Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

புதிய மின் நூல் திட்டம் இணையதளம் எண்ணங்கள்

புதன்நான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக freetamilebooks.com இணையதளத்தில் தன் ஆர்வலராக இணைத்து கொண்டு புதிய  புத்தகங்களை படைப்பாளிகளிடம் creative commons உரிமத்தில் மூலங்களை வாங்கி மின் நூல் ஆக்கம் செய்து அதன் வெளியீட்டில் என் பங்களிப்பையும் செய்தேன்.

பார்க்க இணைப்பு (http://gnunanban.blogspot.com/p/blog-page_23.html)


இந்த நிலையில் திட்டத்தில் நான் உரிமை வாங்கிய  உமர் பாருக் எழுதிய உடலின் மொழிஎன்ற புத்தகத்தை வெளியீடு(sep-18) பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/ebooks/398இந்தப் புத்தகத்தின் தரவிறக்கம் 2000 தாண்டிவிட்டது இந்த நிலையில் இந்தப் புத்தகத்தின் நம்பக தன்னமை பற்றித் திட்டத்தின் உறுப்பினர் திரு ரவி அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார்(பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/page/2) அதன் பின்பு அந்தப் புத்தகம் திட்டத்தில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது மேலும் அவரின் கேள்விகள் தொகுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த நிலையில் இந்தப்புத்தகம் மற்றும் இதனுடன் சேர்த்து வாங்கிய புத்தகங்களுக்கு மூன்று மாதங்கள் நான் உழைத்தேன். அந்த உழைப்பு வீண் ஆகாமல் இருக்க மற்றும் இந்தப் புத்தகங்கள் மக்களுக்குச் சேர்ந்து நன்மைகளை விளைவிக்க வேண்டி ஒரு புதிய மின் நூல் திட்டத்தை தொடங்க நினைக்கிறேன் அது பற்றி மக்களின் கருத்துகளை ன் அறிய  விரும்பிறேன்

 என் பங்களிப்பு freetamilebooks.com தளத்தில் தொடர்ந்து இருக்கும்
    இணையதளம் குறித்து என்ன புதிய வசதிகளைப் பயனாளிகளுக்கு அளிக்கலாம்  
    புதிய தளத்தின் பெயர் என்ன வைக்கலாம்.
    இணையதளத்தை எங்கு hosting செய்யலாம்
    இது தவிர ஏனைய கருத்துகளும் வரவேற்கப்படுகிறது
    கருத்துகளை gnuanwar at gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

புதிய தளத்தில் நூல்களை ஒலிநூல்களாகவும் braily நூல்களாகவும் இணக்கும் வசதி

மின் நூல்களை torrent கோப்பாக வெளியிடவும்


அதி முக்கியமாகத் திருட்டு pdf ஆக இருக்கும் நூல்களை creative commons முறையான அனுமதி வாங்கி வெளியிடு செய்யப்படும்.

இந்த புதிய திட்டம்
முயல் ஆமை ஓட்ட பந்தயத்தில் முயலாக ஓடாமல் ஆமை வேகத்தில் சென்றே இலக்கை அடையும்.
முயலை விட ஆமைக்கு ஆயுள் அதிகம் ஏன் என்றால்  ஆமை மெதுவாகவும் முயல் வேகமாகவும் மூச்சு விடும்


Read More » Read more...

சோதனை தமிழர்- சவுக்கின் பதிவு

வெள்ளி


இந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா ? கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது.


ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந்துள்ளார். ஞானி வெளியே போனதற்கும் ஜாபர் சேட் வந்ததற்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு.


ஜாபர் சேட் பற்றி சவுக்கு வாசகர்கள் அறியாததல்ல. ஆனால், சவுக்கு வாசகர்களுக்காகவே, ஏராளமான பணத்தை விரயம் செய்து குமுதம் வார இதழில் நாலரை பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.


(சார் இந்த விளம்பரத்துகாவது சொந்தக் காசைக் குடுத்தீங்களா இல்ல இதுவும் ரகசிய நிதியா ? புது வாஸ்து மீன் நல்லா இருக்கா சார் ? கேட்டதா சொல்லுங்க. ஆமா அந்த மீன், நீங்க பேசுறத ஒட்டுக் கேட்குதாமே… ஜாக்ரதையா இருங்க சார். மீன் தொட்டிகிட்ட போயி ரகசியம் பேசாதீங்க)


அந்த விளம்பரம் சவுக்கு வாசகர்களுக்கான இதோ .. … … … …


(மேடம், திருவான்மியூர்ல எல்லா ஃப்ளாட்டும் வித்துப் போன சந்தோஷம் உங்க முகத்துல தெரியுது மேடம். தொழில் வெற்றியடைந்தால் தொழில் அதிபருக்கு சந்தோஷம் வருவது இயல்புதானே. ஆனா, இந்த ஃப்ளாட் அலாட்மென்ட் கேன்சல் ஆனாலும், எப்படி இதே மாதிரி சந்தோஷமா இருக்கறதுன்னு, ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்துல பயிற்சி எடுத்துக்குங்க மேடம். காமராஜ் ஹெல்ப் பண்ணுவார். அவரோடதும் கேன்சல் ஆகப் போகுது மேடம்)(சார். சும்மா சொல்லக் கூடாது சார். நெஜம்மா ஹீரோ மாதிரியே இருக்கீங்க சார். சவுக்குல எப்போ பாத்தாலும் உங்க பேஸ் புக் போட்டோவையே போட்டுகிட்டு இருக்கோம்னு வாசகர்கள் வருத்தப் பட்டாங்க. அதுக்காக அத விட அழகான உங்க படத்த கொடுத்ததுக்கு நன்றி சார்.

(என்ன ஜாபர் சார். கருணாநிதிய கெடுத்தது பத்தாதுன்னு தலப்பாக் காரரையும் கெடுக்க முடிவு பண்ணீட்டீங்களா ? நாயுடு மகாஜன சபா தலைவரை பக்கத்துல வச்சுக்கிட்டு இருக்கீங்களே ? சரியான கேடி சார் அந்த ஆள். உங்களையே கவுத்துருவாரு. ஜாக்ரதையா இருங்க. உங்க மேல இருக்கற அக்கறையிலதான் சார் சவுக்கு சொல்லுது. கவனமா இருங்க .எவ்வளவு அழகான குடும்பம் ? எவ்வளவு மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கிறது ? சார், உங்க பேமிலில எல்லாரும் சவுக்கு வாசகர்களாமே ? உண்மையா சார் ? உங்க வெயிட்டிங் பி.சியும், அட்மின் டிஎஸ்பி ராஜ்குமாரும், சவுக்கு வாசகர்கள் என்பது சவுக்குக்கு கண்டிப்பாக தெரியும் ? பேமிலியும் சவுக்கு வாசகர்களா என்பதை நீங்கள் தான் சார் சொல்ல வேண்டும்.


சவுக்கின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார் நண்பர் ஜாபர் சேட். ஆனால், ஆட்சி மாறியதும் அவர் மீது பாயப் போவது பொய் வழக்குகள் அல்ல. உண்மை வழக்குகள். இப்போது மகிழ்ச்சியாக சிரிக்கும் குடும்பத்தில் அப்போது இந்த புன்னகை இருக்காது என்பது வேதனையான விஷயம்.


ஜாபர் சேட்டின் சவுக்குக்கே தெரியாத மறுபக்கத்தை குமுதம் இதழ் காண்பித்திருக்கிறது. ஆனால் மறுபக்கத்துக்கே மறுபக்கத்தை காட்டுவதல்லவா சவுக்கின் வேலை ?


இந்த பேட்டிக்காக எத்தனை நாள் வேலை நடந்தது, இந்தப் பேட்டியை எடுத்தவர் யார், எப்படி எடுக்கப் பட்டது, இதன் பின்னணி என்ன, இந்தப் பேட்டியை எடுத்துப் போட்டு விட்டு, “நமது நிருபர்” என்ற முகமூடியை போட்டுக் கொண்டு இடைநீக்கத்தில் இருக்கும் அந்த “கேசநோவா”வின் வரலாறு என்ன, எதற்காக இதை எழுதினார் என்ற மறுபக்கத்தின் மறுபக்கத்தை வெளியிடுவதற்கு சவுக்கு இல்லாமல் வேறு யார் அய்யா இருக்கிறார்கள் ?


கருத்துரிமை பாதுகாப்புக்காக நடைபெறும், வெள்ளி மற்றும் சனி நிகிழ்ச்சி தொடர்பான வேலைகளில் சவுக்கு பிசியாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் வரும். அதற்குள் சவுக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் பயப்படாதீர்கள் தோழர்களே. சவுக்கு சிறையில் இருந்தாலும், பதிவுகள் தொடரும். (நம்ப டீம் அப்படிப்பட்ட டீமு தலைவா. சும்மா சிறுத்தை குட்டிங்க. )


இரண்டு நாட்கள் கழித்து சந்திப்போம் தோழர்களே…..


சவுக்கு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்..


வெள்ளி மாலை சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டத்திலும், சனி மாலை சென்னை கேரள சமாஜம் அரங்கத்தில் நடைபெரும் இதே தலைப்பிலான கூட்டத்திலும் தங்கள் வேலைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவசியம் கலந்து கொள்ளுங்கள்.


எனெனில் இன்று நாம் உறங்கினோமேயானால், நாளை நாம் இணையத்தில் கூட சந்திக்க முடியாது.
Read More » Read more...

கூகுல் வினவல் ஆலோசனைகள் முடக்க

செவ்வாய்

700


சமிபத்தில் நடந்த இணைய கருத்தரங்கில் திருமதி தாரா கணேசன் அவர்களால் தமிழில் தட்டச்சு செய்து தேடினால் சில ஆபாச பக்கங்களை காட்டுகறது இதனால் சிறு குழந்தைகளும் இதானல் வழிகெட வாய்ப்பாகிறது என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்
இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னார் இதற்றக்கான தீர்வை தொடர் தேடுதலில் சில தீர்வுகள்
இதை நாம் எளிதாக செய்ய நமது உலவியின் preference சென்று கிழ்கண்ட முறையில் மாற்ற வேண்டும் இதை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
உங்களது    (google home page) ஆங்கிலத்தில் இருந்தால் இப்படி செய்யவும்.

query-sugestions

உங்கள் முகப்பு பக்கம் தமிழில் இருந்தால் விருப்பங்கள் என்ற சுட்டிக்கு சென்று
7-27-2010 11-12-32 AM
இந்த மாற்றங்களை சில portable browser-களில் செய்ய முடியாத போது கிழ்கண்ட சுட்டிகளை உங்கள் முகப்பு பக்கமாக மாற்றம் செய்யவும்.
கிழ்கண்ட இரண்டு சுட்டிகளும் பயர்பாக்கஸில் நன்றாக வேலை செய்கிறது

http://www.google.com/webhp?complete=0
http://www.google.com/webhp?complete=1
Read More » Read more...

நித்யானந்தா சொற்பொழிவு (புனைவு)

Nithyananda-Ranjitha-Full-Video1

 

நித்யானந்தா   ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அதற்க்கான பலன்களை நாம் அடைகிறோம்.

  • உங்கள் மனைவியுடன் உறவு கொண்டால் அது “கடமை” ஆகும்
  • காதலியுடன் என்பது ஒரு “கலை” ஆகும்
  • ஒரு கன்னியுடன் என்றால் கலவி அவளுக்கு நீங்க தரும் கல்வி ஆகும்
  • பரத்தையுடன் அது ஒரு வியாபாரம்
  • விவாகரத்து ஆன பெண்ணுடன் அது ஒரு தருமம்
  • விதவையுடன் அது ஒரு சமூக சேவை

இப்ப தெறியுதா நான் ஏன் ரஞ்சிதா உடன் உறவு கொண்டேன் என்று அது ரஞ்சிதாவுக்கு நான் செய்த சேவையாதான் நினைக்கனும்

இப்ப நீங்களே உங்களை சுய சேவை பண்ணி சாரி சுய பரிசோதனை பண்ணி என்ன சேவை பண்ணிரிங்கன்னு உங்களுக்கே தெறியும்.

Read More » Read more...

தொலைக்கபட்ட தேடல்கள்

திங்கள்

invitation v.radhakrishnan copy


நல்ல புத்தகம் நல்ல நண்பன் அது போல் இப்போது முதல் முறையாக இந்த புத்தகத்தை எழுதிய டாக்டர்.ராதாகிருஷணன் அவர்களை என் நட்ப்பு வட்டத்தில் சேர்த்து கொள்ள ஆசையாக உள்ளது இந்த நல்ல புத்தகத்தை வெளியிட்ட அகநாழிகை வாசுதேவன் முதலில் அவர்களை பாரட்டவேண்டும் தமிழில் புத்தகம் படிப்பது மிகவம் குறைந்து விட்டது.
அதிலும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு அதை விழாவாக கொண்டாடுவது மிகவும் அவசியம் ஆகும் அதனால் இந்த புத்தகங்களை நிறைய தமிழ் நெஞ்சங்கள் படிக்க தொடங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தாரா கணேசன் அவர்கள் வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத்தின் ஒரு கதையை படித்து காட்டியதால் மட்டுமே இந்த புத்தகத்தை வாங்க ஊந்தபட்டேன் பொதுவாக யாராவது படித்து விமர்சித்த உடன் மட்டுமே புத்தகம் வாங்குவது வழக்கம்.
இந்த தொலைக்கபட்ட தேடல்கள் புத்தகம் 7சிறுகதைகள் உள்ளது அத்னையும் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
அதிலும் இதை படிக்க அரம்பித்தால் முழுவதும் படித்த உடன் மட்டுமே தாங்களால் நிம்மதியாக தூங்க முடியும்
இந்த கதைகள் அனைத்தும் மனிதம்,இரக்கம்,அன்பு ஆகியவற்றை வலியுறுத்தும் கதைகள் மட்டுமே
இதில் சொல்லபட்ட கதைகள் மிகவும் எளிமையான படிப்பவர்களை குழப்பாத சம்பபவங்கள் மற்றும் சொற்க்கள்.
இதில் வரும் முதல் கதை சொன்னவிதம் வித்தியாசமாக இருந்தது மற்ற கதைகளில் சொல்லபடும் விசயங்கள் மட்டுமே முன்னிலைபடுத்தபட்டு வர்ணனைகள் மிக குறைந்த அளவு உள்ளது
பழங்கால சுவடுகள் கதையில் எகிப்தில் நடப்பதாக உள்ளது எகிப்து என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பிரமிட்,நைல் நதி இதனை பற்றி வர்ணனைகள் மிக குறைவு அந்த சம்பவங்கள் எங்கு நடக்கிறது அந்த இடத்தின் பெயர் என்ற விபரங்கள் எதுவும் எழுதாமல் கதை உள்ளது
எழுத தொடங்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த எளிமையை கடைபிடிக்க வேண்டும்.
இந்த கதைகளில் எனக்கு பிடித்து அறுபத்திநான்காம் மொழி அதைபடித்தவர்கள் “மிங்கி மிங்கி பா” என்று முணு முணுகாதவர்கள் யாரும் இருக்க முடியாது      
இந்த கதையில் வரும் இளைஞன் “மிங்கி மிங்கி பா” இந்த வார்தையை தவிற வேறு எந்த வார்த்தையும் பேசமாட்டான் அவன் காதலித்த பெண்ணிடம் இந்த“மிங்கி மிங்கி பா” மட்டும் வெவ்வேறு முறையில் சொல்லியே காதலிக்க தொடங்கி திருமணமும் செய்து பிறக்கும் குழந்தையும் இந்த வார்த்தை தவிற வேறு வார்த்தை பேசாது

“மிங்கி மிங்கி பா”    “மிங்கி மிங்கி பா”   “மிங்கி மிங்கி பா”  அது ஒண்ணும் இல்லிங்க கண்டிப்பா வாங்கி படிங்க  


பெயர்:         ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘
ஆசிரியர்:டாக்டர்.ராதாகிருஷணன்   
வெளீயிடு: நயினார் பதிப்பகம்
                     33,மண்டபம் தெரு மதுராந்தகம்-603306
மின் அஞ்சல்: nayinarbooks@gmail.com
விலை:100 ரூபாய்
இணையதளம் : www.aganazhigai.com 
அலைபேசி:+91 999 454 1010
அணையதளத்தில் வாங்க: www.ezeebookshop.com www.udumalai.com
Read More » Read more...

நிதர்சன வலிகள்

வெள்ளி

என் பெயர் கனகராஜ் துபாய் மாநாகராட்சியில் துப்புவதை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிளாளி இந்தியாவில் நான் dubai municipalty நல்ல சம்பளத்தில்(dhs 800 inr10,000) நல்ல வேலை!

 

நான் ரவி ஒரு பெட்ரோல் பங்க்கில் lube boy அதாங்க (தண்ணீர் விலையை விட இங்கே பெட்ரோல் விலை குறைவு) வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது என்னொட வேலை  

 

காலை உணவு  தினமும் ஒரு அரேபிய பெறியவர் ஒட்டல் முன்பு அவரு கண்ணில்பட 1/2 மணி வெயிலில் நின்னா அந்த பெறியவர் வாங்கி கொடுக்கும் 3 பரோட்டா கொஞ்சம் அஸ்க்கா (சர்க்கரை) காலை பசியை கட்டுபடுத்த

 

அவர் வரவில்லை என்றால் அன்னைக்கு வெறும் பரோட்டாதான் ஆனா வெறும் பரோட்டாவுக்கு அஸ்க்கா (சர்க்கரை) அந்த டீ கடை நாயர் கொடுக்க மாட்டான் அதே பெறியவர் கேட்க்காமல் தருவான்.

 

நாங்க காலை வேலையில் பெட்ரோல் பங்கில் இருக்கும் ஸடோரில் இரவு 12 மணிக்கு expiry date ஆன ரொட்டியோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என் நண்பன் எடுத்து வைத்து தருவான்.(அவன் தந்தது போக மீதம் குப்பைக்கு செல்லும்) அன்றைக்கு எதாவது டிப்ஸ் கிடைத்தால் பக்கத்து ஒட்டலில் 2இட்லி

பெட்ரோல் வாசனையால் முதலில் குமட்டலுடன் வாந்தி வந்தது இப்போது வாந்தி நின்று விட்டது குமட்டல் நிரந்தரம் ஆகிவிட்டது.

 

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அதற்க்கு காரணம் ஒரு “சுலைமானி (arabic black tea) ஆப்ரேட்டர்” (அபிஸ்ல “கட்டங் காப்பி” போட்டு கொடுத்தா அவங்களுக்கு நாங்க வைத்த பெயர்)

இந்த (சு.ஆ) இந்த வேலையை ஒரு மெஷினை இயக்கும் வேலை என்று பொய்  சொல்லி கல்யாணம் பண்ணி கொண்டான்

என்னை ஒரு “அரபான் ஆப்ரேட்டர்”(படத்தை பார்க்கவும்) என்று வத்தி வைச்சு அது ஊரேல்லாம் பத்தி எறிஞ்சதால  யாரும் பொண்ணு கொடுக்கல

single_wheel_barrow-250x250 

இதை ஏன் சொன்னான் தெறியுமா எங்கே நான் முந்தி அவன் வேலையை சொல்லிடுவேன்னு அவனுக்கு பயம்

நான் அவனோட உண்மையான வேலையை சொன்னாலும் உன் யோக்கியதை எங்களுக்கு தெறியும் என்று காரி துப்பாத குறை என்னா சிவப்பு தோல்காரன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு (அவ)நம்பிக்கை

 

எனக்கு திருமணம் ஆகிருச்சு ஆனா 4வருடமா குழந்தை இல்லை அதற்க்கு காரணம் இந்த வேலைதான்  இந்த பெட்ரோல் வாசனையால் என்னோட விந்து அணுக்களை அழித்துவிட்டது

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP