Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

நான் கடவுள் அனுபவங்கள்

ஞாயிறு

இதுவரை எந்த படத்தையும் முதல் நாள் பார்த்து இல்லை அப்படி பார்த்த முதல் அனுபவம் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக படம் வந்தால் பார்க்க வேண்டும் என்று மனதை அறித்து கொண்டு இருந்தது.
இந்த படத்தை நல்ல படம் கெட்ட படம் என்று சொல்ல வரவில்லை இந்த பட்ம் பார்ப்பது ஒரு அனுபவமாகத்தான் எடுக்க வேண்டும்.
படம் காசியில் தொடங்கிறது அந்த படத்தின் title song இந்தியில் இருந்தாலும் ரசிக்கும் படி இருந்தது

15062006-THN30image2

கதை பதிநான்கு வருடங்களுக்கு முன்பு ஆர்யாவை அவர் அப்பா தொடர்ச்சியாக தனது வீட்டில் தொடர்ந்து சாவு,வியாபாரத்தில் நஷ்டம் நிழ்ந்ததால் ஜந்து ஜோதிடர்களின் பேச்சை கேட்டு 14வருடங்கள் காசியில் ஒரு மடத்தில் விட்டு விடுகிறார்.
14வருடங்கள் கழித்து திரும்பவும் ஆர்யாவை தேடி வருகிறார் கண்டுபிடித்தவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி அவர் ஒரு குருவால் தத்தெடுக்பட்டு  வளர்கிறார் அவர் ஒரு அகோரியாக மாறி விடுகிறார்
மகனை தன் ஊருக்கு அழைத்து வருகிறார் குரு ஆர்யாவிடம் உன் சொந்தங்களை தொலைத்துவிட்டு வா நீ வர வேண்டிய நாள் உனக்கே தெறியும் என்று அனுப்பி வைக்கிறார்
ஆர்யாயாவுக்கு தன் அப்பா அம்மா தங்கை என்று யாரையும் பிடிக்காமல் எல்லோரையும் போல் இல்லாமல்   அகோரனாகவே ஒரு மலை கோயிலில் பிச்சைகாரர்களுடன் வாசம் செய்கிறார்  தன் அம்மா கூப்பிட்டாலும் திரும்ப மறுக்கிறார்.
கண் தெறியாத பூஜா ரயிலில் பிச்சை எடுக்கிறார் அவரை வில்லனின் ஆள் போலிஸ் துணையுட்ன கடத்தி் கொண்டு வந்து கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைக்கிறார் பூஜாவை வில்லன் வேறு ஒருவனுக்கு விற்க்க முயல்கிறார்
இதற்கு துணை போகும்  மலையாள துணை வில்லன் மெயின் வில்லன் மற்றும் மெயின் வில்லன்களை ஆர்யா கொன்று விடுகிறார்
பூஜா ஆர்யாவிடம் இது போல வில்லன்கள் வந்து கொண்டே இருப்பார்கள் முறையிடுவார் துன்பத்தில் உழல்பவர்களுக்கு மோட்சம் ஆகோரானான ஆர்யா அவருக்கு மோட்ச்சம் கொடுப்பார்
இதுதான் கதை
*********************************************************************************************************************************************
இனி எனது அனுபவம்
இதுவரை இரப்பவர்களை காசிக்கு கொண்டு போய் எறிக்கிறார்கள் என்று நீண்ட நாள் கேள்விக்கு விடை   கிடைத்தது இந்த அகோரன் ஆக இருக்கிறவர்களுக்கு தன் எதிரில் வருபவர்கள் நல்லவனா கெட்டவனா என்று தீர்மானிக்கும் சக்தி உள்ளது இவர்கள் தங்களை தாங்களே கடவுள் என்று சொல்லி கொள்வார்கள்.
பிணத்தை ஏறியுட்டும் போது இவர்கள் அருள் பெருபவர்கள் மட்டுமே முன்பின் பாவங்கள் மன்னிக்கபட்டு சொர்கத்தை அடைவார்கள இந்த அகோரன்கள் காசியை காக்கும் கால பைரவனின் வழி தோன்றல்கள் என்பது ஜதிக்ம்.
இதில் உள்ள கதாபாத்திரங்கள்
பிச்சை எடுக்கும் குள்ளர்கள,மனவளர்சிகுன்றியவர்கள,திருநங்கை,வில்லன் ஆர்யா உட்பட யாரும் நிஜங்களாக இருக்கிறது அல்லது நிஜமாக நடித்துள்ளார்கள் இந்த ஒட்டு மொத்த கதாபாத்தரங்களை உருவாக்கி நடிக்வைத்த பாலா படத்தின் கதாநாயகன்.
அவர்கூடவே பயணிப்பவர் இளையராஜா இருவரும் தண்டவாளங்கள் இதில் பயணிக்கும் திரைகதை ரயிலாக  பணிக்கிறது.
இதுவரை பிச்சைகாரர்கள திரைபடங்களில் கேளி செய்யவும் பாரிதாபத்தை காட்டவும் பயன் படுத்தபடுகிறது.
இதில் யாரவது பிச்சைகாரன் ஒருவர் நடித்துள்ளார் அல்லது அந்த கதாபாத்திரதை போல மிக தத்ரூபமாக  நடித்துள்ளார் என்று யாரையும் சொல்ல முடியாது எல்லா பாத்திரங்களும் நிஜமாக உள்ளது.
இதில் பாலாவின் கோபம் ஒரு சாதாரண மனிதனுக்கு போலிஸ்,கோர்ட்,கடவுள் ஆகியோரின் மீது உள்ள கோபத்தை காட்டி உள்ளார் பாலாவின் முந்தைய படமான பிதாமகன் படத்தில் விக்ரமை போலிஸ் பார்த்து பயப்படுவது போல இதிலும் காட்டி இருக்கிறார்
மற்றும் போலிஸின் யோக்கியத்தை ஓரு நீதிபதி சுட்டிகாட்டுவது மனவளர்ச்சி,உடல்வளர்ச்சி இல்லாதவர்களுக்கு கடவுள் வேடம் கொடுத்து அவர்கள சாடுவது போல் காட்டுவது பாலாவின் கோபத்தை பதிவு செய்கிறது.
இந்த கடைசி மனிதர்களுக்கு பின்னால் இப்படி ஒரு வியாபாரம் உள்ளது உள்ளது இதுவரை யாரும் சொல்லாதது மற்றும் இவர்களை போல் நம் குடும்பத்தில் நம் உறவினர்களிடமோ இருக்கலாம் அவர்களை நாம் கூடுதல கவனம் எடுத்து பாதுகாக்க வேண்டிவர்கள என்று நமதை எச்சரிக்கை மணி அடிக்கிறது
ரஜினி,சிவாஜி,எம்ஜிஆர் இவர்கள் வைத்து இன்றைய சினிமா காத நாயகன்களை   சாடுவது பாலா சினிமாவில் இருந்து கொண்டே இதை செய்வதற்க்கு தைரியம் வேண்டும் பாலாவிடம் மிக அதிகமாக உள்ளது.
***************************************************************************************************************************************************
Naan-kadavul-1
ஆர்யா அவர் தலை கீழாக செய்யும் தவம் செய்வது உடன் செய்ய முடியாது அதை செய்ய நம் உடம்பை பண்படுத்தினால் மட்டுமே செய்ய முடியும் மிகச்சாதாரண யோகங்கள செய்ய
கிட்டதட்ட நம் உடம்பை பயிற்ச்சிகள் கொடுத்து தளர்த்துவது முக்கியம் உடம்புடன் மனதும் சேர்ந்து ஆர்யாவுக்கு பண்பட்டுள்ளது அவர் வரும் ஒவ்வோரு காட்ச்சியிலும் தெறிகிறது
இதில் ஆர்யா சொல்லும் சில சமஸ்கிறுத வசங்களுக்கு தமிழ் அர்த்தம் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்தது இருக்கும்

naan060209_2
பூஜா இதுவரை இனிமேலும் பூஜாவுக்கு கிடைக்காத பாத்திரத்துக்கு மிக அழகாக பொருத்த பட்டுள்ளார் அவரின் சொந்தகுரல் ஆறுதல் அளித்தாலும் சில இடங்களில் அவரின் குரல் நகரத்தின் வாடை அடிக்கிறது மற்றபடி நடிப்பு அவரின் make up மிக அழகாக இருக்கிறது.ஆரம்ப ரயில் காட்ச்சியில் make up தூக்கலாக இருக்கிறது
ilayaraja
இளைய ராஜா இதில அவரின் எல்லா பாடல்களும் பாலாவின் காட்ச்சிக்ளுக்கும் உயிர் கொடுக்கறது பாலா திரைகதை சொல்லி மெட்டு வாங்கினாலும் வார்த்தை இல்லாத மெட்டுக்ளை சிந்தித்து கொடுத்து இருப்பது இளைய ராஜாவால் மட்டுமே முடியும்.
********************************************************************************************************************************************************
director-bala-500x295
பாலா ஆஸகர் விருது இந்திய படங்களுக்கு கிடைத்தாலும் அது சிறந்ந்த வெளிநாட்டு படம் என்றே கிடைக்கும் ஆனால் சிறந்த ஹாலிவுட் படம் எடுக்க பாலா ஹாலிவுட் போவது வெகு தூரத்தில் இல்லை
பட தலைப்புக்கு ஏற்ப்ப எந்த கடவுள்களையும் முன்னிலை படுத்தவில்லை என்பது வித்தியாசமாக உள்ளது
இனி நாம் பிச்சை போடும்போது அவர்களை ஒரு நிமிடம் பார்த்து நலம் விசாரிக்க தயங்க மாட்டோம்
*********************************************************************************************************************************
15062006-THN30image3







கடைசியாக 

இதில் கைகால்கள் இல்லாமல் மாங்காட்டு சாமியாக வருபவர் ஒரு v.i.p 
அவர் கிருஷணமுர்த்தி ஜந்து மொழிகள் தெறிந்த ஒரு சங்கித வித்வான் இவர் கலைமாமணி மற்றும் பல மாநில விருதுகளையும்  பெற்றவர்

3 comments:

பெயரில்லா சொன்னது…

///இனி நாம் பிச்சை போடும்போது அவர்களை ஒரு நிமிடம் பாரத்து நலம் விசாரிக்க தயங்க மாட்டோம்///

இதுதான்
பாலாவிற்கு கிடைத்த அவார்டு

பெயரில்லா சொன்னது…

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

பெயரில்லா சொன்னது…

இந்த படத்தில் ஜெயமோகன் தனது மென்மையான RSS கருத்துக்களை கண் அசரும் நேரத்தில் தூவி உள்ளார். மற்ற RSS குண்டர்களை போல் இல்லாமல் தன்னுடைய கருத்தில் உறுதியுடன் நின்று மற்ற மதத்தவர்கள் குறிப்பாக கிறிஸ்துவர்களின் கருத்துக்கு அரோக்கியமான எதிர் விவாதம் செய்பவர். நான் கிறிஸ்துவனாக இருந்தும் சில தானைத் தலைவர்களான சிறு கிறிஸ்துவ அமைப்புகள், தேடித்தேடி மத மாற்றம் செய்வதை எதிர்பவன். இந்த படத்தில் ஒரு கிறிஸ்துவ NUN வார்த்தையால் பூஜா சட்டென்று மதமாற்றம் செய்யப்படுவது போன்று காட்டுவது விவாதத்திற்குரியது. அப்படி கத்தோலிக்கர்கள் பெரும்மளவில் மதமாற்றத்தில் ஈடுபடிருந்தாள் அத்வானி, ஜெயலலிதா போன்றோர் என்றோ கத்தோலிக்கர்கள் ஆகா மாற்றபட்டிருபார்கள். ஆகவே தான் யாரை குறிப்பிட வந்தாரோ அவர்களை தைரியமாக காட்டி இருக்கலாம். -நித்தியானந்

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP