட இணைப்புகளை அகற்றும் போது அவைகளை திரும்ப இணைக்க நாம்  அவற்றை படம் எடுத்து வைக்கலாம்.

4.Use Mobile Phone as a Web Camera-தொலை பேசியை webcamera-வாக USB cable or Bluetoothஇணையத்தில் கிடைக்கும்ஒரு மென்பொருள் உபபோகிக்கலாம்

car-parking

5.Car Parking -இப்போது நாம் பெறிய மால்களில் நம்முடைய car-யை விடும் போது படம் எடுத்து கொண்டு திறும்ப எடுப்பது எளிதாகும்

6.Replace Paper and Pen-பேனாவையம் காகித்தை உயோகிப்பதை விட்டு விட்டு விளம்பரம் அல்லது தகவல்களை படம் எடு்த்து உபயோகிக்கலாம்

7.Google Maps and Directions -நீங்கள் போகும் இடத்தின் வழிகளை இணையத்தில் google map-ல் உள்ள தகவல்களை key board-ல் f11 அழுத்துவதன் மூலம் நமக்கு தேவையான map பெறிய திரையில் தெறியும்

அதனை படம் எடுத்தால் நாம் போகவேண்டிய வழியினை எளிதாக அறியலாம்.

taxi-cabs 

8. Rent A Car -நாம் வாடகைக்கு எடுக்கும் car-களில் இருக்கும் scratch இன்ன பிற பழுதுகளை படம் எடுத்தால் car திறும்ப கொடுக்கும் போது அதே நிலையில் கொடுக்க முடியும்.

9.Security Weapon - பெண்கள்,வயதானவர்கள் call taxi,auto உபயோகிக்கும் அந்த வண்டியின் பதிவு எண் driver விபரங்கை படம் எடுத்து நம் உறவினருக்கு மின் அஞ்சல் செய்யலாம்

10.Shopping Alone -மனைவிடம் அல்லாமல் தனியாக purchase செய்யும் போது ஓரு குறிபிட்ட பொருளை படம் பிடித்தால் நமது வீட்டில் சென்று காட்டலாம்

11.As a Mirror -பெண்கள் திருமண வீட்டில் நூழையும் உங்கள்,ஒப்பனை,சிகை அலங்காரம் ஆகியவை எப்படி உள்ளது என்று தெறிந்து கொள்ளலாம்.

Read More » Read more...

நான் கடவுள் கண் னோளி பாடல்கள்

திங்கள்



Read More » Read more...

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

Snap1
கறுப்பு,கருத்து,கருப்பு இவை எல்லாமே சர்ச்சைக்குறியைதான் ஆனால் கறுப்பு எப்போதும் எதிர்ப்பை காட்ட பயன்படுகிறது கருப்பு என்று நினைத்தால் நினைவுக்கு வரும் தலைவர் பெரியார் சமிபமாக கறுப்பா இருக்கிற கதாநாயகர்கள் ஜெயிக்கிற காலம்.
வாண வில்லில் இல்லாத வண்ணம் கறுப்புதான் அதனால் கறுப்பு குளிர் கண்ணாடிகளை அணிவது நலம்.
நமது கணினியில் monitor-தான் அதிக மின்சக்தியை செலவழிக்கிறது அதனால் நமது நாம் அதிகமாக உபயோகிக்கும் google search engine  கறுப்பு நிறத்தில் மாற்றினால் நம்முடைய மின்சக்கதி சேமிக்கபடுகிறது அதற்க்கு என்ன செய்ய வேண்டும் கிழ்கண்ட இணையதளத்திற்றகு சென்று
நமது google search engine home page-யை கறுப்பு நிறத்தில் மாற்றலாம் google தவிற கிழ்கண்ட search engine-களிலும் மாற்றி கொள்ளலாம் 
Google Chrome,Internet Explorer,Firefox (Windows),Firefox (Mac),Safari,Opera
அந்த இணையதளதிதின் சுட்டி http://www.blackle.com/
Read More » Read more...

டுபாக்கூர் ஒபாமா

Read More » Read more...

நான் கடவுள் அனுபவங்கள்

ஞாயிறு

இதுவரை எந்த படத்தையும் முதல் நாள் பார்த்து இல்லை அப்படி பார்த்த முதல் அனுபவம் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக படம் வந்தால் பார்க்க வேண்டும் என்று மனதை அறித்து கொண்டு இருந்தது.
இந்த படத்தை நல்ல படம் கெட்ட படம் என்று சொல்ல வரவில்லை இந்த பட்ம் பார்ப்பது ஒரு அனுபவமாகத்தான் எடுக்க வேண்டும்.
படம் காசியில் தொடங்கிறது அந்த படத்தின் title song இந்தியில் இருந்தாலும் ரசிக்கும் படி இருந்தது

15062006-THN30image2

கதை பதிநான்கு வருடங்களுக்கு முன்பு ஆர்யாவை அவர் அப்பா தொடர்ச்சியாக தனது வீட்டில் தொடர்ந்து சாவு,வியாபாரத்தில் நஷ்டம் நிழ்ந்ததால் ஜந்து ஜோதிடர்களின் பேச்சை கேட்டு 14வருடங்கள் காசியில் ஒரு மடத்தில் விட்டு விடுகிறார்.
14வருடங்கள் கழித்து திரும்பவும் ஆர்யாவை தேடி வருகிறார் கண்டுபிடித்தவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி அவர் ஒரு குருவால் தத்தெடுக்பட்டு  வளர்கிறார் அவர் ஒரு அகோரியாக மாறி விடுகிறார்
மகனை தன் ஊருக்கு அழைத்து வருகிறார் குரு ஆர்யாவிடம் உன் சொந்தங்களை தொலைத்துவிட்டு வா நீ வர வேண்டிய நாள் உனக்கே தெறியும் என்று அனுப்பி வைக்கிறார்
ஆர்யாயாவுக்கு தன் அப்பா அம்மா தங்கை என்று யாரையும் பிடிக்காமல் எல்லோரையும் போல் இல்லாமல்   அகோரனாகவே ஒரு மலை கோயிலில் பிச்சைகாரர்களுடன் வாசம் செய்கிறார்  தன் அம்மா கூப்பிட்டாலும் திரும்ப மறுக்கிறார்.
கண் தெறியாத பூஜா ரயிலில் பிச்சை எடுக்கிறார் அவரை வில்லனின் ஆள் போலிஸ் துணையுட்ன கடத்தி் கொண்டு வந்து கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைக்கிறார் பூஜாவை வில்லன் வேறு ஒருவனுக்கு விற்க்க முயல்கிறார்
இதற்கு துணை போகும்  மலையாள துணை வில்லன் மெயின் வில்லன் மற்றும் மெயின் வில்லன்களை ஆர்யா கொன்று விடுகிறார்
பூஜா ஆர்யாவிடம் இது போல வில்லன்கள் வந்து கொண்டே இருப்பார்கள் முறையிடுவார் துன்பத்தில் உழல்பவர்களுக்கு மோட்சம் ஆகோரானான ஆர்யா அவருக்கு மோட்ச்சம் கொடுப்பார்
இதுதான் கதை
*********************************************************************************************************************************************
இனி எனது அனுபவம்
இதுவரை இரப்பவர்களை காசிக்கு கொண்டு போய் எறிக்கிறார்கள் என்று நீண்ட நாள் கேள்விக்கு விடை   கிடைத்தது இந்த அகோரன் ஆக இருக்கிறவர்களுக்கு தன் எதிரில் வருபவர்கள் நல்லவனா கெட்டவனா என்று தீர்மானிக்கும் சக்தி உள்ளது இவர்கள் தங்களை தாங்களே கடவுள் என்று சொல்லி கொள்வார்கள்.
பிணத்தை ஏறியுட்டும் போது இவர்கள் அருள் பெருபவர்கள் மட்டுமே முன்பின் பாவங்கள் மன்னிக்கபட்டு சொர்கத்தை அடைவார்கள இந்த அகோரன்கள் காசியை காக்கும் கால பைரவனின் வழி தோன்றல்கள் என்பது ஜதிக்ம்.
இதில் உள்ள கதாபாத்திரங்கள்
பிச்சை எடுக்கும் குள்ளர்கள,மனவளர்சிகுன்றியவர்கள,திருநங்கை,வில்லன் ஆர்யா உட்பட யாரும் நிஜங்களாக இருக்கிறது அல்லது நிஜமாக நடித்துள்ளார்கள் இந்த ஒட்டு மொத்த கதாபாத்தரங்களை உருவாக்கி நடிக்வைத்த பாலா படத்தின் கதாநாயகன்.
அவர்கூடவே பயணிப்பவர் இளையராஜா இருவரும் தண்டவாளங்கள் இதில் பயணிக்கும் திரைகதை ரயிலாக  பணிக்கிறது.
இதுவரை பிச்சைகாரர்கள திரைபடங்களில் கேளி செய்யவும் பாரிதாபத்தை காட்டவும் பயன் படுத்தபடுகிறது.
இதில் யாரவது பிச்சைகாரன் ஒருவர் நடித்துள்ளார் அல்லது அந்த கதாபாத்திரதை போல மிக தத்ரூபமாக  நடித்துள்ளார் என்று யாரையும் சொல்ல முடியாது எல்லா பாத்திரங்களும் நிஜமாக உள்ளது.
இதில் பாலாவின் கோபம் ஒரு சாதாரண மனிதனுக்கு போலிஸ்,கோர்ட்,கடவுள் ஆகியோரின் மீது உள்ள கோபத்தை காட்டி உள்ளார் பாலாவின் முந்தைய படமான பிதாமகன் படத்தில் விக்ரமை போலிஸ் பார்த்து பயப்படுவது போல இதிலும் காட்டி இருக்கிறார்
மற்றும் போலிஸின் யோக்கியத்தை ஓரு நீதிபதி சுட்டிகாட்டுவது மனவளர்ச்சி,உடல்வளர்ச்சி இல்லாதவர்களுக்கு கடவுள் வேடம் கொடுத்து அவர்கள சாடுவது போல் காட்டுவது பாலாவின் கோபத்தை பதிவு செய்கிறது.
இந்த கடைசி மனிதர்களுக்கு பின்னால் இப்படி ஒரு வியாபாரம் உள்ளது உள்ளது இதுவரை யாரும் சொல்லாதது மற்றும் இவர்களை போல் நம் குடும்பத்தில் நம் உறவினர்களிடமோ இருக்கலாம் அவர்களை நாம் கூடுதல கவனம் எடுத்து பாதுகாக்க வேண்டிவர்கள என்று நமதை எச்சரிக்கை மணி அடிக்கிறது
ரஜினி,சிவாஜி,எம்ஜிஆர் இவர்கள் வைத்து இன்றைய சினிமா காத நாயகன்களை   சாடுவது பாலா சினிமாவில் இருந்து கொண்டே இதை செய்வதற்க்கு தைரியம் வேண்டும் பாலாவிடம் மிக அதிகமாக உள்ளது.
***************************************************************************************************************************************************
Naan-kadavul-1
ஆர்யா அவர் தலை கீழாக செய்யும் தவம் செய்வது உடன் செய்ய முடியாது அதை செய்ய நம் உடம்பை பண்படுத்தினால் மட்டுமே செய்ய முடியும் மிகச்சாதாரண யோகங்கள செய்ய
கிட்டதட்ட நம் உடம்பை பயிற்ச்சிகள் கொடுத்து தளர்த்துவது முக்கியம் உடம்புடன் மனதும் சேர்ந்து ஆர்யாவுக்கு பண்பட்டுள்ளது அவர் வரும் ஒவ்வோரு காட்ச்சியிலும் தெறிகிறது
இதில் ஆர்யா சொல்லும் சில சமஸ்கிறுத வசங்களுக்கு தமிழ் அர்த்தம் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்தது இருக்கும்

naan060209_2
பூஜா இதுவரை இனிமேலும் பூஜாவுக்கு கிடைக்காத பாத்திரத்துக்கு மிக அழகாக பொருத்த பட்டுள்ளார் அவரின் சொந்தகுரல் ஆறுதல் அளித்தாலும் சில இடங்களில் அவரின் குரல் நகரத்தின் வாடை அடிக்கிறது மற்றபடி நடிப்பு அவரின் make up மிக அழகாக இருக்கிறது.ஆரம்ப ரயில் காட்ச்சியில் make up தூக்கலாக இருக்கிறது
ilayaraja
இளைய ராஜா இதில அவரின் எல்லா பாடல்களும் பாலாவின் காட்ச்சிக்ளுக்கும் உயிர் கொடுக்கறது பாலா திரைகதை சொல்லி மெட்டு வாங்கினாலும் வார்த்தை இல்லாத மெட்டுக்ளை சிந்தித்து கொடுத்து இருப்பது இளைய ராஜாவால் மட்டுமே முடியும்.
********************************************************************************************************************************************************
director-bala-500x295
பாலா ஆஸகர் விருது இந்திய படங்களுக்கு கிடைத்தாலும் அது சிறந்ந்த வெளிநாட்டு படம் என்றே கிடைக்கும் ஆனால் சிறந்த ஹாலிவுட் படம் எடுக்க பாலா ஹாலிவுட் போவது வெகு தூரத்தில் இல்லை
பட தலைப்புக்கு ஏற்ப்ப எந்த கடவுள்களையும் முன்னிலை படுத்தவில்லை என்பது வித்தியாசமாக உள்ளது
இனி நாம் பிச்சை போடும்போது அவர்களை ஒரு நிமிடம் பார்த்து நலம் விசாரிக்க தயங்க மாட்டோம்
*********************************************************************************************************************************
15062006-THN30image3







கடைசியாக 

இதில் கைகால்கள் இல்லாமல் மாங்காட்டு சாமியாக வருபவர் ஒரு v.i.p 
அவர் கிருஷணமுர்த்தி ஜந்து மொழிகள் தெறிந்த ஒரு சங்கித வித்வான் இவர் கலைமாமணி மற்றும் பல மாநில விருதுகளையும்  பெற்றவர்
Read More » Read more...

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம்

வியாழன்


bharathi
இது பாரதி வாக்கு இதை உணர்த்துவது போல் இன்று ஒரு சம்பவம் ஒரு திருமண வரவேற்பு அதில் கலந்து கொண்ட நான் சாப்பிட காத்து இருந்தபோது அந்த நிகழ்ச்சியில் அந்த குடும்பத்திற்க்கு சம்பந்தமே இல்லாமல் இரு முகங்கள் ஒருவன் இளைஞன் ஒருவர் நறைத்த தாடி மெலிந்த அவர்   தேகத்தை தாங்கி பிடித்து இருந்தது அவர்கள் இருவரும் நாற்க்காலிக்கு காத்திருந்தார்கள்.

உடன் காலியான மூன்று நாற்காலிகளில் அந்த இருவருக்கும் இடம் கிடைத்தது அவர்களின் அருகில் நானும் அவர்களின் அருகில்தான் உட்கார்ந்தேன் அவர்களின் இலைகளில் வைக்கபட்ட உணவுவகைகள் உடனுக்கூடன் வாயில் நூழைந்தது
திறும்பி பார்த்த எனக்கு    ஏதோ ஒரு  பொறி தட்டியது நானும் அவர்களின் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன் உண்டவர்கள் அனைவரும் எழுந்தாலும் அவர்கள் எழவில்லை திடிர் என்று அவர்கள் இருக்கையில் இருந்த எழுப்பட்டார்கள் அவர்களிடம் சரமாரியாக கேள்வி கணைகள் தொடுக்கபட்டது
அதன் பின்பு சில கைகள் தாக்க தொடங்கியது  அடிவாங்கிய அந்த இளைஞன் அழுகை கலந்த கோபத்தில் நாங்க என்ன தப்பு செய்தோம் ஒருவேளை சாப்ப்பாடுதானே சாப்பிட்டோம் வேறு என்ன தவறு செய்தோம் என்று

என்று கத்தினான் திறும்பவும் அடி பலமாக விழுந்தது அரங்கின் பொருப்பாளர்கள் இருவரையும் தரைதளத்தின் அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்கள தப்பிக்க நினைத்த இருவருக்கும திரும்ப அடி விழுந்தது   இதைகேட்ட அரங்கின் துப்புரவு தொழிலாலி அந்த வயதானவரை தாக்க தொடங்கினான்
இதற்குள் திருமண வீட்டார்கள,வந்தவர்கள எல்லோரும் வாசலுக்க ஒடி வந்துவிட்டார்கள்  திருமண வீட்டார்கள நூறு பேருக்கு கூட இலவசமாக் சாப்பாடு போடுவேன் நீ யாருடா அடிக்க என்று அடிப்பவர்களை விலக்கி விட்டார்கள்
அரங்க பொருப்பாளர்களை திருமண விட்டார்கள திட்டி தீர்தார்கள பொருப்பாளர்கள் இது தண்டிக்பட வேண்டியது ஏதாவது காணமல் போனால் எங்கள் பொருப்பு தானே என்று பொருப்பான வாதம் வைக்கபட்டது அவர்கள் காவல்துறையை தொலைபேசியில் அழைத்தார்கள்
அரங்கத்தின் சேவையை பாராட்ட வேண்டும் துப்புறவு,இலை போடுவது போன்றவற்றை அரங்கத்தின் ஆட்கள் செய்தார்கள் உணவு பரிமாறுவது சமையல் பொருப்பளர்கள கவனித்தார்கள அதனால் எந்த குழப்பம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக அருமையாக நடந்ததை பாரட்ட வேண்டும்    இந்த சம்பவத்தை மாப்பிள்ளை,பெண் வீட்டார்கள் இதை ஒரு அப சகுனமாக எடுக்காமல் இருந்தால் சரி
Read More » Read more...

கைக்குள் மின் அஞ்சல் முகவரி

email-on-moble-phone-thumb


நம்மில் எத்தனை பேரிடம் மின் அஞ்சல முகவரி உள்ளது என்று அறுதியிட்டு கூற முடியாது ஆனால் அலைபேசி  எத்தனை பேரிடம் உள்ளது ஆனால் பெரும்பான்மையாக அனைவரிடமும் இருக்கும்
ஆனால் அலைபேசி வத்திருக்கும் நபர்களுக்கு மின் அஞ்சல் முகவரி பற்றி அறிமுகம் சிலரிடம் இருக்கும் சிலருக்கு அறிமுகம் இருந்தும் பயன்படுத்தும் வசதி,வாய்ப்பு இருக்காது ஆனால் நமக்கு தெறியாமலேயே நாம் ஓவ் ஒருவரும்   மின் அஞ்சல முகவரி வைத்துள்ளோம் அது நமது அலைபேசி எண்தான நமது   மின் அஞ்சல முகவரி
அலைபேசி குறுஞ் செய்தியில் 60 எழுத்துக்கள் மட்டுமே அனுப்பமுடியும் மின் அஞ்சல் எத்தனை எழுத்துகளும் உள்ள்ளிடும் செய்யலாம் எத்தனை நபர்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரு செய்தியை
அனுப்பலாம்
நமது நண்பர்கள் நமக்கு இலவசமாக மின் அஞ்சலகளை நமது அலைபேசிக்கு அனுப்ப இயலும் அது எப்படி என்று பார்ப்போம்  கிழ்கண்ட அட்டவனையை பின்பற்றி மின் அஞ்சல் அனுப்பவும்

screenshot.7









 screenshot.9
         






















screenshot.12
Read More » Read more...

மின் அஞ்சல் மூலம் அறிய

புதன்

மின் அஞ்சல் யார் அனுப்பட்டது என்பதை அவர்களின் முகவரி மற்றும் அவர்கள் கொடுக்கும் பெயரின் விபரம் மட்டுமே நமக்கு தெறியும் மற்றும் பல நேரங்களில் அவர்களின் பெயர்கள் உண்மையானதாக இருக்காது மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள்,ஆண்களுக்கு
அவ்ர்களின் தோழனோ தோழியோ  தேவையற்ற மின் அஞ்சலை விளையாட்டு தனமாக அல்லது வக்கிரபுத்தியுட்ன் அனுப்புகிறார்கள் அதைவிட பல நேரங்களில் இந்த மின் அஞ்சல்கள் நண்பர்கள் ஒன்றாக இணையத்தை உபயோகிக்கும் போதே அவர்களுக்கு அனுப்புகிறார்கள்
இவர்களை கண்டுபிடிக்க என்ன வழி இந்த  மின் அஞ்சல்களின் IP address தெறிந்தால் அவர்களை அடையாள்ம காண்பது எளிதாகும்.
gmail-ல் அனுப்பியவரின் IP address  அறியும் முறையை பார்ப்போம்
  • வழக்கமாக g-mail நூழையவும்
  • நமக்கு வந்து இருக்கும் mail-யை திறக்கவும்
  • இடதுபக்க மூலையில் reply கிளிக் செய்யவும் படத்தில் உள்ளது போல
screenshot.1
  • reply-க்குள் சென்று show original கிளிக் செய்தவுடன்
imageஅதன பின்பு ஒரு note pad திறக்கும் அதில் கிழ்கண்ட படத்தில் உள்ள இடத்தில் ip address இருக்கும் .


Snap1அதன் பின்பு இந்த   ip முகவரி நாடு,இடம்,network ஆகியவற்றை அறிய இந்த தளத்தில் ip முகவரி -யை உள்ளீடு செய்தால் போதும் இந்த விபரங்கள் கிடைத்து விடும்
Read More » Read more...

5 வயது சிறுமியை மிருகத்தனமாக அடித்த 2 போலீசார் சஸ்பெண்ட்

feb09_04up

லக்னோ: உபி மாநிலம் எடாவா நகரில் திருட்டு வழக்கில் 5 வயது சிறுமியை கைது செய்து மிருகத்தனமாக அடித்து துன்புறுத்திய போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை கோமல் என்ற சிறுமி கடை ஒன்றில் 280 ரூபாய் திருடியதாக போலீசார் கைது செய்தனர். சிறு குழந்தை என்று கூட பாராமல் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
தலை முடியைப் பிடித்து தூக்கியும், தலை முடியைத் திருகியும், கொடூரமாக நடந்து கொண்ட போலீஸாரின் செயல் அதை நேரில் பார்த்த பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதை அங்கு இருந்த மற்ற 6 போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து டிஜிபிக்குத் தகவல் போனது. இதையடுத்து சிறுமி என்றும் பாராமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சந்திரபன் சிங், எஸ்.ஐ ஷாம்லால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், நான் எனது மகளை 15 ரூபாய் கொடுத்து கடைக்கு அனுப்பினேன். அங்கு வேறு யாரோ பணத்தை திருடியதற்கு எனது மகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

மிருகங்கள் தங்களது ஒத்த மிறுக்த்தை தன்க்கு தீங்கு இழைத்தால் ஒழிய துன்புறுத்துவது இல்லை

மிறுகம் ஆபத்து வந்தால் எதிரியை தாக்கும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே ஒன்று கூடும்.இதை செய்து இருக்கும் இந்த மாக்களுக்கு உணர்வுகளுடன் விளையாடிய இவர்களுக்கு

இந்த சிறு குழந்தை அடிமட்ட மனிதர்களிடம் மட்டுமே இவர்களின் அதிகாரம் பாயும் சாதாரண வார்டு கவுன்சுல்களிடம் கூட  இவர்களின் அதிகாரம் நாயின் வால் போல் சுருண்டு விடும்

இவர்களின் காக்கி உடை மட்டுமே இவர்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது இதே செயலை காக்கி உடை இல்லாமல் செய்ய தைரிய்ம் இருக்காது

இவர்களை நாய் என்று கூட திட்டகூடாது அது கூட தன் எஜமான்னுக்கு நன்றியோடி இருக்கிறது இவர்கள் நமது வரிபணத்தில் நம்மையே துன்புறுத்தும் நயவஞ்சகர்கள யார் இவர்களுக்கு தண்டனை அளிப்பது என்ன தண்டனை அதிகபட்ச்சமாக வேலை பறிபோகும். அதை விட இவர்களை உயிருடன் எறித்தால் இனியாரும் இது போன்ற காரியத்தில் யாரும் ஈடுபடமாட்டார்கள்

 

 

Read More » Read more...

தோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவாளர்களின் வீரவணக்கக் கூட்டம்.

செவ்வாய்

வலைப்பதிவுத் தோழர்களே!
ஈழத்தில் இனப்படுகொலைகளை நிகழ்த்திவரும் சிங்களப் பேரினவாதப் பாசிச அரசிற்கு எதிராகவும் அப்பேரின அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்து போரை வளர்த்து வரும் இந்திய ஏகாதிபத்தியப் பேரரசிற்கு எதிராகவும் அம்மத்திய அரசிற்குத் துணைபோகும் கருணாநிதியின் தமிழினத்துரோக அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் தீக்குளித்து மாண்டுபோன போராளித்தோழர்கள் முத்துக்குமார், ரவி மற்றும் ஏனையோருக்கான வீரவணக்கக்கூட்டத்தில் உங்களையும் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
நாள் : 08.02.2009 ஞாயிறு மாலை 4 மணி
இடம் : நடேசன் பூங்கா, தி.நகர், சென்னை.
மேலும் தொடர்புகளுக்கு :
அதிஷா - 9884881824
ஆழியூரான் - 9840903590
சுகுணாதிவாகர் - 9790948623
லக்கிலுக் - 9841354308
ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.
இப்பதிவை வாசிக்கும் அனைத்து வலைப்பதிவு தோழர்களும் அவரவர் பதிவில் இந்த வீரவணக்க கூட்டத்துக்கான அறிவிப்பினை வெளியிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read More » Read more...

பசி வந்தா பத்தும் பறந்து போகும்

மூன்று முகம் ரஜினி மூன்று வேடத்தில் ரஜினி நடித்த படம் அதில் ஒரு  ரஜினி வெளிநாட்டுக்கு சென்று ஒரு சாமியாராக மாறிவிடுவார் ரஜினி மாற்ற ராதிகா முயற்ச்சி செய்வார் கடைசியில் வெற்றியும் பெறுவார் அதில் ரஜினியின் மனதை மாற்ற சில் கேள்விகளை கேட்பார் அதில் சுவரசியான ஓரு கேள்வியை உங்களுன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

girl82

 

ராதிகா ரஜினியிடம் தனிமை அறையில் இரவு நேரத்தில் உங்களையும் ஒரு அழகான பெண்ணையும் அதனுடன் ஒரு காமசூத்ரா நூலும் பக்கத்தில் உள்ளது இந்த சுல் நிலையில் நீங்க சாமியாரான நீங்க உங்க கற்பை காப்பாத்த என்ன செய்விங்க?

இந்த கேள்விக்கு ரஜினி சிறிது பொருமையா யோசித்து ஒரு பதில் கொடுப்பார் அந்த காமசூத்ரா நான் படிக்க ஆரம்பிப்பேன்னு பதில் கொடுப்பார் இதை கேட்டு ராதிகா வாயைடைத்து நிர்ப்பார்.

இதை நினைத்தால் ஒரு பழமொழி ஞாபகம் வருகின்றது கோவனம் அவுத்தா சாமியார் கூட சம்சாரிதான்

இன்னோன்னு இதே கேள்வியில்  அழகான பெண்ணையும்,ருசியான உணவு வகைகள் வரிசையாக வைத்து பத்துநாள் பட்டியான உங்களையும் உள்ளே விட்டால் நம் மனது எதை நாடும் ருசியான உணவு வகையைதான் விரும்பும் அதுதாங்க பசி வந்தா பத்தும் பறந்து போகும்.

Read More » Read more...

புனிதன் ஆன மனிதன்

திங்கள்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ
!

 

பாரதியின் இந்த வாக்கை உண்மை ஆக்குவது போல் முத்து குமாரின் தியாகம் தமிழ்,தமிழன் இவர்கள் இருக்கும் வரை வரலாற்றில் இருக்கும்.அதன் பின்பும் உன்தியாகம் ஹரப்பா,மொஞ்சதாரோ நாகரிகங்கள போல தமிழ் நாகரிகம்  தோண்டி எடுக்கும் போது கூட உன் தியாகம் பேசபடும் உன் மரணம்

தூங்கி வழியும் தமிழக,இந்திய அரசாங்கத்தை தட்டி எழுப்புமா?

இவர்களுக்கு ஓட்டு வங்கி மட்டுமே முக்கியம் அப்போது மட்டுமே இளைஞர்கள்,மக்களின் ஆதரவு வேண்டி  கையேந்தும் பிச்சைகாரர்கள்

  • இவர்களோ இவர்களின் கட்சியை சேர்ந்தவர்களோ தற்கொலை செய்ய வாயை கூட திறக்கவில்லை உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்வழி என்று என்று நான்கு நாட்களில் வாபஸ் வாங்கபட்டது இவர்கள் நடத்தும் பாசாங்கு நாடகம் தொடர்ந்ந வண்ணம் இருந்து கொண்டு இருக்கிறது.
  • மத்திய அரசில் இருக்கும் அமைச்சர் பெருமக்கள் பதவியை ராஜினமா செய்ய கடிதங்களை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்காமல் கட்ச்சி தலைமையிடம் கடிதம் கொடுக்கும் உச்சகட்ட கோமாளித்தனம் நடந்தது.
  • அதைவிட கொடுமை முதல்வரின் மகள் தன் அப்பாவாயிடம் கடிதம் கொடுத்தது
  • இதே தமிழகத்தில் மத்திய அரசுக்கு அதரவு தந்த திமுக தலைவர் சிறையில் தள்ளபட்டது போது அடுத் நாளே மத்திய மந்திரி வருகிறார் ஆளும் மாநில அரசை நிர்பந்தம் செய்யபட்டு விடுதலை செய்யபடுகிறார்
  • தலைவரை கைது செய்யும் காட்ச்சிகள் படமாக்கபட்டு தொலை காட்ச்சி நிகழ்ச்சிகள் நிறுத்தபட்டு கைது செய்பட்ட காட்ச்சிகள் கூடுதல் செயறக்கை ஒலிகள் சேர்க்கபட்டு ஒட்டு மொத்த தமிழ்ர்களின் மனமும் மூளை சலவை செய்யபட்டன
  • உன் உயிர் தியாகம் அப்படிபட்ட பிராச்சார ஆயுத்மாக எடுக்கபட வேண்டாமா? 
  • நீ அதைத்தான் விரும்பினாய் உன் கடைசி கடைசி கடிதத்திலும் அதையே வலியுருத்தினாய்
  • உலக தமிழர்களின் தலைவர் இப்போது ஒரு நாட்டின் முதல்வர் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பயம் வேறு
  • இதே சட்டமன்ற தேர்தல் வரவிருந்தால் உன் மரணத்தால் ஆட்ச்சியை கலைத்து மறு தேர்தல் வைத்து ஒட்டுக் கேட்க்க கூட துணிந்து விடுவார்கள்
  • மொழிபோர் தியாகிகளின் தியாகமதான் இந்த கட்ச்சி,ஆட்ச்சி ரயிலுக்கு அடியில் தலை கொடுத்தவர்தான் இந்த தலைவர்
  • அரசியலில் இருந்து வியாபாரியாக ஆகியவர்களுக்கு இந்த உயிர் தியாகத்துக்கு விலை இரண்டு இலட்ச்ம் என்று விலை வைத்தது
  • ஆக ஒரு தமிழனின் விலை இரண்டு இலட்ச்ம் என்று விலை வைத்தது
  • இவர்களுக்கு தன் சொந்தம் சொத்து முக்கியம் இதை எல்லாம் பாதுகாக்க தங்களின் பதவி அதை விட முக்கியம்

தமிழனுக்கு சினிமா,அரசியல் என இரண்டு  கடிவாளம் கட்டபட்டுள்ளது உன் மரணம் கடிவாளத்தை உதைக்க வேண்டும்.

என் பேரனுக்கு திருமணம் நடத்துவதற்கு பெண் பார்த்து வந்தேன். அதற்குள் எங்களை விட்டு போய் விட்டானே என்று கதறி அழுதார்

முத்துகுமார் உன் பாட்டியின் அழுகுரல் உனக்கு கேட்க்குமா?

யாருக்கும் உழைப்பவன் மனிதன் ஊருக்கு உழைப்பவன் மனிதன்  ஊருக்கு உழைப்பவன் புனிதன் நேற்று முதல் நீ மனிதன் இன்று முதல் புனிதன்

Read More » Read more...

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP