Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

politics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
politics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிதர்சன வலிகள்

வெள்ளி

என் பெயர் கனகராஜ் துபாய் மாநாகராட்சியில் துப்புவதை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிளாளி இந்தியாவில் நான் dubai municipalty நல்ல சம்பளத்தில்(dhs 800 inr10,000) நல்ல வேலை!

 

நான் ரவி ஒரு பெட்ரோல் பங்க்கில் lube boy அதாங்க (தண்ணீர் விலையை விட இங்கே பெட்ரோல் விலை குறைவு) வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது என்னொட வேலை  

 

காலை உணவு  தினமும் ஒரு அரேபிய பெறியவர் ஒட்டல் முன்பு அவரு கண்ணில்பட 1/2 மணி வெயிலில் நின்னா அந்த பெறியவர் வாங்கி கொடுக்கும் 3 பரோட்டா கொஞ்சம் அஸ்க்கா (சர்க்கரை) காலை பசியை கட்டுபடுத்த

 

அவர் வரவில்லை என்றால் அன்னைக்கு வெறும் பரோட்டாதான் ஆனா வெறும் பரோட்டாவுக்கு அஸ்க்கா (சர்க்கரை) அந்த டீ கடை நாயர் கொடுக்க மாட்டான் அதே பெறியவர் கேட்க்காமல் தருவான்.

 

நாங்க காலை வேலையில் பெட்ரோல் பங்கில் இருக்கும் ஸடோரில் இரவு 12 மணிக்கு expiry date ஆன ரொட்டியோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என் நண்பன் எடுத்து வைத்து தருவான்.(அவன் தந்தது போக மீதம் குப்பைக்கு செல்லும்) அன்றைக்கு எதாவது டிப்ஸ் கிடைத்தால் பக்கத்து ஒட்டலில் 2இட்லி

பெட்ரோல் வாசனையால் முதலில் குமட்டலுடன் வாந்தி வந்தது இப்போது வாந்தி நின்று விட்டது குமட்டல் நிரந்தரம் ஆகிவிட்டது.

 

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அதற்க்கு காரணம் ஒரு “சுலைமானி (arabic black tea) ஆப்ரேட்டர்” (அபிஸ்ல “கட்டங் காப்பி” போட்டு கொடுத்தா அவங்களுக்கு நாங்க வைத்த பெயர்)

இந்த (சு.ஆ) இந்த வேலையை ஒரு மெஷினை இயக்கும் வேலை என்று பொய்  சொல்லி கல்யாணம் பண்ணி கொண்டான்

என்னை ஒரு “அரபான் ஆப்ரேட்டர்”(படத்தை பார்க்கவும்) என்று வத்தி வைச்சு அது ஊரேல்லாம் பத்தி எறிஞ்சதால  யாரும் பொண்ணு கொடுக்கல

single_wheel_barrow-250x250 

இதை ஏன் சொன்னான் தெறியுமா எங்கே நான் முந்தி அவன் வேலையை சொல்லிடுவேன்னு அவனுக்கு பயம்

நான் அவனோட உண்மையான வேலையை சொன்னாலும் உன் யோக்கியதை எங்களுக்கு தெறியும் என்று காரி துப்பாத குறை என்னா சிவப்பு தோல்காரன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு (அவ)நம்பிக்கை

 

எனக்கு திருமணம் ஆகிருச்சு ஆனா 4வருடமா குழந்தை இல்லை அதற்க்கு காரணம் இந்த வேலைதான்  இந்த பெட்ரோல் வாசனையால் என்னோட விந்து அணுக்களை அழித்துவிட்டது

Read More » Read more...

நன்மை விளைவிக்கும் நட்பு

பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில்
இந்த விழா வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல. இது இரு மாநிலங்களின் இதயங்களின் திறப்பு விழா.
எங்களைப் போல விட்டுக் கொடு்த்து நடந்து கொண்டால் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியும் என்பதற்கு உதாரணம் தான் இந்த விழா
1000
இவை எல்லாமே ஒரு நல்ல தொடக்கமாக உள்ளது இதை படிக்கும் போது மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிறது. இரு முதல்வர்களும் மாற்று கட்ச்சியை சேர்ந்தவர்கள் ஆனாலும் அரசியலை தாண்டி இந்த நட்ப்பு பாரட்டல் வரவேற்க்கதக்கது.
எல்லா நட்பிலும் ஒரு காரணம் உண்டு ஆம் இந்த நட்ப்பால் திருவள்ளுவர்,சர்வஞ்னரின் சிலை திறப்புதான் இந்த காரண நட்பு தொடர்ந்தால் நாட்டுக்கும்,மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ராஐசேகர ரெட்டி மறைவு கலைஞர் இரங்கல் மறைவை தொடர்ந்து தமிழக அரசுக்கு விடுமுறை அடுத்த மாநில முதல்வர் மறைவுக்கு விடுமுறை  விடுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்
இந்த நட்பால் பக்கத்து மாநில முதல்வர் மறைந்தால்  விடுமுறை விடுவது எழுதபடாத விதி ஆகிவிட்டது.
இந்த இரு மாநில உறவு கல்வி,கலாச்சாரம்,தொழில் நுட்பம்,வணிகம் என்ற பல்கி பரந்து நன்மை விளைவிக்க வேண்டும்
உ.தா சென்னை மாநகராட்ச்சி ஒவ்வொரு வருடமும் அடுத்த நாட்டின் மாநகராட்ச்சியுடன் இணைக்கபடுகிறதுஅவர்களுக்கு இடையே தொழில் நுட்பம் இன்ன பிற விஷயங்களில் பரிமாற்றம் நடை பெறுகிறது இந்த நிலை மாநிலங்களுக்கு இடையே நடந்தால் நன்மையே
இந்த மாநிலங்களின் நதி,எல்லை பிரச்சனை சுமுகமாக முடியும் இந்த மாநிலங்கள் இணைந்து மத்திய அரசை அணுகி நல்ல பல திட்டங்களை கொண்டு வரலாம்
உ.தா நேரு காலத்தில் கங்கை போன்ற நதிகளை தென் மாநிலங்களுக்கு திருப்பி விடும் ஒரு திட்டம் வரையபட்டது ஆனால் சூத்திரர்கள் இருக்கும் பூமிக்கு புண்ணிய நதிகள் பாயகூடாது என்று எதிர்ப்பு மற்றும் அதனை தொடர்ந்து திட்டம் கைவிடபட்டது
இந்த மாநிலங்கள் இணந்து போராடினால் இந்த திட்டம் நிறைவேறலாம் அதுவரை முஸ்தபா முஸ்தபா பாடலை மாநில முதல்வர்கள் முணுமுணுக்கட்டும்
Read More » Read more...

அதிபரை தொடாத காலணி!

செவ்வாய்

அமேரிக்க அதிபர் பாக்தாத் சென்ற போது பத்திரிக்கையாளர் ஒருவரால் தாக்கப்பட்டது இப்போதைய பற்றிஎரியும் செய்தி அந்தசம்பவம் நடக்கும் போதே அது இணையவழி அது எத்தனை தூரம் பரவப் போகிறது என்பதே எல்லோரின் எண்ணமாக இருக்கும்

ஆனால் இது you tube மூலம் அதி பயங்கரமாக பரவிஉள்ளது இதுவரை 5.5 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர் இதுவரை கிட்டதட்ட 640 இணையதளங்களில் பதியப்பட்டள்ளது இது நேற்று 15/12/08 திங்கட்கிழமை 7 காலை 5 மாலை வரை இந்த கணக்கு பார்க்க வரைபடம்

bush-video-chart

இது பிரபலமாக காரணங்கள்

  • இது கண்ணோளி காட்ச்சியாக பதியப்பட்டது
  • அதிபர் இதை விளையாட்டாக எடுத்துக்கொண்டது

பின்குறிப்பு;

  • எறியப்பட்ட காலணி அளவு 10
  • 2 காலணிகள் எறியப்பட்டது ஒன்றுகூட அதிபர் மேல் படவில்லை
  • இந்த கண்ணோளி காட்ச்சி சில தளங்களில் play ஆகவில்லை
Read More » Read more...

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்ச போடுவாதா!

வெள்ளி

சமிபத்தில் இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் பாகிஸ்தானை சேர்ந்த
தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று பாகிஸ்தானும் தன்பங்க்கு லஷ்கரிதோய்பா தலைவனை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளது தீவிரவாதிகளுக்கு எதிரான மேலும் நடவடிக்கைகளை எதிர்பார்க்காலாம் இது இப்படி இருக்க இந்த திவிரவாத தாக்குதல் பிஜேபி கட்ச்சி மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்கும் அதிகாரியை கொல்லவும்
வழக்கை திசை திருப்பவும் வரும் தேர்தலில் ஆட்ச்சியை பிடிக்கவும் ஆளும் காங்கிரஸ் அரசின் அவப்பெயர் உண்டாக்கவும் நிகழ்த்தப்பட்டது என்று

பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான பிரச்சாரத்தை பரப்பி உள்ளது பிஜேபி இதில் சம்மந்தப்பட்டுள்ளது என்பதற்க்கு அவர்கள் காட்டும் உதாரணம் மிகப் பெரிய நகைச்சுவையாக உள்ளது.இதுதான் அந்த உதாரணம்








இப்படத்தில் உள்ள தீவிரவாதி தனது கைய்யில் அணிந்து இருக்கும் காவி நிற கயிறு கட்டி இருப்பாதால் இந்த தீவிரவாதி பிஜேபி சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள்.
இந்த தீவிரவாதி சுட்டு கொண்றபின்பு அவன் முகம் யார் என்று கண்டு பிடிக்கதவாறு சிதைக்கபட்டது என்று உளறுகிறார்கள்
அவர்கள் தரும் இன்னொரு உதாரணம்



இப்படத்தில் உள்ள தீவிரவாதி தனது கைய்யில் அணிந்து இருக்கும் காவி நிற கயிறு கட்டி இருப்பாதால் இந்த தீவிரவாதி பிஜேபி சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் என்று சொல்கிறார்கள்
மேலும் இவன் முகம் பாகிஸ்தானை சேர்ந்தவனை போல் இல்லை என்றும் இவன் பஞ்சாபை சேர்ந்தவன் என்று சொல்கிறர்கள்

இதற்க்கு ஆதாரமான ஓளிப்படகள்



Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP