Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

ஏழுதலை நகரம்

திங்கள்

வாசிக்கும் அனுபவம்

நாம் பொழுது போக்க விளையாட்டு அல்லது வேறு ஏதோ ஒரு கேளிக்கையில் நம்மை முழ்கி நம் மனதை லேசாக்குவோம்.
இதில் விளையாட்டில் இருவர்  அல்லது அதற்றக்கு மேல் நபர்கள் சேர்ந்து செய்வதாக இருக்கும்.
ஆனால்  புத்தகம் படிப்பது ஒருவரே அந்த செயலலில் ஈடுபட்டு அதன் இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.
***********************************************************

ஏழுதலை நகரம்-எஸ்.ராமகிருஷணன் 
Book_13
இந்த புத்தகம் குழந்தைகளுக்காக எழுதப்பட்டது அது வரை எஸ் ராவை அவரது இணையதளத்தில் மட்டுமே படிக்கும் நான் முதல் முறையாக இந்த புத்தகத்தை நான் படித்தேன் வியந்தேன்
எஸ் ரா நமது கையை பிடித்து ஒரு மாயலோகத்துக்கு அழைத்து செல்வது போல் இருக்கிறது படிக்கும் போது நீங்கள் அந்த மாயலோகத்தில் இருப்பீர்க்ள படிப்பதை நிறுத்தினால் மட்டுமே நீங்கள் நிகழ் உலகத்தில் வருவீர்கள் என்பது உறுதி.

இதில் வரும் காதாபத்திரம் நம் மனதில் நின்று இருக்கும் காலம் காலமாக (இது போன்ற எஸ் ராவின் இன்னொரு நூலை படிக்காத வரை)

  • இதில் வரும் எலியின் பெயர் “ஞலி அதன் தம்பிகளின் பெயர் நெலி,திலி,கலி,தலி இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயர்கள் நமக்கு சுவரசியமாக உள்ளது.
  • காண்ணாடிகார தெரு இன்னொரு அதியசம் அதில் தொடங்கி அதை பற்றிய suspence கடைசிவரை கொண்டு போவது நன்று இது போன்று பல அற்புதங்களை தாங்கி இருக்கிறது இந்த 231 பக்க நூல்
  • இதில் வரும் நிழ் இல்லாத பறவையின் பெயர் மானீ இதை பற்றி சொல்ல இன்னும் இருக்கு
  • வயது ஆகாமல் வளரும் உயிர் எது? விடை தாயின் வயிற்றில் வளரும் குழந்தை  என்ற களவி போல் இந்த புத்தகத்தில் அள்ள கிடைக்கிறது
நமது குழந்தைகளுக்கு நிச்சயம் அறிமுகம் செய்ய வேண்டிய மற்றும் தகுதியான நூல் பிறந்த நாள் காணும் ஒவ்வொரு குழந்தைக்கும் இதை பரிசாக கொடுக்க வேண்டும்.
இதன் வெற்றியே இந்த நூல் பெறியவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் அப்படி பிடித்தால் மட்டுமே இதை போன்ற குழந்தைகளுக்கு நூல் சென்று அடையும்.
நமது குழந்தைகள் இன்னமும் வெளி நாட்டு கார்டுன்களில் முழ்கி இருக்கிறார்கள் இவர்களுக்காக இந்த புத்தகம் இன்னொரு “நார்னியாவாக” இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு திரைப்டமாக எடுக்க 100% தகுதியானது மேலும் ஆங்கில படங்கள் போல உலக அளவில் எல்லோரும் தமிழில் பார்க்க  தகுதியான படமாக இருக்கும்
எஸ் ராவின் இணையதளம் http://www.sramakrishnan.com/
எஸ் ராவின் புத்தகங்கள் http://www.sramakrishnan.com/Books_1.asp

விகடன் பதிப்பம் இதனை வெளிட்டுள்ளது விலை 100ரூ இதன் எழுத்துறுக்கள் குழ்ந்தைக்ள் படிக்க பெறியதாக உள்ளது.

இந்த நூலைபற்றி எஸ்ரா

banner_1
வயதும் படிப்பும் வளர வளர வேறு வேறு உலகங்களில் சுற்றியலைந்து ஏதோ எழுதிப் படித்து இன்று ஒரு எழுத்தாளனாக உருவாகியிருக்கிறேன். ஆனாலும் பரணில் தூக்கி எறிந்த விளையாட்டுப்  பொம்மை போல சிறு வயது கதைகள் தூசு படிந்துக் கிடப்பதை ஒரு நாளில் கண்டுணர்ந்தேன். ஒரு எழுத்தாளனாக நாவல்கள் எழுதுவது, உலக இலக்கியம் பற்றி எழுதுவது  இவை யாவையும் தாண்டி எனது பால்ய கால கதைகளின் சாலையில் கொஞ்சம் சுற்றி வர வேண்டும் என்ற ஆசை துளிர்க்கத் துவங்கியது. அப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கான நாவலை எழுதத் துவங்கினேன். 

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP