Blogger இயக்குவது.

இந்த வலைப்பதிவில் தேடு

சோதனை தமிழர்- சவுக்கின் பதிவு

வெள்ளி


இந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா ? கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது.


ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந்துள்ளார். ஞானி வெளியே போனதற்கும் ஜாபர் சேட் வந்ததற்கும் ஏராளமான தொடர்புகள் உண்டு.


ஜாபர் சேட் பற்றி சவுக்கு வாசகர்கள் அறியாததல்ல. ஆனால், சவுக்கு வாசகர்களுக்காகவே, ஏராளமான பணத்தை விரயம் செய்து குமுதம் வார இதழில் நாலரை பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.


(சார் இந்த விளம்பரத்துகாவது சொந்தக் காசைக் குடுத்தீங்களா இல்ல இதுவும் ரகசிய நிதியா ? புது வாஸ்து மீன் நல்லா இருக்கா சார் ? கேட்டதா சொல்லுங்க. ஆமா அந்த மீன், நீங்க பேசுறத ஒட்டுக் கேட்குதாமே… ஜாக்ரதையா இருங்க சார். மீன் தொட்டிகிட்ட போயி ரகசியம் பேசாதீங்க)


அந்த விளம்பரம் சவுக்கு வாசகர்களுக்கான இதோ .. … … … …


(மேடம், திருவான்மியூர்ல எல்லா ஃப்ளாட்டும் வித்துப் போன சந்தோஷம் உங்க முகத்துல தெரியுது மேடம். தொழில் வெற்றியடைந்தால் தொழில் அதிபருக்கு சந்தோஷம் வருவது இயல்புதானே. ஆனா, இந்த ஃப்ளாட் அலாட்மென்ட் கேன்சல் ஆனாலும், எப்படி இதே மாதிரி சந்தோஷமா இருக்கறதுன்னு, ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்துல பயிற்சி எடுத்துக்குங்க மேடம். காமராஜ் ஹெல்ப் பண்ணுவார். அவரோடதும் கேன்சல் ஆகப் போகுது மேடம்)(சார். சும்மா சொல்லக் கூடாது சார். நெஜம்மா ஹீரோ மாதிரியே இருக்கீங்க சார். சவுக்குல எப்போ பாத்தாலும் உங்க பேஸ் புக் போட்டோவையே போட்டுகிட்டு இருக்கோம்னு வாசகர்கள் வருத்தப் பட்டாங்க. அதுக்காக அத விட அழகான உங்க படத்த கொடுத்ததுக்கு நன்றி சார்.

(என்ன ஜாபர் சார். கருணாநிதிய கெடுத்தது பத்தாதுன்னு தலப்பாக் காரரையும் கெடுக்க முடிவு பண்ணீட்டீங்களா ? நாயுடு மகாஜன சபா தலைவரை பக்கத்துல வச்சுக்கிட்டு இருக்கீங்களே ? சரியான கேடி சார் அந்த ஆள். உங்களையே கவுத்துருவாரு. ஜாக்ரதையா இருங்க. உங்க மேல இருக்கற அக்கறையிலதான் சார் சவுக்கு சொல்லுது. கவனமா இருங்க .எவ்வளவு அழகான குடும்பம் ? எவ்வளவு மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருக்கிறது ? சார், உங்க பேமிலில எல்லாரும் சவுக்கு வாசகர்களாமே ? உண்மையா சார் ? உங்க வெயிட்டிங் பி.சியும், அட்மின் டிஎஸ்பி ராஜ்குமாரும், சவுக்கு வாசகர்கள் என்பது சவுக்குக்கு கண்டிப்பாக தெரியும் ? பேமிலியும் சவுக்கு வாசகர்களா என்பதை நீங்கள் தான் சார் சொல்ல வேண்டும்.


சவுக்கின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தார் நண்பர் ஜாபர் சேட். ஆனால், ஆட்சி மாறியதும் அவர் மீது பாயப் போவது பொய் வழக்குகள் அல்ல. உண்மை வழக்குகள். இப்போது மகிழ்ச்சியாக சிரிக்கும் குடும்பத்தில் அப்போது இந்த புன்னகை இருக்காது என்பது வேதனையான விஷயம்.


ஜாபர் சேட்டின் சவுக்குக்கே தெரியாத மறுபக்கத்தை குமுதம் இதழ் காண்பித்திருக்கிறது. ஆனால் மறுபக்கத்துக்கே மறுபக்கத்தை காட்டுவதல்லவா சவுக்கின் வேலை ?


இந்த பேட்டிக்காக எத்தனை நாள் வேலை நடந்தது, இந்தப் பேட்டியை எடுத்தவர் யார், எப்படி எடுக்கப் பட்டது, இதன் பின்னணி என்ன, இந்தப் பேட்டியை எடுத்துப் போட்டு விட்டு, “நமது நிருபர்” என்ற முகமூடியை போட்டுக் கொண்டு இடைநீக்கத்தில் இருக்கும் அந்த “கேசநோவா”வின் வரலாறு என்ன, எதற்காக இதை எழுதினார் என்ற மறுபக்கத்தின் மறுபக்கத்தை வெளியிடுவதற்கு சவுக்கு இல்லாமல் வேறு யார் அய்யா இருக்கிறார்கள் ?


கருத்துரிமை பாதுகாப்புக்காக நடைபெறும், வெள்ளி மற்றும் சனி நிகிழ்ச்சி தொடர்பான வேலைகளில் சவுக்கு பிசியாக இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து, இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் வரும். அதற்குள் சவுக்கை பொய் வழக்கு போட்டு கைது செய்தால் பயப்படாதீர்கள் தோழர்களே. சவுக்கு சிறையில் இருந்தாலும், பதிவுகள் தொடரும். (நம்ப டீம் அப்படிப்பட்ட டீமு தலைவா. சும்மா சிறுத்தை குட்டிங்க. )


இரண்டு நாட்கள் கழித்து சந்திப்போம் தோழர்களே…..


சவுக்கு வாசகர்களுக்கு அன்பான வேண்டுகோள்..


வெள்ளி மாலை சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டத்திலும், சனி மாலை சென்னை கேரள சமாஜம் அரங்கத்தில் நடைபெரும் இதே தலைப்பிலான கூட்டத்திலும் தங்கள் வேலைகள் எவ்வளவு இருந்தாலும் அவற்றை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு அவசியம் கலந்து கொள்ளுங்கள்.


எனெனில் இன்று நாம் உறங்கினோமேயானால், நாளை நாம் இணையத்தில் கூட சந்திக்க முடியாது.

1 comments:

என்றும் இனியவன் சொன்னது…

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

மறுமொழிகள்

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP