இதுவரை தமிழ் வலைபதிவர்கள் பூங்காக்களிலும் கடற்கரையில் மட்டுமே சந்திப்பு இருந்தது அதனால் எந்த சந்திப்பிலும் உருப்படியாக பேச முடியாமல் போனது எப்படி வலைபூ எழுதவேண்டும் என்று கூட பேச முடியாமல் போனது ஆனால் இதற்க்கு ஒரு தொடக்கமாக indiblogger.in அமைப்பு சென்னையில் வலைபதிவர்களுக்கான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார்க்ள் இந்த செய்தியை நண்பர் லக்கியின் வலைபதிவில் அறிவிப்பு கொடுத்து இருந்தார்.
இந்த சந்திப்பு 2008 கடைசியாக நடத்தபட்டது அதன் பின்னர் தற்போது சென்னையில் 2010 திநகர் G.R.T GRAND CONVENTION CENTRE-ல் 20.03.10 மதியம் 2.30 முதல் 6.00 மணிவரை நடந்தது இதில் நானும் வடிவேலன் அவர்களும் கலந்து கொண்டோம்.
அரங்கத்தில் 2 மணிக்கே நூழைந்தாகி விட்டது குளிர்பானத்துடன் வரவேற்ப்பு
ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள் எல்லோரும் ஆங்கில பதிவர்கள் 2..45 க்கு அரங்கம் நிறைந்த்து
வந்தவர்கள் தங்களது இமெயில் ஐடியை தட்டச்சு செய்து வருகையை பதிவு செய்தார்க்ள்
அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியின் sponcer univercell ஒரு சிறு உரை நிகழ்த்தி வாழ்த்து தெறிவித்தார்கள்
இதனை தொடர்ந்து ஒரு ஜெர்மனியில் இருந்து வராத ஒரு பதிவரின் ஒரு வீடியோ திரையிடபட்டது
அந்த வீடியோ இங்கே உங்கள் பார்வைக்கு
இதற்க்குள் லக்கி,அதிஷா வந்துவிட்டார்கள் அவர்களுடன் ஓன்றாக அமர்ந்தோம் அதன் பின்னர் ஓருவர் பின் ஓருவராக மைக்கில் சுய அறிமுகம் நடந்தது ஓருவருக்கு 30 நொடிகள் கொடுக்கபட்டது இதை மீறி பேசியவர்களுக்கு 5,4,3,2 என்று கவுண்டவுன் கொடுத்தார்கள் அப்போதும் அவர்கள் நிறுத்தவில்லை.
தமிழ் பதிவர்கள் அனைவரும் தமிழிலில் மட்டுமே அறிமுகம் செய்யபட்டது (துளசி கோபாலை தவிர)
இதற்குள் அமைபாளர் ஒருவர் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்யும் போது எல்லோரின் டி-ஷர்ட் அளவு கேட்க்கபட்டது அது புதிய டி-ஷர்ட் கொடுக்க அல்ல அவர் அவர் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்று தெறிந்து கொள்ள என்று சொன்னார்.
அண்ணன் பாலபாரதி மற்றும் பத்திரிக்கையாளர்கள் கல்ந்துகொண்ட ஒரு சின்ன கலந்தரையாடல் நடந்தது அதில் பாலபாரதி சினிமா,பத்திரிக்கை,டிவி இவைகளை போன்று ஒரு ஊடகமாக வலைபதிவு மாறிவருகிறது அவர்களின் கடமைகள் சொந்தபெயரில் எழுத முடியாதன் காரணம் ஆகியவற்றை விரிவாக சொன்னார்.வலைபதிவர்கள் பத்திரிக்கையாளர்கள் போல் தங்களது பதிவுகளில் தங்களது பகுதிகளில் நடப்பவற்றை செய்தியாக போடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன் பின்னர் பதிவர்களுடன் கலந்துரையாடல் தங்களது கருத்துக்களை ஒரு மஞ்சல் நிற அட்டையில் முதுகில் மாட்டிகொண்டுஎழுத சொன்னார்கள் பின்னர் நல்ல சிற்றுண்டி,டிஷர்ட் வழங்கப்ட்டது.
univercell நிறுவனத்தினர் தங்களுடைய 4அலைபேசிகளை எல்லோரிடமும் கொடுத்து இதற்க்கு ஒரு review எழுதினால் தங்கள் நிறுவனத்தில் முழுநேர வலைபதிர்களாக பணியில் அமர்த்தி கொள்வார்கள் மேலும் பதிவர்கர்கள் அலைபேசிவாங்கினால் கழிவு விலையில் கொடுக்கபடும் என்று வாக்கறுதி கொடுக்கபட்டது.
இதுபற்றி வந்த செய்திகள் பற்றிய இணைப்புகள்:
நியு இண்டியன் எக்ஸபரஸ்
- இதில் அண்ணன் பாலபாரதி தமிழில் பேசும் போது தமிழ் தங்களுக்கு போர் அடிக்கிறது இன்னபிறவற்றை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு அதை பெறிய திரையில் வேறு தெறிந்தது
- தமிழ் பதிவர்களின் குறைவான வருகை.
- வந்தவர்களில் உண்மை தமிழன் சுய அறிமுகம் செய்யாமல் இருந்தது
- துளசி கோபால் ஆங்கிலத்தில் அறிமுக்ம் செய்தது.
- பெயர் கொடுத்த பிரபல பதிவர்கள் யாரும வரவில்லை.
- இந்த சந்திபுக்கு பிறகு மிகவும் சிரியசாக பதிவு போடவேண்டும் என்று மனதில் நிணத்தது
- இதில் ஆங்கில பதிவர்கள் தங்களுக்கு விசிடிங் கார்டு வைத்து எல்லோருக்கும் விணியோகித்தார்கள் நமக்கும இப்படி ஒன்று போடவேண்டும்
Read More »
Read more...