Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

நீங்கள் தமிழனா...

வியாழன்

நீங்கள் தமிழன் என்றால் இந்த பதிவை உடனடியாக 10தமிழனுக்கு அனுப்புங்கள்.


இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் முத்துக்குமார் (வயது 30) என்ற இளைஞர் இன்று தீக்குளித்து மரணமடைந்தார்.
இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது... இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கூறியபடியே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் முத்துக்குமார் இன்று காலை 11 மணியளவில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
படுகாயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை - கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த முத்துக்குமார், மாத இதழ் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர்.
தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...
வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?
ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?
ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?
கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.
ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.
இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.
தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.
அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)
இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.
இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.
1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.
2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.
3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.
6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.
7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.
8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்
9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.
10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99
அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.


நன்றி:  http://kricons.blogspot.com/2009/01/blog-post_29.html

Read More » Read more...

வலைதலங்களை சுறு சுறுப்பாக்க

செவ்வாய்

வலை தளங்கள்களில் நாம் எழுதும் செய்திகள் படிப்பவர்கள சென்று அடைவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் வாசகர்கள் நமது தளத்தை படிபதற்க்கு நமது தளமானது நமது தளத்தை திறந்தவுடன் மிக வேகமாக load ஆவது மிக அவசியம் அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

நாம் ஒலி படங்கள பயன்படுத்தும் போது அளவு சிறியதாக இருப்பது மிக அவசியம் அவை gif format இருப்பது அந்த படங்கள் மிக விரைவாக திரையில் தோன்றும்

மற்றும்  அதிகமான படங்களை Picasa Web Album-ல் up load செய்யவேண்டும்.நாம் நினைக்கும் இணையதளத்தில் இருந்தல் படங்கள விட அதன் url உயபயோகிப்பது இணையத்தில் பகிற வேண்டும்

நமது தளங்களில் உபயோகிக்கும் java scrift தளத்தின் footer பகுதியில் உபயோகிப்பது நன்று

நமது தளத்தின் முகப்பு பகுதியில் குறைந்த்து 10  பதிவுகளை அல்லது அதற்க்கு குறைவான தெறிய வைப்பது அவசியம்

நமது தளங்கள் எவ்வளவு நேரத்தில் இணையத்தில் load ஆகிறது என்று தெறிந்து கொள்ள இந்த தளத்தில்http://www.numion.com/Stopwatch/index.html நமது தளத்தின் url தட்ச்சு செய்தால் இணையத்தில் load ஆகிறது தெறிந்து விடும்

Read More » Read more...

சிடி டிவிடி பழுது நீக்க

திங்கள்

நம்மிடம் உள்ள எந்த வகையான cd,dvd-ல் கீரல் விழுந்து அதில் உள்ள தகவல்களை நம்முடைய cd,dvd player,rom-கள் தகவல்களை படிக்க முடியாத நிலைமை உருவாகும் மற்றும் os cd-களில் கீரல் விழுந்தால் இவற்றை கொண்டு நாம் கணினிகளில் os –யை ஏற்றும் போது  சில கோப்புகள் insatll –ஆகாமல்

 

கணினி சரியாக இயங்காமல் os-ன் முழு பயனையும் நாம் அடைய முடியாது

இதற்கு என்ன தீர்வு  என்று பார்ப்போம்.

cd,dvd-கீரல்களை பற்றி பார்ப்போம்

 

cdscratchlg

 

 

 

 

 

 

 

 

 

cd,dvd-களில் நடுபக்கத்தில் கீரல்களைவிட அதன் பக்கவாட்டில்

உள்ள கீரல் உள்ள cd,dvd-களின் தகவல்களை மீட்டெடுப்பது எளிதானது.

இந்த செயலை செய்ய சில் மென் பொருட்களின் வழியாக செய்யலாம்

 

இணையத்தில் cd,dvd-ல் உள்ள கோப்புகளை மீட்டெடுக்க

சில மென்பொருட்களை வரிசைபடுத்திகிறேன் 

 

CD Recovery Toolbox:

இந்த மென்பொருள் கொண்டு தகவல்களை மீட்டேடுக்கலாம் ஒரு மென்பொருள் கொண்டு தகவல்களை பெற முடியா விட்டால் இன்னொரு மென்பொருள் நாட தவற கூடாது.

இந்த செயலை செய்யும் போது சிறிது பொருமை காப்பது அவசியமாகும்

இதை செய்வது பற்றிய குறிபேடு

Roadkil’s Unstoppable Copier:

முன்பு குறிபிட்ட மென்பொருள் போலதான் இந்த மென்பொருளும் அதை ஒத்த மென்பொருள்தான் ஆனால் இதில் தகவல்களை மீட்டு எடுக்கும் போது  pause செய்து விட்டு அல்லது அந்த செயலை சேமித்து விட்டு திரும்ப தொடரும்  சிறப்பு வசதி உள்ளது

 

ரசாயன திரவங்கள கொண்டு கீரல்களை எப்படி எடுப்பது

 • முதலில் தண்ணீர் கழுவிவிட்டு அல்லது சிறிதளவு சோப்பு கரைசல்,பற்பசை கண்கண்ணாடி கடைகளில் உபயோகிக்கும் பாலிஷ்களை மிக குறைந்த அளவு உபயோகிப்பது அவசியம்.
 • ஒரு சுத்தமான பனியன் துணி கொண்டு துடைக்கவும்  பின்பு மேற்குறிபிட்ட ஏதாவது ஒருபொருளை சிறிது அளவு விட்டு
 • துணிகொண்டு வட்டவடிவமாக துடைத்து எடுக்கவும் நீங்கள் சரியாக செய்து  இருந்தால் கீரல்கள் மங்கிய நிலையில் கணப்படும் கீரல்கள் மறைந்துவிட்டது என எடுத்து கொள்ளலாம்

டிஸ்கி:

இணையத்தில் கண்டவை மட்டுமே பகிற பட்டுள்ளது இதற்க்கு http://bigulu.blogspot.com/

எந்தவித்திலும் பொருப்பாகாது

Read More » Read more...

ஆபிஸ் செயலி கொண்டு வலைபதிவு

சனி

இணையத்தில் இருக்கும் போது வலைபதிவிட blogger editor,இணைய இணைப்பு இல்லாதபோது நாம் வலை பதிவிட window live writer, Scribe மற்ற off line editor-களை பயன்படுத்துகிறோம் இதில் பரவலாக windows live writer பயன்படுத்தபட்டு அனைவராலும் பாராட்டபடுகிறது.
மற்றும் இதை தரவிரக்கம் செய்ய நிறைய நேரம் ஆகிறது ஓரு os-யை format செய்தபின்பு windows live writer -யை மறுபடியும் தரவிரக்கம் செய்யவேண்டும்


இந்த நிலையை மாற்ற என்ன தீர்வு என்று யோசிக்கும் போது ms-word நாம் பரவலாக உபயோகிக்கும் ஒரு word prosser இந்த word prosser-க் கொண்டு நாம் வலைபதிவுகளை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
ms-word-ல் இப்போதைக்கு இல்லை
இந்த செயலை செய்ய நமக்கு open office உதவுகிறது இந்த செயலை செய்ய
open office plug in-யை நிறுவினால் போதும் இந்த செயலை செய்யலாம்.


இதனை கொண்டு இணைய இணைப்பு இல்லாதபோது நாம் வலை பதிவிட முடியும் வலைபதிவு செய்ய தனியாக ஒரு மென்பொருள் அவசியம் இல்லை
பெறும்பாலும் நாம் அலுவலகத்தில் இருந்து வலைபதிவு செய்யும் போது அங்கு இதற்கென தனி மென்பொருள் நிறுவ அனுமதி இருக்காது அலுவலக வேலை நிமித்தமாக நாம் word-யை பயன்படுத்தும் போது இடையில் நாம் வலை பதிவிட எளிதாக்குகிறது.


 • இது blogger,wordpress போன்ற எல்லாவிதமான சேவைகளுடன் ஒத்துபோகிறது
 • live writer -ன் எல்லா வசதிகளும் இதில் செய்யலாம்
 • plugin அளவு 1.5 ரங அளவு உள்ள சிறிய கோப்பாக உள்ளது
  தரவிரக்கம சுட்டி
   கணினியில் open office இல்லாதவர்கள் open office portable:தரவிரக்க சுட்டி

Read More » Read more...

ஆக்ஸிஸ் வங்கிக்கு ஆயிரக்கணக்கில் மடல் அனுப்புங்கள்…

வெள்ளி


ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கியில் தங்களுக்கு கணக்கு இருந்து அதன் இணையச் சேவையை பயன்படுத்துகிறீர்களா?
அது மைக்ரோசாப்டுக்கு ஏற்றதாக அதன் உலாவிக்குத் தக்கபடிதான் இருக்கப் போவதாக சொல்கிறது(1).
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்த கப்பம் கட்டி விண்டோஸின் லைசன்ஸ் முறைப்படி பெற்றிருக்க வேண்டும். அதாவது ஐயாயிரம் ரூபாய் குறைந்தது காசு பிடிக்கும் அல்லது பைரேட் செய்து பிழைக்க வேண்டும்.
இந்நிலை மாற வேண்டும்.
பொதுப் பயன்பாட்டு சேவைகள் வழங்கும் தளங்கள் யாவும் உலாவி பாரபட்சமின்றி வடிவமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே ஆக்ஸிஸ் வங்கியை அதன் தளத்தை பொதுவான நெறிமுறைகளுக்கு இணங்கி - பயர்பாக்ஸ் போன்ற உலாவிக்கும் ஏற்றபடி - குனு லினக்ஸ் பயன்படுத்துவோருக்கு ஏதுவாக இருக்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பி.கு: இவையெல்லாம் தமிழில் எப்போது கிடைக்கப் போகின்றன? அதையும் கேட்போமா?

source:  

கணிமொழி

Read More » Read more...

ஆல் இன்னால் அழகு ராஜா

நமது கணினியில் சில தேவையான செயல்களை செய்ய  சில இலவச மற்றும் பணம் கொடுத்தும்  மென் பொருட்களை தரவிரக்கம் செய்கிறோம் மற்றும். இவ்வகையான மென் பொருட்களை ஓரு செயலை செய்ய தனி தனி மென் பொருட்களை தரவிரக்கம் செய்கிறோம்

அப்படி செய்யாமல் நாம் விருப்படும் செயலை செய்ய ஒரு மென்பொருளை உபயோகித்து பல செயல்கள செய்யும் ஒரு  மென்பொருளை பற்றி பார்ப்போம்

 

callendr:   calendar

 •     இதில் உலகநேரத்தை அறியலாம்
 •     அலாரம் வைக்கலாம்

 

Screen Capture:screen-capture
 • desktop-நிகழ்வுகளை சேமிக்கலாம் இதனை கொண்டு நாம் சேமிக்கும் desktop-நிகழ்வுகளை உடனுகுடன் மாற்றம் செய்ய image editor-இணைக்கபட்டுள்ளது

 

Color Picker:color-picker

 • இதனை கொண்டு வண்ணங்களின் html- code-களை பெறலாம்

Privacy Eraserprivacy-eraser
 • கணினியில் பதிந்த தகவல் password போன்ற இன்ன பிற நாம் விட்ட தகவல்களை அழிக்க உவுகிறது.ccclener-யை ஒத்த செயல்களை செய்யலாம்.

 

 

Font Viewer:font-viewer

 

 • இதை கொண்டு கணினியில் எழுதுறுக்களை preview-வழியாக எபப்டி இருக்கும் என்று பார்த்து கொள்ளலாம்
 • மேற்குறிப்பிட்ட அனைத்து செயல்களை செய்ய ஒரே மென்பொருள் உள்ளது அதன் சுட்டி 
 • இந்த மென்பொருளின் அளவு 744kb அளவில் கிடைக்கிறது இதில் உள்ள செயல்கள் வலைபதிவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
 • உபயோகிக்க எளிதாக கணினி திரையில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்
 • இதை உபயோகித்ததில் நன்றாக வேலை செய்கிறது மற்றும் இதில் நான் குறிப்பிடாத சில வசதிகள் உள்ளது அதனையும் உபயோகித்து பின்னுட்டத்தில் தெறிவிக்கவும் 
 • இது இலவசமாகவும் spyware,adware இல்லாமல் உபயோகிக்க எளிதாக உள்ளது
Read More » Read more...

இப்படியும் பிகிலு ஊதலாம்

வியாழன்

Read More » Read more...

குமுதம் பறித்த பத்து பூக்கள்

சனி

குமுதம் 21.01.09. அன்று குமுதம் வார இதழ் top 10 தமிழ் வலை பூக்களை தேர்வு செய்யபட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இத்தனை காலம் தமிழ் வலைபூக்கள்  கண்டு கொள்ளபடவில்லை வணிகநோக்கம் இல்லாமல் பல நல்ல கருத்துக்களை தினம் தினம் தந்துகொண்டு இருக்கிறது.

 

தமிழில் ஜய்யாயிரம்   வலைபூக்கள் இருந்தாலும் இந்த பத்து வலைபூக்கள் நேர்வு செய்யபட்டுள்ளது

  இது ஒரு தொடக்கம்தான் இந்த பத்து   வலை பூக்களை குமுதம் செய்த தேர்வால் வரும் காலங்களில் இன்னும் பத்து மடங்காக ஆகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

படங்களை பெரிதாக்கி பார்க்கவும்

Image13

 Image11

Image12

 

1.இட்லி வடை

http://idlyvadai.blogspot.com/

 

2.திணை இசை சமிக்ஞை

நாகாரஜுன்

http://nagarjunan.blogspot.com/

3.பிகேபி

http://pkp.blogspot.com/ 

சிவகுமார்

 

 

 

 

4.எண்ணங்கள்

http://thoughtsintamil.blogspot.com/

பத்ரி

5.யுவகிருஷ்ணா

http://www.luckylookonline.com/

Krishna

6.பரிசல்காரன் கே

http://www.parisalkaaran.com/

கே.பி.கிருஷ்ணகுமார்

PA070020

7.ஆதிஷா

http://www.athishaonline.com/

வினோத்

meet4

8.மொழிவிளையாட்டு

http://jyovramsundar.blogspot.com/

ஜ்யோவ்ராம் சுந்தர்

 

9.சத்தியகடுதாசி

ஷோபா சக்தி

http://www.satiyakadatasi.com/

 

10.ஸ்மைல் பக்கம்

http://livingsmile.blogspot.com/

வித்யா

Read More » Read more...

தினத்தந்தி ஸ்டைலு லுக்கு

வியாழன்

தினத்தந்தி பத்திரிக்கை படிக்கிறவங்க எல்லோருக்குமே தினத்தந்தி பிரசுரிக்கிற கட்டுரையிலே முதல் எழுத்து மற்ற எழுத்தகளை விட பெரியதாக இருக்கும் இதை போல பல புத்தகங்களிலும் இந்த மாதிரியை பார்க்கலாம் இதே மாதிரி முதல் எழுத்தை பெரியதாக வலைபூ பதிவகளில் காட்டுவது எப்படின்னு படிப்படியாக பார்ப்போம்.
இதை செய்வதற்க்கு முன்பு template-யை பிரதி எடுக்க மறக்கவேண்டாம்
படிநிலை1: • gmail id -யை blogger -கணக்கில் நுழையவும்
 • நுழைந்தவுடன் கிழ்கண்ட படத்தில் உள்ளது போன்று தோன்றும்
dash board2  • இதில் layout என்பதை தேர்ந்நு எடுத்து உள் நுழையவும் அங்கு edit html தேர்ந்து எடுக்கவும் கிழ் உள்ள படத்தில் உள்ளது போல
edit html2
 • download full template என்பதை தேர்ந்து எடுத்து நம் template சேமித்துகொள்ளவும்
template code-களின் நடுவே ctrl-f என்ற கட்டளை கொடுத்து ]]></b:skin>-என்ற code-தேடவும்
e1
 • அந்த code-க்கு மேல் கிழ்கண்ட code-யை copy -செய்து சரியாக ]]></b:skin>-க்கு மேல் ஒட்டவும்
/* magazine drop caps */
.magazine {
float:left;
color:#000;
background:#fff;
line-height:80px;
padding-:1px 5px 0 0;
font-family:times;
font-size:100px;
}
save

படிநிலை2
edit html- தேர்ந்து எடுத்தது போல இப்போது setings -தேர்ந்து எடுத்து பின்பு அதன் கிழ் உள்ள formating -தேர்ந்து எடுக்கவும்
save2
post template என்ற பெட்டியில் <span class="magazine"> </span> என்ற code -யை ஒட்டவும்
cap
அதன் பின்பு template-யை சேமிக்கவும் சேமித்த பின்பு நிங்கள் புதிய பதிவு தட்டச்சு செய்யும் post editor -ல் edit html தேர்ந்து எடுத்தால் இதேபோன்று தோன்றும்
post
இதில் காணப்படும் <span class="magazine">தி</span>  இந்த உதாரணத்தில் உள்ளது போல் முதல் எழுத்தை தட்டச்சு செய்யவும் அதன் பின்னர் தொடங்கும் கட்டுரையை </span> இந்த code -க்கு பின்பு தொடரவும்.
அதன்பின்பு இப்படி காட்ச்சி அளிக்கும்

posted2
இந்த முதல் எழுத்தை நம் விருப்பம் போல் மாற்றி எப்படி என்று பார்ப்போம் அதற்க்கு இந்த code-களை notpad-ல் திறந்து கொண்டு edit -செய்யலாம்.
/* magazine drop caps */
.magazine {
float:left;
color:#000;
background:#fff;
line-height:80px;
padding-:1px 5px 0 0;
font-family:times;
font-size:100px;
}
color: #000- எனபது முதல் எழுத்தின் நிறத்தை குறிக்கும் (நிறத்தின் code-களை இங்கு பெறலாம்)
background:#fff;-எனபது முதல் எழுத்தின் பின்புற நிறத்தை குறிக்கும் (பின்புற நிறங்களை இங்கு பெறலாம்)
padding:1px 5px 0 0 : padding: -எனபது முதல் எழுத்துக்கும் கட்டுரையின் சிறிய எழுத்துக்கான இடைவெளியை குறிக்கும் வலது,இடது,மேல்,கிழ் என்று மாற்றி கொள்ளலாம்
                                   
1px-->
முதல் எழுத்தின் இடது புற எழுத்தை இடதுபுற அளவுகளை   மாற்ற

முதல்எழுத்தின் மேல் புறமாக அளவுகளை மாற்ற
  5px  
முதல் எழுத்தின் இடது புறமாக  அளவுகளை மாற்ற
0 -->
எழுத்தின் கிழ்புறம் அளவுகளை மாற்ற

font-family:times : ஆங்கில எழுத்துறுகளை மாற்ற
Font-size:100px :  எழுத்தின் அளவினை மாற்ற

இது போன்று மாற்றிய code-கள்

 • <span style="float:left;color: #0C3259;background:#BCBBBB;line-height:80px; padding:1px 5px 0 0; font-family:times; margin: 0px 5px 5px 0px; font-size:100px;">First alphabet</span>
 • m1 • <span style="float:left;color: #0C3259;background:#77FD8D;line-height:80px; padding:0 5px 0 5px; border: 2px solid #606160; border-right: 2px solid #606160; border-bottom: 2px solid #606160; font-family:georgia; margin: 0px 5px 5px 0px; font-size:100px;">First alphabet</span>
 • m2

 • <span style="float:left;color: #04440E;background:#E0F5FD;line-height:80px; padding:0 13px 0 10px; border: 2px solid #057B19; border-right: 2px solid #057B19; border-bottom: 2px solid #606160; border-top: 1px solid #057B19; border-left: 1px solid #057B19; font-family:arial; font-style: italic; margin: 0px 5px 5px 0px; font-size:100px;">First alphabet</span>
 • m3
Read More » Read more...

பெருங்கடலில் இருந்து சிறு துளிகள்

செவ்வாய்

பேறிஞர் அண்ணா பற்றிய ஆவணபடம்

Read More » Read more...

கணினி தமிழ் வசமாக

ஞாயிறு

ணையத்தில் இல்லாதபோது வலைபூ எழுத எத்தனையோ மென் பொருட்கள் உள்ளது ஆனால் windows live writer மேம்படுத்த பட்ட வசதிகளுட்ன் இலவசமாக கிடைகிறது மற்றும் இந்த மென் பொருள் ஆங்கிலம் மற்றும் தமிழிலில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது இதைபோல ஒரு நல்ல  மென் பொருள் இருந்து கூடவே nhm writer கணியில் நிறுவி தமிழில் எழுத வலை பதிவு தமிழில் எழுதவது மிக எளிதாகிறது

nhm converter தமிழ் எழுத்துறுக்களை மாற்ற இந்த மென்பொருளை தரவாயிருக்கம் செய்து நமது கணிணியில் வைத்து செய்யலாம்
nhm lister நாம் எழுதியவாக்கியங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் உள்ள பிழைகளை சரிபார்க்க இணைய இணைப்பில் இருந்து செய்யலம்.
windows live writer தரவிரக்கம் செய்த பின்பு தமிழில் தொடர நமக்கு மிகவும் கடினமாக  இருந்தால் windows live writer-ன் மொழியை மாற்ற ஆங்கிலத்தில் அந்த திரும்ப மென் பொருளை தரவிரக்கம் செய்ய அவசியம் இல்லை அப்படியே அந்த மொழியை மாற்ற

கிழ்கண்ட படிநிலைகளை பின்பற்றவும்

  1. Go to c:\program files\Windows Live\Writer\
  2. Find the abbreviation of your language (’ta’ for Tamil language)
  3. Move that folder to somewhere else (I prefer moving instead of deleting, at least you can recover it back).
  4. Run Windows Live Writer again.
  You’ll see the Windows Live Writer in English language. nhm write-ல் உள்ள key preview onscreen key board நாம் தட்டச்சு செய்யும் போது மறைந்து விடும். இதை சரி செய்ய இதைபடித்து பார்க்கவும் இதனை தமிழ்99 தட்டச்சு முறையால் பதிகிறேன். இம்முறையைப் பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம். அதிலிருந்து ஒரு வரி: "It's said that no language keyboard in the world is now as simple as this! To represent 26 characters of English, you need 26 lower case and 26 upper case keys. But to represent 247 Tamil letters, you need only 31 keys! How laudable!" இது குறித்து அனுராக்கும் சில நாட்களுக்கு முன் பதிவிட்டார் மேலும் படிக்க தமிழ் எழுத உதவிக்கு சில சுட்டிகள் தமிழ் தட்டச்சு பழக மென்பொருள்
  மீண்டும் தமிழ்
  தமிழ் முழு உதவிக்கு
மேலும் இது பற்றிய கேள்விகள் அனைத்தும் வரவேற்க்கபடுகின்றன மின்னஞ்சல் முகவரி nattuboltu@gmail.com

tpemk பங்கேற்பாளர் பாஸ்கரன் வலைபூ முகவரி
Read More » Read more...

உங்கள் கையெழுத்து ஒன்று வேண்டும்

உங்கள் கையெழுத்து ஒன்று வேண்டும்

அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்று உள்ள திரு.ஒபாமா அவர்களுக்கு தமிழீழத்திற்கு தமிழர்களாகிய நம் ஆதரவை பறைசாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள்.

http://www.tamilsforobama.com/sign/letter.html

தமிழர் ஆதரவு தமிழ் ஈழத்திற்கே என்பதை பறைசாற்றுவோம்.

இந்த செய்தியை தங்கள் வலைப்பூவிலும் பதிய வேண்டுகிறேன்.
Read More » Read more...

பேவிக்கான் உருவாக்க

புதன்

blogger-முகவரிகள் நமது browser-ல் தோன்றும் போது முகவரிக்கு முன் அதில் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல தோன்றும்

10000


இதையே நம்முடைய profile படத்தை நமநு முகவரிக்கு முன் தேன்ற வைப்து எப்படி என்று பார்ப்போம் கிழ்கண்ட படத்தில் உள்ளது போல
2222
முதலில் நாம் இதற்கு தேவையான படத்தை தேர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் அது jpg,gif format-ல் இருக்க வேண்டும்

இந்த படத்தை http://www.iconj.com/icon_generator.php இணையதளத்தில் இலவசமாக நம் jpg,gif படத்தை .ico என்ற format-ல் இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
இந்தளத்தில் உறுப்பினர் ஆகாமலேயே இந்த வசதியை பெறலாம். அதை எப்படி     என்று பார்ப்போம்
மேற்குறிபிட்ட தளத்துக்கு சென்று.நம்முடைய படத்தை இணையேற்றம் செய்ய வேண்டும்.
8
இணையேற்றம் செய்தபின்பு .ico என்ற format-ல் மாற்றபட்ட படத்தை தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.


image 


இவர்கள் கொடுக்கும் direct link-ல் இருக்கும் code’யை blogger template -ல் ctrl  கிழ் கண்ட- code-யை தேடவும்
ஒட்டுவுதற்கு முன்பு tepmlate-யை download செய்யவும்
கிழ்கண்ட 2code-களுக்கு  இடையில் ஒட்டினால் போதும்
]]></b:skin>  

   </head>

ஒட்டிய பின்பு  இப்படி இருக்கும்
800
Read More » Read more...

வலையில் விழுந்த முகம்மது குட்டி!

செவ்வாய்

இந்தியில் நட்சத்திர நடிகர்கள் எல்லோருமே தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய வலைப்பதிவு தொடங்குவது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக ஆமீர்கான், அமிதாப் மற்றும் ராம்கோபால் வர்மாவின் வலைத் தளங்கள் மிகப் பிரபலம். தன்னுடைய வலைத் தளத்தில்தான் ஷாரூக்கை மறைமுகமாக 'நாய்' எனக் குறிப்பிட்டு ஆமீர் எழுதியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
இப்போது ப்ளாக் எழுதும் ஆர்வம் தென்னிந்திய நடிகர்களையும் பிடித்துக் கொண்டுள்ளது.
மலையாளத்தின் மெகா ஸ்டார் எனப்படும் மம்முட்டியும் இப்போது ப்ளாக் எனப்படும் வலைத்தளம் ஒன்றை துவங்கியுள்ளார். Mammootty with Kanika

ஐ அம் மம்மூட்டி.பிளாக்ஸ்பாட்.காம் (www.iammammootty.blogspot.com) என்ற மலையாள வலைப்பதிவை துவக்கி உள்ள அவர், இதில் அரசியல் சமூகம் குறித்த தனது கருத்துகளை எழுதுகிறார். ஜனவரி முதல் தேதி தொடங்கப்பட்ட இதில் முதலாவதாக 'அரசியலில் பணம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
அரசியலில் பணம் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை தனது கட்டுரையில் விவரித்துள்ளார் மம்முட்டி. இனி வாராவாரம் இதுபோன்ற கட்டுரைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பல நேரங்களில், பல சமூகக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்போதெல்லாம் இந்த மாதிரி வலைத் தளத்தில் எழுதுவது சுலமானது, வசதியானது', என்கிறார் மம்முட்டி. விரைவில் இந்த ப்ளாக்கின் ஆங்கில வடிவத்தையும் துவங்கப் போகிறாராம்.
தமிழில், சொந்தமாக கட்டுரை எழுதும் அளவுக்கு நமது ஸ்டார்களுக்கு பொறுமை கிடையாது. மோகன்ராம் என்ற நடிகர் மட்டும் அவ்வப்போது சில ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
விக்ரம், விஜய் போன்ற மற்ற நடிகர்கள் தங்களுக்குக்கென்று தனி இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர்.
நடிகர்களில் ரஜினிக்கு மட்டுமே அரை டஜன் இணைய தளங்கள் செயல்படுகின்றன. ஏராளமான ப்ளாக்குகளை அவரது ரசிகர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட ரஜினி ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!!.
அஜீத்துக்கு இரு தளங்கள் உள்ளன. மற்ற நடிகர்களுக்கு பிரபல வெப்சைட்டுகள் தளங்களை உருவாக்கித் தந்துள்ளன. இதில் அவர்களது பங்களிப்பு எதுவுமில்லை.

Read More » Read more...

தமிழ்மணத்தில் நட்ச்சித்திர பதிவரா ஆசையா?

உங்கள் நண்பர்களை ஏமாற்றவும் எந்த இணைய தளத்தில் நீங்கள் திருத்தி எழுதிபார்க்க ஆசையா இருந்தா? உங்க அசைய பூர்த்தி செய்ய ஒரு வழி இருக்கு.


நீங்க திருத்த வேண்டிய இணைய தளத்தை திறந்து விட்டு

browser adress bar-ல கீழ்கண்ட java code -யை enter-யை தட்டவும்

javascript: document.body.contentEditable = 'true';document.designMode = 'on'; void 0

3000


வேணும்றத தட்டச்சு செஞ்சுபாத்து enjoy பண்ணுங்க


இதில் இருக்கும் இன்னொரு வசதி browser-ல muose cursor-வேலை செய்யாத பட்ச்சத்தில் இதே செயலை செய்து நம்ம copy பண்ண வேண்டிய தகவல்களை   ctl-c பண்ணி ctrl-v  பண்ணி சேமிக்கலாம்

இந்த code adress bar-ல ஒடியவுடன் நம்ம browser note pad ஆக மாறிவிடும்

கடைசியா

தமிழிலும் திருத்தம் செய்லாம்

டிஸ்க்கி: சுமாரா எழுதுற நம்ம பதிவு இடம் பெற்றா எப்படி இருக்கும்ன்னு ஒரு சின்ன கானா அவ்வளவுதான் வேறொண்ணும் இல்லிங்க

Read More » Read more...

பாஸ் ஆனால் பெயில்

திங்கள்

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா?

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்.
10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,
தூக்க ஆள் வரும்

Read More » Read more...

மாமாவுக்கு அல்வா கொடுத்த அமேரிக்கா!

இந்தியாவின் அயல் நாட்டு கொள்கையின் தந்தை ஐவகர்லால் நேரு. அவர்தான் பஞ்சீல கொள்கையை சீன பிரதமர் சூயன்-லாய்  இந்தேனேஷிய பிரதமர் சுகர்னோ,எகிப்து ,பிரதமர்நாசர் ஆகியோர் இணைந்து 1955-ம் ஆண்டு பாண்டுங் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் வரையறுக்கபட்டன


 
 1. எல்லாநாடுகளும் சமாதானமாக வாழவேண்டும்
 2. வலிமைமிக்க நாடுகள் வலிமை குறைந்த நாடுகளை துன்புருத்த கூடாது
 3. பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடகூடாது.
 4. பிறநாடுகளுக்கு உதவி செய்தல்
 5. பிரேதேச ஒற்றுமையை பாதுகாத்தல் இந்த 5 கொள்கைகளே பஞ்சீல கொள்கைகள் ஆகும்.
இந்த கொள்கைகள் எல்லாம் நம்ம பள்ளி புத்கத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

இந்த கொள்கைக்கு நேர்மாறாக நடப்பது சாட்ச்சாத் அமேரிக்காதான்
 • தடைசெய்யபட்ட ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது போர் 
 • சாதாம் உசேனை கொண்றது
 • பின்லேடன் போன்றவர்கள வளர்த்துவிட்டு செ-11 பிறகு பயங்கரவாத்துக்கு எதிரான போர் என்று பொய் கோஷம் போடுவது
 • உலகதில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் நாங்க காரணமானவர்கள கண்டுபிடிக்க உதவுறோம் என்று கூச்சல் போடுவது
 • இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட துடிப்பது
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

கடைசியா
 • பிடல்காஸ்பிரோ அமேரிக்காவை எதிர்த்து அமேரிக்காவில் இருந்து வர சர்க்கரை வேண்டாம் அதனால் இனி மேல் யாரும் சர்க்கரை சாப்பிட வேண்டாம் மக்களுக்கு அறிவுறித்தானார்
 • ஆனா மும்பை தீவிரவாதி தாக்குதல் விசாரணை அறிக்கையை படிச்சுகாட்ட உள்துறை அமைச்சர்  அமேரிக்கா செல்கிறார்
Read More » Read more...

இணைய லுக்கு எளிதாக

blogger-- எழுதற எல்லோருமே நம்மலும் ஒரு புதிய domain வாங்க மாட்டோமா! என்ற ஏக்கம் எல்லோரிடமும் இருக்கும் ஆனா blog-யை ஒர் அளவுக்கு இணைய லுக்கு  மாற்ற எனக்கு தெறிஞ்சத பகிற ஆசைபடுகிறேன்

blog பக்கத்தில் உள்ள post atom அந்த இடத்தில் இருந்து மறைய வைப்போம்

கிழ்கண்டவைகளை செய்யும் முன்பு நமது template பிரதி எடுக்க மறக்க கூடாது அது எப்படின்னு பார்ப்போம்த

login logger account <goto > layout  <goto > download full template click and save desktop
back up temp3blog பக்கத்தில் உள்ள post atom அந்த இடத்தில் இருந்து மறைய வைக்க கிழ்கண்ட படிநிலைகள் பின்பற்றவும்
<goto > edit html template-ன் உள்ளே கிழ்கண்ட css code -யை template-ல் கிழ்கண்ட படத்தில் உள்ள code-கிழ் ஒட்டவும்
nav03

 .feed-links {display: none; }

post atom அந்த இடத்தில் இருந்து மறைய வைப்பது எப்படி?  ஓளிகாட்ச்சிnav இந்த navication bar -யை அகற்ற கிழ்கண்ட css code -யை 


முன்பு சேர்த்த-code-ன் கிழ் பக்கத்தில் சேர்க்கவும் #navbar-iframe {
display: none !important;
}


 
template-யை சேமிக்கும் முன்பு முன்னொட்டம் பார்த்துவிட்டு சேமிக்கவும்


இந்த navication bar -யை அகற்றுவது எப்படி ஓளிகாட்ச்சி


Read More » Read more...

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP