Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

short storey லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
short storey லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அறிவிப்பு……

புதன்

trash1

 

சதாசிவம் யார் வம்புக்கு போகாதவர் ஆனால் வம்புகள் அவரை தேடி வருவது அவரது போதாத காலமா தெறியவில்லை. அது போல் சில நாட்களாக ஒரு தீராத பிரச்ச்னை அவருக்கு வந்தது அது அவருடைய வீடு ஒரு தெரு முனையில் இருப்பது அந்த தெருவில் வசிக்கும் எல்லோருக்கும் குப்பை போட வசதியாக இருந்தது

இது தவிர குப்பை அள்ளும் மாநாகராட்ச்சி ஊழியருக்கு இன்னும் வசதியாக ஒவ்வொரு வீட்டிறக்கு முன்பு நிறுத்தி விசில் அடித்து குப்பை வாங்க வேண்டிய அவசியம் இந்த தெருவில் இல்லை.

இதற்க்கு முடிவு கெட்ட சதா ஒரு அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்தார் (அ.ப)யில் “இங்கு குப்பை போடகூடாது” என்றது முதல் அறிவிப்பு

மறுநாள் காலை விழித்தவுடன் ( அ.ப) பார்க்கிறார் அவருக்கு அதிர்ச்சி மின் விளக்கு கம்பத்தில் (அ.ப) மலைபோல் குவிந்த குப்பையில் மறைந்து விட்டது.

சதா (அ.ப)வை கம்பத்தில் “நாயே இங்கு குப்பை போடாதே” என்று எழுதி சிறிது மேலே தூக்கி கட்டினார்.

அடுத்த நாள் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய வாசகம் சேர்க்கபட்டு இருந்தது “இங்கு நாய்கள் குப்பை போடுவது இல்லை”

சதாவுக்கு கோபம் அதிகமானது ஒரு புதிய (அ.ப)வில் அறிவுகெட்ட நாய்கள் குப்பை போடாதே என்று எழுதினார்.

வழக்கம் போல் “நாய்கள் மற்றும் அறிவு கெட்ட நாய்களும் குப்பை போடுவது இல்லை” என்று எதிர்வினை நிகழ்ந்து இருந்தது.

பொருமை இழந்து சதா “அறிவு இல்லாத மனிதர்களே இங்கு குப்பை போடாதீரக்ள்” என்று எழுதினார்

மறுநாள் அவருக்கு பேர் அதிர்ச்சி காத்து இருந்தது இங்கு அறிவு இல்லாத மனிதர்கள் யாரும் குப்பை போடுவது இல்லை எங்களது வீட்டில் எல்லோரும் படித்து பட்டம் வாங்கியவர்கள் அதிலும் நான் இரட்டை பட்டம் வாங்கி உள்ளேன் என்ற புத்தம் புதிய வாசகம்

இதை பார்க்க சதா இன்னும் எழுந்திருக்கவில்லை.   

Read More » Read more...

அண்ணன்? அக்கா அண்ணன்!

ஞாயிறு

ஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல
இன்று அந்த வீட்டில் யாரோ புதிதாக குடி வந்து இருந்தார்கள் அவர்களின் வீட்டு பொருட்களை உள்ளே  கொண்டு சென்றார்கள்.
ஒரு பேக்கை தூக்கி கொண்டு உள்ளே நூழைந்தவள் சட் என்று ஆனந்தை திரும்பி பார்த்து லேசாக புன்னகை செய்தாள் ஆனந்த் திடுக்கிட்டவனகா திரும்பி விட்டான்.
அந்த பெண் பின்னால் வயதான ஒரு ஆள் அவர் பின்னால் சரியான உயர வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் ஒரு பெண் ஒரு ஆண்
ஓரு அப்பா அவருக்கு மூத்த பெண்னோடு சேர்த்து இரண்டு பெண்கள் ஒரு ஆண் குழந்தை என்று தன் மனதில் கணக்கு போட்டவனாக ஆபிசுக்கு கிளம்ப வாசல் கதவை திறந்தான்.
அவனை பார்த்து சிரித்த பெண் கையில் செம்புடன் சார் இந்தாங்க பால் உங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்கோம்.

என் பெயர் பானு உங்க பெயர்? ஆனந்த் அது என்ன ஆனந்த் ஆனந்தன்னு பெயர் வைச்சா நல்லா இருக்கும் என்றாள். செம்பை வாங்கி வெளியே போய்விட்டாள் ஆபிசுக்கு சென்ற ஆனந்த அந்த  கோப்புகளின் போதையில் அந்த பெண்ணை மறந்து penனால் பரதம் ஆடினான்
வீட்டுக்கு வந்த உடன் அந்த பால் செம்பு அவள் பெயரை மாற்ற சொன்னது அதற்க்கு மேல் அவளை பற்றிய வர்ணனைகள் மனதில் வரவில்லை.
கொடைகானல் மலைகளில் அந்த குளிரில் மூச்சு வாங்க ஓடியவனுக்கு தாகம் எடுப்பது போல அவன் மனதிற்கு மூச்சு வாங்கி அவன் மனம் முன்னே செல்ல மறுத்தது.
கடந்த ஒரு மாதமாக காலை வழக்கமான காப்பி-அவன்ஜன்னல்-வெறும் ஜன்னல்-அவள் சிரித்த நிகழ் படமானது
ஆனந்த இன்றும் தீவிரமாக அந்த பெண் ஏன் சிரிக்கிறாள் என்று யோசித்தான் வழக்கம போல் அவன் மனம் மறுத்தது எந்த காரணம் இல்லாமல்
அவளிடம் பேசி இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவன் மூளை கட்டளை இட்டது ஏன் என்றால் நாளை அலுவலக விஷயமாக கோவா போகிறான்.
ஆனந்தின் இன்னொரு (ஆனந்த் பாதி) மிருகம் பாதி அதற்க்கு ஒரு நல்ல திட்டத்தை தந்தது அவனின் துவைத்த சட்டையை அவன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து எதிர்த்த வீட்டுக்கு (ஏதேச்சைக்காக) பறக்கவிட்டான் வேண்டும் என்றே
இப்போது ஆனந்த் தன் முகத்தை தொலைத்து விட்டு ஏதேச்சையாக பறந்த சட்டையை எடுக்க பிச்சைகாரன் முகத்தை மாட்டி கொண்டு
கதவை தட்டினான் வாங்க உள்ளே வாங்க அவனை அவள் ஆனந்தை பேசவிடவில்லை அவள் சிரித்த வண்ணம் காப்பி குடிக்கிறிங்களா என்றாள்
 
என்னொட சட்டை ஒன்னு உங்க வீட்டுக்கு பின்னால் பறந்து விழுந்து இருக்கு அத கொஞ்சம் தர முடியாமா
அதுவா அந்த மஞ்சள் கலரா அப்பவே எடுத்து வைச்சுட்டேன் இதொ இருக்கு என்று அவன் கைகளில் கொடுத்தாள்
இந்த நிறத்துக்கு பதிலா ரோஸ் கலர் போட்டா உங்க நிறத்துக்கு எடுப்பா இருக்கும் என்றால்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்றான் தாராளமா என்று அடுப்படிக்கு ஒடினாள் ஆனந்த தன் கண்களால் சுற்றி பார்த்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தான்
பதட்டத்தில் வழக்கமாக அவன் கன்னங்கள் இறுகி போனது தண்ணீரை குடித்து அதனை சரி செய்தான்.
ஓரு சந்தேகம் உங்க அப்பா என்ன செய்கிறார் எங்க அப்பா நான் பிறந்த கொஞ்ச நாள்ல இறந்துட்டார்
அப்ப அந்த பெறியவர்? அவர் எனது கணவர்
உங்க அடுத்த கேள்வி நான் எப்படி இவருக்கு மனைவி ஆனேன்னுதானே என்னுடைய அக்காதான் இந்த குழந்தைளை பெற்ற அம்மா ஆனா இப்ப இல்லை அதானால நான் அம்மா ஆகிட்டேன்.

என்னை பாத்து ஏன் அடிக்கடி சிரிக்கிறிங்க அதுவா நீங்க தப்பா எடுக்கலேன்னா ஒன்னு சொல்லவா மீசை வைச்சிங்கனா எங்க அண்ணன் மாதிரி இருப்பீங்க
vikram kandasamy
எங்க அண்ணன் ஒரு 5வருஷத்துக்கு முன்னால் எனக்கு (அக்காவாக) திருநங்கையா மாறி எங்களை விட்டு பரிஞ்சு இருக்காங்க
உங்களை பார்க்கும் போது எனக்கு எங்க அண்ணனை பார்க்கும் ஞாபகம் வருது அதனால் தான் அப்படி என்றாள்.
காலை வழக்கமான காப்பி/அவன் ஜன்னல்/சிரிப்புடன்அவள் ஜன்னல் ஆனந்த் மட்டும் மீசையுடன் இன்று முதல் எப்போதும்
Read More » Read more...

தத்து பிள்ளை

சனி

அருணுக்கு திருமணம்  ஆகி  3வருடம் ஆகிறது ஆனால் திருமணம் செய்ய 5  வருடம் பெண் தேடிய பின்பு தான் இவனுக்கு வரன் அமைந்தது அதற்க்கு காரணம்  அருணின் லட்ச்சியங்கள் தான்
  • திருமணம் செய்தால் மாற்றுதிறனாளிதான் வேண்டும்
  • முதல் குழந்தை தன் குழந்தைதான் ஆணோ/பெண்ணோ
  • அடுத்த குழந்தை பிறந்த குழந்தையின் எதிர்பாலை தத்து எடுக்க வேண்டும்

TVC_art
இதில் முதல் லட்ச்சியம் நிறைவேற  3வருடங்கள் இரண்டாவது 2வருடம் அகிறது மூன்றாவது இன்னும் தெறியவில்லை.
அதற்க்காக   தன் மனைவியுடன் போராட தொடங்கி ஓரு 6மாதம் ஆகிறது அனிதா  இதில் என்ன கஷ்டம் அடுத்த பிள்ளை எப்படியும் பெற போகிறோம் அது நான் சொன்ன மாதிரி இருந்த என்ன?
நான் இதுக்கு முன்னாடி சொன்னதுதான் அது என்னொட குழந்தை மாதிரி இருக்காது அந்த குழந்தை மாதிரி பாசத்தை காட்டாது முடியாது.
அனிதா இப்போ நாம தத்து எடுக்க போவது ஒரு பெண் குழந்தையை ஒரு “பெண்ணே பெண்ணுக்கு உதவகூடாத? பெண்ணே  பெண்ணுக்கு  எதிரியா!”

நீங்க என்ன சொன்னாலும் சரி இந்த பதில்ல எந்த மாற்றமும் இல்லை நீங்க இந்த ஆணியை புடுங்காம வேற ஆணியை போய் புடுங்க முயற்ச்சி பண்ணுங்க சரியா! என்று என்று அந்த ஏசி  அறையை உஷ்ணமாக்கினாள்

அந்த பாலை சக்கரை போட்டு குழந்தைக்கு கொடுங்க என்று வாய் வழி உத்தரவு காற்றை கிழித்து பின்பு அருணின் காதை கிழித்த்து அதை கொடுத்தாச்சு அழுகையை நிறுத்தவில்லை
சக்கரை போட்டு திரும்ப கொடுங்க  சக்கரை போட்டவுடன்  இன்றைய முதல் அழுகை நிறுத்தபட்டது அனிதா வழக்கம் போல் வென்றாள்
ஒவ்வொரு அறையாக தேடியவனுக்கு வாசல் கதவின் அருகே அனிதா ஒரு குட்டி பூனைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள்
பிறந்து 4நாள் ஆகி இருக்கும் தன்னொட தாயை பிறிஞ்சுடிச்சு போல பால் கொடுத்தா நல்லா குடிக்குதுங்க
அய்யோ குக்கர் விசில் அடிக்குது  சொல்ல கூடாதா என்று பூனையை விட்டு விலகினாள்
மறு நாள் பேப்பர் எடுக்க போன அருணுக்கு பூனை காலை காட்ச்சி கொடுத்தது.
மனைவியை தொந்தரவு செய்யாமல் பால் கொடுத்தான் பூனை மொர்ந்து பார்த்து விட்டு குடிக்காமல் நின்று கொண்டது
பின்னால் திறும்பியனுக்கு  குழந்தையுடன் நின்ற அனிதா எங்கே போனிங்க? என்றாள் குழந்தை அழுகுது என்றாள்
images
இங்கே பாரு பூனை பால் கொடுத்தா குடிக்கல தள்ளுங்க நான் கொடுகின்றேன் என்றாள்.
அனிதா பூனையின் தலையை தடவி அரவனைத்த உடன் பூனை பாலை நக்க தொடங்கியது.
அனிதா காப்பி கொடேன் உன் கிட்டே ஒன்னு பேச வேண்டும் முதலில் சொல்லுங்க இல்லை சொன்னா நீ காப்பி கொடுக்க மாட்டாய் சரி இந்தாங்க காப்பி
குடித்தவன் தான் சொல்ல வந்ததை அரம்பித்தான் அனிதா காலையில் தாயை பிறிந்த பூனை நான் கொடுத்த பாலை கூடிக்கவில்லை ஆனா நீ கொடுத்த உடன் குடித்து விட்டது.
தாயில்லத பூனையே ஒருநாள் நீ கொடுத்த பாலை குடிக்க உன்கிட்ட ஓடி வருது நாம தத்து எடுக்கும் குழந்தையும் உன்கிட்டே பாசமா இருக்காதா!
மொளனமாகி அனிதா ஜன்னல் கதவை திறந்து காலை சூரியனை வரவேற்றாள்       
Read More » Read more...

தொலைந்த வீடு

செவ்வாய்

கிருஷ்ணன் மூன்று வேளை வயிற்றில் எறியும் அக்னியை அடக்கி தினமும் காலையில் அவன் வீட்டு கக்கூஸை தினமும் அசுத்தம் செய்ய ஒரு கடையில் அடிமை சேவகம் செய்கிறான். சயங்காலம் ஒரு டீ வடையுடன் தன் அடுத்த வேளை அக்னியை சிறிது அடக்கி பஸ்சுக்காக காத்து இருந்தான்.

mental-health-problem

தன் முதுக்கு பின்னால் கூர்மையான ஏதோ ஒன்று குத்துவது போல் உணர்ந்தான் திரும்பினால் நிமிர்ந்த தொந்தியுடன் கவிழ்ந்த தலைக்கு கிழ் உள்ள வாய் கோணலாகி கிருஷ்ணனிடம் எதோ சொல்ல வந்தது.

 

கடைசியாக அந்த வாயில் இருந்து சார் சார் மயிலாப்பூர் பக்கத்தில் உள்ள ஏரியா சொல்லுங்க என்று திக்கி திக்கி வார்த்தைகள் வந்தது.

ராயப்பேட்டை,மந்தைவெளி,மந்தைவெளிபாக்கம் என்று அடுக்கினான் அதற்க்குள் திரும்ப திக்கி தலையை வேகமாக ஆட்டி இல்லை என்றான்!

எதுக்கு இதை கேட்க்கிற ஒஒஒண்ணும் இல்லிங்க என்னோட வீடு மறந்து போச்சு என்னது வீடு மறந்து போச்சா!

சரி உன்னோட வீட்டில் இருக்கிரவங்க மொபைல் நம்பர் கொடு நான் கால் பண்ணி அவங்ககிட்டே கேட்கிறேன்.

இஇஇல்லை சார் உங்களுக்கு எதுக்கு அந்த தொந்தரவு நான பார்த்துகின்றேன் என்று அந்த கூட்டத்தில் கறைந்த போனான்.

கிருஷணனுக்கு பஸ் வந்தது ஏறி போனான் 10 நிமிடம் கடந்து ஒரு பஸ் ஸடாப்பிங்கில் நின்றது ஜன்னல் பக்கமாக பார்த்தவனுக்கு  அதே பையன் தன் கையில் உள்ள பேப்பரை கத்திபோல் மடக்கி

ஒருவரின் முதுகை கூத்தி கொண்டு இருந்தான் அந்த நபரும் அவனின் கேள்விகளுக்கு விடை கொடுத்து கொண்டு இருந்தார். கிருஷ்ணன் திரும்ப அவனை பார்த்தால் விசாரிக்க நினைத்தான்

அதற்க்குள் வயிற்றில் அக்னி எறிய தொடங்கியது.

Read More » Read more...

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……

வெள்ளி

நாம் இதுவரை பிறரை தவராக அல்லது நம்மை யாரும் தவறாக புறிந்து கொள்ளும் சுழ்நிலையால் நாம் சிலரை ஓதுக்குகிறோம் அல்லது நம்மை சிலபேர் ஓதுக்கிகிறார்கள்
அது பற்றிய ஓரு மின் அஞ்சலில் வந்த கதை.


******************************************************************************************



உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே
ஆழப்படுகின்றன
. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.


ஒரு
இராணுவ வீரனும்
, ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?


ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.


வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.


கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"


அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"
தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"


வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.


மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"


திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.


வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.


இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?


எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.


புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.


தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.


எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!



Read More » Read more...

ப்ளூ பால்ஸ் வலி.....!

வியாழன்


 அருண் 6அடி உயரமான கதவு இருந்தும் குனிந்த முதுகோடு உள்ளே போரான் அவனுக்கு  ஹெல்மேட் போடும் போது மட்டும் தலைகணம் இருக்கும் இருந்தும் ஏன் போகிறான்? உள்ளே போயி பார்போம் வாங்க.

/*................................................................................................................................................................


அம்மா வலிக்குதே  பிரியா பிரியா எங்கே இருக்க வலி தாங்க முடியல நான் குளிக்கிறேன் அபிசுக்கு டைம் ஆகுது வலி வந்தா முதல் போயி படுங்க
  உள்ளே வந்து தலையனையில் சாய்ந்தவனுக்கு வலி உயிர் போனது. வலிக்காண காரணத்தை யோசித்தவாரே
தொலைகாட்ச்சியை தட்டினான் ஒரு அலோபதி டாக்டர் சுய இன்பம் தவறு இல்லை என்று கத்தி கொண்டு இருந்தார் இன்னோரு சேனலில் சுய இன்பம் தவறு என்று வைத்தியர் தாத்தா தன் பேரன்களுக்கு அறிவுரை கூறி     கஸ்டமர்களை பிடிக்க முனைந்தார்.


 தலைக்கு கீழ் இருந்த தன் லேப்டாப்பை எடுத்து கூகுலில் தன் முதுகு வலிக்கு விடை தேடினான் அவன் வலிகளை ஒத்த தீர்வு கிடைத்தது பிரியா என்று ஓங்கி குரல் கொடுத்தான் வலி இன்னும் அதிகமானது அடுத்த குரலுக்கு வந்த பிரியாவிடம்  லேப்டாப்பை கொடுத்து பார்  என்றான்.

  டேய் நேத்து நைட்டு சத்தியமா வந்தேன்டா நீதான் தூங்கிட்டே  அவன் தலைக்கு மேல் காற்றை ஓங்கி அடித்து சத்தியம் செய்தால் உங்க ஊர்ல இதுதான் சத்தியமா?


இல்லடா பொய் சத்தியம் போட்டு உனக்கு ஏதாவது ஆயிட்டா? சரி சரி அதுல வலிக்கு என்ன பண்ணனும்னு போட்டிருக்குல்லா போய் முதல்ல அத பண்னு கர்மம் டேய் வரும்போது  குளிச்சுட்டு வாடா.


வெளியே வந்த அருணுக்கு பிரியா கையால் அரஞ்சு ஜூஸ் வந்தது முதல் முறையாக இப்ப எப்படி இருக்கு பராவாயில்லை சரி ஆபிசுக்கு கிளம்பு நேரம் ஆகுது.
வாக்கிங் போன அருணினின் அப்பா இடுப்பை பிடித்து கொண்டே சோபாவில் சாய்ந்தார் டேய் அருண் நீதான இன்டர்னெட் டாக்டர் ஆச்சே இந்த வலிக்கு காரணத்தை தேடி வைத்தியம் சொல்லேன்டா உங்க அம்மா இருக்கிரவரைக்கும் இந்த தொல்லை இல்லைடா.

இதை கேட்ட பிரியா அருண் வலியில் துடித்தது போல அதற்கு மேலாக சிரித்தாள் அப்பா அதெல்லாம் முடியாது எங்களுக்கு ஆபிசுக்கு நேரம் ஆச்சு சாயங்கலாம் பார்க்கலாம்
வர்ரோம் என்று ஹெல்மேட்டை மாட்டியபடி பைக்கை நோக்கி போனான்.
இணைப்பு 





Read More » Read more...

மறுமொழிகள்

லேபிள்கள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP