வலையில் விழுந்த முகம்மது குட்டி!
செவ்வாய்
இந்தியில் நட்சத்திர நடிகர்கள் எல்லோருமே தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய வலைப்பதிவு தொடங்குவது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக ஆமீர்கான், அமிதாப் மற்றும் ராம்கோபால் வர்மாவின் வலைத் தளங்கள் மிகப் பிரபலம். தன்னுடைய வலைத் தளத்தில்தான் ஷாரூக்கை மறைமுகமாக 'நாய்' எனக் குறிப்பிட்டு ஆமீர் எழுதியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
இப்போது ப்ளாக் எழுதும் ஆர்வம் தென்னிந்திய நடிகர்களையும் பிடித்துக் கொண்டுள்ளது.
மலையாளத்தின் மெகா ஸ்டார் எனப்படும் மம்முட்டியும் இப்போது ப்ளாக் எனப்படும் வலைத்தளம் ஒன்றை துவங்கியுள்ளார்.
ஐ அம் மம்மூட்டி.பிளாக்ஸ்பாட்.காம் (www.iammammootty.blogspot.com) என்ற மலையாள வலைப்பதிவை துவக்கி உள்ள அவர், இதில் அரசியல் சமூகம் குறித்த தனது கருத்துகளை எழுதுகிறார். ஜனவரி முதல் தேதி தொடங்கப்பட்ட இதில் முதலாவதாக 'அரசியலில் பணம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
அரசியலில் பணம் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை தனது கட்டுரையில் விவரித்துள்ளார் மம்முட்டி. இனி வாராவாரம் இதுபோன்ற கட்டுரைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பல நேரங்களில், பல சமூகக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்போதெல்லாம் இந்த மாதிரி வலைத் தளத்தில் எழுதுவது சுலமானது, வசதியானது', என்கிறார் மம்முட்டி. விரைவில் இந்த ப்ளாக்கின் ஆங்கில வடிவத்தையும் துவங்கப் போகிறாராம்.
தமிழில், சொந்தமாக கட்டுரை எழுதும் அளவுக்கு நமது ஸ்டார்களுக்கு பொறுமை கிடையாது. மோகன்ராம் என்ற நடிகர் மட்டும் அவ்வப்போது சில ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
விக்ரம், விஜய் போன்ற மற்ற நடிகர்கள் தங்களுக்குக்கென்று தனி இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர்.
நடிகர்களில் ரஜினிக்கு மட்டுமே அரை டஜன் இணைய தளங்கள் செயல்படுகின்றன. ஏராளமான ப்ளாக்குகளை அவரது ரசிகர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட ரஜினி ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!!.
அஜீத்துக்கு இரு தளங்கள் உள்ளன. மற்ற நடிகர்களுக்கு பிரபல வெப்சைட்டுகள் தளங்களை உருவாக்கித் தந்துள்ளன. இதில் அவர்களது பங்களிப்பு எதுவுமில்லை.
1 comments:
STARTING WEB SITES & BLOGS WILL BE AND ADDED ADVANTAGE TO THEIR POPULARITY...
கருத்துரையிடுக