Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

மான் கராத்தே

வெள்ளி

மான்கராத்தேன்னா யாருக்காவது தெரியுமா! அதபத்தி தெரிஞ்க்கிறதுக்கு முன்னாடி மான்பத்தி பாத்தி தெரிஞ்சிக்கணும்

250px-White-tailed_deer

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த குளம்புள்ள ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடே (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூஸ் அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூஸ், 2 மீட்டர் உயரமும் 540 - 720 கிலோ.கி (kg) (1200 - 1600 பவுண்டு (lbs)) எடையும் உள்ள பெரிய விலங்காகும்.

மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ் இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.

இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது

இப்ப மான்கராத்தேன்னா! என்னனு சொல்றேன் யாரவது நம்ம அனுமதி இல்லாம நம்ம மேல கைய்ய வைச்சா நாலு காலு பாச்சல்ல தெரிச்சு ஒடுறதுதான் மான் கராத்தே வெற ஒண்ணும் இல்லிங்க யாரும் கடுப்பாகதிங்க!

2 comments:

யூர்கன் க்ருகியர் சொன்னது…

மாஸ்டர்,, கத்துகொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.:)

இந்த அரிய வகை கராத்தே-வை ஏதோ உங்கள மாதிரி சில பேர் இருக்கிறதாலதான் மத்தவங்க தெரிஞ்சுக்க முடியுது.

ஆட்காட்டி சொன்னது…

எற்கனவே பழகி இருக்கம்ல.

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP