Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

அக்கமாகாதேவி வசனங்கள்

வெள்ளி

அக்கமகாதேவி நம்  ஊரில் உள்ள அவ்வை,ஆண்டாள் இவர்களை போல் திருமணம் வேண்டாம் சிவனை நினைத்து பாடுவது மட்டுமே போதும் என்று  இருந்த 12-ம் நூற்றாண்டில்  வாழ்ந்த  ஒரு பெண் கவிஞர்,துறவி
இவர் ஒரு மன்னனை  திருமணம் செய்தார் சிவனை பூஜை செய்வேன் போன்ற நிபந்தனைகளை மீறிய மன்னனை உதறி விட்டு  தன்கூந்தலையே ஆடையாக சிவனை  நினைத்படி  ஊர் ஊராக சென்று பாடல்களை பாடினார்
Jaganmate Akkamahadevi

அந்த கவிஞரின்   வசனங்களை  நூலாக வெளிட்டுள்ளார்கள்.
அவரின் முழுமையான பாடல் தொகுப்பு அனைத்தும் கிடைக்கவில்லை  கிடைத்தவைகள் அனைத்தும் கன்னடத்தில் இருந்து தமிழில் இரு பெண் எழுத்தாளர்களால் தொகுக்கபட்டுள்ளது
இதில் உள்ள  வசனங்கள் சிவனைபற்றி உள்ளன எல்லாமே  சிவனை வைத்து  தொடங்கி அல்லது முடியும்.
இதில் அவரின்   நிர்வாணத்தை ஊர்பேச்சுக்கு  அவரின் வசனம்
“அணோ பெண்ணோ மக்கள்
அவரவர் வெட்கத்தை மூடிய ஆடை
அவிழ்ந்தால் நாணுகிறார்கள்
உயிர்கெல்லாம் அரசன் உலகில் முகமின்றி மூழ்கி கிடக்கிறான்
உங்கள்  அடக்கம் எம்மட்டு?

அனைத்துலகிலும் அவன் கண் முன்னே
அனைத்தையும் அகன்று பார்த்திருக்க
நீங்கள்
எதை மறைக்க போகிறீர்கள்?
எப்படி ஒளிந்து கொள்வீர்கள்?”    

ஒரு பெண், துறவியாக, தனியாக,  தங்க இடமின்றி எப்படி ஊர் ஊராக திரிய முடியும்?  அச்சமாக இருக்காதா?  இதற்க்கு அக்காவின் வசனம்
“கைலொரு திருவொடு  கிராமத்து பிச்சை
கட்டிவைத்த  குளங்கள் காட்டோடை கிணறுகள்
கால்நீட்டி படுக்க  கல்லிந்த  பழங்கோவில்
களித்திருக்க என்னுயிரின் கண்ணான் சென்ன
மல்லிகார்ஜூனா!
இது போன்ற சிலிர்க்க வைக்கும் வசனங்கள்  விறவி  கிடக்கிறது இதை மொழி  பெயர்த்த  டாக்டர்  தமிழ்செல்வி, மதுமிதா மிக   சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்கள்.


வெளியீடு 

Address : GIRIGUJA ENCLAVE
               4th Floor,
               56 / 21, Sastri Nagar 1st Avenue,
               Adyar, Chennai 600020
Telp       : (044) 42970800
Email      : gjmultimediaindia@gmail.com
நூலாசிரியர்:டாக்டர்தமிழ் செல்வி-மதுமிதா
விலை:85ரூ

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP