அறிவிப்பு……
புதன்
சதாசிவம் யார் வம்புக்கு போகாதவர் ஆனால் வம்புகள் அவரை தேடி வருவது அவரது போதாத காலமா தெறியவில்லை. அது போல் சில நாட்களாக ஒரு தீராத பிரச்ச்னை அவருக்கு வந்தது அது அவருடைய வீடு ஒரு தெரு முனையில் இருப்பது அந்த தெருவில் வசிக்கும் எல்லோருக்கும் குப்பை போட வசதியாக இருந்தது
இது தவிர குப்பை அள்ளும் மாநாகராட்ச்சி ஊழியருக்கு இன்னும் வசதியாக ஒவ்வொரு வீட்டிறக்கு முன்பு நிறுத்தி விசில் அடித்து குப்பை வாங்க வேண்டிய அவசியம் இந்த தெருவில் இல்லை.
இதற்க்கு முடிவு கெட்ட சதா ஒரு அறிவிப்பு பலகை வைக்க முடிவு செய்தார் (அ.ப)யில் “இங்கு குப்பை போடகூடாது” என்றது முதல் அறிவிப்பு
மறுநாள் காலை விழித்தவுடன் ( அ.ப) பார்க்கிறார் அவருக்கு அதிர்ச்சி மின் விளக்கு கம்பத்தில் (அ.ப) மலைபோல் குவிந்த குப்பையில் மறைந்து விட்டது.
சதா (அ.ப)வை கம்பத்தில் “நாயே இங்கு குப்பை போடாதே” என்று எழுதி சிறிது மேலே தூக்கி கட்டினார்.
அடுத்த நாள் அறிவிப்பு பலகையில் ஒரு புதிய வாசகம் சேர்க்கபட்டு இருந்தது “இங்கு நாய்கள் குப்பை போடுவது இல்லை”
சதாவுக்கு கோபம் அதிகமானது ஒரு புதிய (அ.ப)வில் அறிவுகெட்ட நாய்கள் குப்பை போடாதே என்று எழுதினார்.
வழக்கம் போல் “நாய்கள் மற்றும் அறிவு கெட்ட நாய்களும் குப்பை போடுவது இல்லை” என்று எதிர்வினை நிகழ்ந்து இருந்தது.
பொருமை இழந்து சதா “அறிவு இல்லாத மனிதர்களே இங்கு குப்பை போடாதீரக்ள்” என்று எழுதினார்
மறுநாள் அவருக்கு பேர் அதிர்ச்சி காத்து இருந்தது இங்கு அறிவு இல்லாத மனிதர்கள் யாரும் குப்பை போடுவது இல்லை எங்களது வீட்டில் எல்லோரும் படித்து பட்டம் வாங்கியவர்கள் அதிலும் நான் இரட்டை பட்டம் வாங்கி உள்ளேன் என்ற புத்தம் புதிய வாசகம்
இதை பார்க்க சதா இன்னும் எழுந்திருக்கவில்லை.
2 comments:
superb!
:(
வருகைக்கு நன்றி kolipaiyan
கருத்துரையிடுக