அண்ணன்? அக்கா அண்ணன்!
ஞாயிறு
ஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல
இன்று அந்த வீட்டில் யாரோ புதிதாக குடி வந்து இருந்தார்கள் அவர்களின் வீட்டு பொருட்களை உள்ளே கொண்டு சென்றார்கள்.
ஒரு பேக்கை தூக்கி கொண்டு உள்ளே நூழைந்தவள் சட் என்று ஆனந்தை திரும்பி பார்த்து லேசாக புன்னகை செய்தாள் ஆனந்த் திடுக்கிட்டவனகா திரும்பி விட்டான்.
அந்த பெண் பின்னால் வயதான ஒரு ஆள் அவர் பின்னால் சரியான உயர வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண்
ஓரு அப்பா அவருக்கு மூத்த பெண்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் ஒரு ஆண் குழந்தை என்று தன் மனதில் கணக்கு போட்டவனாக ஆபிசுக்கு கிளம்ப வாசல் கதவை திறந்தான்.
அவனை பார்த்து சிரித்த பெண் கையில் செம்புடன் சார் இந்தாங்க பால் உங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்கோம்.
என் பெயர் பானு உங்க பெயர்? ஆனந்த் அது என்ன ஆனந்த் ஆனந்தன்னு பெயர் வைச்சா நல்லா இருக்கும் என்றாள். செம்பை வாங்கி வெளியே போய்விட்டாள் ஆபிசுக்கு சென்ற ஆனந்த அந்த கோப்புகளின் போதையில் அந்த பெண்ணை மறந்து penனால் பரதம் ஆடினான்
வீட்டுக்கு வந்த உடன் அந்த பால் செம்பு அவள் பெயரை மாற்ற சொன்னது அதற்க்கு மேல் அவளை பற்றிய வர்ணனைகள் மனதில் வரவில்லை.
கொடைகானல் மலைகளில் அந்த குளிரில் மூச்சு வாங்க ஓடியவனுக்கு தாகம் எடுப்பது போல அவன் மனதிற்கு மூச்சு வாங்கி அவன் மனம் முன்னே செல்ல மறுத்தது.
கடந்த ஒரு மாதமாக காலை வழக்கமான காப்பி-அவன்ஜன்னல்-வெறும் ஜன்னல்-அவள் சிரித்த நிகழ் படமானது
ஆனந்த இன்றும் தீவிரமாக அந்த பெண் ஏன் சிரிக்கிறாள் என்று யோசித்தான் வழக்கம போல் அவன் மனம் மறுத்தது எந்த காரணம் இல்லாமல்
அவளிடம் பேசி இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவன் மூளை கட்டளை இட்டது ஏன் என்றால் நாளை அலுவலக விஷயமாக கோவா போகிறான்.
ஆனந்தின் இன்னொரு (ஆனந்த் பாதி) மிருகம் பாதி அதற்க்கு ஒரு நல்ல திட்டத்தை தந்தது அவனின் துவைத்த சட்டையை அவன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து எதிர்த்த வீட்டுக்கு (ஏதேச்சைக்காக) பறக்கவிட்டான் வேண்டும் என்றே
இப்போது ஆனந்த் தன் முகத்தை தொலைத்து விட்டு ஏதேச்சையாக பறந்த சட்டையை எடுக்க பிச்சைகாரன் முகத்தை மாட்டி கொண்டு
கதவை தட்டினான் வாங்க உள்ளே வாங்க அவனை அவள் ஆனந்தை பேசவிடவில்லை அவள் சிரித்த வண்ணம் காப்பி குடிக்கிறிங்களா என்றாள்
என்னொட சட்டை ஒன்னு உங்க வீட்டுக்கு பின்னால் பறந்து விழுந்து இருக்கு அத கொஞ்சம் தர முடியாமா
அதுவா அந்த மஞ்சள் கலரா அப்பவே எடுத்து வைச்சுட்டேன் இதொ இருக்கு என்று அவன் கைகளில் கொடுத்தாள்
இந்த நிறத்துக்கு பதிலா ரோஸ் கலர் போட்டா உங்க நிறத்துக்கு எடுப்பா இருக்கும் என்றால்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றான் தாராளமா என்று அடுப்படிக்கு ஒடினாள் ஆனந்த தன் கண்களால் சுற்றி பார்த்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தான்
பதட்டத்தில் வழக்கமாக அவன் கன்னங்கள் இறுகி போனது தண்ணீரை குடித்து அதனை சரி செய்தான்.
ஓரு சந்தேகம் உங்க அப்பா என்ன செய்கிறார் எங்க அப்பா நான் பிறந்த கொஞ்ச நாள்ல இறந்துட்டார்
அப்ப அந்த பெறியவர்? அவர் எனது கணவர்
உங்க அடுத்த கேள்வி நான் எப்படி இவருக்கு மனைவி ஆனேன்னுதானே என்னுடைய அக்காதான் இந்த குழந்தைளை பெற்ற அம்மா ஆனா இப்ப இல்லை அதானால நான் அம்மா ஆகிட்டேன்.
என்னை பாத்து ஏன் அடிக்கடி சிரிக்கிறிங்க அதுவா நீங்க தப்பா எடுக்கலேன்னா ஒன்னு சொல்லவா மீசை வைச்சிங்கனா எங்க அண்ணன் மாதிரி இருப்பீங்க
எங்க அண்ணன் ஒரு 5வருஷத்துக்கு முன்னால் எனக்கு (அக்காவாக) திருநங்கையா மாறி எங்களை விட்டு பரிஞ்சு இருக்காங்க
உங்களை பார்க்கும் போது எனக்கு எங்க அண்ணனை பார்க்கும் ஞாபகம் வருது அதனால் தான் அப்படி என்றாள்.
காலை வழக்கமான காப்பி/அவன் ஜன்னல்/சிரிப்புடன்அவள் ஜன்னல் ஆனந்த் மட்டும் மீசையுடன் இன்று முதல் எப்போதும்
4 comments:
arumaiyaana kathia
ஒரு பக்க கதை நல்லாயிருக்கு...
ரமேஷ்,தமிழ் வெங்கட் நன்றி
nice story - Tamil Actress hot pictures and videos here http://siddhamdcl.blogspot.com
கருத்துரையிடுக