காத்திருக்கிறேன்?
வெள்ளி
நம் வீட்டில் நீயும் என் வீட்டில் நானும் அடடா! இத்தனை நாட்களா ஆகின்றன?
உள்ளம் முழுவதும் உன்னை பற்றிய உறங்காத நினைவுகளா....
உன் உடன் பிறவா கணிப்பொறியை நான் நொறுக்க விறும்பிய நாட்கள்...
நாளை முழுவதும் உன்னுடன் என்றறிவித்து நாளை முழுதும் நீ
உறங்கி கழித்த விடுமுறை நாட்கள் உன் சுவைகேற்ப்ப தேனீர் தராததால் பாதிச்சண்டையில் விட்டு சென்ற கண்ணீர்
நீ விழித்து இருக்க நான் உலகையே மறந்து உன் மார்பில் பயந்து தவித்த இரவுகள்…
உறங்கிய நிமிடங்கள் ‘வர நேரமாகும்’ உன் குரல் கேட்டு தனிமையில் உறங்கிய இரவுகள்
உன் உறவினர் குடும்பத்துன் கொட்டமடித்த பண்டிகை தினங்கள்
வண்டியில் உன் பின்னே அணைத்தபடி குளிரில் நடுங்கிய பயணங்கள்..
இவற்றுக்குகிடையே காதலில் கரைந்த விடியற்கலைகள் பிரசவத்திர்க்கு உடன்னிருப்பதாய் வாக்களித்த நீ இன்றி நான் தனியே போராடிய மணிதுளிகள் இப்போதும்
உன் பிரதியாய் என் மகன் ஏய் எப்போது வருகிறாய்! என்னை உன்னுடன் அழைத்து செல்ல?
நன்றி: ஏதோ ஒரு புத்தகம்
0 comments:
கருத்துரையிடுக