நான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக freetamilebooks.com இணையதளத்தில் தன் ஆர்வலராக இணைத்து கொண்டு புதிய புத்தகங்களை படைப்பாளிகளிடம் creative commons உரிமத்தில் மூலங்களை வாங்கி மின் நூல் ஆக்கம் செய்து அதன் வெளியீட்டில் என் பங்களிப்பையும் செய்தேன்.
பார்க்க இணைப்பு (http://gnunanban.blogspot.com/p/blog-page_23.html)
இந்த நிலையில் திட்டத்தில் நான் உரிமை வாங்கிய உமர் பாருக் எழுதிய உடலின் மொழிஎன்ற புத்தகத்தை வெளியீடு(sep-18) பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/ebooks/398
இந்தப் புத்தகத்தின் தரவிறக்கம் 2000 தாண்டிவிட்டது இந்த நிலையில் இந்தப் புத்தகத்தின் நம்பக தன்னமை பற்றித் திட்டத்தின் உறுப்பினர் திரு ரவி அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார்(பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/page/2) அதன் பின்பு அந்தப் புத்தகம் திட்டத்தில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது மேலும் அவரின் கேள்விகள் தொகுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்புத்தகம் மற்றும் இதனுடன் சேர்த்து வாங்கிய புத்தகங்களுக்கு மூன்று மாதங்கள் நான் உழைத்தேன். அந்த உழைப்பு வீண் ஆகாமல் இருக்க மற்றும் இந்தப் புத்தகங்கள் மக்களுக்குச் சேர்ந்து நன்மைகளை விளைவிக்க வேண்டி ஒரு புதிய மின் நூல் திட்டத்தை தொடங்க நினைக்கிறேன் அது பற்றி மக்களின் கருத்துகளை ன் அறிய விரும்பிறேன்
என் பங்களிப்பு freetamilebooks.com தளத்தில் தொடர்ந்து இருக்கும் இணையதளம் குறித்து என்ன புதிய வசதிகளைப் பயனாளிகளுக்கு அளிக்கலாம் புதிய தளத்தின் பெயர் என்ன வைக்கலாம். இணையதளத்தை எங்கு hosting செய்யலாம் இது தவிர ஏனைய கருத்துகளும் வரவேற்கப்படுகிறது கருத்துகளை gnuanwar at gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்
புதிய தளத்தில் நூல்களை ஒலிநூல்களாகவும் braily நூல்களாகவும் இணக்கும் வசதி
மின் நூல்களை torrent கோப்பாக வெளியிடவும்
அதி முக்கியமாகத் திருட்டு pdf ஆக இருக்கும் நூல்களை creative commons முறையான அனுமதி வாங்கி வெளியிடு செய்யப்படும்.
இந்த புதிய திட்டம் முயல் ஆமை ஓட்ட பந்தயத்தில் முயலாக ஓடாமல் ஆமை வேகத்தில் சென்றே இலக்கை அடையும். முயலை விட ஆமைக்கு ஆயுள் அதிகம் ஏன் என்றால் ஆமை மெதுவாகவும் முயல் வேகமாகவும் மூச்சு விடும்
|
0 comments:
கருத்துரையிடுக