சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி? புத்தக விமர்சனம்
ஞாயிறு
இந்த புத்தகத்தை கையில் வாங்கியவுடன் ரொம்ப பிடித்தது இந்த புத்தகத்தின் அட்டைப் படம் தான் அப்போதே அட்டைப் படத்தின் விமர்சனம் கண்களில் ஒடியது நான் படித்தவரை மருத்துவ புத்தகங்கள் எல்லாவற்றிலும் அட்டைப்படம் மிக சுமாராக இருக்கும் அட்டைப்படத்துக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது ஆனால் இந்த புத்தக அட்டையில் ஒரு மனிதர் கடற்கரை மணல் வெளியில் ஓடுவது போல உள்ளது.
நிரிழிவு நோய்காரர்கள் தினமும் உடற்ப் பயிற்ச்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது அதுவும் சமதளத்தில் ஓடுவதை விட மணல் வெளியில் ஓடுவது அதிக கலோரிகள் கரையும் என்ற ஒரு செய்தியை உணர்த்துவதாக உள்ளது.
ஆசிரியரின் முன்னுரையில் மக்கள் சேவையில் நலம் பதிப்பகத்துடன் இந்த புத்தகம் நாங்கள் எடுத்த வைக்கும் முதல்படி என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
வியாபார நோக்கம் இந்த புத்தகத்துக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை சர்க்கரை நோய்க்கு புத்தகம் போட வேண்டும் என்றால் இதில் பெரியதொரு சர்க்கரை மருத்துவமனையின் விளம்பரத்தோடு வெளி இட்டு இருக்கலாம். அதை அவர்கள் செய்யவில்லை
இதையே இனிவரும் கடைசி அத்தியாயம் வரை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்
சர்க்கரை நோயின் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்களுக்கு வரும் பிற நோயின் பற்றிய தக்க விளக்கத்துடன் அந்நோய் பற்றி விளக்குவது அருமை
சர்க்கரை நோய்கட்டுக்குள் வைக்க ஆசிரியர் வைக்கும் ஐந்து கட்டளைகளை
- சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு
- நீடித்த உடற்ப் பயிற்ச்சி
- தீவிர உணவு கட்டுப்பாடு
- உரிய காலத்தில் பரிசோதனை
- உடல் பருமனை தவிர்த்தல்
இதில் உள்ள சில முக்கிய அத்தியாயகங்களை கோடிட்டு காட்டியாக வேண்டும் அதி முக்கியமாக
சர்க்கரையால் பாதிக்கபட்டவர்கள் முக்கியமாக படிக்கவேண்டும் இந்த அத்தியாயகங்களை மிக அழகாக கையாண்டு இருக்கிறார்.
ஆசிரியர் கொழுப்பை அடக்க வேண்டும் என்ற அத்தியாயத்தில் கொழுப்பை குறைக்க பல வழிகளை சொல்லிவிட்டு இன்னோரு சின்ன உபாயத்தை சொல்கிறார் பின்பற்ற எளிய வழி
சாய்ந்து உட்க்காரமல் நிமிர்ந்து உட்க்கார்ந்து படிக்கும் போதும்,எழுதும் போதும் ஐந்து விழுக்காடு கொழுப்பு குறைக்கிறது என்று எழுதி இருக்கிறார் நாம் எல்லோரும் பின்பற்ற ஒரு எளிய உபாயம் மிக அருமை.
சர்க்கரை பாதிக்கபட்டவர்களுக்கு மாரைடைப்பு பாதிப்பு மிக அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் மாரைடைப்பு அவர்களை அறியாமலேயே வருகிறது
அதை ஆசிரியர் இவ்வாராக விளக்குகிறார் சர்க்கரை நோய் இதயத்தை விரிவடைய செய்து
இதயம் இயங்கும் நரம்புகளை பாதித்தது விடுவதால் மூளைக்கு வலி சமிக்ஞை போகாது. ஆகவே, வலி தெரியாமல் இதயம் நின்று உயிர் போய்விடும். சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் இதயத்தை அடிக்கடி இதயத்தையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறார்
கால்களை காதலியுங்கள்!சர்க்கரைநோயாளிகள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய
அத்தியாயம் சர்க்கரை நோயாளிகள் மிக முக்கியமாக படிக்க வேண்டிய அத்தியாயம் ஏன் என்றால் சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை எடுப்பார்கள்,பரிசோதனை,உடற்ப் பயிற்ச்சி செய்வார்கள் ஆனால் கால்களை சட்டை செய்யமாட்டார்கள் அப்படி இருக்க கூடாது என்பதை இந்த அத்தியாயம் சிறப்பாக விளக்குகிறது.
உடற்ப் பயிற்ச்சி அத்தியாயத்தில் யோகாசனத்தை கையாண்டு இருப்பது மிகவும் பாராட்டுக்கூறியது.
மொத்ததில் இது சர்க்கரை நோயாளிகள் தினம் படித்து அதுபோல் நடக்க ஒரு புத்தகம். சர்க்கரை வராமல் தடுக்க பாதுகாக்க வேண்டிய புத்தகம்.
கடைசியா
பிற்சேர்க்கைகளை சிறு கையேடாக கொடுக்கலாம்
திரிகபின்னலில் என்று வரும் இன் பிற வர்தகள் சுத்த தமிழில் தராமல் பேச்சு தமிழில்லோ அதற்க்கு தகுந்த வார்த்தகளை ஆங்கிலத்தில் அந்த வார்த்தையின் அருகில் தந்திருக்கலாம்
புத்தகம் கிடைக்கும் இடம்
நூலின் பெயர் - சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?
ஆசிரியர் - டாக்டர் மருதுபாண்டி
விலை - ரூ.80/-
பக்கங்கள் - 200
வெளியீடு : நலம், நியு ஹாரிசோன் மீடியா, 33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல்(ஃபேக்ஸ்) : 044-43009701
www.nhm.in
0 comments:
கருத்துரையிடுக