Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

தனி ஈழம் தேவை ஒரு உலக ஆதரவு

சனி

இலங்கை பிரச்சனையின் எனக்கு அறிமுகமானது எனது பத்து வயதில் நான் பார்த்த இலங்கை பற்றிய ஓரு slide show முலமாக அப்போது slide show விட அந்த projector பார்க்கதான் ஆர்வம் இலங்கையில் என்ன கொடுமை நடக்கிறது என்று போட்டார்கள் லேசாக ஞாபகம் உள்ளது பின்பு ஓரு மூத்த நண்பர் வழியாகயாக தெறிந்து விரிவாக கொண்டேன்.
clip_image001
அப்போதேல்லாம் விடுதலைபுலிகள் எங்கள் நகரத்தில் அருகில் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் திரட்டியது இன்னமும் ஞாபகம் உள்ளது.
எல்லா திராவிட தலைவர்களும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக
இருந்தார்கள்.

இந்தியா இலங்கை போரை நிறுத்த முடியுமா! இதே இந்தியா குஐராத் கலவரத்தில் உலக நாடுகள் தட்டி கேட்ட போது இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை என்று பதில கொடுத்தது இந்தியா!
ஈழ விடுதலை கிடைத்தால் காஷ்மீரில்,தமிழ்நாடு,அஸ்சாம் இங்கெல்லாம் தனிநாடு கொள்கை வலுக்கும் இதனால் இந்தியா நிலைபாடு கேள்விக்குறியே!
இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான உள் நாட்டுப் போர், நாட்டின் இயல்பு நிலையைக் குழப்பியுள்ளது. நார்வேயின் அனுசரணையோடு 2002 இன் முற்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கை எழுத்தானது.
இது அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்திய போதும், பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கை எழுத்துஆன போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது போர் மீண்டும் தொடங்கியது
மேலும் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த பிரச்சனை நம் தமிழக தலைவர்கள் சொல்வது போல் உடன் நிறுத்த முடியுமா!
இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டாம் நல்ல விஷயம் இது தமிழ்நாடு இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு முழுவதும் பரவ வேண்டும்
உலக நாடுகள் இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வரவேண்டும் உலக தாதா அமேரிக்கா இந்த விஷயத்தில் ஒன்றும் செய்தது போல் தெரியவில்லை.
உலக தாதா அமேரிக்கா திரிகோணமலையில் உளவுபார்க்க தன்னுடைய கண்காணிப்பு கோபுரத்தை நிறுவதற்க்கு சிங்கள அரசு ஆதரவு தேவை அதற்கு இலங்கை போர் நடக்க வேண்டும் மேலும் இங்கு மற்றும் காஷ்மீரில் நடக்கும் ஆயுத போராட்டம்
உலக தாதா அமேரிக்காவில் ஆயுதம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபம் இந்த போர் நின்றால் அவர்களுக்கு நஷ்டம் அதனால் இவர்களுக்கு எங்காவது ஆயுத போராட்டம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்
கடைசியாக
யுதர்களுக்கு நாடே கிடையாது அதனால் உலகம்முழுவதும் பரவிகிடந்தார்கள் அவர்கள் ஒன்று பட்டாதால் இஸ்ரேல் உருவானது உலக தமிழ்கள் ஒன்றுபடுவோம் ஈழத்தை மீட்எடுப்போம்
இலங்கை பிரச்சனை பற்றி தெறிந்துகொள்ள அதற்கு இணையத்தில் எனக்கு கிடைத்த கட்டுரைகளை வரிசைபடுத்துகிறேன்
முதலில் இலங்கை பற்றி தெறிந்து கொள்ள
தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதங்களை விட அறப்போர்கள் அதிகம் உதவாதா?
நான் இப்போதும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறேன் -திருமா
ஈழத்தை உருவாக்குவோம்: சீமானின் எழிச்சி உரை
இன்னும் மேலதிக விபரங்களுடன் மறுபடியும் எழுதுவேன்
டிஸ்கி: ஏதோ என்னால் முடிந்தவை தொகுத்து உள்ளேன் இதில் எதும் தவறு இருந்தால் சுட்டிகாட்டவும்

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP