தேன்கூடு என்ன ஆனது
செவ்வாய்
இந்த கேள்வி 6 மாதங்களாக மனதை அரித்த கேள்வி விடை கிடைக்காமல தினமும் google-ல் தேடியது உண்டு ஆனால் விடை கிடைத்த பாடு இல்லை
- நான் முதன் முதலில் வலை பதிவு படிக்க ஆரம்பதித்தது தேன்கூட்டில்தான்
- கத்துக் குட்டியாக வலை பதிவு தொடங்கி பதிவுகளை தேன்கூட்டில் இணைத்த மகிழ்ச்சிக்குக்கு அளவே இல்லை.
- தேன்கூட்டில் பதவிகளை ping செய்வது மிக எளிதாக இருந்தது.
- சிந்திக்க எத்தனை பதிவுகளை தேன்கூட்டில் மட்டுமே எப்போதும் படிப்பது வழக்கம்
- தேன்கூட்டில் படிப்பது ஒரு தாயின் மடியின் இருந்து கொண்டு பதிவுகளை படிப்பது போல் இருக்கும்.
- எந்த மனமாச்சறியங்கள் இல்லாமல் எல்லா பதிவுகளையும் தேன்கூடு பிரசுரித்தது.
என் கேள்விக்கு விடை கிடைத்தபோது மிகுந்த அதிர்ச்சியானேன் காரணம் தேன்கூட்டை தொடங்கிய
சாகரன் கல்யாண் அவரின் அகால மரணம்
அவிரின் மரணஅறிவிப்பு பற்றிய
விபரங்களுக்கு http://djanakiraman.googlepages.com/
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நண்பர் மலைநாடன் ஒரு podcasting அஞ்சலி மலர் வெளியிட்டுள்ளார்
சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.
ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.
sakaraalai@gmail.com
எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.
0 comments:
கருத்துரையிடுக