Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம்

வியாழன்


bharathi
இது பாரதி வாக்கு இதை உணர்த்துவது போல் இன்று ஒரு சம்பவம் ஒரு திருமண வரவேற்பு அதில் கலந்து கொண்ட நான் சாப்பிட காத்து இருந்தபோது அந்த நிகழ்ச்சியில் அந்த குடும்பத்திற்க்கு சம்பந்தமே இல்லாமல் இரு முகங்கள் ஒருவன் இளைஞன் ஒருவர் நறைத்த தாடி மெலிந்த அவர்   தேகத்தை தாங்கி பிடித்து இருந்தது அவர்கள் இருவரும் நாற்க்காலிக்கு காத்திருந்தார்கள்.

உடன் காலியான மூன்று நாற்காலிகளில் அந்த இருவருக்கும் இடம் கிடைத்தது அவர்களின் அருகில் நானும் அவர்களின் அருகில்தான் உட்கார்ந்தேன் அவர்களின் இலைகளில் வைக்கபட்ட உணவுவகைகள் உடனுக்கூடன் வாயில் நூழைந்தது
திறும்பி பார்த்த எனக்கு    ஏதோ ஒரு  பொறி தட்டியது நானும் அவர்களின் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன் உண்டவர்கள் அனைவரும் எழுந்தாலும் அவர்கள் எழவில்லை திடிர் என்று அவர்கள் இருக்கையில் இருந்த எழுப்பட்டார்கள் அவர்களிடம் சரமாரியாக கேள்வி கணைகள் தொடுக்கபட்டது
அதன் பின்பு சில கைகள் தாக்க தொடங்கியது  அடிவாங்கிய அந்த இளைஞன் அழுகை கலந்த கோபத்தில் நாங்க என்ன தப்பு செய்தோம் ஒருவேளை சாப்ப்பாடுதானே சாப்பிட்டோம் வேறு என்ன தவறு செய்தோம் என்று

என்று கத்தினான் திறும்பவும் அடி பலமாக விழுந்தது அரங்கின் பொருப்பாளர்கள் இருவரையும் தரைதளத்தின் அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்கள தப்பிக்க நினைத்த இருவருக்கும திரும்ப அடி விழுந்தது   இதைகேட்ட அரங்கின் துப்புரவு தொழிலாலி அந்த வயதானவரை தாக்க தொடங்கினான்
இதற்குள் திருமண வீட்டார்கள,வந்தவர்கள எல்லோரும் வாசலுக்க ஒடி வந்துவிட்டார்கள்  திருமண வீட்டார்கள நூறு பேருக்கு கூட இலவசமாக் சாப்பாடு போடுவேன் நீ யாருடா அடிக்க என்று அடிப்பவர்களை விலக்கி விட்டார்கள்
அரங்க பொருப்பாளர்களை திருமண விட்டார்கள திட்டி தீர்தார்கள பொருப்பாளர்கள் இது தண்டிக்பட வேண்டியது ஏதாவது காணமல் போனால் எங்கள் பொருப்பு தானே என்று பொருப்பான வாதம் வைக்கபட்டது அவர்கள் காவல்துறையை தொலைபேசியில் அழைத்தார்கள்
அரங்கத்தின் சேவையை பாராட்ட வேண்டும் துப்புறவு,இலை போடுவது போன்றவற்றை அரங்கத்தின் ஆட்கள் செய்தார்கள் உணவு பரிமாறுவது சமையல் பொருப்பளர்கள கவனித்தார்கள அதனால் எந்த குழப்பம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக அருமையாக நடந்ததை பாரட்ட வேண்டும்    இந்த சம்பவத்தை மாப்பிள்ளை,பெண் வீட்டார்கள் இதை ஒரு அப சகுனமாக எடுக்காமல் இருந்தால் சரி

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP