தொலைந்த வீடு
செவ்வாய்
கிருஷ்ணன் மூன்று வேளை வயிற்றில் எறியும் அக்னியை அடக்கி தினமும் காலையில் அவன் வீட்டு கக்கூஸை தினமும் அசுத்தம் செய்ய ஒரு கடையில் அடிமை சேவகம் செய்கிறான். சயங்காலம் ஒரு டீ வடையுடன் தன் அடுத்த வேளை அக்னியை சிறிது அடக்கி பஸ்சுக்காக காத்து இருந்தான்.
தன் முதுக்கு பின்னால் கூர்மையான ஏதோ ஒன்று குத்துவது போல் உணர்ந்தான் திரும்பினால் நிமிர்ந்த தொந்தியுடன் கவிழ்ந்த தலைக்கு கிழ் உள்ள வாய் கோணலாகி கிருஷ்ணனிடம் எதோ சொல்ல வந்தது.
கடைசியாக அந்த வாயில் இருந்து சார் சார் மயிலாப்பூர் பக்கத்தில் உள்ள ஏரியா சொல்லுங்க என்று திக்கி திக்கி வார்த்தைகள் வந்தது.
ராயப்பேட்டை,மந்தைவெளி,மந்தைவெளிபாக்கம் என்று அடுக்கினான் அதற்க்குள் திரும்ப திக்கி தலையை வேகமாக ஆட்டி இல்லை என்றான்!
எதுக்கு இதை கேட்க்கிற ஒஒஒண்ணும் இல்லிங்க என்னோட வீடு மறந்து போச்சு என்னது வீடு மறந்து போச்சா!
சரி உன்னோட வீட்டில் இருக்கிரவங்க மொபைல் நம்பர் கொடு நான் கால் பண்ணி அவங்ககிட்டே கேட்கிறேன்.
இஇஇல்லை சார் உங்களுக்கு எதுக்கு அந்த தொந்தரவு நான பார்த்துகின்றேன் என்று அந்த கூட்டத்தில் கறைந்த போனான்.
கிருஷணனுக்கு பஸ் வந்தது ஏறி போனான் 10 நிமிடம் கடந்து ஒரு பஸ் ஸடாப்பிங்கில் நின்றது ஜன்னல் பக்கமாக பார்த்தவனுக்கு அதே பையன் தன் கையில் உள்ள பேப்பரை கத்திபோல் மடக்கி
ஒருவரின் முதுகை கூத்தி கொண்டு இருந்தான் அந்த நபரும் அவனின் கேள்விகளுக்கு விடை கொடுத்து கொண்டு இருந்தார். கிருஷ்ணன் திரும்ப அவனை பார்த்தால் விசாரிக்க நினைத்தான்
அதற்க்குள் வயிற்றில் அக்னி எறிய தொடங்கியது.
0 comments:
கருத்துரையிடுக