நினைவில் நிற்க்கும் நேர்காணல்கள்
திங்கள்
கதை,கவிதை,வசனம் இன்ன பிற நூல்களை நாம் படித்துகொண்டு இருக்கிறோம். அந்த நிலையில் “நினைவில் நிற்க்கும் நேர்காணல்” நம் வாசிப்புக்கு ஒரு புதிய சுவையாக உள்ளது. இதில் பல பிரபலங்களை நூல் ஆசிரியர் “திரு அண்ணா கண்ணன்” அவர்கள் பேட்டி எடுத்து நமக்க்காக தொகுத்து அளித்துள்ளார்கள.
ஒரு கதை அல்லது கவிதை ஒரே ஒரு எழுத்தாளர் எழுதி இருப்பார் அதை நாம் படித்து பரவசம் அடைவோம். ஆனால் இது பல எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு புத்தக்கத்தை எழுதியது போல் இருக்கிறது.
இதல் பேட்டி கொடுத்தவர்களிடமிருந்த நிறைய செய்திகள் இதுவரை தெறியாத தகவல்கள் பதிவு செய்யபட்டு இருக்கிறது.
அதில் தென்கச்சி கோ சாமிநாதனிடம் ஒரு கேள்வி
- கொஞ்சம் இழுத்தது பேசுகிற இந்த கிராமிய பாணி பேச்சு எப்போது வந்த்து?
தமிழ் விக்கிபீடியா மயுறன்
- தமிழ் விக்கிபீடியா 2003-ம் ஆண்டு ஒரு தமிழரால் அரம்பிக்கபட்டது ஆங்கில மொழி கட்டுரைகள் 28,97,231 தமிழ் 18,226 கட்டுரைகளுட்ன் உல்க அளவில் 68-வது இடத்தில் உள்ளது
அதேபோல் இது தமிழில் அறியபடாத துறையான போட்காஸ்டிங் பற்றி “பிரைம் பாயிண்ட் சினிவாசனுடன் நேர்காணல்” நாமும் தமிழில் போட்காஸடிங் செய்ய ஆர்வத்தை தூண்டுகிறது
இதுபோல் சொல்லி கொண்டே போகலாம் மேலும் இந்த நேர்காணல்கள் ஆண்டு வாரியாக தொகுக்கபட்டு உள்ளது.
ஒவ்வோரு நேர்காணலுக்கும் முன்பு அதற்க்கான அறிமுகம். பேட்டி கொடுக்கும் நபர் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது
பேட்டி கொடுத்வர்களின் புகைப்டங்கள் கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பா இருக்கும்.
ஏன் என்றால் கவிக்கோ அப்துல் ரகுமான் நமக்கு தெறியும் ஆனால் தமிழ் விக்கிபீடியா மயுரன் நமக்குஅறிமுகம் கிடையாது அடுத்த (பதிப்பில் திரி சக்தி பதிப்பகம் இதை சேர்க்கும் என்று நம்பலாம்)
புத்க்க தலைப்பு : நினைவில் நிற்க்கும் நேர்காணல்கள்
ஆசிரியர் : அண்ணா கண்ணன்
விலை : ரூ75
புத்தகம் கிடைக்குமிடம்
GIRIGUJA PUBLICATIONS PVT LTD
Address : GIRIGUJA ENCLAVE
56 / 21, Sastri Nagar 1st Avenue,
Adyar, Chennai 600020
Telp : (044) 42970800
Email : arasiyaleditorial@gmail.com
0 comments:
கருத்துரையிடுக