Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

வெயிலுக்கு டிமிக்கி கொடுக்க

வெள்ளி

அடிக்கிர இந்த அக்னி நட்சத்திர வெயில்ல இரவு நேரத்தில் தூங்குவது மிகவும் கடினமாக உள்ளது
பகல் அலுவலகத்தில் ஒசியில் ac-ல இருப்பதால அங்க அந்த தொல்லை இல்லை hot ஆன இரவு நேரத்தை cool மாத்த சில அஜால் குஜால் ஜடியா பார்போமா
முதலில் நம்ம கணியில் இருக்கும் wall paperயை உடனடியா மாத்தனும் எதாவது நமிதா போட்டோ இருந்தா உடனடியா தமன்னா போட்டாவா மாத்துங்க
            imageThumbs-downimage
நமிதா போட்டோவை டேலிட் பண்ணாமா வைங்க குளிர் காலத்துக்கு உதவும் தமன்னா ஏன் வைக்னும்னு சொல்றேன்.
  • தமன்னா பார்த்தாலே இயற்க்கையாக cool எந்த make up இல்லாமல்
  • அவஙுகள பார்த்தாலே ice creame வெளியில் எடுத்தா ஒரு புகை வரும் பாருங்க அது மாதிரி இருக்கும்
  • எப்பவுமே fridgeல இருந்து எடுத்த தக்காளி மாதிரி இருக்கும் இதுக்கு மேல வேற என்ன வேணும்.

அலுவலக வேலையா அல்லது வீட்டில் இருக்கும் போது window shopping போங்க window shopping என்ன தெறியுமா?  நமக்கு மனசு சரி இல்லை அல்லது இந்த வெயில் காலத்துல ஏதாவது பெறிய Ac show room ல எதுவும் வாங்காம எல்லா floorயும் சுத்தி வருவது
image
இரவு கண்டிப்பா ஒரு காக்கா குளியல ஷோக்கா போட்டுருங்க ரொம்ம முக்கியம் உடம்பு  ஈரத்தோட படுக்கைக்கு போங்க துடைக்க முயற்ச்சி பண்ணாதிங்க இதுல ரொம்ம நேரம் உடம்பு குளிர்ச்சியா இருக்கும்.
  1. வாஷிங் மெஷின் வைச்சிருகிறவங்க ஒரு கனத்த டவல் அல்லது பெட்ஷிட் எடுத்து வாஷிங் மெஷின்n spin modeல போட்டு சுத்தவிட்டு அந்த டவல் அல்லது பெட்ஷிட் ஈரத்தோட உடம்புல சுத்துங்க நிம்மதியா துங்கலாம்.
  2. தூங்கும் போது  நீங்க கல்யாணியா இருந்தாலும் கோல்டன் ஈகிள் பியர் மாதிரி தூங்குங்க அதாங்க கழுகு வடிவில் தூங்குங்க
images
3.இரவுல புது சாக்கஸ் ஈரத்துல நனைச்சத காலுக்கு போட்டுக்குங்க
4.வெயில் காலத்துல எரிச்சல் வந்துச்சுனா உங்க மணிகட்டுகைள குளிர்ந்த தண்ணீர்ல நனைங்க இது  blood pressure குறைக்கும்                                          
Read More » Read more...

குறுஞ் செய்தியில் ஒரு பாதுகாப்பு

வியாழன்

உங்களது பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் போது நீங்கள் பயணம்/லிப்ட் கேட்டு பயணம்  செய்யும்   வாகன எண்ணை கிழ்கண்ட  எண்களுக்கு

 

image

080 10633242 குறுஞ் செய்தியாக அனுப்பவும். அது இந்த இணைய தளத்தில்  சேமிக்கபடுகிறது இது உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும்.

உங்களுக்கு ஏதாவது  அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்த சமயங்களில் போலிஸ் அல்லது உங்களை தேடும் அரசு இயந்திரங்கள் உங்களை கண்டு பிடிப்பதில்  நீங்கள் கொடுக்கும் குறுஞ் செய்தி அவர்களுக்கு உதவும்.

இந்த தகவல்கள் இந்திய போலிஸ் அல்லது அரசு  இயந்திரங்கள  மட்டும் இந்த தகவல்களை பார்க்க முடியும்.

நீங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் விடுதிகளில் தங்கும் போது அந்த விடுதியின் பெயர் விலாசம் ஆகியவற்றை உடனுக்குடன் குறுஞ் செய்தியை  உடனடியாக அனுப்பவும்.

உங்களது குறுஞ்செய்தி மட்டும் அல்ல நகைச்சுவை துணுக்குகள் ஆகியவற்றை இந்த  இணையதளத்துக்கு  அனுப்ப முடியும் உங்களது  தகவல்கள் இரண்டு வருடங்கள் மட்டும் சேமிக்கபடும்.

இந்த  தளத்தில் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது தகவல்களை நீங்களே பார்க்க முடியும்.

  • இந்த எண்களுக்கு அழைக்க வேண்டாம் இந்த எண் குறுஞ் செய்தியை மட்டுமே ஏற்க்கும்

இணையதள முகவரி http://save.neecia.com/

குறுஞ் செய்தி அனுப்ப வேண்டி  எண்  08010633242

images காதல்  வெற்றிக்கு  எந்த நினைவுச் சின்னமும் இல்லை.

ஏன் தெறியுமா? வெற்றி பெற்றவன் காதலை  நினைப்பதில்லை தோற்றவன்  மறப்பதில்லை

Read More » Read more...

யாரிடம் உங்கள் ஜிமெயில்

செவ்வாய்

ஜிமெயில் ஐடியை நாம் வெவ்வேறு  கணக்குகளுக்கு   உ.தா blogger,youtube…… போன்ற தளங்களுக்கு பொதுவாக நமது  ஜிமெயில் கணக்கை பயன்படுத்துகிறோம்
gmail_love
இதனால் நமது ஜடி மற்றும் கடவுச்சொல்(password) hacker-களிடம் அல்லது நமது தோழனோ,தோழியோ நமது எதிரி யாராவது நமது அவர் பாவிக்கும் படி ஆனால் அது நம்மை மிகமோசமாக பாதிக்கும் 
அதானால் நமது கணக்கை நம்மை தவிர வேறு  யாராவது பயன்படுத்கிறார்களா என்ற விபரத்தை தெறிந்த கொள்ள  ஒரு வசதியை activity monitor என்ற பெயரில் gmail வழங்கிறது.
அதை விரிவாக  பார்போம்
  • உங்களது ஜிமெயில் கணக்கில் நூழைந்தால் கிழ்கண்ட படத்தில் உள்ளதுபோல் தோன்றும்
https _mail.google.com_mail_ ui=2&view=bsp&ver=1qygpcgurkovy
  • இதில் deatil என்பதை கிளிக் பண்ணவும் உங்களுக்கு கிழ்  கண்டவாறு ஒரு பெட்டி திறக்கும்

Activity information
அதில் உங்கள் கணக்கு தற்ப்போது எந்த ip எந்த  நேரத்துக்கு உங்களது கணக்கை திறந்தீர்கள் என்ற விபரத்தை இது காண்பிக்கும் அதனுடன் எந்த நாட்டில் எந்த  ஊரில் உங்கள் கணக்கு திறக்கபட்டது என்ற விபரத்தை காண்பிக்கும்  இந்த தகவல்கள் முன்னுக்கு பின் முறனாக இருந்தால்
உடனடியாக  கணக்கின் password  மாற்றி நிம்மதி பெரு மூச்சு விடவும்.

ஒரு குட்டி கதை

கடவுளே சர்வ வல்லமை படைத்த உங்களிடம் 2கேள்வி கேட்க்கணும் ஆயிரம்  வருடஙகள் உங்க பார்வையில் எப்படி என்றான் அது  ஒரு நொடி
arms-open-to-sky
அப்போ ஆயிரம் கோடி அதுவா ஒரு ரூபாய் கடவுளே எனக்கு ஒரு ரூபாய் கொடுங்க  அப்படியா  ஒரு  நொடி பொரு மானிடா!
Read More » Read more...

ஓப்பன் சோர்ஸ் ஒரு பார்வை

திங்கள்

open source(திறந்த மூலம்) இந்த வகை மென்பொருட்கள் உங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுக்க வல்லது உங்களுக்கு தேவையான பயன்பாட்டு மென்பொருளை உங்களது மேலதிக தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றிகொள்ளும் முழு சுதந்திரத்தை கொடுக்கும்
opensource_logo



ஆனால் தனியொருமை மென் பொருட்கள் அந்த நிறுவனம் கொடுத்த வசதியை மட்டுமே பயன்படுத்த முடியும் மேலதிக் வசதிகளை அவர்கள் கொடுக்கும் அடுத்த பதிப்பில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய இழி நிலை மேலும் இந்த இந்த மென்பொருட்களில் வரும் வைரஸ தொற்று ஏற்று கொள்ள முடியாதது.
வைரஸ் தொற்றுவரும் இயங்கு தளங்களை மட்டுமே தொடர்ந்து தயாரித்து கொடுப்பது. அதற்குதீர்வு இருந்தாலும் வலுக்கட்டாயமாக அதை ஏற்று கொள்ளாதது
(உ.தா) பிரதமர் அலுவலக outlook express வ? வைரஸ் தொற்று வந்து மின் அஞ்சல் சேவை பாதிக்கபட்டது


தொடர்ந்து இயங்கு தள சந்தையில் ஓரே நிறுவனம் ஆட்ச்சி செய்வது   open source (திறந்த மூலம்) மென்பொருட்களில் நம்மிடம் அந்த மென்பொருளின் மூலம் இருந்தால் அந்த மென்பொருளுக்கான் சேவை நிறுவனம் எந்த காரணத்துக்கோ பிடிக்கவில்லை என்றால மாற்ற முடியும்.


இந்த மென்பொருள் மாற்றம் சமுக மாற்றத்தை கொண்டு வரும் இன்னமும் நமது கிராமங்களில் எத்தனை பேருக்கு மென்பொருள் கல்வி அல்லது பயன்பாடு கிடைக்கிறது? அப்படி அவர்களுக்கு கிடைக்க இந்த open source(திறந்த மூலம்) ஒரு தீர்வு


நகரங்களில் நாம் வங்கி சேவை பயன்படுத்திறோம் அந்த வங்கிகள் தனியொருமை மென் பொருட்கள் பயன்படுத்துவதால் நம்க்கான சேவைகட்ணம் கூடுதல் ஆகிறது இது எல்லா துறைகளிலும் தொடர்கிறது.


அறிவு பகிர்வு open source(திறந்த மூலம்) மூலமே சாத்தியம் இந்த நிலையால் சிறப்பான தனியொருமை மென் பொருட்கள் கூட அதன் புதிய முன்னேற்றங்கள் அடையாமல் தேக்க நிலையில் உள்ளது.
யாருக்குமே இல்லாத அக்கரை நம்க்கு மட்டும் எதற்கு? நடக்கும் பாதையில் கல்,முள் இருந்தால் நாம் தூக்கி ஒரமாக போடுகிறோம் எதற்க்காக நம் காலை குத்துமா? நம் காலையும் ஏன் பிறர் காலையும் குத்தும் என்ற நல்ல எண்ணம்தான்.
நமது அரசாங்கம் இதில் எதாவது செய்கிறது இதுவரை எதையும் செய்யவில்லை இனிமேல் செய்யுமா? கேள்விக்குறிதான பதில்
ஆனால் கியுபாவில் (cuba௦)   பிடல் காஸ்போரோ  அமேரிக்காவில் இருந்து சர்க்கரை வாங்க வேண்டாம். அதற்க்கு பதில் தன் நாட்டு மக்களை சர்க்கரை சாப்பிட வேண்டாம் என்று கட்டளை போட்டு அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்.
  இப்போது கியுபாவுக்கானா தங்களது சொந்த open source (திறந்த மூலம்)  nova  இயங்கு தளத்தை வெளியிட்டார்கள்


nova








open source(திறந்த மூலம்) மென்பொருட்களை எந்த நாடுகள் என்ற தரவரிசை பட்டியலை இந்த வரைபடம் தெறிவிக்கிறது சுட்டி
Read More » Read more...

ஒவ்வோரு ரிங்டோனுக்கும் ஒவ்வொரு பீலிங்

சனி

உன் நண்பனை சொல்? நீ யார் என்று சொல்கிறேன் இது பழமொழி உங்கள் ரிங்டோன் உங்களை யார் என்று சொல்லும் உங்களுக்கு அருகில் தனது கைபேசியில் ஒரு ரிங்டோன் ஓசை வருகிறது என்றால் அது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்
109551_matter
அந்த நபர் அந்த டோன் அடிக்கும் போதேல்லாம் அந்த நபர் இது யாரால் கவணிக்கபடுகிறது உறுதி செய்த பின்பு மட்டுமே அந்த அழைப்பை எடுப்பார்!
nokia-வின் standard டோனை கேட்க்க நேர்ந்தால்
  • அந்த நிறுவனத்துக்கு இலவசமா விளம்பரம் செய்கிறார் மேலும் சரியா சொன்னால் இன்கம்மிங்,அவுட்கோயிங்க்கு மட்டுமே அந்த போன் பயன்படுகிறது என்று உறுதியாக சொல்லாம்
  • அவருக்கு  ரிங்டோனை  மாற்ற தெறியாமல் இருக்கும்


பழைய தமிழ்படத்தின் தீம்
  • அந்த படத்துக்கு அப்புறம் இவங்க வேற படம் பார்க்கலை  இல்லாட்டி வந்த படடோன் அவருக்கு பிடிக்கலைன்னு அர்த்தம்.


  • இதே புதிய படத்து டோனா இருந்தா அந்த நபர் ஒரு படத்தை விடுறது இல்லைன்னு அர்த்தம்


தமிழ் சீரியல் ரிங்டோன்
  • அந்த டோனை வைச்சா கண்ணமூடிக்கிட்டு சொல்லாம் அந்த பொண்ணு ஒரு சிரியல் பாக்கிற ஹவுஸ்ஓய்யிப் தான் நிச்சயமாக


பக்தி பாடல்
  • கண்டிப்பா அவங்க 40 அல்லது 50 வயசுக்கமேல உள்ளவங்க எப்பவும் கடவுள் நினைப்பா இருப்பாங்க
  • ஆனால இஸலாமியர்கள் இந்த மாதிரி டோன்களை அதாவது குரான் வசனங்களயோ இறைவன் பெயர் சொல்லும் பாடல்கள் கழிப்றையில் ஒளிக்கிறத விறும்பல
கம்பியுட்டர் ரீங்டோன்
  • அவங்க தொழில் நூட்பத்தில்ல ரொம்ப ஆர்வம் உள்வங்க புதிய தொழில்நுட்பம் வரும் போது எல்லாம் இவங்க ரிங்டோனும் மாறும் உங்க காதலியும் இப்படி இருந்தா சோதனை பண்ணி பாருங்க
மிருங்களின் ரிங் டோன்
109551_ringtone1_600_400
  • பூனை,நாய்,படுக்கை அறை முனங்கல்,கழுதை கத்துவது,நரி ஊளையிடுறது இந்தஃ ரிங்டோன் எல்லாம் நம்மை யாரவது கவனிக்கனும்ன்னு ஒரு நோக்கம் மட்டும்தான் கேட்கிறவுங்க என்ன நினைத்தாலும் பரவாயில்ல ஒரு மாதிரி தனக்குள்ள சந்தோஷபட்டுக்குவாங்க
  • அதனால் அவர்கள் எப்பொழுதும் கவினிக்கிற ரிங்டோன் தேடிகிட்டே இருப்பாங்க
சைலண்ட்,வைபிரேஷன்
  • தன்னை யாருன்னு காட்டிக்காமல் அமைதியா மற்வரை கவனிச்சுகிட்டு இருப்பாங்க யாரோடும் பேசமாட்டார்கள் வேலையில் ரொம் கவனிப்பா இருப்பாங்க அவங்களுக்கு என் சொல்கிறேன் என்றால் அவர்களின் போன் ரிங்டோனும் அடிக்கும்ன்னு அவங்க தெறிஞ்சுக்கனும்
Read More » Read more...

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை கண்டன ஒன்றுகூடல்

வெள்ளி

இங்கு செல்வும் ஒன்றுகூடலின் நோக்கம்

020

நிகழ்ச்சி 5 மணி என்று இருந்தது 6மணிக்கு உள்ளே நூழைந்தேன் மார்க்ஸ் பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் அவரை பேசவிடாமல் இடை இடையே சில சிகப்பு சட்டைகள்  எதிர்த்து கேள்விக்கு விடை வேண்டும் என்று தடுத்து கொண்டு இருந்தார்கள் இதை தொடர்ந்து பேசியவர்களை இதேபோல் தடுத்து விட்டார்கள் கடைசியாக அந்த சிகப்பு தோழர் பேச வாய்ப்பு தரபட்டது பக்கத்தில் இருந்த ஓரு பெண்ணிடம் அவர்கள் கொடுத்த பிரசுரத்தை வாங்கி வாசிக்க தொடங்கினேன் அது லீணா மணிமேகலையின் சர்ச்சைக்கு உள்ளானா கவிதை ஓன்று  கவிதை மிக நன்றாக இருந்தது.

அந்த சிகப்பு சட்டைகள் மா.இ.க என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்களின் கேள்வியை பக்காவாக தாயாரித்து வந்து பேசி கொண்டு இருந்தார்கள்

அதில் ஓரு கேள்வி பதிவுகளில் லேபில்களில் மா.இ.கா என்று ஏன் குறிபிடுகிறார்கள் சிறிப்புதான் வருகிறது

லேபில்களில் எது வேண்டுமானாலும் கூறிபிடலாம் இதில் என்ன தவறு

இரண்டு நிமிடத்தில் இந்த  கவிதையில் இவர் குறிப்பிடுவது எந்த இடது சாரி லிணா அந்த இடதுசாரி நண்பரை குறிப்பிட வேண்டும் என்று வாசித்தார் என் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த லிணா கோபத்துடன் மேடையை நோக்கி ஓடினார்.

அதை தொடர்ந்து ஒரு சட்டசபைக்கு நிகராக இரண்டு கோஷ்டிகளாக வாக்குவாதம் தொடர்ந்தது ஆபாச வார்த்தைகள் இரண்டு பக்கமும் வீசபட்டது மார்க்ஸ் மற்றும் பேசவந்தவர்கள் சமாதானம் பேசியும் முடியவில்லை ஆனால் முதலில் பேசி இருக்க வைக்க மார்க்ஸ் முயன்றார் முடியவில்லை கருத்து சுதந்திரம் மறுக்கபடுகிறது பாசிசம் ஒழிக . என்ற முழக்கங்களை எழுப்பினார்கள்.

பாசிசத்தை எதிர்க்தான் இந்த கூட்டமே

பின்பு ஒரு வழியாக் மார்க்ஸ் அவர்களை வெளியேற சொன்னார்  முழக்கங்களை எழுப்பிகொண்டு வெளியே சென்றார்கள்.

ஒரு 1 1/2  மணிநேரம் வீண் ஆனது பின்பு பேசியவர்கள் 'இந்து மக்கள் கட்சி' விட்டு விட்டு இவர்களையே கண்டித்தார்கள்.

ஒரு சிலர் இப்படி தடம் மாறும் போக்கை சுட்டி காட்டினார்கள் தவிர்க்க முடியாமல் திரும்ப அந்த பேச்சு வந்தது.

இனி

ஏன் இப்படி எழுத கூடாது என்று தெறியவில்லை ஆண் எழுதானால் சரி அதே பெண் தன் உடலைபற்றி எழுதினால் தப்பு

நாம் சுதந்திரம் வாங்கிவிட்டோமா என்று சந்தேகமாக உள்ளது இதை எழுத எந்த தொடர்பும் தேவை இல்லை கற்ப்னை ஓன்றே போதும்.

(உ.தா) மாடியில் இருந்து விழுந்தால் கால்போகும் என்று விழுந்து தெறிந்து கொள்ள வேண்டாம்

யோனி மயிர் இந்த வார்த்தைகள் ஆபாசமாக உள்ளது அந்த வர்த்தைகளுக்கு மாற்று இருந்தாளும் வெகுஜன வார்த்தைக்ள் போட்டால் மட்டுமே அது அவர்களின் ஆணாதீக்க கோப்த்தை வெளிபடுத்தும்.

 

மேலும் நமது திரைப்பட சென்சார் துறை கூட bastard,கண்டார ஓலி என்றால் அந்த இடத்தை silent ஆக்கமாட்டார்கள் தேவிடியா பயலே என்றால் மட்டும  silent போட்டு விடுவார்கள் இதை போலத்தான் எல்லா விடயதிலும்.

பக்கத்து வீட்டு தீ நாளை உன் வீட்டிலும் ஏறியலாம் அதற்க்கு முன் ஆணைக்க முயலலாம் தீ தப்பு என்று தர்ககம் செய்வேண்டாம்

 

I never apologize for what I am

Read More » Read more...

சைபர் திருட்டில் இருந்து பாதுகாக்க

வியாழன்

கீலாக்கர் (key logger)


இந்த கிலாக்கர் (key logger) என்ற மென் பொருள்தான் நமது கடவுச்சொல் மற்றும் நமது தனிபட்ட விபரங்களை  நம் கனிணியில் திருட பயன்படுத்திகிறார்கள்.
இந்த மென்பொருள் நம் தகவல்களை ஒரு நோட்பேடில் சேமித்துவிடும்.
இதற்க்கு நான் ஒரு சிறந்த உதாரணத்தை சொன்னால் உங்களது நினைவுக்கு வந்துவிடும்.
fight-against-keyloggers
  கந்தசாமி படத்தில் விக்ரம் ஷெராயா வங்கி கணக்கு பாஸ்வேர்ட்யை திருட லேப்டாப்ல ஒரு மென்பொருளை நிறுவி அந்த பாஸ்வேர்டை கண்டு பிடிப்பார் கிலாக்கர் (key logger) மென் பொருள் நம் கணினி அல்லது பிரவுசிங் சென்டர் கணினியில் இந்த மென் பொருள் இருக்க வாய்ப்பு உள்ளது இதிலிருந்து நம் தகவல்களை பாதுகாக்க  விர்சுவல் கிபோர்ட் (Virtual Keyboard) மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்யவும்.

(xp) யில் Start >> All Programs >> Accessories << Accessibility >> On Screen இங்கு போனால் இதை இயக்கலாம்.

இதற்க்கான மென்பொருள் தீர்வு இந்த சுட்டிக்கு சென்று தரவிரக்கம் செய்ய வேண்டும் இது 1000க்கு மேற்பட்ட கீலாக்கர்களை (key logger) மென்பொருள்  உங்களது கணினியில் இருந்தால் எச்சரிக்கை செய்யும்.
Read More » Read more...

டோரண்ட் என்ன! எப்படி?

செவ்வாய்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சொல்லுக்கு நல்ல உதாரணம் இந்த  யுடோரண்ட் (utorrent) இது என்ன பதம் அதன் அர்த்தம்  என்ன  (torrent) என்றால் பாயும் நீரோட்டம் என்று அர்த்தம்  இந்த மென்பொருளுக்கு பொருத்தமான பெயர்தான்.

டோரண்ட்(.torrent extenction) வகையை சேர்ந்த கோப்பை bit torrent, u torrent mtorrent போன்ற மென்பொருள் வழியாக மட்டுமே தரவிரக்கம் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் ஓரு மூடிய மூலம்(cloced source)  வகையை சேர்ந்த இலவச மென்பொருள் ஆகும்.

utorrent

டோரண்ட் கோப்பு

டவுண் லோடு  செய்ய வேண்டிய கோப்புகள் எங்கு அப்லோடு செய்யபட்டுள்ளது என்ற விபரத்தை தாங்கி இருக்கும் ஒரு சிறிய அளவில்  உள்ள கோப்பு.

 

டோரண்ட் பயன்பாடு

எந்தவகையான கோப்பையும் ஒரு இணைதள வழங்கி (server) மூலம் தரவிரக்கம் செய்யாமல் நமது கணினியை இணையதள வழங்கியாக பயன்படுத்தி  தரவிரக்கம் செய்ய முடியும்.

 

டோரண்ட் பயனாளிகளின் வகைகள்

  • சீடர்ஸ்(seeders) : என்பவர்கள் அவர்கள் டோரண்ட் கோப்பை டவுண்லோடு செய்வார்கள்  கோப்புகளை அப்லோடு செய்து மற்றவர் டவண்லோடு செய்ய உதவுவார்கள்.
  • லிச்சர்ஸ் (Leechers): இவர்கள் டவுண்லோடு செய்வார்கள் ஆனால் அதற்க்கு பின் அந்த டோரண்ட் கோப்பையும் அப்லோடு செய்யமாட்டார்கள் தங்களின் டோரண்ட் கோப்பை நீக்கிவிடுவார்கள்.

பொது  டோரண்ட் தளங்களில் நீங்கள் சில கோப்புளை அந்த தளத்தில் அப்லோடு செய்தால் மட்டுமே நீங்கள் டவுண்லோடு செய்ய முடியும். அதாவது (1:1) டவுண்லோடு,அப்லோடு செய்யவேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கபடும்.

 

ஓரு  டோரண்ட் கோப்பை உருவாக்குவது எப்படி

  • முதலில் utorrent மென்பொருளை டவுண்லோடு செய்யவும்
  • உங்களது கணினியில் மென்பொருளை நிறுவவும்.
  • அந்த மென்பொருளை திறந்து create new torrent என்பதை கிளிக்கவும்

01அது உங்களது கணிணியில் உள்ள கோப்புகளை காட்டும் நீங்கள எந்த கோப்பை பகிர வேண்டுமொ அந்த ஒரு கோப்பு அல்லது டைரக்டரியா என்று  தேர்வு செய்யவும்

 

 

100

அட்ரஸ் என்ற இடத்தில்  கிழ் கண்ட உள்ள முகவரிகளில் ஒன்றை இடவும்

 

http://open.tracker.thepiratebay.org/announce
http://www.torrent-downloads.to:2710/announce
http://denis.stalker.h3q.com:6969/announce
udp://denis.stalker.h3q.com:6969/announce
http://www.sumotracker.com/announce

அதன் கீழ் start seeding என்பதை டிக் செய்யவும் நீங்கள் பிரைவேட் டோரண்ட் ஆக வேண்டும் என்றால் dhct என்பதை டிக் செய்யவும் பப்ளிக் என்றால் வேண்டாம்.

 

பின்பு இந்த கோப்பை உங்களது கணினியில் சேமிக்கவும். அதன்பின்பு ஏதாவது ஒரு டோரண்ட் தளத்தில் இதை பகிரவும்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்

Read More » Read more...

பதிவுகளை சமூக வலைதளங்களில் இணைக்க

சனி

உங்களது twitter மற்றும் face book போன்ற சமூக வலைதளங்களில்  உங்களது வலை பதிவுகளை உங்களது தானியங்கியாக அதாவது நீங்கள் பதிவு போட்டவுடன் உங்களது பதிவுகளை மேற்கண்ட தளங்களில் வாசிக்க முடியும்.


இதை பகிர்ந்து கொள்ள http://twitterfeed.com/ என்ற இணை தளம் நமக்கு இந்த தீர்வை அளிக்கிறது.






  • இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கை உங்களது g mail,yahoo,flicker.. இன்னும் பிரபல கணக்கு வழியாக இதை எளிதாக செய்யலாம்
  • உங்களுக்கான கணக்கில் நூழைந்து உங்களது வலைதளத்தின் rss URL உங்களது dashboard ல் கொடுத்தால் உங்களது பதிவுகள் 1மணி நேரத்துக்கு ஒரு முறை புதிபிக்கபடும்.
Read More » Read more...

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்……

வெள்ளி

நாம் இதுவரை பிறரை தவராக அல்லது நம்மை யாரும் தவறாக புறிந்து கொள்ளும் சுழ்நிலையால் நாம் சிலரை ஓதுக்குகிறோம் அல்லது நம்மை சிலபேர் ஓதுக்கிகிறார்கள்
அது பற்றிய ஓரு மின் அஞ்சலில் வந்த கதை.


******************************************************************************************



உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே
ஆழப்படுகின்றன
. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.


ஒரு
இராணுவ வீரனும்
, ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?


ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.


வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.


கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"


அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"
தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"


வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.


மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.


மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"


திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.


வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.


இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?


எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.


புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.


தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.


எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!



Read More » Read more...

வலை பூக்களை சோதனை செய்ய

வியாழன்

நமது வலை பூவில் புதிதாக வார்ப்புறு மற்றும் java script ஆகியவற்றை புதிதாக நாம் சேர்க்கும் போது உங்களது வலைபூ வழக்கத்தை விட மெதுவாக load ஆகலாம் அல்லது load ஆகாமல் freeze ஆகி நின்றும் போகலாம்

adobebrowserlab

இது போன்ற பிரச்சனை வந்தால் உங்களது hit கணக்கில் bounz hit கணக்கில் வந்துவிடும் இது வரும் வாசகனை வெறுப்பு ஏற்றும் இந்த பிழைகளை எப்படி சரி செய்வது?

நமது வலைபூ அல்லது இணையதளம் வெவ்வெறு browserகளில் load ஆக எத்தனை நேரம் எடுக்கிறது எப்படி காட்டச்சி அளிக்கிறது. என்ற விபரங்களை சோதனை செய்து பார்க்க இந்த இணையதளத்தில் இலவச உறுப்பினர் ஆகி தங்களது வலைபூவை சோதனை செய்யவும்

அதன் சுட்டி https://browserlab.adobe.com/index.html#

Read More » Read more...

சொற்கப்பல் விமர்சன தளகூட்டம்-அமர்வு இரண்டு

செவ்வாய்

1000
நாம் யாராவது கடிதங்களை போடும்,வாசிக்கும்  வழக்கம் வழக்கு ஒழிந்து போகும் நிலைக்கு நாம் தள்ளபட்டு கொண்டு இருக்கிறோம்.

சொற்கப்பல் விமர்சன தளம்  ஆரம்பிக்கபட்டு அதன் இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி இந்த நேரத்தில் இதை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கும்

  • பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
  • அஜயன்பாலா
  • முகுந்த் (தடாகம்.காம்)
  • வேடியப்பன்(டிஸ்கவரி புக் ஹவுஸ்)
ஆகிய அனைவருக்கும் என்றும் நன்றி தெறிவிக்க கடைமைபட்டுள்ளோம். நிகழ்ச்யில் திரை பாடல் ஆசிரியர் நா.முத்துகுமார் காஞ்சிபுரம் வெ.நாராயணன் பறிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
கூத்துபட்டரை நா.முத்துசாமி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நாற்பது வருடங்களுக்கு மேலான அனுபவத்தை ஓன்றரை மணிநேரத்தில் முடித்து கொண்டார் இருந்தும் அவர்

கூத்தபட்டரை பயிற்ச்சி அனுபவங்களை வெளிநாட்டு நாடக அனுபவங்கள் நேரமின்மை காரணமாக அவர் பேச முடியவில்லை மேலும் புத்தக விமர்சனங்கள் (திறனாய்வுகள்) நரன் தவிர மற்ற அனைவரும் கட்டுரையாக வாசித்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது
அவணபடுத்த கட்டுரையாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் போது உரைநடையில் பகிர்ந்து கொண்டால் கேட்பவருக்கு அண்ணியபடாமல் இருக்கும்.
மேலும் டிஸ்கவரி    புக் ஹவுஸ் புத்தக கடையில் வெளிகாற்று உள்ளே வர வழி இல்லாததால் பேசியவர்,கேட்பவர்களுக்கு அசொகரியமாக இருந்து சிலர் வாசலின் அருகில் இருந்து பேச்சை கேட்டார்கள் சிலர் புத்தகங்களை சுற்றி பார்த்து கொண்டு கேட்டார்கள் சிலர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பக்கத்தில் இருக்கும் புத்தகங்களை கையில் வைத்து கொண்டு கேட்டார்கள்.
இதையெல்லாம் தவிர்க்க வலைபதிவர் சந்திப்பு நடக்கும் இரண்டாவது தளத்தில் இதை நடத்தினால்
இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்
Read More » Read more...

வலை பூ நிர்வாகிகள் யார்?

வியாழன்

வலை பூவின் நிர்வாகிகள் யார்? என்ற  விபரத்தை அறிய ஒரு சுலபமான வழி உள்ளது.
dqkk8z
நீங்கள் காணவேண்டிய வலைபூவின் பக்கத்தை firefox-ல் திறந்து அதன் source code-யை ctrl+u தட்டச்சு செய்தால் அதன் source code ஒரு note pad-ல் திறக்கும். அதில்   <link rel="me" href= என்ற கோட்யை (code) ctrl+f தட்டச்சு செய்து தேடவும் தேடிய விபரம் ஒரு url ஆக கிடைக்கும். கிழே காட்டுஇயது போல்
<link rel="me" href="http://www.blogger.com/profile/*#*#*#*#*#*#*#*#*#" />
அந்த url-யை உங்களது browser address bar-ல் தட்ச்சு செய்தால் அது அந்த வலை பூவின் நீர்வாகியின் சுய விபரத்தை காண்பிக்கும். இந்த வழி முறையில் எல்லா வலைபூவின் விபரங்களை அறிய முடியாது  அதற்றக்காண காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
சுய விபரத்தை அவர் மறைத்து இருப்பார் அல்லது அதன் கோடுகளை template-ல் இருந்த நீக்கி இருப்பார்.

ஒரு வலைபூவை இரண்டுபேர் பதிவு போடுவார்கள் ஆனால் இரண்டு பேரில் யார் அந்த வலைபூவை உருவாக்கியது என்பதையும்  அறிய முடியும்.  உங்களது வலைபூவின் url அல்லது user name மறந்து போனாலோ இந்த பக்கத்திற்க்கு சென்று உங்களது வலை பூவை மீட்டெடுக்க முடியும்.

ஒரு seo trick
உங்களது வலைபூவை மற்றவருக்கு தெறிவிக்க நீங்கள் படிக்கும் எல்லா வலைபூவிலும் பெயர்,url என்று பின்னுட்டம் போட வேண்டும். கிழ் கண்ட படங்களை பார்க்கவும். 


இன்றை சிறப்பு விருந்தினர் 




vs





 தண்ணில லேர்ந்துதான் உப்பு கிடைக்குது ஆனா! அதே உப்பு  தண்ணில கரையுது இப்ப  இவ்வளவுதான் வரட்டா






Read More » Read more...

மறுமொழிகள்

வலைப்பதிவு காப்பகம்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP