Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிதர்சன வலிகள்

வெள்ளி

என் பெயர் கனகராஜ் துபாய் மாநாகராட்சியில் துப்புவதை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிளாளி இந்தியாவில் நான் dubai municipalty நல்ல சம்பளத்தில்(dhs 800 inr10,000) நல்ல வேலை!

 

நான் ரவி ஒரு பெட்ரோல் பங்க்கில் lube boy அதாங்க (தண்ணீர் விலையை விட இங்கே பெட்ரோல் விலை குறைவு) வண்டிகளுக்கு பெட்ரோல் போடுவது என்னொட வேலை  

 

காலை உணவு  தினமும் ஒரு அரேபிய பெறியவர் ஒட்டல் முன்பு அவரு கண்ணில்பட 1/2 மணி வெயிலில் நின்னா அந்த பெறியவர் வாங்கி கொடுக்கும் 3 பரோட்டா கொஞ்சம் அஸ்க்கா (சர்க்கரை) காலை பசியை கட்டுபடுத்த

 

அவர் வரவில்லை என்றால் அன்னைக்கு வெறும் பரோட்டாதான் ஆனா வெறும் பரோட்டாவுக்கு அஸ்க்கா (சர்க்கரை) அந்த டீ கடை நாயர் கொடுக்க மாட்டான் அதே பெறியவர் கேட்க்காமல் தருவான்.

 

நாங்க காலை வேலையில் பெட்ரோல் பங்கில் இருக்கும் ஸடோரில் இரவு 12 மணிக்கு expiry date ஆன ரொட்டியோ அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என் நண்பன் எடுத்து வைத்து தருவான்.(அவன் தந்தது போக மீதம் குப்பைக்கு செல்லும்) அன்றைக்கு எதாவது டிப்ஸ் கிடைத்தால் பக்கத்து ஒட்டலில் 2இட்லி

பெட்ரோல் வாசனையால் முதலில் குமட்டலுடன் வாந்தி வந்தது இப்போது வாந்தி நின்று விட்டது குமட்டல் நிரந்தரம் ஆகிவிட்டது.

 

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அதற்க்கு காரணம் ஒரு “சுலைமானி (arabic black tea) ஆப்ரேட்டர்” (அபிஸ்ல “கட்டங் காப்பி” போட்டு கொடுத்தா அவங்களுக்கு நாங்க வைத்த பெயர்)

இந்த (சு.ஆ) இந்த வேலையை ஒரு மெஷினை இயக்கும் வேலை என்று பொய்  சொல்லி கல்யாணம் பண்ணி கொண்டான்

என்னை ஒரு “அரபான் ஆப்ரேட்டர்”(படத்தை பார்க்கவும்) என்று வத்தி வைச்சு அது ஊரேல்லாம் பத்தி எறிஞ்சதால  யாரும் பொண்ணு கொடுக்கல

single_wheel_barrow-250x250 

இதை ஏன் சொன்னான் தெறியுமா எங்கே நான் முந்தி அவன் வேலையை சொல்லிடுவேன்னு அவனுக்கு பயம்

நான் அவனோட உண்மையான வேலையை சொன்னாலும் உன் யோக்கியதை எங்களுக்கு தெறியும் என்று காரி துப்பாத குறை என்னா சிவப்பு தோல்காரன் பொய் சொல்லமாட்டான்னு ஒரு (அவ)நம்பிக்கை

 

எனக்கு திருமணம் ஆகிருச்சு ஆனா 4வருடமா குழந்தை இல்லை அதற்க்கு காரணம் இந்த வேலைதான்  இந்த பெட்ரோல் வாசனையால் என்னோட விந்து அணுக்களை அழித்துவிட்டது

Read More » Read more...

5 வயது சிறுமியை மிருகத்தனமாக அடித்த 2 போலீசார் சஸ்பெண்ட்

புதன்

feb09_04up

லக்னோ: உபி மாநிலம் எடாவா நகரில் திருட்டு வழக்கில் 5 வயது சிறுமியை கைது செய்து மிருகத்தனமாக அடித்து துன்புறுத்திய போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை கோமல் என்ற சிறுமி கடை ஒன்றில் 280 ரூபாய் திருடியதாக போலீசார் கைது செய்தனர். சிறு குழந்தை என்று கூட பாராமல் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என நினைத்த சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 போலீசார் அவரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
தலை முடியைப் பிடித்து தூக்கியும், தலை முடியைத் திருகியும், கொடூரமாக நடந்து கொண்ட போலீஸாரின் செயல் அதை நேரில் பார்த்த பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதை அங்கு இருந்த மற்ற 6 போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர்.
இதுகுறித்து டிஜிபிக்குத் தகவல் போனது. இதையடுத்து சிறுமி என்றும் பாராமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர் சந்திரபன் சிங், எஸ்.ஐ ஷாம்லால் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், நான் எனது மகளை 15 ரூபாய் கொடுத்து கடைக்கு அனுப்பினேன். அங்கு வேறு யாரோ பணத்தை திருடியதற்கு எனது மகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

மிருகங்கள் தங்களது ஒத்த மிறுக்த்தை தன்க்கு தீங்கு இழைத்தால் ஒழிய துன்புறுத்துவது இல்லை

மிறுகம் ஆபத்து வந்தால் எதிரியை தாக்கும் இனப்பெருக்கத்துக்கு மட்டுமே ஒன்று கூடும்.இதை செய்து இருக்கும் இந்த மாக்களுக்கு உணர்வுகளுடன் விளையாடிய இவர்களுக்கு

இந்த சிறு குழந்தை அடிமட்ட மனிதர்களிடம் மட்டுமே இவர்களின் அதிகாரம் பாயும் சாதாரண வார்டு கவுன்சுல்களிடம் கூட  இவர்களின் அதிகாரம் நாயின் வால் போல் சுருண்டு விடும்

இவர்களின் காக்கி உடை மட்டுமே இவர்களுக்கு அதிகாரத்தை அளிக்கிறது இதே செயலை காக்கி உடை இல்லாமல் செய்ய தைரிய்ம் இருக்காது

இவர்களை நாய் என்று கூட திட்டகூடாது அது கூட தன் எஜமான்னுக்கு நன்றியோடி இருக்கிறது இவர்கள் நமது வரிபணத்தில் நம்மையே துன்புறுத்தும் நயவஞ்சகர்கள யார் இவர்களுக்கு தண்டனை அளிப்பது என்ன தண்டனை அதிகபட்ச்சமாக வேலை பறிபோகும். அதை விட இவர்களை உயிருடன் எறித்தால் இனியாரும் இது போன்ற காரியத்தில் யாரும் ஈடுபடமாட்டார்கள்

 

 

Read More » Read more...

வலையில் விழுந்த முகம்மது குட்டி!

செவ்வாய்

இந்தியில் நட்சத்திர நடிகர்கள் எல்லோருமே தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்ய வலைப்பதிவு தொடங்குவது வழக்கமாகிவிட்டது.
குறிப்பாக ஆமீர்கான், அமிதாப் மற்றும் ராம்கோபால் வர்மாவின் வலைத் தளங்கள் மிகப் பிரபலம். தன்னுடைய வலைத் தளத்தில்தான் ஷாரூக்கை மறைமுகமாக 'நாய்' எனக் குறிப்பிட்டு ஆமீர் எழுதியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
இப்போது ப்ளாக் எழுதும் ஆர்வம் தென்னிந்திய நடிகர்களையும் பிடித்துக் கொண்டுள்ளது.
மலையாளத்தின் மெகா ஸ்டார் எனப்படும் மம்முட்டியும் இப்போது ப்ளாக் எனப்படும் வலைத்தளம் ஒன்றை துவங்கியுள்ளார். Mammootty with Kanika

ஐ அம் மம்மூட்டி.பிளாக்ஸ்பாட்.காம் (www.iammammootty.blogspot.com) என்ற மலையாள வலைப்பதிவை துவக்கி உள்ள அவர், இதில் அரசியல் சமூகம் குறித்த தனது கருத்துகளை எழுதுகிறார். ஜனவரி முதல் தேதி தொடங்கப்பட்ட இதில் முதலாவதாக 'அரசியலில் பணம்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
அரசியலில் பணம் எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை தனது கட்டுரையில் விவரித்துள்ளார் மம்முட்டி. இனி வாராவாரம் இதுபோன்ற கட்டுரைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'பல நேரங்களில், பல சமூகக் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அப்போதெல்லாம் இந்த மாதிரி வலைத் தளத்தில் எழுதுவது சுலமானது, வசதியானது', என்கிறார் மம்முட்டி. விரைவில் இந்த ப்ளாக்கின் ஆங்கில வடிவத்தையும் துவங்கப் போகிறாராம்.
தமிழில், சொந்தமாக கட்டுரை எழுதும் அளவுக்கு நமது ஸ்டார்களுக்கு பொறுமை கிடையாது. மோகன்ராம் என்ற நடிகர் மட்டும் அவ்வப்போது சில ஆங்கிலக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
விக்ரம், விஜய் போன்ற மற்ற நடிகர்கள் தங்களுக்குக்கென்று தனி இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ளனர்.
நடிகர்களில் ரஜினிக்கு மட்டுமே அரை டஜன் இணைய தளங்கள் செயல்படுகின்றன. ஏராளமான ப்ளாக்குகளை அவரது ரசிகர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட ரஜினி ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!!.
அஜீத்துக்கு இரு தளங்கள் உள்ளன. மற்ற நடிகர்களுக்கு பிரபல வெப்சைட்டுகள் தளங்களை உருவாக்கித் தந்துள்ளன. இதில் அவர்களது பங்களிப்பு எதுவுமில்லை.

Read More » Read more...

மாமாவுக்கு அல்வா கொடுத்த அமேரிக்கா!

திங்கள்

இந்தியாவின் அயல் நாட்டு கொள்கையின் தந்தை ஐவகர்லால் நேரு. அவர்தான் பஞ்சீல கொள்கையை சீன பிரதமர் சூயன்-லாய்  இந்தேனேஷிய பிரதமர் சுகர்னோ,எகிப்து ,பிரதமர்நாசர் ஆகியோர் இணைந்து 1955-ம் ஆண்டு பாண்டுங் என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் வரையறுக்கபட்டன


 
  1. எல்லாநாடுகளும் சமாதானமாக வாழவேண்டும்
  2. வலிமைமிக்க நாடுகள் வலிமை குறைந்த நாடுகளை துன்புருத்த கூடாது
  3. பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடகூடாது.
  4. பிறநாடுகளுக்கு உதவி செய்தல்
  5. பிரேதேச ஒற்றுமையை பாதுகாத்தல் இந்த 5 கொள்கைகளே பஞ்சீல கொள்கைகள் ஆகும்.
இந்த கொள்கைகள் எல்லாம் நம்ம பள்ளி புத்கத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது.

இந்த கொள்கைக்கு நேர்மாறாக நடப்பது சாட்ச்சாத் அமேரிக்காதான்
  • தடைசெய்யபட்ட ஆயுதங்கள் இருப்பதாக ஈராக் மீது போர் 
  • சாதாம் உசேனை கொண்றது
  • பின்லேடன் போன்றவர்கள வளர்த்துவிட்டு செ-11 பிறகு பயங்கரவாத்துக்கு எதிரான போர் என்று பொய் கோஷம் போடுவது
  • உலகதில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் நாங்க காரணமானவர்கள கண்டுபிடிக்க உதவுறோம் என்று கூச்சல் போடுவது
  • இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையில் தலையிட துடிப்பது
இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

கடைசியா
  • பிடல்காஸ்பிரோ அமேரிக்காவை எதிர்த்து அமேரிக்காவில் இருந்து வர சர்க்கரை வேண்டாம் அதனால் இனி மேல் யாரும் சர்க்கரை சாப்பிட வேண்டாம் மக்களுக்கு அறிவுறித்தானார்
  • ஆனா மும்பை தீவிரவாதி தாக்குதல் விசாரணை அறிக்கையை படிச்சுகாட்ட உள்துறை அமைச்சர்  அமேரிக்கா செல்கிறார்
Read More » Read more...

மர்மயோகி அதற்க்கு முன்பு?

வியாழன்

கமலின் மர்மயோகி தசவதாரம் பின்பு கமல் நடிக்க போகும் அடுத்த படம் என்று நாம் எல்லோருக்கும் தெறிந்த ஒன்று.இந்தபடம் கமலஹாசன் இயக்க போகிறார் இது ஓரு மிகப் பெரிய பொருட்செலவில் படமாக வரப் போகிறது.
ஆனால் அதற்க்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு முன்பு wednesday என்ற இந்திபடம் கமலஹாசன் நடிக்க போகிறார் இந்தியில் இந்த படத்தில் நஸ்ருதின்ஷா மற்றும் அனுபம்கேர் இணைந்



து நடித்தார்கள்
 1








இந்திபடத்தின் தமிழ்பதிப்பில்  அவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இணைந்து நடிக்க போகிறார்

 Kamal Hassan_best Director09mohanlal_in_sholay.25120705_std
Read More » Read more...

உலக அழகி யாரு

வெள்ளி


Parvathy Omanakuttan

நாளை மிஸ்வேர்ல்ட் இறுதிச் சுற்று-வெல்வாரா பார்வதி ஓமனகுட்டன்?

2008ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று நாளை ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் சார்பில் கேரளத்தைச் சேர்ந்த பார்வதி ஓமனக்குட்டன் பங்கேற்றுள்ளார்.

ஒரு காலத்தில் உலக அழகிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த மிஸ் வேர்ல்ட் பட்டங்களும், மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களும் ரீட்டா பெரைரா மூலம் இந்திய அழகிகளுக்கும் வாய்த்தது. ஆனால் சுஷ்மிதா சென்னுக்குப் பிறகுதான் நிறைய இந்திய அழகிகள், சர்வதேச அழகிககளாக சர்வ சாதாரணமாக உருவெடுக்க ஆரம்பித்தார்கள்.

1966ல் ரீட்டா பெரைரா பட்டம் பெற்ற பின்னர் 94ல் ஐஸ்வர்யாவும், 97ல் டயானா ஹைடனும், 99ல் யூக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ராவும் மிஸ் வேர்ல்ட் ஆனார்கள்.


இந்த நிலையில் மிஸ் வேர்ல்ட் 2008 பட்டப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டுள்ள பார்வதி ஓமனக்குட்டன் இந்த வரிசையில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜோஹன்னஸ்பர்க் நகரில் இறுதிச் சுற்றுப் போட்டி நடக்கிறது. இதில் 21வயதாகும் பார்வதியும் பங்கேற்றுள்ளார்.

தான் வெற்றி பெறுவது உறுதி என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பார்வதி. இதுகுறித்து பார்வதி கூறுகையில், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். நமது நாட்டின் பெருமையும் இதில் அடங்கியுள்ளது. அதை உயர்த்திப் பிடிப்பதில் ஆர்வமாக உள்ளேன்.

மிஸ் இந்தியா போட்டியில் வென்றது முதலே நான் மிஸ் வேர்ல்ட் போட்டிக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகி விட்டேன். எனது தோற்றம் முதல் அனைத்து அம்சங்களிலும் நான் முக்கிய கவனம் கொடுத்து பயிற்சி பெற்றுள்ளேன்.

போட்டியை சந்திக்க தேவையான அழகும், அறிவும், மன வலிமையும் என்னிடம் உள்ளது. இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட முடிந்தவரை பாடுபடுவேன் என்கிறார் பார்வதி.

மிஸ் வேர்ல்ட் பட்டம் தவிர வேறு சில ஆசைகளும் பார்வதிக்கு உள்ளது. அது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்புவது. ஹ்ரித்திக் ரோஷன் முதல் சல்மான் கான் வரை அத்தனை டாப் ஸ்டார்களுடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்று படு ஆர்வமாக உள்ளாராம்.

பார்வதியுடன் 109 அழகிகளும் போட்டியில் உள்ளனர். ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள சான்டான் கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியை நாளை இரவு 8.30 மணி முதல் ஜீ கபே டிவி நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

என்ன மாதிரி சிலபேருக்கு இன்னமும் இவங்கதான் உலக அழகி img1



இல்ல இல்ல இவங்கதான் img2 இல்லிங்க ரெண்டுபேருமே ஒருத்தருதாங்க





Read More » Read more...

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP