முல்லா கதைகள்
புதன்
முல்லாவின் கதைகளுக்கு அறிமுகம் தேவை இல்லை
இப்போது முல்லாவின் கதையை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறென்.
முல்லா ஒருநாள் பொதியை சுமந்த கழுதைகளை தினமும் ஓட்டிக் கொண்டு போனார் சில நாட்க்களில் மிக பெரிய செல்வந்தராக ஆனார் இது அங்கு உள்ள மக்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது
இதனால் ஊர் மக்கள் கூடி முல்லாவின் மீது பஞ்சாயத்து வைத்து கொண்டு போகும் கழுதைகளில் என்ன கொண்டு போகிறார் என்று கழுதைகளை பிடித்து அதன் மேல் இருக்கும்
பொதிகளை அவிழ்த்து பார்த்தார்கள் ஆனால் பொதிகளில் வெறும் குப்பைதான் இருந்தது எல்லோரும் குப்பை தானே என்று முல்லாவை விட்டு விட்டார்கள் ஆனால்
முல்லா எல்லொரையும் கூப்பிட்டு இத்தனை நாள் கழுதைகளில் பொதியை வைத்து கழுதையைதான் கடத்தினேன் அதை விற்றுத்தான் நான் செல்வந்தராக மாறினேன் என்று சொன்னார்
ஒரு நாள் முல்லா தன் விட்டு சாவியை தொலைத்து விட்டார் ஆனால் அவர் தன் சாவியை அவர் வீட்டை விட்டு வெகு தூரம் சென்று விளக்கு வெளிச்சம் உள்ள இடத்தில் தேடி கொண்டு இருந்தார் அவரைகடந்து செல்பவர்கள் இங்கு என்ன தேடிகொண்டு இருக்கிறீர்கள்?
என் வீட்டின் சாவியை தேடுகிறேன் என்று சொன்னார் அவரிடம் கேள்வி கேட்டவர்கள் உங்கள் வீட்டின் அருகில் தேடாமல் இங்கு வந்து தேட காரணம் என்று கேட்டார்கள் இங்குதானே வெளிச்சம் உள்ளது என்று பதில் சொன்னார்
முட்டாள்தனம் இழப்பையே தரும் என்ற கருத்தை இந்த கதை உணர்த்துகிறது
0 comments:
கருத்துரையிடுக