ஓட்டு பெட்டியா ? இயந்திரமா!
சனி
சந்திரபாபு நாயுடு
வாக்குபதிவு இயந்திரங்களில் மோசடி நடந்தால்தான் தன் கட்ச்சி தோற்றதாகவும்
மேலும் குப்பம் தொகுதிக்கு வாக்களர்களுக்கு தன்றி தெறிவிக்க சென்ற போது ஒரு வயதான மூதாட்டி இயந்திர ஒட்டு இயந்திரத்துக்கு பதில் ஓட்டு சீட்டு முறை வந்தால் மட்டுமே நீ ஆட்ச்சிக்கு வர முடியும் என்று சொன்னார் என்று சொல்கிறார்.
இதே சந்திரபாபு நாயுடுதான் தான் ஆட்ச்சியில் இருந்த சமயத்தில் அமேரிக்கா சென்ற சமயத்தில் தன் அரசாங்கத்தையே இணைய இணைப்பு வழியாக நடத்தினார் இந்த விஷயம் அவருக்கே மறந்து விட்டது என்று நினைக்கிறேன்.
ஜெயலிதா
மின்னணு இயந்திரங்களில் பெருமளவில் மோசடி நடந்து வருவதால், மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராம்தாஸ்
பெரும்பாலான தொகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்து தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இவர்கள் செய்த முறைகேடுகளைப் பற்றி, எங்கள் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலர் கணேஷ் நிரூபிக்கத் தயாராக உள்ளார். ஆகையால், மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். இந்தத் தேர்தலில் முறைகேடு செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருக்கும் தேர்தல் கமிஷனின் செயல்பாடு வெட்கக்கேடானது.
இந்த விமர்சனங்கள் மிகுந்த மனவேதனை அளிக்கிறது நாட்டுக்கு தோலைநோக்கு திட்டங்கள் அரசியல்வாதிகள்தான் நிறைவேற்றுகின்றனர் மேலும் வளர்ச்சிக்உ துணைபோகும் ஒரு பொருப்பு இவர்களுக்கு உள்ளது
இத்னை ஆட்ச்சேபம் தெறிவிக்கும் இவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை ராஜினமா செய்துவிட்டு மறு தேர்தலுக்கு அழைக்க வேண்டும் மறுதேர்தலில் உள்ளதும் போனால் என்ன செய்வது அந்த கவலைதான்.
அரசாங்கம் இவர்களது பேச்சை கேட்டு கொண்டு ஓட்டு சீட்டுகளை கொண்டு வந்தால் தோற்றவர்கள் எல்லோரும் இதிலும் முறை கேடு நடந்துள்ளது அதனால் சங்க்காலத்தில் உள்ளது போல குடவோலை முறை வேண்டும் என்று கூப்பாடு போடுவார்கள்