Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

கூகுல் வினவல் ஆலோசனைகள் முடக்க

செவ்வாய்

700


சமிபத்தில் நடந்த இணைய கருத்தரங்கில் திருமதி தாரா கணேசன் அவர்களால் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் சில ஆபாச பக்கங்களை காட்டுகறது இதனால் சிறு குழந்தைகளும் இதானல் வழிகெட வாய்ப்பாகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னார் இதற்றக்கான தீர்வை தொடர் தேடுதலில் சில தீர்வுகள்
இதை நாம் எளிதாக செய்ய நமது உலவியின் preference சென்று கிழ்கண்ட முறையில் மாற்ற வேண்டும் இதை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
உங்களது    (google home page) ஆங்கிலத்தில் இருந்தால் இப்படி செய்யவும்.

query-sugestions

உங்கள் முகப்பு பக்கம் தமிழில் இருந்தால் விருப்பங்கள் என்ற சுட்டிக்கு சென்று
7-27-2010 11-12-32 AM
இந்த மாற்றங்களை சில portable browser-களில் செய்ய முடியாத போது கிழ்கண்ட சுட்டிகளை உங்கள் முகப்பு பக்கமாக மாற்றம் செய்யவும்.
கிழ்கண்ட இரண்டு சுட்டிகளும் பயர்பாக்கஸில் நன்றாக வேலை செய்கிறது

http://www.google.com/webhp?complete=0
http://www.google.com/webhp?complete=1
Read More » Read more...

நித்யானந்தா சொற்பொழிவு (புனைவு)

Nithyananda-Ranjitha-Full-Video1

 

நித்யானந்தா   ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அதற்க்கான பலன்களை நாம் அடைகிறோம்.

  • உங்கள் மனைவியுடன் உறவு கொண்டால் அது “கடமை” ஆகும்
  • காதலியுடன் என்பது ஒரு “கலை” ஆகும்
  • ஒரு கன்னியுடன் என்றால் கலவி அவளுக்கு நீங்க தரும் கல்வி ஆகும்
  • பரத்தையுடன் அது ஒரு வியாபாரம்
  • விவாகரத்து ஆன பெண்ணுடன் அது ஒரு தருமம்
  • விதவையுடன் அது ஒரு சமூக சேவை

இப்ப தெறியுதா நான் ஏன் ரஞ்சிதா உடன் உறவு கொண்டேன் என்று அது ரஞ்சிதாவுக்கு நான் செய்த சேவையாதான் நினைக்கனும்

இப்ப நீங்களே உங்களை சுய சேவை பண்ணி சாரி சுய பரிசோதனை பண்ணி என்ன சேவை பண்ணிரிங்கன்னு உங்களுக்கே தெறியும்.

Read More » Read more...

தொலைக்கபட்ட தேடல்கள்

திங்கள்

invitation v.radhakrishnan copy


நல்ல புத்தகம் நல்ல நண்பன் அது போல் இப்போது முதல் முறையாக இந்த புத்தகத்தை எழுதிய டாக்டர்.ராதாகிருஷணன் அவர்களை என் நட்ப்பு வட்டத்தில் சேர்த்து கொள்ள ஆசையாக உள்ளது இந்த நல்ல புத்தகத்தை வெளியிட்ட அகநாழிகை வாசுதேவன் முதலில் அவர்களை பாரட்டவேண்டும் தமிழில் புத்தகம் படிப்பது மிகவம் குறைந்து விட்டது.
அதிலும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு அதை விழாவாக கொண்டாடுவது மிகவும் அவசியம் ஆகும் அதனால் இந்த புத்தகங்களை நிறைய தமிழ் நெஞ்சங்கள் படிக்க தொடங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தாரா கணேசன் அவர்கள் வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத்தின் ஒரு கதையை படித்து காட்டியதால் மட்டுமே இந்த புத்தகத்தை வாங்க ஊந்தபட்டேன் பொதுவாக யாராவது படித்து விமர்சித்த உடன் மட்டுமே புத்தகம் வாங்குவது வழக்கம்.
இந்த தொலைக்கபட்ட தேடல்கள் புத்தகம் 7சிறுகதைகள் உள்ளது அத்னையும் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
அதிலும் இதை படிக்க அரம்பித்தால் முழுவதும் படித்த உடன் மட்டுமே தாங்களால் நிம்மதியாக தூங்க முடியும்
இந்த கதைகள் அனைத்தும் மனிதம்,இரக்கம்,அன்பு ஆகியவற்றை வலியுறுத்தும் கதைகள் மட்டுமே
இதில் சொல்லபட்ட கதைகள் மிகவும் எளிமையான படிப்பவர்களை குழப்பாத சம்பபவங்கள் மற்றும் சொற்க்கள்.
இதில் வரும் முதல் கதை சொன்னவிதம் வித்தியாசமாக இருந்தது மற்ற கதைகளில் சொல்லபடும் விசயங்கள் மட்டுமே முன்னிலைபடுத்தபட்டு வர்ணனைகள் மிக குறைந்த அளவு உள்ளது
பழங்கால சுவடுகள் கதையில் எகிப்தில் நடப்பதாக உள்ளது எகிப்து என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பிரமிட்,நைல் நதி இதனை பற்றி வர்ணனைகள் மிக குறைவு அந்த சம்பவங்கள் எங்கு நடக்கிறது அந்த இடத்தின் பெயர் என்ற விபரங்கள் எதுவும் எழுதாமல் கதை உள்ளது
எழுத தொடங்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த எளிமையை கடைபிடிக்க வேண்டும்.
இந்த கதைகளில் எனக்கு பிடித்து அறுபத்திநான்காம் மொழி அதைபடித்தவர்கள் “மிங்கி மிங்கி பா” என்று முணு முணுகாதவர்கள் யாரும் இருக்க முடியாது      
இந்த கதையில் வரும் இளைஞன் “மிங்கி மிங்கி பா” இந்த வார்தையை தவிற வேறு எந்த வார்த்தையும் பேசமாட்டான் அவன் காதலித்த பெண்ணிடம் இந்த“மிங்கி மிங்கி பா” மட்டும் வெவ்வேறு முறையில் சொல்லியே காதலிக்க தொடங்கி திருமணமும் செய்து பிறக்கும் குழந்தையும் இந்த வார்த்தை தவிற வேறு வார்த்தை பேசாது

“மிங்கி மிங்கி பா”    “மிங்கி மிங்கி பா”   “மிங்கி மிங்கி பா”  அது ஒண்ணும் இல்லிங்க கண்டிப்பா வாங்கி படிங்க  


பெயர்:         ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘
ஆசிரியர்:டாக்டர்.ராதாகிருஷணன்   
வெளீயிடு: நயினார் பதிப்பகம்
                     33,மண்டபம் தெரு மதுராந்தகம்-603306
மின் அஞ்சல்: nayinarbooks@gmail.com
விலை:100 ரூபாய்
இணையதளம் : www.aganazhigai.com 
அலைபேசி:+91 999 454 1010
அணையதளத்தில் வாங்க: www.ezeebookshop.com www.udumalai.com
Read More » Read more...

நிதர்சன வலிகள்

வெள்ளி

என் பெயர் கனகராஜ் துபாய் மாநாகராட்சியில் துப்புவதை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிளாளி இந்தியாவில் நான் dubai municipalty நல்ல சம்பளத்தில்(dhs 800 inr10,000) நல்ல வேலை!

 

நான் ரவி ஒரு பெட்ரோல் பங்க்கில் lube boy அதாங்க (தண்ணீர் விலையை விட இங்கே பெட்ரோல் விலை குறைவு) வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது என்னொட வேலை  

 

காலை உணவு  தினமும் ஒரு அரேபிய பெறியவர் ஒட்டல் முன்பு அவரு கண்ணில்பட 1/2 மணி வெயிலில் நின்னா அந்த பெறியவர் வாங்கி கொடுக்கும் 3 பரோட்டா கொஞ்சம் அஸ்க்கா (சர்க்கரை) காலை பசியை கட்டுபடுத்த

 

அவர் வரவில்லை என்றால் அன்னைக்கு வெறும் பரோட்டாதான் ஆனா வெறும் பரோட்டாவுக்கு அஸ்க்கா (சர்க்கரை) அந்த டீ கடை நாயர் கொடுக்க மாட்டான் அதே பெறியவர் கேட்க்காமல் தருவான்.

 

நாங்க காலை வேலையில் பெட்ரோல் பங்கில் இருக்கும் ஸடோரில் இரவு 12 மணிக்கு expiry date ஆன ரொட்டியோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என் நண்பன் எடுத்து வைத்து தருவான்.(அவன் தந்தது போக மீதம் குப்பைக்கு செல்லும்) அன்றைக்கு எதாவது டிப்ஸ் கிடைத்தால் பக்கத்து ஒட்டலில் 2இட்லி

பெட்ரோல் வாசனையால் முதலில் குமட்டலுடன் வாந்தி வந்தது இப்போது வாந்தி நின்று விட்டது குமட்டல் நிரந்தரம் ஆகிவிட்டது.

 

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அதற்க்கு காரணம் ஒரு “சுலைமானி (arabic black tea) ஆப்ரேட்டர்” (அபிஸ்ல “கட்டங் காப்பி” போட்டு கொடுத்தா அவங்களுக்கு நாங்க வைத்த பெயர்)

இந்த (சு.ஆ) இந்த வேலையை ஒரு மெஷினை இயக்கும் வேலை என்று பொய்  சொல்லி கல்யாணம் பண்ணி கொண்டான்

என்னை ஒரு “அரபான் ஆப்ரேட்டர்”(படத்தை பார்க்கவும்) என்று வத்தி வைச்சு அது ஊரேல்லாம் பத்தி எறிஞ்சதால  யாரும் பொண்ணு கொடுக்கல

single_wheel_barrow-250x250 

இதை ஏன் சொன்னான் தெறியுமா எங்கே நான் முந்தி அவன் வேலையை சொல்லிடுவேன்னு அவனுக்கு பயம்

நான் அவனோட உண்மையான வேலையை சொன்னாலும் உன் யோக்கியதை எங்களுக்கு தெறியும் என்று காரி துப்பாத குறை என்னா சிவப்பு தோல்காரன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு (அவ)நம்பிக்கை

 

எனக்கு திருமணம் ஆகிருச்சு ஆனா 4வருடமா குழந்தை இல்லை அதற்க்கு காரணம் இந்த வேலைதான்  இந்த பெட்ரோல் வாசனையால் என்னோட விந்து அணுக்களை அழித்துவிட்டது

Read More » Read more...

அறிவிப்பு……

புதன்

trash1

 

சதாசிவம் யார் வம்புக்கு போகாதவர் ஆனால் வம்புகள் அவரை தேடி வருவது அவரது போதாத காலமா தெறியவில்லை. அது போல் சில நாட்களாக ஒரு தீராத பிரச்ச்னை அவருக்கு வந்தது அது அவருடைய வீடு ஒரு தெரு முனையில் இருப்பது அந்த தெருவில் வசிக்கும் எல்லோருக்கும் குப்பை போட வசதியாக இருந்தது

இது தவிர குப்பை அள்ளும் மாநாகராட்ச்சி ஊழியருக்கு இன்னும் வசதியாக ஒவ்வொரு வீட்டிறக்கு முன்பு நிறுத்தி விசில் அடித்து குப்பை வாங்க வேண்டிய அவசியம் இந்த தெருவில் இல்லை.

இதற்க்கு முடிவு கெட்ட சதா ஒரு அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்தார் (அ.ப)யில் “இங்கு குப்பை போடகூடாது” என்றது முதல் அறிவிப்பு

மறுநாள் காலை விழித்தவுடன் ( அ.ப) பார்க்கிறார் அவருக்கு அதிர்ச்சி மின் விளக்கு கம்பத்தில் (அ.ப) மலைபோல் குவிந்த குப்பையில் மறைந்து விட்டது.

சதா (அ.ப)வை கம்பத்தில் “நாயே இங்கு குப்பை போடாதே” என்று எழுதி சிறிது மேலே தூக்கி கட்டினார்.

அடுத்த நாள் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய வாசகம் சேர்க்கபட்டு இருந்தது “இங்கு நாய்கள் குப்பை போடுவது இல்லை”

சதாவுக்கு கோபம் அதிகமானது ஒரு புதிய (அ.ப)வில் அறிவுகெட்ட நாய்கள் குப்பை போடாதே என்று எழுதினார்.

வழக்கம் போல் “நாய்கள் மற்றும் அறிவு கெட்ட நாய்களும் குப்பை போடுவது இல்லை” என்று எதிர்வினை நிகழ்ந்து இருந்தது.

பொருமை இழந்து சதா “அறிவு இல்லாத மனிதர்களே இங்கு குப்பை போடாதீரக்ள்” என்று எழுதினார்

மறுநாள் அவருக்கு பேர் அதிர்ச்சி காத்து இருந்தது இங்கு அறிவு இல்லாத மனிதர்கள் யாரும் குப்பை போடுவது இல்லை எங்களது வீட்டில் எல்லோரும் படித்து பட்டம் வாங்கியவர்கள் அதிலும் நான் இரட்டை பட்டம் வாங்கி உள்ளேன் என்ற புத்தம் புதிய வாசகம்

இதை பார்க்க சதா இன்னும் எழுந்திருக்கவில்லை.   

Read More » Read more...

அண்ணன்? அக்கா அண்ணன்!

ஞாயிறு

ஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல
இன்று அந்த வீட்டில் யாரோ புதிதாக குடி வந்து இருந்தார்கள் அவர்களின் வீட்டு பொருட்களை உள்ளே  கொண்டு சென்றார்கள்.
ஒரு பேக்கை தூக்கி கொண்டு உள்ளே நூழைந்தவள் சட் என்று ஆனந்தை திரும்பி பார்த்து லேசாக புன்னகை செய்தாள் ஆனந்த் திடுக்கிட்டவனகா திரும்பி விட்டான்.
அந்த பெண் பின்னால் வயதான ஒரு ஆள் அவர் பின்னால் சரியான உயர வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண்
ஓரு அப்பா அவருக்கு மூத்த பெண்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் ஒரு ஆண் குழந்தை என்று தன் மனதில் கணக்கு போட்டவனாக ஆபிசுக்கு கிளம்ப வாசல் கதவை திறந்தான்.
அவனை பார்த்து சிரித்த பெண் கையில் செம்புடன் சார் இந்தாங்க பால் உங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்கோம்.

என் பெயர் பானு உங்க பெயர்? ஆனந்த் அது என்ன ஆனந்த் ஆனந்தன்னு பெயர் வைச்சா நல்லா இருக்கும் என்றாள். செம்பை வாங்கி வெளியே போய்விட்டாள் ஆபிசுக்கு சென்ற ஆனந்த அந்த  கோப்புகளின் போதையில் அந்த பெண்ணை மறந்து penனால் பரதம் ஆடினான்
வீட்டுக்கு வந்த உடன் அந்த பால் செம்பு அவள் பெயரை மாற்ற சொன்னது அதற்க்கு மேல் அவளை பற்றிய வர்ணனைகள் மனதில் வரவில்லை.
கொடைகானல் மலைகளில் அந்த குளிரில் மூச்சு வாங்க ஓடியவனுக்கு தாகம் எடுப்பது போல அவன் மனதிற்கு மூச்சு வாங்கி அவன் மனம் முன்னே செல்ல மறுத்தது.
கடந்த ஒரு மாதமாக காலை வழக்கமான காப்பி-அவன்ஜன்னல்-வெறும் ஜன்னல்-அவள் சிரித்த நிகழ் படமானது
ஆனந்த இன்றும் தீவிரமாக அந்த பெண் ஏன் சிரிக்கிறாள் என்று யோசித்தான் வழக்கம போல் அவன் மனம் மறுத்தது எந்த காரணம் இல்லாமல்
அவளிடம் பேசி இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவன் மூளை கட்டளை இட்டது ஏன் என்றால் நாளை அலுவலக விஷயமாக கோவா போகிறான்.
ஆனந்தின் இன்னொரு (ஆனந்த் பாதி) மிருகம் பாதி அதற்க்கு ஒரு நல்ல திட்டத்தை தந்தது அவனின் துவைத்த சட்டையை அவன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து எதிர்த்த வீட்டுக்கு (ஏதேச்சைக்காக) பறக்கவிட்டான் வேண்டும் என்றே
இப்போது ஆனந்த் தன் முகத்தை தொலைத்து விட்டு ஏதேச்சையாக பறந்த சட்டையை எடுக்க பிச்சைகாரன் முகத்தை மாட்டி கொண்டு
கதவை தட்டினான் வாங்க உள்ளே வாங்க அவனை அவள் ஆனந்தை பேசவிடவில்லை அவள் சிரித்த வண்ணம் காப்பி குடிக்கிறிங்களா என்றாள்
 
என்னொட சட்டை ஒன்னு உங்க வீட்டுக்கு பின்னால் பறந்து விழுந்து இருக்கு அத கொஞ்சம் தர முடியாமா
அதுவா அந்த மஞ்சள் கலரா அப்பவே எடுத்து வைச்சுட்டேன் இதொ இருக்கு என்று அவன் கைகளில் கொடுத்தாள்
இந்த நிறத்துக்கு பதிலா ரோஸ் கலர் போட்டா உங்க நிறத்துக்கு எடுப்பா இருக்கும் என்றால்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றான் தாராளமா என்று அடுப்படிக்கு ஒடினாள் ஆனந்த தன் கண்களால் சுற்றி பார்த்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தான்
பதட்டத்தில் வழக்கமாக அவன் கன்னங்கள் இறுகி போனது தண்ணீரை குடித்து அதனை சரி செய்தான்.
ஓரு சந்தேகம் உங்க அப்பா என்ன செய்கிறார் எங்க அப்பா நான் பிறந்த கொஞ்ச நாள்ல இறந்துட்டார்
அப்ப அந்த பெறியவர்? அவர் எனது கணவர்
உங்க அடுத்த கேள்வி நான் எப்படி இவருக்கு மனைவி ஆனேன்னுதானே என்னுடைய அக்காதான் இந்த குழந்தைளை பெற்ற அம்மா ஆனா இப்ப இல்லை அதானால நான் அம்மா ஆகிட்டேன்.

என்னை பாத்து ஏன் அடிக்கடி சிரிக்கிறிங்க அதுவா நீங்க தப்பா எடுக்கலேன்னா ஒன்னு சொல்லவா மீசை வைச்சிங்கனா எங்க அண்ணன் மாதிரி இருப்பீங்க
vikram kandasamy
எங்க அண்ணன் ஒரு 5வருஷத்துக்கு முன்னால் எனக்கு (அக்காவாக) திருநங்கையா மாறி எங்களை விட்டு பரிஞ்சு இருக்காங்க
உங்களை பார்க்கும் போது எனக்கு எங்க அண்ணனை பார்க்கும் ஞாபகம் வருது அதனால் தான் அப்படி என்றாள்.
காலை வழக்கமான காப்பி/அவன் ஜன்னல்/சிரிப்புடன்அவள் ஜன்னல் ஆனந்த் மட்டும் மீசையுடன் இன்று முதல் எப்போதும்
Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP