Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

experience லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
experience லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஏழுதலை நகரம்

திங்கள்

வாசிக்கும் அனுபவம்

நாம் பொழுது போக்க விளையாட்டு அல்லது வேறு ஏதோ ஒரு கேளிக்கையில் நம்மை முழ்கி நம் மனதை லேசாக்குவோம்.
இதில் விளையாட்டில் இருவர்  அல்லது அதற்றக்கு மேல் நபர்கள் சேர்ந்து செய்வதாக இருக்கும்.
ஆனால்  புத்தகம் படிப்பது ஒருவரே அந்த செயலலில் ஈடுபட்டு அதன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
***********************************************************

ஏழுதலை நகரம்-எஸ்.ராமகிருஷணன் 




Book_13
இந்த புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது அது வரை எஸ் ராவை அவரது இணையதளத்தில் மட்டுமே படிக்கும் நான் முதல் முறையாக இந்த புத்தகத்தை நான் படித்தேன் வியந்தேன்
எஸ் ரா நமது கையை பிடித்து ஒரு மாயலோகத்துக்கு அழைத்து செல்வது போல் இருக்கிறது படிக்கும் போது நீங்கள் அந்த மாயலோகத்தில் இருப்பீர்க்ள படிப்பதை நிறுத்தினால் மட்டுமே நீங்கள் நிகழ் உலகத்தில் வருவீர்கள் என்பது உறுதி.

இதில் வரும் காதாபத்திரம் நம் மனதில் நின்று இருக்கும் காலம் காலமாக (இது போன்ற எஸ் ராவின் இன்னொரு நூலை படிக்காத வரை)

  • இதில் வரும் எலியின் பெயர் “ஞலி அதன் தம்பிகளின் பெயர் நெலி,திலி,கலி,தலி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்கள் நமக்கு சுவரசியமாக உள்ளது.
  • காண்ணாடிகார தெரு இன்னொரு அதியசம் அதில் தொடங்கி அதை பற்றிய suspence கடைசிவரை கொண்டு போவது நன்று இது போன்று பல அற்புதங்களை தாங்கி இருக்கிறது இந்த 231 பக்க நூல்
  • இதில் வரும் நிழ் இல்லாத பறவையின் பெயர் மானீ இதை பற்றி சொல்ல இன்னும் இருக்கு
  • வயது ஆகாமல் வளரும் உயிர் எது? விடை தாயின் வயிற்றில் வளரும் குழந்தை  என்ற களவி போல் இந்த புத்தகத்தில் அள்ள கிடைக்கிறது
நமது குழந்தைகளுக்கு நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டிய மற்றும் தகுதியான நூல் பிறந்த நாள் காணும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதை பரிசாக கொடுக்க வேண்டும்.
இதன் வெற்றியே இந்த நூல் பெறியவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அப்படி பிடித்தால் மட்டுமே இதை போன்ற குழந்தைகளுக்கு நூல் சென்று அடையும்.
நமது குழந்தைகள் இன்னமும் வெளி நாட்டு கார்டுன்களில் முழ்கி இருக்கிறார்கள் இவர்களுக்காக இந்த புத்தகம் இன்னொரு “நார்னியாவாக” இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு திரைப்டமாக எடுக்க 100% தகுதியானது மேலும் ஆங்கில படங்கள் போல உலக அளவில் எல்லோரும் தமிழில் பார்க்க  தகுதியான படமாக இருக்கும்
எஸ் ராவின் இணையதளம் http://www.sramakrishnan.com/
எஸ் ராவின் புத்தகங்கள் http://www.sramakrishnan.com/Books_1.asp

விகடன் பதிப்பம் இதனை வெளிட்டுள்ளது விலை 100ரூ இதன் எழுத்துறுக்கள் குழ்ந்தைக்ள் படிக்க பெறியதாக உள்ளது.

இந்த நூலைபற்றி எஸ்ரா

banner_1
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப்  பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது  இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன். 
Read More » Read more...

இந்த கேள்விக்கு விடை என்ன?

வெள்ளி

ஒரு இளைஞன் பூட்டிய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறான் அந்த அறையில் அவன் எப்படி தற்க்கொலை செய்து கோண்டான் என்பது மட்டும் மர்மமாக உள்ளது ஏன் என்றால் அவன் இருந்த அறையில் எந்த பொருளும் கிடையாது.
ஐன்னல் மூடப்பட்டுள்ளது,மின்சாரம் கிடையாது,அவன் மேல் எந்த ஆடையும் கிடையாது தூக்கு கயிரு மட்டும் அந்தரத்தில் தொங்குகிறது
image 
   அதன் விடை Confusedவெள்ளை எழுத்துக்களை கருப்பாக்கி பார்க்கவும்   
                                        Thumbs-down
     ! அந்த இளைஞன் ஜஸ்கட்டியின் மீது நின்று தூக்கு போட்டான்
Read More » Read more...

மனதை சலவை செய்யும் மரண சடங்கு

சனி

spacer spacerneizvestnyj_mask-of-sorrow-in-magadan
நாம் எல்லோருக்கும் வேண்டிய பொருள்,மகிழ்ச்சி,நிம்மதி,புகழ் இன்னபிற நமது வாழ்வில் கிடைக்குமா? நடக்குமா? என்பது நிச்சயம் கிடையாது ஆனால் மரணம் என்றாவது ஒரு நாள் நிகழும்
என்பது நிச்சயிக்கபட்ட ஒன்று நாம் எல்லோரும் ஒத்த கருத்து உள்ள  ஒரு விடயம் இதற்க்குள் நாம் போட்டி பொறாமை,எமாற்றம்,ஏமாற்றுதல்,ஏமாறுதல் என்று எண்ணிலடங்கா போராட்டம்
இப்படி இருக்கும் நம் மனது சுத்தம் இல்லாமல் மற்றவர் நம்மை கொண்டாட வேண்டாம் நம் செயல் பிறரை துன்புறுத்தாமல் இருந்தால் நன்று.
நாம் உபயோகம் செய்யும் flask 100% சுத்தமாக என்று இருக்குமா? ஏதாவது ஒன்று விதிவிலக்காக இருக்கலாம் விதிவிலக்குகள் என்றுமே விதிமுறை ஆகாது.
அதுபோல நம்மனமும் அழுக்காக உள்ளது flask அதுபோல்தான் flask என்னதான் சுத்தம் செய்தாலும்
சுத்தம் ஆகாது
மரணம நம்  நமது ஆழ்மனதில் இருக்கும இந்த நினைவு ஒரு கனத்த இரும்பு திரை கொண்டு அடைக்கபட்டுள்ளது
அது சினிமா,மது,மாது,கடவுள்,ஆசை,பாசம்,வேலை,வியாபாரம் இன்னபிற சொல்லிகொண்டே போகலாம்
மரண சடங்களுக்கு நாம் விரும்பியோ விறும்பாமலோ செல்லும் போது இவ்வளவுதான் வாழ்க்கை என்று வேகமாக செல்லும் வாகனத்துக்கு சிகப்பு signal போட்டு நிறத்துவது போல சாவை நினைக்க வைக்க ஒரு சந்தர்ப்பம்
Read More » Read more...

தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம்

வியாழன்


bharathi
இது பாரதி வாக்கு இதை உணர்த்துவது போல் இன்று ஒரு சம்பவம் ஒரு திருமண வரவேற்பு அதில் கலந்து கொண்ட நான் சாப்பிட காத்து இருந்தபோது அந்த நிகழ்ச்சியில் அந்த குடும்பத்திற்க்கு சம்பந்தமே இல்லாமல் இரு முகங்கள் ஒருவன் இளைஞன் ஒருவர் நறைத்த தாடி மெலிந்த அவர்   தேகத்தை தாங்கி பிடித்து இருந்தது அவர்கள் இருவரும் நாற்க்காலிக்கு காத்திருந்தார்கள்.

உடன் காலியான மூன்று நாற்காலிகளில் அந்த இருவருக்கும் இடம் கிடைத்தது அவர்களின் அருகில் நானும் அவர்களின் அருகில்தான் உட்கார்ந்தேன் அவர்களின் இலைகளில் வைக்கபட்ட உணவுவகைகள் உடனுக்கூடன் வாயில் நூழைந்தது
திறும்பி பார்த்த எனக்கு    ஏதோ ஒரு  பொறி தட்டியது நானும் அவர்களின் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன் உண்டவர்கள் அனைவரும் எழுந்தாலும் அவர்கள் எழவில்லை திடிர் என்று அவர்கள் இருக்கையில் இருந்த எழுப்பட்டார்கள் அவர்களிடம் சரமாரியாக கேள்வி கணைகள் தொடுக்கபட்டது
அதன் பின்பு சில கைகள் தாக்க தொடங்கியது  அடிவாங்கிய அந்த இளைஞன் அழுகை கலந்த கோபத்தில் நாங்க என்ன தப்பு செய்தோம் ஒருவேளை சாப்ப்பாடுதானே சாப்பிட்டோம் வேறு என்ன தவறு செய்தோம் என்று

என்று கத்தினான் திறும்பவும் அடி பலமாக விழுந்தது அரங்கின் பொருப்பாளர்கள் இருவரையும் தரைதளத்தின் அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்கள தப்பிக்க நினைத்த இருவருக்கும திரும்ப அடி விழுந்தது   இதைகேட்ட அரங்கின் துப்புரவு தொழிலாலி அந்த வயதானவரை தாக்க தொடங்கினான்
இதற்குள் திருமண வீட்டார்கள,வந்தவர்கள எல்லோரும் வாசலுக்க ஒடி வந்துவிட்டார்கள்  திருமண வீட்டார்கள நூறு பேருக்கு கூட இலவசமாக் சாப்பாடு போடுவேன் நீ யாருடா அடிக்க என்று அடிப்பவர்களை விலக்கி விட்டார்கள்
அரங்க பொருப்பாளர்களை திருமண விட்டார்கள திட்டி தீர்தார்கள பொருப்பாளர்கள் இது தண்டிக்பட வேண்டியது ஏதாவது காணமல் போனால் எங்கள் பொருப்பு தானே என்று பொருப்பான வாதம் வைக்கபட்டது அவர்கள் காவல்துறையை தொலைபேசியில் அழைத்தார்கள்
அரங்கத்தின் சேவையை பாராட்ட வேண்டும் துப்புறவு,இலை போடுவது போன்றவற்றை அரங்கத்தின் ஆட்கள் செய்தார்கள் உணவு பரிமாறுவது சமையல் பொருப்பளர்கள கவனித்தார்கள அதனால் எந்த குழப்பம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக அருமையாக நடந்ததை பாரட்ட வேண்டும்    இந்த சம்பவத்தை மாப்பிள்ளை,பெண் வீட்டார்கள் இதை ஒரு அப சகுனமாக எடுக்காமல் இருந்தால் சரி
Read More » Read more...

உன் வழி உன் கையில்

ஞாயிறு

ஒரு வயல் வரப்பில் ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் நேர் எதிரில் சந்திக்கும் போது  அந்த நல்லவன் வரப்பில் இருந்து இறங்கி கெட்டவனுக்கு வழி விடுவான்
வரப்பில் ஒரு வழி வயலில் ஒரு வழி என்று இரண்டு வழி கிடைக்கும்.
அதே வரப்பில் இரண்டு கெட்டவன் சந்தித்தால் இரண்டு பேரும் வழி விட மாட்டார்கள்அதனால் இருவருக்குமே வழி கிடைக்க வாய்ப்பில்லை 
அதே வரப்பில் இரண்டு நல்லவர்கள் சந்தித்தால் இருவருமே வரப்பில் இருந்து  கிழ் இறங்கி ஒருவருக்கொருவர் வழி விட்டு கொள்வார்கள் அதனால் இரண்டு புதிய வழிகள் கிடைக்கும் ஆக மொத்தம் முன்று வழிகள் கிடைக்கும்
கடைசியா
இந்த மாதிரி அழகான பொண்ணு வரப்பு மேல வந்தா 3வழி என்ன எதிர்தாப்புல வர
எலோரும் நான் நீன்ணு வழி கொடுப்பாங்க சும்மா சோக்குங்க மேல உள்ளத கண்டிப்பா யோசிச்சு பாருங்க 

Read More » Read more...

பாட்டும்/பாவமும் நானே!

செல்பேசி சிணுங்கியது எடுத்து பார்த்தா கண்ணதாசன் காரக்குடி என்று caller tune பாட்டு இந்த பாட்டை உங்கள் விருப்ப பாட்டாக்க வேண்டுமா என்று ஓரு பெண் குரல் வேறு மிக புத்திசாலி செல்பேசி நிறுவனங்கள் ஓவ்வொரு முறையும் வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வரும் அதனால் அந்த எண்களை சேமித்து அதில் இருந்து தப்பிக்க நினைத்தாலும்!பயன் இல்லை.


இப்டித்தான் என் தாத்தா கண்ணதாசன் காரக்குடி என்ற பாட்டை caller tune ஆக வைத்து இருந்தார் எப்படி பாட்டை வைத்திர்கள் என்றால் ஓரு பொண்னு போன் பண்ணி பாட்டு வேணுமான்ணு கேட்டுச்சி நம்பரை அழுத்த சொன்னுச்சு அழுத்திட்டேன் என்று வெள்ளெந்தியாக சிரிக்கிறார்


இதுமாதிரி பாதிக்கபட்டவங்க இங்க சொடுக்கி புகார் பண்னுங்க http://www.corecentre.org/
Read More » Read more...

இப்படியும் ஓரு மனிதர்!

வியாழன்

நான் மருத்துவமனை மலேரியா காய்சலுக்கு அனுமதிக்கபட்டு இருந்தேன் அப்போது சரோஜா பாட்டி அறிமுகம் ஆனார் மூட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனும்திக்கபட்டு இருந்தார்.
 அவருடன்பேசி கொண்டு இருந்தபோது அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொன்னார்.
அவருக்கு திருமணம் ஆகி ரொம்ப வருடமாக குழந்தை இல்லை என்றும் அவருக்கு குழந்தை உருவாகி இரண்டு மாதம் தங்கி கலைந்து விடுமாம் இது மாதிரி ஆறு தடவை ஆகி விட்டதாம். அவரும் அவர் கணவரும் ஆசைபட்டு இருந்தும் ஓவ்வொரு முறையும் ஏமாற்றமே! அடைந்தனர்.
Read More » Read more...

மறுமொழிகள்

லேபிள்கள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP