Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

மனிதன் பாதி மீதி மிருகம்

செவ்வாய்

செல்ல பிராணிகளுக்கு மனிதர்களின் பெயரை  வைப்பது  முன்  ஒரு வழக்கமாக இருந்தது உ.தா நாய்களுக்கு மணி,ராஜா,ஜிம்மி(கார்ட்டர்) (இது அமெரிக்க  ஜனாதிபதி  பெயர்) என்று பெயர்கள்  இருக்கிறது.

 

ஒருத்தர்  தன் நாய் பெயரை மணின்னு வைத்தார் ஆனால் எழுதும் ,கூப்பிடும் போது “money”ன்னு தான் கூப்பிடுவார்! அந்த நாய் வந்த பிறகுதான் அவருக்கு தன்னோட வாழ்க்கையில் பணம் காசு வந்துச்சாம்

 

அதே போல் சினிமாவில் பாயும் புலி,நண்டு… ஆனால் சண்டை போடுவது “சேவல்” “சண்டை  கோழி”ன்னு பெயர்.

ஆண் குயில்தான் பாடுகிறது ஆனால் பெண் பாடகர்களுக்கு தான் “சின்னகுயில் சித்ரா” என்று பெயர்.

 

image

நரி  தந்திரமானது என்று அது வரும் கதைகளில்  சித்தரிக்கபடுகிறது  அதே நரி முகத்தில்  முழிச்சா  அதிர்ஷடம் என்று சொல்கிறாரக்ள் ஆனால்  அதே பெயரை   மனிதர்களுக்கு பெயர் வைச்சா  நல்ல வசதியா  இருக்கும் ஆமாங்க நரி  முகத்தில் முழிக்க நாம் எந்த நரியையும்  தேட வேண்டாம்.

பெயர்  உள்ள நபரும்  தினமும் நரி முகத்தில் முழிக்கலாம்.மனிதர்கள் பெயரை செல்ல பிராணிகளுக்கு  வைக்கும்  போது நரி பெயரை பிராணிகளுக்கு பெயர் வைப்பது தவறு இல்லை.

அதே நரியின்  “fire fox”பெயரை பிரவுசுருக்கு வைத்து கொண்டாடுகிறோம்  உபுண்டு புதிய  வெளியீட்டுக்கு மிருகங்களின் பெயர் வைக்கபடுகிறது பதிய உபுண்டுவின் பெயர் லூசிட்(பூனை வகை)

 

திரும்ப  சினிமாவில் சிங்கத்தின் பெயர்களை வைத்து படங்கள்

  1. இரும்பு கோட்டைமுரட்டுசிங்கம்
  2. பெண் சிங்கம்
  3. சிங்கம்

 

இதில் எந்த சிங்கம் அசிங்கமாகமல் வசூல் வேட்டை அடப்  போவதை பொருத்து இருந்து பார்போம்

கடைசியா சுறா  அடுத்து ஏறா!

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP