டாக்டருடன் கடலை போட
வியாழன்
நாம் தினமும் வாழ்க்கையில் அரசாங்க சேவைகளை வேண்டி அரசாங்க அலுவலகங்களில் கால் கடுக்க நின்ற அனுபவம் நம்மில் எல்லோருக்குமே உண்டு
எந்த சேவையிலும் ஒரு குறை உள்ளது நியாய விலை கடைகளில் அளவு குறைவு,பேருந்துகளில் சில்லரை குறைவு என்று எண்ணில் அடங்கா குறைகள்
இதில் பேருந்துகளில் சில்லரை குறைவு கண்டக்டர்கள் நமக்கு சில்லரை குறைவாக தருவார்கள் நாம் சில்லரை குறைவாக கொடுத்தால் நம்மை பர்க்கும் பார்வையை வார்த்தைகளால் விளக்கமுடியாது
அவர்கள் 2.50 பயணசீட்டுக்கு 3.00 ருபாய் கொடுத்தாலும் மீதி 50 பைசா கொடுக்க மாட்டார் கொடுக்காதற்க்கு எந்த சில்லரை இல்லை என்ற சிறு சமாதனம் கூட சொல்ல மாட்டார் என்ன கொடுமை சரவணன் என்று mind voice கேட்கும்
தமிழக அரசு பல இணைய சேவைகளை வழங்குகிறது அதில் மிகவும் பாராட்ட வேண்டிய ஓரு சேவை அது மருத்துவர்களுடன் இணையத்தில் நமது கேள்விகளுடன் உரையாடுதல் என்னும் ஒரு மிக சிறப்பான ஒரு சேவை.
வாரத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் ஒவ்வோரு மருத்துவ பிரிவிலும் மருத்துவர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். தினமும் மாலை (4 முதல் 6மணி வரை)
மேலும் இந்த தளத்தில் நுழைய நமது பெயர் user id மற்றும் பொது மக்களுக்கு password கொடுக்க வேண்டியது இல்லாமல் நுழையலாம்.
இதுவரை chatting என்பது தோழர்,தோழிகளுடன கடலை போட வெளிநாட்டில் வாழும் நமது உறவினர்களுடன் உரையாட மட்டுமே நாம் இதுவரை உபயோகம் செய்தோம் ஆனால் இந்த ஒரு சேவை ஒரு மக்கள் நேரடியாக பயன் அடையும் ஒரு மக்கள் சேவை
இதுபோன்ற சேவைகள் புதிதாக தொடங்க ஒரு முன்னோடி திட்டம் இது கண்டிபாக ஒரு அரசியல்வாதியின் idea-க இருக்காது ஓரு I..A.S அதிகாரியின் மூளையாக இருக்கலாம் எந்த சேவையும் மக்களை சேர்ந்தால்தான் அது உண்மையான வெற்றி ஆகும்
இந்த தளமானது என்ன காரணம் என்று தெறியவில்லை google பாதுகாப்பான தளம் இல்லை என்று g எச்சரிக்கை வந்தது இப்போதுதான் இது வேலை செய்கிறது மற்றும் நான் உபயோகம செய்து பார்த்ததில் மிக சிறப்பாக வேலை செய்கிறது படத்தை பார்க்கவும்.
மறுத்தவர்களின் உரையாடல் சுட்டி http://www.tnhealth.org/chat.htm
0 comments:
கருத்துரையிடுக