Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

bookreaview லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
bookreaview லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொலைக்கபட்ட தேடல்கள்

திங்கள்

invitation v.radhakrishnan copy


நல்ல புத்தகம் நல்ல நண்பன் அது போல் இப்போது முதல் முறையாக இந்த புத்தகத்தை எழுதிய டாக்டர்.ராதாகிருஷணன் அவர்களை என் நட்ப்பு வட்டத்தில் சேர்த்து கொள்ள ஆசையாக உள்ளது இந்த நல்ல புத்தகத்தை வெளியிட்ட அகநாழிகை வாசுதேவன் முதலில் அவர்களை பாரட்டவேண்டும் தமிழில் புத்தகம் படிப்பது மிகவம் குறைந்து விட்டது.
அதிலும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு அதை விழாவாக கொண்டாடுவது மிகவும் அவசியம் ஆகும் அதனால் இந்த புத்தகங்களை நிறைய தமிழ் நெஞ்சங்கள் படிக்க தொடங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தாரா கணேசன் அவர்கள் வெளியீட்டு விழாவில் இந்த புத்தகத்தின் ஒரு கதையை படித்து காட்டியதால் மட்டுமே இந்த புத்தகத்தை வாங்க ஊந்தபட்டேன் பொதுவாக யாராவது படித்து விமர்சித்த உடன் மட்டுமே புத்தகம் வாங்குவது வழக்கம்.
இந்த தொலைக்கபட்ட தேடல்கள் புத்தகம் 7சிறுகதைகள் உள்ளது அத்னையும் நமக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
அதிலும் இதை படிக்க அரம்பித்தால் முழுவதும் படித்த உடன் மட்டுமே தாங்களால் நிம்மதியாக தூங்க முடியும்
இந்த கதைகள் அனைத்தும் மனிதம்,இரக்கம்,அன்பு ஆகியவற்றை வலியுறுத்தும் கதைகள் மட்டுமே
இதில் சொல்லபட்ட கதைகள் மிகவும் எளிமையான படிப்பவர்களை குழப்பாத சம்பபவங்கள் மற்றும் சொற்க்கள்.
இதில் வரும் முதல் கதை சொன்னவிதம் வித்தியாசமாக இருந்தது மற்ற கதைகளில் சொல்லபடும் விசயங்கள் மட்டுமே முன்னிலைபடுத்தபட்டு வர்ணனைகள் மிக குறைந்த அளவு உள்ளது
பழங்கால சுவடுகள் கதையில் எகிப்தில் நடப்பதாக உள்ளது எகிப்து என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது பிரமிட்,நைல் நதி இதனை பற்றி வர்ணனைகள் மிக குறைவு அந்த சம்பவங்கள் எங்கு நடக்கிறது அந்த இடத்தின் பெயர் என்ற விபரங்கள் எதுவும் எழுதாமல் கதை உள்ளது
எழுத தொடங்கும் எல்லா எழுத்தாளர்களும் இந்த எளிமையை கடைபிடிக்க வேண்டும்.
இந்த கதைகளில் எனக்கு பிடித்து அறுபத்திநான்காம் மொழி அதைபடித்தவர்கள் “மிங்கி மிங்கி பா” என்று முணு முணுகாதவர்கள் யாரும் இருக்க முடியாது      
இந்த கதையில் வரும் இளைஞன் “மிங்கி மிங்கி பா” இந்த வார்தையை தவிற வேறு எந்த வார்த்தையும் பேசமாட்டான் அவன் காதலித்த பெண்ணிடம் இந்த“மிங்கி மிங்கி பா” மட்டும் வெவ்வேறு முறையில் சொல்லியே காதலிக்க தொடங்கி திருமணமும் செய்து பிறக்கும் குழந்தையும் இந்த வார்த்தை தவிற வேறு வார்த்தை பேசாது

“மிங்கி மிங்கி பா”    “மிங்கி மிங்கி பா”   “மிங்கி மிங்கி பா”  அது ஒண்ணும் இல்லிங்க கண்டிப்பா வாங்கி படிங்க  


பெயர்:         ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘
ஆசிரியர்:டாக்டர்.ராதாகிருஷணன்   
வெளீயிடு: நயினார் பதிப்பகம்
                     33,மண்டபம் தெரு மதுராந்தகம்-603306
மின் அஞ்சல்: nayinarbooks@gmail.com
விலை:100 ரூபாய்
இணையதளம் : www.aganazhigai.com 
அலைபேசி:+91 999 454 1010
அணையதளத்தில் வாங்க: www.ezeebookshop.com www.udumalai.com
Read More » Read more...

ஏழுதலை நகரம்

வாசிக்கும் அனுபவம்

நாம் பொழுது போக்க விளையாட்டு அல்லது வேறு ஏதோ ஒரு கேளிக்கையில் நம்மை முழ்கி நம் மனதை லேசாக்குவோம்.
இதில் விளையாட்டில் இருவர்  அல்லது அதற்றக்கு மேல் நபர்கள் சேர்ந்து செய்வதாக இருக்கும்.
ஆனால்  புத்தகம் படிப்பது ஒருவரே அந்த செயலலில் ஈடுபட்டு அதன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
***********************************************************

ஏழுதலை நகரம்-எஸ்.ராமகிருஷணன் 




Book_13
இந்த புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது அது வரை எஸ் ராவை அவரது இணையதளத்தில் மட்டுமே படிக்கும் நான் முதல் முறையாக இந்த புத்தகத்தை நான் படித்தேன் வியந்தேன்
எஸ் ரா நமது கையை பிடித்து ஒரு மாயலோகத்துக்கு அழைத்து செல்வது போல் இருக்கிறது படிக்கும் போது நீங்கள் அந்த மாயலோகத்தில் இருப்பீர்க்ள படிப்பதை நிறுத்தினால் மட்டுமே நீங்கள் நிகழ் உலகத்தில் வருவீர்கள் என்பது உறுதி.

இதில் வரும் காதாபத்திரம் நம் மனதில் நின்று இருக்கும் காலம் காலமாக (இது போன்ற எஸ் ராவின் இன்னொரு நூலை படிக்காத வரை)

  • இதில் வரும் எலியின் பெயர் “ஞலி அதன் தம்பிகளின் பெயர் நெலி,திலி,கலி,தலி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்கள் நமக்கு சுவரசியமாக உள்ளது.
  • காண்ணாடிகார தெரு இன்னொரு அதியசம் அதில் தொடங்கி அதை பற்றிய suspence கடைசிவரை கொண்டு போவது நன்று இது போன்று பல அற்புதங்களை தாங்கி இருக்கிறது இந்த 231 பக்க நூல்
  • இதில் வரும் நிழ் இல்லாத பறவையின் பெயர் மானீ இதை பற்றி சொல்ல இன்னும் இருக்கு
  • வயது ஆகாமல் வளரும் உயிர் எது? விடை தாயின் வயிற்றில் வளரும் குழந்தை  என்ற களவி போல் இந்த புத்தகத்தில் அள்ள கிடைக்கிறது
நமது குழந்தைகளுக்கு நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டிய மற்றும் தகுதியான நூல் பிறந்த நாள் காணும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதை பரிசாக கொடுக்க வேண்டும்.
இதன் வெற்றியே இந்த நூல் பெறியவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அப்படி பிடித்தால் மட்டுமே இதை போன்ற குழந்தைகளுக்கு நூல் சென்று அடையும்.
நமது குழந்தைகள் இன்னமும் வெளி நாட்டு கார்டுன்களில் முழ்கி இருக்கிறார்கள் இவர்களுக்காக இந்த புத்தகம் இன்னொரு “நார்னியாவாக” இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு திரைப்டமாக எடுக்க 100% தகுதியானது மேலும் ஆங்கில படங்கள் போல உலக அளவில் எல்லோரும் தமிழில் பார்க்க  தகுதியான படமாக இருக்கும்
எஸ் ராவின் இணையதளம் http://www.sramakrishnan.com/
எஸ் ராவின் புத்தகங்கள் http://www.sramakrishnan.com/Books_1.asp

விகடன் பதிப்பம் இதனை வெளிட்டுள்ளது விலை 100ரூ இதன் எழுத்துறுக்கள் குழ்ந்தைக்ள் படிக்க பெறியதாக உள்ளது.

இந்த நூலைபற்றி எஸ்ரா

banner_1
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப்  பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது  இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன். 
Read More » Read more...

அக்கமாகாதேவி வசனங்கள்

வெள்ளி

அக்கமகாதேவி நம்  ஊரில் உள்ள அவ்வை,ஆண்டாள் இவர்களை போல் திருமணம் வேண்டாம் சிவனை நினைத்து பாடுவது மட்டுமே போதும் என்று  இருந்த 12-ம் நூற்றாண்டில்  வாழ்ந்த  ஒரு பெண் கவிஞர்,துறவி
இவர் ஒரு மன்னனை  திருமணம் செய்தார் சிவனை பூஜை செய்வேன் போன்ற நிபந்தனைகளை மீறிய மன்னனை உதறி விட்டு  தன்கூந்தலையே ஆடையாக சிவனை  நினைத்படி  ஊர் ஊராக சென்று பாடல்களை பாடினார்
Jaganmate Akkamahadevi

அந்த கவிஞரின்   வசனங்களை  நூலாக வெளிட்டுள்ளார்கள்.
அவரின் முழுமையான பாடல் தொகுப்பு அனைத்தும் கிடைக்கவில்லை  கிடைத்தவைகள் அனைத்தும் கன்னடத்தில் இருந்து தமிழில் இரு பெண் எழுத்தாளர்களால் தொகுக்கபட்டுள்ளது
இதில் உள்ள  வசனங்கள் சிவனைபற்றி உள்ளன எல்லாமே  சிவனை வைத்து  தொடங்கி அல்லது முடியும்.
இதில் அவரின்   நிர்வாணத்தை ஊர்பேச்சுக்கு  அவரின் வசனம்
“அணோ பெண்ணோ மக்கள்
அவரவர் வெட்கத்தை மூடிய ஆடை
அவிழ்ந்தால் நாணுகிறார்கள்
உயிர்கெல்லாம் அரசன் உலகில் முகமின்றி மூழ்கி கிடக்கிறான்
உங்கள்  அடக்கம் எம்மட்டு?

அனைத்துலகிலும் அவன் கண் முன்னே
அனைத்தையும் அகன்று பார்த்திருக்க
நீங்கள்
எதை மறைக்க போகிறீர்கள்?
எப்படி ஒளிந்து கொள்வீர்கள்?”    

ஒரு பெண், துறவியாக, தனியாக,  தங்க இடமின்றி எப்படி ஊர் ஊராக திரிய முடியும்?  அச்சமாக இருக்காதா?  இதற்க்கு அக்காவின் வசனம்
“கைலொரு திருவொடு  கிராமத்து பிச்சை
கட்டிவைத்த  குளங்கள் காட்டோடை கிணறுகள்
கால்நீட்டி படுக்க  கல்லிந்த  பழங்கோவில்
களித்திருக்க என்னுயிரின் கண்ணான் சென்ன
மல்லிகார்ஜூனா!
இது போன்ற சிலிர்க்க வைக்கும் வசனங்கள்  விறவி  கிடக்கிறது இதை மொழி  பெயர்த்த  டாக்டர்  தமிழ்செல்வி, மதுமிதா மிக   சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்கள்.


வெளியீடு 
Address : GIRIGUJA ENCLAVE
               4th Floor,
               56 / 21, Sastri Nagar 1st Avenue,
               Adyar, Chennai 600020
Telp       : (044) 42970800
Email      : gjmultimediaindia@gmail.com
நூலாசிரியர்:டாக்டர்தமிழ் செல்வி-மதுமிதா
விலை:85ரூ
Read More » Read more...

நினைவில் நிற்க்கும் நேர்காணல்கள்

திங்கள்

கதை,கவிதை,வசனம் இன்ன பிற நூல்களை நாம் படித்துகொண்டு இருக்கிறோம். அந்த நிலையில் “நினைவில் நிற்க்கும் நேர்காணல்” நம் வாசிப்புக்கு ஒரு புதிய சுவையாக உள்ளது. இதில் பல பிரபலங்களை நூல் ஆசிரியர் “திரு அண்ணா கண்ணன்” அவர்கள் பேட்டி  எடுத்து நமக்க்காக தொகுத்து அளித்துள்ளார்கள.
ANNAKANNAN_head
ஒரு கதை அல்லது கவிதை ஒரே ஒரு எழுத்தாளர் எழுதி இருப்பார் அதை நாம் படித்து பரவசம் அடைவோம். ஆனால் இது பல எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு புத்தக்கத்தை எழுதியது போல் இருக்கிறது.
இதல் பேட்டி கொடுத்தவர்களிடமிருந்த நிறைய செய்திகள் இதுவரை தெறியாத தகவல்கள் பதிவு செய்யபட்டு இருக்கிறது.
அதில் தென்கச்சி கோ சாமிநாதனிடம் ஒரு கேள்வி
  • கொஞ்சம் இழுத்தது பேசுகிற இந்த கிராமிய பாணி பேச்சு எப்போது வந்த்து?
தென்கச்சி: இழுத்து பேசுவதாக தெறிகிறது ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெறியுமா? மூச்சு வாங்குகிறது அவ்வளவுதான்

தமிழ் விக்கிபீடியா மயுறன்
  • தமிழ் விக்கிபீடியா 2003-ம் ஆண்டு ஒரு தமிழரால் அரம்பிக்கபட்டது ஆங்கில மொழி கட்டுரைகள் 28,97,231 தமிழ் 18,226 கட்டுரைகளுட்ன் உல்க அளவில் 68-வது இடத்தில் உள்ளது
போன்ற அறிய தகவல்கள் காணகிடைகின்றன. இது  போக நிறைய தகவல்கள் உள்ளன
அதேபோல் இது  தமிழில் அறியபடாத துறையான போட்காஸ்டிங் பற்றி “பிரைம் பாயிண்ட் சினிவாசனுடன்  நேர்காணல்” நாமும் தமிழில் போட்காஸடிங் செய்ய ஆர்வத்தை தூண்டுகிறது  
இதுபோல் சொல்லி கொண்டே போகலாம் மேலும் இந்த நேர்காணல்கள் ஆண்டு வாரியாக தொகுக்கபட்டு உள்ளது.
ஒவ்வோரு நேர்காணலுக்கும் முன்பு அதற்க்கான அறிமுகம்.  பேட்டி கொடுக்கும் நபர் பற்றி நமக்கு ஒரு அறிமுகம் கிடைக்கிறது
பேட்டி கொடுத்வர்களின் புகைப்டங்கள் கொடுத்து இருந்தால் இன்னும் சிறப்பா  இருக்கும்.
ஏன்  என்றால் கவிக்கோ அப்துல் ரகுமான் நமக்கு தெறியும் ஆனால் தமிழ் விக்கிபீடியா மயுரன் நமக்குஅறிமுகம் கிடையாது அடுத்த (பதிப்பில் திரி சக்தி பதிப்பகம் இதை சேர்க்கும் என்று நம்பலாம்)



புத்க்க தலைப்பு  : நினைவில் நிற்க்கும் நேர்காணல்கள்
ஆசிரியர்                :  அண்ணா கண்ணன்
விலை                    :   ரூ75
புத்தகம்  கிடைக்குமிடம்
GIRIGUJA PUBLICATIONS PVT LTD
Address : GIRIGUJA ENCLAVE
               56 / 21, Sastri Nagar 1st Avenue,
               Adyar, Chennai 600020
Telp       : (044) 42970800
Email      : arasiyaleditorial@gmail.com
Read More » Read more...

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி? புத்தக விமர்சனம்

ஞாயிறு

இந்த புத்தகத்தை கையில் வாங்கியவுடன் ரொம்ப பிடித்தது இந்த புத்தகத்தின் அட்டைப் படம் தான் அப்போதே அட்டைப் படத்தின் விமர்சனம் கண்களில் ஒடியது நான் படித்தவரை மருத்துவ புத்தகங்கள் எல்லாவற்றிலும் அட்டைப்படம் மிக சுமாராக இருக்கும் அட்டைப்படத்துக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது ஆனால் இந்த புத்தக அட்டையில் ஒரு மனிதர் கடற்கரை மணல் வெளியில் ஓடுவது போல உள்ளது.

நிரிழிவு நோய்காரர்கள் தினமும் உடற்ப் பயிற்ச்சி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது அதுவும் சமதளத்தில் ஓடுவதை விட மணல் வெளியில் ஓடுவது அதிக கலோரிகள் கரையும் என்ற ஒரு செய்தியை உணர்த்துவதாக உள்ளது.

ஆசிரியரின் முன்னுரையில் மக்கள் சேவையில் நலம் பதிப்பகத்துடன் இந்த புத்தகம் நாங்கள் எடுத்த வைக்கும் முதல்படி என்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

வியாபார நோக்கம் இந்த புத்தகத்துக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை சர்க்கரை நோய்க்கு புத்தகம் போட வேண்டும் என்றால் இதில் பெரியதொரு சர்க்கரை மருத்துவமனையின் விளம்பரத்தோடு வெளி இட்டு இருக்கலாம். அதை அவர்கள் செய்யவில்லை


இதையே இனிவரும் கடைசி அத்தியாயம் வரை ஆசிரியர் நமக்கு உணர்த்துகிறார்

சர்க்கரை நோயின் கட்டுக்குள் இல்லாமல் இருப்பவர்களுக்கு வரும் பிற நோயின் பற்றிய தக்க விளக்கத்துடன் அந்நோய் பற்றி விளக்குவது அருமை

சர்க்கரை நோய்கட்டுக்குள் வைக்க ஆசிரியர் வைக்கும் ஐந்து கட்டளைகளை

  • சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு
  • நீடித்த உடற்ப் பயிற்ச்சி
  • தீவிர உணவு கட்டுப்பாடு
  • உரிய காலத்தில் பரிசோதனை
  • உடல் பருமனை தவிர்த்தல்

இதில் உள்ள சில முக்கிய அத்தியாயகங்களை கோடிட்டு காட்டியாக வேண்டும் அதி முக்கியமாக

சர்க்கரையால் பாதிக்கபட்டவர்கள் முக்கியமாக படிக்கவேண்டும் இந்த அத்தியாயகங்களை மிக அழகாக கையாண்டு இருக்கிறார்.

ஆசிரியர் கொழுப்பை அடக்க வேண்டும் என்ற அத்தியாயத்தில் கொழுப்பை குறைக்க பல வழிகளை சொல்லிவிட்டு இன்னோரு சின்ன உபாயத்தை சொல்கிறார் பின்பற்ற எளிய வழி

சாய்ந்து உட்க்காரமல் நிமிர்ந்து உட்க்கார்ந்து படிக்கும் போதும்,எழுதும் போதும் ஐந்து விழுக்காடு கொழுப்பு குறைக்கிறது என்று எழுதி இருக்கிறார் நாம் எல்லோரும் பின்பற்ற ஒரு எளிய உபாயம் மிக அருமை.

சர்க்கரை பாதிக்கபட்டவர்களுக்கு மாரைடைப்பு பாதிப்பு மிக அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் மாரைடைப்பு அவர்களை அறியாமலேயே வருகிறது

அதை ஆசிரியர் இவ்வாராக விளக்குகிறார் சர்க்கரை நோய் இதயத்தை விரிவடைய செய்து

இதயம் இயங்கும் நரம்புகளை பாதித்தது விடுவதால் மூளைக்கு வலி சமிக்ஞை போகாது. ஆகவே, வலி தெரியாமல் இதயம் நின்று உயிர் போய்விடும். சர்க்கரை நோயாளிகள் குறிப்பாக இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் இதயத்தை அடிக்கடி இதயத்தையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்பதை அழகாக விளக்குகிறார்

கால்களை காதலியுங்கள்!சர்க்கரைநோயாளிகள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய

அத்தியாயம் சர்க்கரை நோயாளிகள் மிக முக்கியமாக படிக்க வேண்டிய அத்தியாயம் ஏன் என்றால் சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை எடுப்பார்கள்,பரிசோதனை,உடற்ப் பயிற்ச்சி செய்வார்கள் ஆனால் கால்களை சட்டை செய்யமாட்டார்கள் அப்படி இருக்க கூடாது என்பதை இந்த அத்தியாயம் சிறப்பாக விளக்குகிறது.



உடற்ப் பயிற்ச்சி அத்தியாயத்தில் யோகாசனத்தை கையாண்டு இருப்பது மிகவும் பாராட்டுக்கூறியது.



மொத்ததில் இது சர்க்கரை நோயாளிகள் தினம் படித்து அதுபோல் நடக்க ஒரு புத்தகம். சர்க்கரை வராமல் தடுக்க பாதுகாக்க வேண்டிய புத்தகம்.



கடைசியா

பிற்சேர்க்கைகளை சிறு கையேடாக கொடுக்கலாம்
திரிகபின்னலில் என்று வரும் இன் பிற வர்தகள் சுத்த தமிழில் தராமல் பேச்சு தமிழில்லோ அதற்க்கு தகுந்த வார்த்தகளை ஆங்கிலத்தில் அந்த வார்த்தையின் அருகில் தந்திருக்கலாம்


புத்தகம் கிடைக்கும் இடம்



நூலின் பெயர் - சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

ஆசிரியர் - டாக்டர் மருதுபாண்டி

விலை - ரூ.80/-

பக்கங்கள் - 200

வெளியீடு : நலம், நியு ஹாரிசோன் மீடியா, 33/15, எல்டாம்ஸ் சாலை,ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.

தொலைபேசி : 044-42009601/03/04

தொலைநகல்(ஃபேக்ஸ்) : 044-43009701

www.nhm.in
Read More » Read more...

மறுமொழிகள்

லேபிள்கள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP