Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

storey லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
storey லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அண்ணன்? அக்கா அண்ணன்!

ஞாயிறு

ஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல
இன்று அந்த வீட்டில் யாரோ புதிதாக குடி வந்து இருந்தார்கள் அவர்களின் வீட்டு பொருட்களை உள்ளே  கொண்டு சென்றார்கள்.
ஒரு பேக்கை தூக்கி கொண்டு உள்ளே நூழைந்தவள் சட் என்று ஆனந்தை திரும்பி பார்த்து லேசாக புன்னகை செய்தாள் ஆனந்த் திடுக்கிட்டவனகா திரும்பி விட்டான்.
அந்த பெண் பின்னால் வயதான ஒரு ஆள் அவர் பின்னால் சரியான உயர வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண்
ஓரு அப்பா அவருக்கு மூத்த பெண்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் ஒரு ஆண் குழந்தை என்று தன் மனதில் கணக்கு போட்டவனாக ஆபிசுக்கு கிளம்ப வாசல் கதவை திறந்தான்.
அவனை பார்த்து சிரித்த பெண் கையில் செம்புடன் சார் இந்தாங்க பால் உங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்கோம்.

என் பெயர் பானு உங்க பெயர்? ஆனந்த் அது என்ன ஆனந்த் ஆனந்தன்னு பெயர் வைச்சா நல்லா இருக்கும் என்றாள். செம்பை வாங்கி வெளியே போய்விட்டாள் ஆபிசுக்கு சென்ற ஆனந்த அந்த  கோப்புகளின் போதையில் அந்த பெண்ணை மறந்து penனால் பரதம் ஆடினான்
வீட்டுக்கு வந்த உடன் அந்த பால் செம்பு அவள் பெயரை மாற்ற சொன்னது அதற்க்கு மேல் அவளை பற்றிய வர்ணனைகள் மனதில் வரவில்லை.
கொடைகானல் மலைகளில் அந்த குளிரில் மூச்சு வாங்க ஓடியவனுக்கு தாகம் எடுப்பது போல அவன் மனதிற்கு மூச்சு வாங்கி அவன் மனம் முன்னே செல்ல மறுத்தது.
கடந்த ஒரு மாதமாக காலை வழக்கமான காப்பி-அவன்ஜன்னல்-வெறும் ஜன்னல்-அவள் சிரித்த நிகழ் படமானது
ஆனந்த இன்றும் தீவிரமாக அந்த பெண் ஏன் சிரிக்கிறாள் என்று யோசித்தான் வழக்கம போல் அவன் மனம் மறுத்தது எந்த காரணம் இல்லாமல்
அவளிடம் பேசி இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவன் மூளை கட்டளை இட்டது ஏன் என்றால் நாளை அலுவலக விஷயமாக கோவா போகிறான்.
ஆனந்தின் இன்னொரு (ஆனந்த் பாதி) மிருகம் பாதி அதற்க்கு ஒரு நல்ல திட்டத்தை தந்தது அவனின் துவைத்த சட்டையை அவன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து எதிர்த்த வீட்டுக்கு (ஏதேச்சைக்காக) பறக்கவிட்டான் வேண்டும் என்றே
இப்போது ஆனந்த் தன் முகத்தை தொலைத்து விட்டு ஏதேச்சையாக பறந்த சட்டையை எடுக்க பிச்சைகாரன் முகத்தை மாட்டி கொண்டு
கதவை தட்டினான் வாங்க உள்ளே வாங்க அவனை அவள் ஆனந்தை பேசவிடவில்லை அவள் சிரித்த வண்ணம் காப்பி குடிக்கிறிங்களா என்றாள்
 
என்னொட சட்டை ஒன்னு உங்க வீட்டுக்கு பின்னால் பறந்து விழுந்து இருக்கு அத கொஞ்சம் தர முடியாமா
அதுவா அந்த மஞ்சள் கலரா அப்பவே எடுத்து வைச்சுட்டேன் இதொ இருக்கு என்று அவன் கைகளில் கொடுத்தாள்
இந்த நிறத்துக்கு பதிலா ரோஸ் கலர் போட்டா உங்க நிறத்துக்கு எடுப்பா இருக்கும் என்றால்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றான் தாராளமா என்று அடுப்படிக்கு ஒடினாள் ஆனந்த தன் கண்களால் சுற்றி பார்த்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தான்
பதட்டத்தில் வழக்கமாக அவன் கன்னங்கள் இறுகி போனது தண்ணீரை குடித்து அதனை சரி செய்தான்.
ஓரு சந்தேகம் உங்க அப்பா என்ன செய்கிறார் எங்க அப்பா நான் பிறந்த கொஞ்ச நாள்ல இறந்துட்டார்
அப்ப அந்த பெறியவர்? அவர் எனது கணவர்
உங்க அடுத்த கேள்வி நான் எப்படி இவருக்கு மனைவி ஆனேன்னுதானே என்னுடைய அக்காதான் இந்த குழந்தைளை பெற்ற அம்மா ஆனா இப்ப இல்லை அதானால நான் அம்மா ஆகிட்டேன்.

என்னை பாத்து ஏன் அடிக்கடி சிரிக்கிறிங்க அதுவா நீங்க தப்பா எடுக்கலேன்னா ஒன்னு சொல்லவா மீசை வைச்சிங்கனா எங்க அண்ணன் மாதிரி இருப்பீங்க
vikram kandasamy
எங்க அண்ணன் ஒரு 5வருஷத்துக்கு முன்னால் எனக்கு (அக்காவாக) திருநங்கையா மாறி எங்களை விட்டு பரிஞ்சு இருக்காங்க
உங்களை பார்க்கும் போது எனக்கு எங்க அண்ணனை பார்க்கும் ஞாபகம் வருது அதனால் தான் அப்படி என்றாள்.
காலை வழக்கமான காப்பி/அவன் ஜன்னல்/சிரிப்புடன்அவள் ஜன்னல் ஆனந்த் மட்டும் மீசையுடன் இன்று முதல் எப்போதும்
Read More » Read more...

மனம் இனிக்குதே

image
கணேஷ் அவனுடைய நண்பனின் திருமணத்துக்கு சென்றான் கல்யாணம் முடிந்து பந்தியில் அமர்ந்தவனுக்கு பக்கத்தில் ஓரு நடுத்தர வயதுக்காரர் சாப்பிட்டு முடித்த கணேஷ் இலையை மடிக்க போன கணேஷன் கையை பிடித்தார் என்ன என்று கேட்க்க தம்பி இலையை உள்ளார மடிங்க   ஏன் என்று பார்வையால் கேள்வி கேட்டான்  உள்ளார மடிச்சா ஆவா உறவு வேணும்னு அர்த்தம் அப்ப வெளிய மடிச்சா ஆவா உறவு வேண்டாம்னு அர்த்தம் அப்படிங்களா
அப்ப இப்படி மடிச்சு கையில் எடுத்தா? நீ ரொம்ப நல்லவன்னு அர்த்தம் சரிங்க மடித்த இலையை இரண்டு பேரும் ஒன்றாக கொண்டு சென்றார்கள் அந்த மனிதர் இலையை குப்பை தொட்டியில் போட்டார் தம்பி குப்பைதொட்டி இங்கே இருக்குபா என்று குரல் கொடுத்தார்
காதில் வாங்காமல் கணேஷ் கல்யாண வீட்டின் வாசல்வரை வந்து அங்கு இலைகளுக்கு காத்து இருக்கும் பிள்ளைதாட்ச்சியான குருவிகாரிக்கு தான் இரண்டு முறை வாங்கிய பதார்தங்களை இலையை அவளது டால்டா டப்பாவில் போட்டான்பும்பிடறேன் சாமி என்று கைகுப்பித்தாள்.
கணேஷ் அந்த மனிதரை திரும்பி பார்த்து சார் இப்ப என்ன ரொம்ப நல்வன்னு சொல்வாங்கல்ல ? இன்று கணேஷுக்கு இனிப்பு சாப்பிட்டதால் முதல் முறையாக இதயம் இனித்த்து


Read More » Read more...

பசி வந்தா பத்தும் பறந்து போகும்

செவ்வாய்

மூன்று முகம் ரஜினி மூன்று வேடத்தில் ரஜினி நடித்த படம் அதில் ஒரு  ரஜினி வெளிநாட்டுக்கு சென்று ஒரு சாமியாராக மாறிவிடுவார் ரஜினி மாற்ற ராதிகா முயற்ச்சி செய்வார் கடைசியில் வெற்றியும் பெறுவார் அதில் ரஜினியின் மனதை மாற்ற சில் கேள்விகளை கேட்பார் அதில் சுவரசியான ஓரு கேள்வியை உங்களுன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

girl82

 

ராதிகா ரஜினியிடம் தனிமை அறையில் இரவு நேரத்தில் உங்களையும் ஒரு அழகான பெண்ணையும் அதனுடன் ஒரு காமசூத்ரா நூலும் பக்கத்தில் உள்ளது இந்த சுல் நிலையில் நீங்க சாமியாரான நீங்க உங்க கற்பை காப்பாத்த என்ன செய்விங்க?

இந்த கேள்விக்கு ரஜினி சிறிது பொருமையா யோசித்து ஒரு பதில் கொடுப்பார் அந்த காமசூத்ரா நான் படிக்க ஆரம்பிப்பேன்னு பதில் கொடுப்பார் இதை கேட்டு ராதிகா வாயைடைத்து நிர்ப்பார்.

இதை நினைத்தால் ஒரு பழமொழி ஞாபகம் வருகின்றது கோவனம் அவுத்தா சாமியார் கூட சம்சாரிதான்

இன்னோன்னு இதே கேள்வியில்  அழகான பெண்ணையும்,ருசியான உணவு வகைகள் வரிசையாக வைத்து பத்துநாள் பட்டியான உங்களையும் உள்ளே விட்டால் நம் மனது எதை நாடும் ருசியான உணவு வகையைதான் விரும்பும் அதுதாங்க பசி வந்தா பத்தும் பறந்து போகும்.

Read More » Read more...

முல்லா கதைகள்

புதன்






முல்லாவின் கதைகளுக்கு அறிமுகம் தேவை இல்லை














இப்போது முல்லாவின் கதையை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறென்.







முல்லா ஒருநாள் பொதியை சுமந்த கழுதைகளை தினமும் ஓட்டிக் கொண்டு போனார் சில நாட்க்களில் மிக பெரிய செல்வந்தராக ஆனார் இது அங்கு உள்ள  மக்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது
இதனால் ஊர் மக்கள் கூடி முல்லாவின் மீது பஞ்சாயத்து வைத்து கொண்டு போகும் கழுதைகளில் என்ன கொண்டு போகிறார் என்று கழுதைகளை பிடித்து அதன் மேல் இருக்கும்
பொதிகளை அவிழ்த்து பார்த்தார்கள் ஆனால் பொதிகளில் வெறும் குப்பைதான் இருந்தது  எல்லோரும்  குப்பை தானே என்று முல்லாவை விட்டு விட்டார்கள் ஆனால்
முல்லா எல்லொரையும் கூப்பிட்டு இத்தனை நாள்   கழுதைகளில் பொதியை வைத்து கழுதையைதான் கடத்தினேன் அதை விற்றுத்தான் நான்  செல்வந்தராக மாறினேன் என்று சொன்னார்
Mulla_Stories

ஒரு நாள் முல்லா தன் விட்டு சாவியை தொலைத்து விட்டார் ஆனால் அவர் தன் சாவியை அவர் வீட்டை விட்டு வெகு தூரம் சென்று  விளக்கு வெளிச்சம் உள்ள இடத்தில் தேடி  கொண்டு இருந்தார் அவரைகடந்து செல்பவர்கள் இங்கு என்ன தேடிகொண்டு இருக்கிறீர்கள்?

என் வீட்டின் சாவியை தேடுகிறேன் என்று சொன்னார் அவரிடம் கேள்வி கேட்டவர்கள் உங்கள் வீட்டின் அருகில் தேடாமல் இங்கு வந்து தேட காரணம் என்று கேட்டார்கள் இங்குதானே வெளிச்சம் உள்ளது என்று பதில் சொன்னார்

ஆயிரம் நாணயங்கள் முல்லாவின் கதை ஓளி வடிவில்






முட்டாள்தனம் இழப்பையே தரும் என்ற கருத்தை  இந்த கதை உணர்த்துகிறது
Read More » Read more...

குட்டி உண்மைகள்

சனி

satyaraj

சத்திய ராஜ் cell phone வாங்கி இரண்டு வருடம் கழித்துதான் sms அனுப்ப கற்றுக்கு கொண்டாராம் image பார்காத நடிகர் ஓரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

bhavana-0015

பாவனா ஓரு தொலைக்காட்சி பேட்டியில் நிங்கள் மறக்க நினைக்கும் சம்பவம் என்ன என்று கேட்டால் என்னுடைய ஓரு காதல் என்று சொன்னார்! தைரியமாக யாரும் சொல்லாத விஷயம்

mani

இவர் பேசுவதை விட இவர் படங்கள் நிறைய பேசும் இதுவரை இவர் ஒரே ஒரு பாடல் பதிவுக்காக வெளிநாட்டுக்கு இதுவரை சென்றதில்லை ஆச்சரியமாக உள்ளது

Read More » Read more...

மான் கராத்தே

வெள்ளி

மான்கராத்தேன்னா யாருக்காவது தெரியுமா! அதபத்தி தெரிஞ்க்கிறதுக்கு முன்னாடி மான்பத்தி பாத்தி தெரிஞ்சிக்கணும்

250px-White-tailed_deer

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த குளம்புள்ள ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூஸ் அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூஸ், 2 மீட்டர் உயரமும் 540 - 720 கிலோ.கி (kg) (1200 - 1600 பவுண்டு (lbs)) எடையும் உள்ள பெரிய விலங்காகும்.

மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ் இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.

இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது

இப்ப மான்கராத்தேன்னா! என்னனு சொல்றேன் யாரவது நம்ம அனுமதி இல்லாம நம்ம மேல கைய்ய வைச்சா நாலு காலு பாச்சல்ல தெரிச்சு ஒடுறதுதான் மான் கராத்தே வெற ஒண்ணும் இல்லிங்க யாரும் கடுப்பாகதிங்க!

Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP