Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

உலக அழகி யாரு

வெள்ளி


Parvathy Omanakuttan

நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்?

2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார்.

ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள்.

1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ராவும் மிஸ் வேர்ல்ட் ஆனார்கள்.


இந்த நிலையில் மிஸ் வேர்ல்ட் 2008 பட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டுள்ள பார்வதி ஓமனக்குட்டன் இந்த வரிசையில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜோஹன்னஸ்பர்க் நகரில் இறுதிச் சுற்றுப் போட்டி நடக்கிறது. இதில் 21வயதாகும் பார்வதியும் பங்கேற்றுள்ளார்.

தான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பார்வதி. இதுகுறித்து பார்வதி கூறுகையில், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். நமது நாட்டின் பெருமையும் இதில் அடங்கியுள்ளது. அதை உயர்த்திப் பிடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்.

மிஸ் இந்தியா போட்டியில் வென்றது முதலே நான் மிஸ் வேர்ல்ட் போட்டிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகி விட்டேன். எனது தோற்றம் முதல் அனைத்து அம்சங்களிலும் நான் முக்கிய கவனம் கொடுத்து பயிற்சி பெற்றுள்ளேன்.

போட்டியை சந்திக்க தேவையான அழகும், அறிவும், மன வலிமையும் என்னிடம் உள்ளது. இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட முடிந்தவரை பாடுபடுவேன் என்கிறார் பார்வதி.

மிஸ் வேர்ல்ட் பட்டம் தவிர வேறு சில ஆசைகளும் பார்வதிக்கு உள்ளது. அது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்புவது. ஹ்ரித்திக் ரோஷன் முதல் சல்மான் கான் வரை அத்தனை டாப் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று படு ஆர்வமாக உள்ளாராம்.

பார்வதியுடன் 109 அழகிகளும் போட்டியில் உள்ளனர். ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள சான்டான் கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியை நாளை இரவு 8.30 மணி முதல் ஜீ கபே டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

என்ன மாதிரி சிலபேருக்கு இன்னமும் இவங்கதான் உலக அழகி img1



இல்ல இல்ல இவங்கதான் img2 இல்லிங்க ரெண்டுபேருமே ஒருத்தருதாங்க





மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP