சுனாமி பேரலை சில நினைவலைகள்
வெள்ளி
கொள்ளை நோய்கள்,மனித உயிர்களை கூட்டம் கூட்டமாய் அள்ளிச் சென்றன ஆதிகால கூற்று இன்று அதை எல்லாம் ஏப்பம் விட்டதுதான் இந்த சுனாமி.
2004 டிசம்பர் 26 வரலாற்றுக்கு உயிர் இருக்கும் வரை இந்த நாள் மறக்க படுவதில்லை கடல் அலை என்பது தாலாட்டும் ஒரு இசை என்றே கடற்க்கரை வாழ் மக்கள் நினைப்பது உண்டு.
ஆனால் 2004 டிசம்பர் 26 கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முடித்து தூங்கிகிக் கொண்டு இருந்தவர்களை ஒரேடியாக தூங்க வைத்த கொடிய நாள்
சுனாமி இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கோர தாண்டத்தை தொடங்கி சுமத்ரா பின்பு தமிழ்நாட்ட்டின் தன் பசியை ஆற்றிக் கொண்டது
கன்னியா குமாரியில் 133 அடி வள்ளுவர் சிலையை தாண்டி தன் கோர தாண்டவத்தை காட்டியது
மாட மாளிகைகள் இருந்த இடம் தெரியவில்லை கடல் கொண்ட பிணங்கள் சுனாமி அலைபோல குவிந்தன நூறு நூறாக அள்ளப் பட்ட பிணங்கள் மண் அள்ளும் அபொக்லைன் இயந்திரங்கள் பிணங்களை அள்ளும் இயந்திர மனிதனாக மாறியதது இன்னும் கண்முன் ஆடுகிறது
அடயாளம் தெரியாத வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பிணங்களின் அவர்களின் அவர்களை அடையாளம் காண DNA மாதிரி எடுக்கபட்டு பிதைக்கபட்டன
நகப்படணத்தில் 2ஆயிரம் பேர் இறந்தனர் குமரி மாவட்டத்தில் 798 பேர் இறந்தனர்
ஓரு விழிப்புணர்வு பிரச்சாரமாக அண்ணன் பிகேபி வலைப்பூவில் இருந்து உங்கள் பார்வைக்கு
சுனாமி தொலைந்து போனவர்கள விபரம் நம்மால் முடிந்த வரை உதவுவொம்
இன்னொரு சுனாமி?
நண்பர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நமது விவாதகளத்தில் குறிப்பிட்ட செய்தி ஒன்று அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும் என்பதால் இங்கு அதை பதிவாக பதிவு செய்கின்றேன். நன்றி முஹம்மது இஸ்மாயீல். ஹ.மீண்டுமொரு சுனாமி ஏற்படும் சாத்தியமுள்ளதாக விஞ்ஞானி தெரிவிப்பு October 13, 20081. http://www.paristamil.com/tamilnews/?p=15315
மற்றுமொரு சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.சுமாத்திர தீவு பகுதியில் தட்டுக்களின் நகர்வுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.இதனால் எதிவரும் வரும் தினங்களில் சுமாத்திரா தீவில் கடலுக்கடியில் பூமியதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்திரா தீவு கடற்பகுதியிலுள்ள மீன் இனங்கள் இலங்கை கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்றன. கடலுக்கடியில் பூமியதிர்வு போன்ற ஆபத்து ஏற்படும் என்பதனை கடல்வாழ் உயிரினங்கள் உணரும் பட்சத்தில் அவை இடம்பெயரும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் விஞ்ஞானி எச்.ஜி.எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
2. http://www.tamilnews.dk/article/SpecialNews/6722/
3. http://www.ajeevan.ch/content/view/6565/11/
30 Oct 2008
03:33 PM IST
மேல் கண்ட செய்தியை தற்போது தான் பார்க்க முடிந்தது.இதனை சாதரணமாக விட்டு விட முடியாது.மேலும் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு பல ஆராய்ச்சிகள் நடத்தப்படவேண்டும். ஏனெனில் ஆற்றிவு உள்ள மனிதர்களை விட ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் நிலநடுக்கத்தையும் அதற்கு பின் வரும் சுனாமியையும் முன்னறியும் ஆற்றல் உண்டு.காரணம் மனிதர்களால் 20Hz to 20KHz வரையிலான அதிர்வுகளை மட்டுமே உணர முடியும். ஆனால் மற்ற உயிரினங்கள் அப்படியல்ல. இதற்கு கடந்த 2004-ல் ஏற்ப்பட்ட சுனாமியின் போது விலங்குகளின் செயல்பாடுகளே சிறந்த ஆதாரம். அமேரிக்காவில் இதன் அடிப்படையில் அமைந்த http://www.petquake.org என்ற இணையதளமே உண்டு. மேலும் தற்பொழுது (28 Oct 2008 to 29 Oct 2008) வரை பாகிஸ்தானில் ஏற்ப்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் இந்தியதட்டு ஈரேசிய தட்டுடன் மோதி்யதால் ஏற்ப்பட்டதாகும். ஆகவே இந்த இடைவெளியை சரிப்படுத்த இந்திய தட்டுடன் பர்மிய தட்டே அல்லது ஆஸ்திரேலிய தட்டு மோதும் அபாயம் உள்ளது. அதனால் சுமத்திரா தீவுகளுக்கு அருகில் பெரும் பூகம்பம் ஏற்ப்பட்டு மற்றொரு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
இந்தியதட்டைப்பற்றிய விக்கிபீடியாவின் பக்கம்.
http://en.wikipedia.org/wiki/Indian_Plate
என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு ஓர் வேண்டுகோள். நீங்கள் சுனாமி தாக்க்கூடிய வாய்ப்புள்ள கடற்கரை அருகே வசித்து வந்தால் உங்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்ணை (Number) என்னுடைய +919442093300 என்ற புதிய செல்லிட பேசி எண்ணுக்கு குறுந்தகவலாக (SMS) அனுப்பி வைத்தால் உங்களின் எண்ணை எங்களின் "ஒருங்கிணைக்கப்பட்ட ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யின் (http://www.ina.in/itws/) தகவல் தளத்தில் இணைத்து விடுவேன். அதன் பிறகு "இறைவன் நாடினால்" உங்களின் செல்லிட பேசிக்கு சுனாமி பற்றிய முன்னெச்சரிக்கை குறுந்தகவலாக வந்து சேரும்.பூகம்பங்களை இன்று வரை முன்னறிய எந்த தொழில்நுட்பமும் கிடையாது. ஆனால் ஆழிப்பேரலையை தற்போது உள்ள தொழில்நுட்பத்தால் முன்னறிய இயலும். இது அனைத்து படைப்பினங்களையும் இயற்கை பேரழி்வில் இருந்து காக்க எங்களால் முடிந்த 100% இலவச சேவையாகும்.ஏனெனில் எங்களைப் பொருத்தவரை சில நானொகிராம் எடை கொண்ட அமீபாவாகட்டும் அல்லது பல டன் எடை கொண்ட நீலத்திமிங்கலமாகட்டும் இரண்டுமே ஒன்றுதான். இவை இரண்டிற்க்கும் அந்த "உயிர்" என்னும் விஷயம் போய் விட்டால் அதன் இயக்கம் நின்று போய் செத்து மிதந்து விடும். இதில் மனிதன் என்ற உயிரினமும் அடங்கும். என்ன சொல்வது சரிதானே?
உங்களின் மனதில் ஒரு கேள்வி எழலாம். அதென்ன "இறைவன் நாடினால்" ? இதற்கான விளக்கம் இதே,பெரும் பூ்கம்பங்களின் பொழுது கடலடியில் மனிதர்களால் போடப்பட்டிருக்கும் ஒளிவடக்கம்பிகள் (Fiber Optic Cable) பூமித்தட்டுகளின் நகர்வால்அறுந்து போக வாய்ப்புகள் மிக அதிகம். ஏற்கனவே பல முறை இது போல நடந்துள்ளது.உலகின் பெருமளவு தகவல் தொடர்பு இந்த ஒளிவடக்கம்பிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றது. மேலும் ஒளிவடக்கம்பிகள் அறுபட்ட அச்சமயத்தில் தகவல்கள் (Datas) அனைத்தும் செயற்கைகோள்களின் வாயிலாகவே அல்லது மற்ற அறுபடாத ஒளிவடக்கம்பிகளின் வளைய இணைப்பின் (OFC Ring Network) மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.இதனால் அச்சமயத்தில் பிணையத்தில் பெருமளவு தகவல் நெரிசல் (Network Congestion) ஏற்ப்பட்டு அனுப்பட வேண்டிய தகவல்கள் சேருமிடத்திற்க்கு கால தாமதமாக (Network Delay and Packet Latency) வந்து சேரும் அபாயம் உண்டு. மேலும் அந்நேரத்தில் சூரியனால் மின்காந்தப்புயல் ஏற்ப்பட்டால் (Solar Flare) செயற்கைகோள்களின் வாயிலாக நடைபெறும் தகவல் பரிமாற்றம் முற்றிலும் பாதிக்கப்படும்.எங்களது சேவைக்கான கணணிகள் உலகின் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்தாலும் சரியான நேரத்தில் குறுந்தகவல் வந்து சேரும் என்பதற்க்கு எந்த ஒரு உறுதியும் தரவியலாது. அதனால் தான் உங்களிடம் அப்படி கூறினேன்.இதைத்தான் விஞ்ஞானத்தில் நிச்சயமற்றதன்மை (Uncertainty) எனக்கூறுவார்கள். ஆதலால் இதன் பொறுப்பினை அந்த ஆதி இறையிடமே ஒப்படைத்து விட்டோம். வேறன்ன செய்ய ?
சுருங்க கூறினால் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள, மனித இனம் State of Art - Cutting Edge Technology என்று பீற்றி கொள்ளும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இயற்கையின் சக்திக்கு முன்னால் State of Worst - Rusted Edge Technology தான். இதுதான் நிதர்சனமான உண்மையுங்கூட. இந்த விஷயத்தில் உலக வல்லரசு ஆகட்டும் அல்லது வல்லூறு அரசு ஆகட்டும். அனைவரின் நிலையும் ஒன்றுதான். நாம் யாரையும் குறை கூறவியலாது. அந்த ஆதி இறை எதை நிர்ணயம் செய்த்தோ அது நடந்தே தீரும். ஆகவே நாங்கள் உங்களைனைவரையும் வேண்டிக்கொள்வது ஒரெ விஷயம்தான். நீங்கள் எந்த மார்க்கத்தை பின்பற்றுபவர்களாகவே அல்லது அந்த ஆதி இறையே இல்லை எனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் சில நொடிகள் உங்களின் தூய ஆழ்மனத்தினால் எங்களின் இந்த சிறிய முயற்சி வெற்றி பெற வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள் அல்லது வாழ்த்துங்கள்.அது போதும் எங்களுக்கு.தனி மனிதனின் பிரார்த்தனையின் அதிர்வை விட அனைவரின் பிரார்த்தனைக்கான அதிர்வனாது மிக அதிகம். இப்பிரபஞ்சத்தில் ஒளியை (Light) விட வேகமானது மனதின் வேகம்.அதன் ஆற்றலும் அபாரமானது. இது நாங்கள் கண்டுணர்ந்த உண்மை.
இதற்கென ஹிந்து கோவிலிலே, யூத ஸவுலிலே, புத்த விகாரையிலே, கிறிஸ்த்தவ சர்ச்சிலே, இஸ்லாமிய மசூதிக்குள் அல்லது சீக்கிய குருத்துவாராவிலே சிறப்பு பிரார்த்தனைகள் தேவையில்லை.அது தேவையற்றதும் கூட. எங்களுக்கு இந்த கடவுள் & கோ மீது சிறு பயமுண்டு. ஏதாவது சிறு காரணத்தை காட்டி இந்த கடவுள் & கோ மக்களிடையே பெரும் பிளவை ஏற்ப்படுத்தி விடுகின்றனர். மேலும் இப்பிரபஞ்சத்தை அளவிடும் போது நம் பூமியானது மிகச்சிறிய மண்ணுருண்டை தான். அந்த மண் உருண்டையின் ஏதோவொரு சிறு பகுதியில் இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி வசிக்கின்றது என்பது அசாத்தியமானது.ஆகவேதான் நாங்கள் மறுபடியும் உங்களின் ஆழ்மனத்திலிருந்து அந்த ஆழ்மனத்தில் வசிக்கும் மனசாட்சி வழியாக பிரார்த்திக்க வேண்டுகிறாம். இதைவிட சிறப்பான கருவி இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியிடம் தொடர்பு கொள்வதற்க்கு இப்பிரபஞ்சத்தில் வேறொங்கும் இல்லை. அந்த யோகனா (யூனுஸ் நபி) சமூகத்தை போல, தற்போதைய சமூகமும் பேரழிவில் இருந்து தப்புமா என்று பார்ப்போம். இதற்க்கு காலம் தான் சரியான பதில் தரும்.
இந்திய தொழில்நுட்பவியலார்களின் மண்டலத்திற்க்காக
(Indian Techies Zone)
முஹம்மது இஸ்மாயீல். ஹ,
Muhammad Ismail .H, PHD,
+919442093300
1 comments:
அன்பின் ஆதில்,
இடுகையை சரியான நேரத்தில் மறு பதிவு செய்து பலருக்கும் இத்தகவலை கொண்டு சேர்த்தமைக்கு மிக்க நன்றி.
ஒரு சின்ன திருத்தம். :
// நகப்படணத்தில் 2ஆயிரம் பேர் இறந்தனர் //
எங்களது நாகை மாவட்டத்தில் சுனாமியின் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6605 ஆகும். இது அரசின் அறிக்கை ஆகும்.
ஒரு வேண்டுகோள் :
உங்களின் ப்ளாகர் டெம்ளேட்டை கொஞ்சம் சரி செய்யவும். வேர்ட் வெரிபிகேசனை எடுத்து விடவும். மிக்க நன்றி.
கருத்துரையிடுக