Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

என் பிரியமுள்ள அக்கரையாளர்களுக்கு

செவ்வாய்

image11

2003,04,05,06,07,08,09,சமகாலத்தில் 2010- வருடங்களில் மின் அஞ்சல் மூலமா எனக்கு நல்ல நல்ல அறிவுறைகளை அள்ளி அள்ளி கொடுத்த  என் நண்பர்கள்,உறவினர்கள் நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியை தெறிவித்து கொல்கிறேன்




இவர்களால் நான் அடைந்த நன்மை

  • நான் இப்போது பன்னீர் சோடா தவிர வேறு எந்த குளிர்பானமும் குடிப்பது கிடையாது ஏன் தெறியுமா? கோகோலா கழிப்பறைகளை நல்லா சுத்தம் செய்கிடதாம்!
  • திரை படங்களுக்கும் போவது கிடையாது யாராவது எயிட்ஸ் கிருமி ஊசி போட்டால்!
  • நீங்க அனுப்பிய நூற்றகாணக்கன இலவசங்களை பெற அனுப்பிய மின் அஞ்ல்களை பதில் அனுப்பி என்னுடைய இன்பாக்ஸ் spam mail-லால் குப்பை தொட்டியாகி வழியுது இருந்தும் உங்களின் அடுத்த இலவசங்களுக்கு என் குப்பை தொட்டியை காலி செய்து ஒரு 2 புது muose வாங்கி ஒன்று பயன்படுத்தி இன்னொன்று reserve mouse-ஆக இருக்கு.
  • அக்னி வெயிலில் கூட deoderent போடுவது கிடையாது ஏன்னா போட்டா cancer வரும் என்று அதனால் பாருங்க ஓரு பிகரை கூட கிட்டே போய் போன் நம்பர் வாங்க  முடியவில்லை.
  • எங்கு போனாலும் no parking-ல் மட்டும் வண்டியை park பண்ணிட்டு போறேன் ஏன் தெறியுமா? யாராவது மயக்க ஸ்பிரே அடிச்சு நான் மயங்கி விழுந்து விட்டால் நீங்க அனுப்பும் மெயில்களை  பார்ப்பது யார்?
  • எனக்கு வரும் புது கால்களை எடுப்து இல்லை ஏதோ ஒரு நம்பரை எடுத்து  அந்த கால் பேசி மாத கடைசியில் என்னோட பில்லை பார்த்தா? உகாண்டா,நைஜிரியா கால் பண்ணிவிட்டேன்னு வருது.
  • இளநீர் கூட கேன்ல (இல்ல) இருந்தா மட்டுமே நான் குடிப்பது ஏன்னா எலி முத்திரம் கலந்த தண்ணிர் வருதாம்
  • இந்த ஆன்டி பண்டாரத்துக்கு ஒரு நல்ல நாட்டு கட்டை,ஆன்டி பார்ட்டில பார்த்த யாரையும் மேற் கொண்டு சைடில் ஒதுக்கவோ பயமாக இருக்கு போதை மருந்து கொடுத்து என்னொட ஒரு கிட்னியை எடுத்துட்டா!
  • 1993-ம் ஆண்டில் இருந்து 7,0000 சாவை எதிர் நோக்கி இருக்கும் ஒரு பெண்ணுக்கு நீங்க அனுப்ப சொன்னீங்கன்னு என்னொட மொத்த பணத்தையும் அனுப்பிவிட்டேன்.
  • உங்களால் என் மணம் விசாலாமா இருக்கு நைஜிரியாவில் இருக்கும் ஒரு பையன் தன்னொட மாமாவின் பணத்தை எனக்கு அனுப்ப ஒரு 100 டாலர் அனுப்ப ரெடியா இருக்கின்றேன்
  • நீங்க அனுப்ப சொன்ன 35 மெயில் 400 பேருக்கு அனுப்பி Sony Ericsson,Nokia லேட்ஸ்ட் மொபைல்லுக்காக காத்து இருக்கின்றேன்

ஒரு முக்கிய அறிவிப்பு

இந்த மெயிலை 11,142 பேருக்கு இன்னும் 10 செகண்ட் அனுப்பிடுங்க அப்படி நீங்க செய்வில்லை என்றால் சரியா சயாங்கலாம் 6.30 மணிக்கு ஒரு அண்டங்காக்காய் உங்களது தலையில் கக்கா போகும்(இதுவரைக்கும் எதுவும் ஆகவில்லை) நிச்சையாமாக அதனால் மறக்காமல் அனுப்பிடுங்க

2 comments:

ManA சொன்னது…

அண்டங்காக்காயா ? escape.. நான் பண்ணிட்டன்.

vels-erode சொன்னது…

இப்பிடித்தான் நானும் ஏமாந்தேன். காசு கட்டி பிராடுபேண்ட் கனக்ஷன் வாங்கி, இவங்களுக்கு மெயில் பாக்கறதெ பொலப்பாப் போச்சி.

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP